Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லங்காசிறி உரிமையாளர் ஸ்ரீகுகன் நீதித்துறை உத்தரவுக்கு அமைய மன்னிப்பு கோரினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஊடகவியலாளர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி பிரசுரித்த லங்காசிறி இணையத்தளம் மற்றும் கூல் சுவிஸ் இணையத்தளங்களை நடத்தும் சிவஞானம் சிறிகுகன் என்பவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று சுவிஸ் நீதித்துறை வழங்கிய உத்தரவுக்கு அமைய அவர் தனது இணையத்தளங்கள் ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களை அவதூறு செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினதும் கருணாவினதும் உளவாளி என செய்தி பிரசுரித்த லங்காசிறி இணையத்தளம் மற்றும் கூல் சுவிஸ் இணையத்தளங்களை நடத்தும் சிவஞானம் சிறிகுகன் என்பவருக்கு எதிராக ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் செய்த முறைப்பாடு விசாரணைக்கு வந்த போது அந்த செய்திக்கான ஆதாரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் அது தவறான செய்தி என்றும் லங்காசிறி உரிமையாளர் சிறிகுகன் குற்றத்தை ஒத்துக்கொண்டார்.

ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தி அச்சுறுத்தலை விடுக்கும் வகையில் செய்தியை பிரசுரித்த லங்காசிறி உரிமையாளர் சிவஞானம் சிறிகுகன் விசாரணை நடைபெற்ற 03.10.2012 அன்றிலிருந்து 48 மணி நேரத்திற்குள் 05.10.2012 நண்பகல் 12மணிக்கு முதல் லங்கசிறி இணையத்தளம் மற்றும் கூல் சுவிஸ் இணையத்தளங்களில் துரைரத்தினம் அவர்களிடம் மன்னிப்பு கோரி செய்தி ஒன்றை பிரசுரிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்துடனோ கருணாவுடனோ துரைரரத்தினத்திற்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் அச்செய்தியில் பிரசுரிக்க வேண்டும் என்றும் அரச சட்டவாளர் வழங்கிய எழுத்து மூலமான உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு வழங்கப்பட்டு 48மணி நேரத்திற்குள் லங்காசிறி உரிமையாளர் தனது இணையத்தளங்களான லங்காசிறி, சுவிஸ் கூல் ஆகியவற்றில் மன்னிப்பு கோரி செய்தியை வெளியிட்டுள்ளார்.

செய்தியை இரு இணையத்தளங்களிலும் பிரசுரித்த பின் அச்செய்தி பிரசுரமான இணையத்தள முகப்பு தோற்றத்தை பிரதி செய்து அதன் லிங்கையும், அச்செய்தியின் ஜேர்மன் மொழிபெயர்ப்பையும் இம்மாதம் 22ஆம் திகதிக்கு முன் அரசசட்டவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அரசசட்டவாளரின் உத்தரவுக்கு அமைய குற்றம் சாட்டப்பட்ட சிறிகுகன் செயற்பட தவறும் பட்சத்தில் இவ்வழக்கு மேலதிக நடவடிக்கைக்காக தொடரும் என்றும் அரச சட்டவாளர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவஞானம் சிறிகுகன் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சகோரராவார்.

சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பாவில் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு எதிராக நீதித்துறை வழங்கிய முதலாவது தீர்ப்பு இதுவாகும்.

இதற்கு முதல் ஏசியன் ரிபூன் ஆங்கில இணையத்தள ஆசிரியர் ராசசிங்கத்திற்கு எதிராக நோர்வேயில் வசிக்கும் ஊடகவியலாளர் நடராசா சேதுரூபன் சுவீடன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ராசசிங்கம் குற்றவாளியாக காணப்பட்டு சேதுரூபனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.saritham.com/?p=66417[/size]

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:

துரை அண்ணாவா கொக்கா

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.