Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவுக்கு பலியான வன்னிப்பெண்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அனைவரும் அழைத்து வந்து காட்டில் விடப்படடுள்ளனர். மெனிக்பார் முகாம் மூடப்பட்டு அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கூறுங்கள். இது இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்த கதை.

இது மலையை தோண்டி எலியை பிடித்ததை விட மிகவும் மோசமானது. இது கைகளை தரையில் அடித்து கொண்டதற்கு ஒப்பானது. குற்றங்கள் நிறைந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதீத நம்பிக்கையான எந்த தவறையும் செய்து தப்பித்து கொள்ளலாம் என பயங்கரமான அகங்கார போக்கை மீண்டும் மேடையேற்றி சம்பவம் இதுவாகும்.

எனினும் இந்த முறை அது தவறியது. அதீத நம்பிக்கை அதபாதளமாக மாறியது. இவர்கள் கொத்தி இருப்பது வாழை மரத்தில். சொண்டை மீண்டும் வெளியில் இழுப்பது சிரமமானது. வன்னியில் பெரும் காட்டுக்கு மத்தியில், ஏதும் அறியாது வழித்தெரியது துயரப்படும் பெண்கள், ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு கரையேற முடியாத சவாலை விடுத்துள்ளனர். தமது மனித உரிமையை தாழ்த்தியமைக்கு எதிராக அவர்கள் இந்த சவாலை விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றுவதாக கூறி, பெண்களையும் சிறு பிள்ளைகளை அழைத்துச் சென்ற காட்டில் விட்;டுள்ளனர். அங்கு ஆயுதம் தாங்கிய படையினரின் அச்சுறுத்தும் காவல் மையங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் கொண்டு சென்று விடப்பட்டனர். அந்த இடமானது பாரிய இராணுவ கட்டமைப்பு புடைசூழ காணப்படும் இடமாகும்.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தி போரின் பின்னர், 3 லட்சம் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மெனிக்பார்ம் என்ற மாபெரும் முகாம் மூடப்பட்டு விட்டது என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காக அங்கிருந்த மக்கள் அழைத்து செல்லப்பட்டு காட்டில் விடப்பட்டனர். மீதமிருந்த அகதிகளும் குடியேற்றப்பட்டு விட்டதாக கூறினர். ஒரு மாதத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தில், இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் குடியேற்றப்பட்டு விட்டனர் என்பதை காட்டுவதற்காக அப்பாவி மக்கள் பழிகொடுக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த பொய் தொடர்பான உண்மையை கூற அந்த அப்பாவிகள் மத்தியில் இருந்த தைரியமான பெண்கள் முன்வந்தனர். தம்மை காண சென்ற செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் ' இதோ எங்களை படம் பிடியுங்கள்' அச்சமின்றி அந்த பெண்கள் இப்படியும் கூறினர்.

எமது காணிகளை பிடித்து வைத்து கொண்டு எங்களை காட்டுக்குள் தள்ளாது, ஏன் இராணுவம் காட்டுக்குள் போக முடியாது?. எமது இடங்களில் நாங்க பயிர் செய்ய இடமளிக்க போவது எப்போது?.

நாங்கள் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்றவர்கள், நாங்கள் மீண்டும் எப்போது அந்த தொழில் ஈடுபட இடமளிக்க போகிறார்கள்?. எங்களை போக சொன்ன போது, நாங்கள் கைவிட்டுச் சென்ற படகுகள் மற்றும் வலைகளை எப்போது தரப்போகிறார்கள்?. நாங்கள் தற்போது காவலால சூழப்பட்டுள்ளோம். ஏன் வெளியார் வந்து எங்களுடன் பேசவும் புகைப்படம் எடுக்கவும் அனுமதிப்பதில்லை?. ஏன் எங்களை இப்படியான முகாமில் கொண்டு வந்து விட்டனர்?. இந்த இடத்திற்கும் மெனிக்பார்ம் முகாமுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.

இந்த கதையை முழு உலகமும் அறிந்துள்ளது. ஜெனிவாவில் உள்ள பல தூதரங்கள் இதனை நன்றாக அறிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், மெனிக்பார் முகாமில் இருந்து, அழைத்து வரப்பட்டு பாடசாலைகளிலும் வீதியின் இருமருங்களிலும் கைவிடப்பட்டனர். வானமும் காடுகளின் மரங்களுமே அவர்களுக்கு கூரையாக இருந்தது. அது போல் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு, அந்த வீடுகளில் இருந்த கதவுகள், யன்னல்கள் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. பல இடங்களில் இந்த மக்களின் காணிகள், வீடுகளை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இராணுவத்தினர் தமது பயன்பாட்டுக்காக கைப்பற்றியிருந்தனர்.அவர்கள் தமது அதிகாரத்தை சட்டமாக மாற்றி கொண்டு இந்த இடங்களை கைப்பற்றி கொண்டனர்.

இவ்வாறு அநீதியான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தாம் வாழ்ந்து திரிந்த காணிகளில் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டு சிறப்பாக வாழ்ந்த மக்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த மக்களின் காணிகள் கிணறுடன் கூடிய விவசாயத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன. இது ஒரு உதாரணம் மாத்திரமே. மெனிக்பார்ம் முகாமில் இருந்து இறுதியாக வெளியேற்றப்பட்ட மக்கள் கோப்பாபிளவு என்ற கிராமத்தில் வசித்தவர்கள். அங்கு 528 முதல் 684 ஏக்கர் வரையான விவசாய நிலங்கள் உள்ளன. எனினும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், அவை அனைத்தையும் இராணுவம் பலவந்தமாக கைப்பற்றி தனது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறது.

சுமார் மூன்று வருடங்கள் முகாமில் அடைப்படடிருந்த மக்கள், இவ்வளவு காலமாகிய பின்னரும், அந்த மக்கள் வாழக் கூடிய சூழலில், அவர்களின் சொந்த கிராமங்களில் குடியேற்ற ஏன் ராஜபக்ஷ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை?. திடீரென காட்டில் உதயமானவர்களை போல் கருதி ஏன் அவர்களை பெரும் காட்டில் விட்டனர்?.

இது ஒரு பதில் மாத்திரமே உள்ளது. இவர்கள் போர் வலயத்தில் வாழ்ந்த தமிழர்கள் என்பதுதான் இதற்கான ஒரே பதில். தமிழ் மக்களுக்கு சமவுரிமை, மனித உரிமை மதிப்பு என்பன இருக்கின்றது என்பதை அரசாங்கம் எண்ணாததே இதற்கு காரணமா?

இந்த அப்பாவி மக்களை சூழ இராணுவ காவலை எந்த காரணத்திற்காக ஏற்படுத்தினர்?. இந்த மக்களை சந்தித்து தகவல்களை பெற சென்ற ஊடகவியலாளர்கள் ஏன் தடுக்கப்பட்டனர்?. தமது வேலைகளை பார்த்து கொண்டு சும்மா இருக்குமாறு ஊடகவியலாளர்களுக்கு ஏன் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது?. இந்த மக்களுக்கு மூன்று வருடங்களின் பின்னர் கூட சுதந்திரத்தை அனுபவிக்க ராஜபக்ஷ அரசாங்கம் ஏன் இடமளிக்க மறுக்கிறது?.

இதற்கான ஒரே பதில், தமிழ் மக்களை நம்புவதற்கு பெருபான்மை சிங்கள அரசாங்கம் விரும்பவில்லை அல்லது இயலாமையாகும். போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள பின்னரும், தமிழ் மக்களை நம்ப தயாரில்லாத அரசாங்கம், எப்படியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகிறது?. இப்படியான அரசாங்கங்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து, தாம் நம்பாத மக்களை அடக்குவதை மாத்திரமே செய்ய முடியும். இந்த சம்பவங்கள், தமது எதிரி, தமிழ் மக்கள் மாத்திரம் தான் என தற்போதைய எண்ணுவதையே இது காட்டுகிறது. அப்படி இல்லையொன்றால் இவ்வளவு இராணுவ காவல்கள் எதற்கு?.

தமிழ் மக்கள் தொடர்பில், அரசாங்கத்தின் இந்த நடத்தையானது, வீடுகளை கட்டிக்கொடுக்க பணம் இல்லை அல்லது வேறு பணிகளை செய்து கொடுக்க வினைதிறன் இல்லை என்ற பிரச்சினைகள் காரணமாக அல்ல. பொதுவாக எடுத்து கொண்டால், ஜன சூன்ய பிரதேசமான அம்பாந்தோட்டையில் கடந்த மூன்று வருடங்களில் நிர்மாணிப்புகளை பாருங்கள். ஏன் இதனை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக செய்ய முடியாது. இதற்கு காரணம் பெருபான்மை சிங்கள அரசாங்கத்திற்குள் குடிகொண்டுள்ள தமிழின விரோதம் அல்லவா?. உடனயாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற இயலுமை காட்டப்பட்டது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் அல்ல. தமிழ் மக்கள் வாழ்ந்த, முந்தைய போர் வலயத்தில் பாரிய இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினரின் குடியிருப்புகள் நிர்மாணித்து, அதிவிரைவான முன்னேற்றத்தை அரசாங்கம் காட்டியுள்ளது. இந்த துரிதகதி தமிழ் மக்கள் தொடர்பில் ஏன் காட்டவில்லை?.

தமிழ் மக்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் வெளிகாட்டும் மனத்தை உருக்கும் உதாரணத்தை புகைப்படம் மூலம் இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் வெளியாக செய்தியை ருகி எழுதியிருந்தார். முல்லைத்தீவில் இராணுவம் சில காலம் கைப்பற்றி வைத்திருந்த மத்துவில் மக்கள் கவனிக்கப்பட்ட விதம் அதில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கிராமத்தில் ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான காணியை கடந்த மூன்று வருடங்களாக இராணுவம் தனது பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்தது. இராணுவத்தின் பயன்பாட்டுக்காக பல கட்டடங்களும், கழிவறைகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அந்த காணிகளை தமக்கு வழங்கும் போது, கட்டடங்களை அழிக்காது, அதனை தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு மக்கள் கேட்டிருந்தனர். எனினும் கட்டடங்கள் அனைத்தையும் உடைத்து தரைமட்டமாக்கி விட்டு, கட்டடிட தளபாடங்களை மீண்டும் எடுத்து வருமாறு இராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இறுதியில் இராணுவத்தினர் கழிவறைகளை கூட கழற்றி கொண்டு சென்றனர். இதுதான் தமிழ் மக்களை ஆதரிக்கும் விதம். இது தெளிவான விஷம ஆதரவாகும். எனினும் மூன்று வருடங்கள் அந்த காணியை பயன்படுத்தியமைக்காக அந்த மக்களுக்கு ஒரு சதம் கூட இழப்பீடாகவோ, வரியாகவோ கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள், தமிழ் மக்களின் மனதை வெல்லாமல், அவர்களை பழிதீர்க்கும் ராஜபக்ஷவினரின் அபிலாஷைகளை வெளிகாட்டுகிறது. தமிழ் மக்கள் மீது நம்பிக்கையில்லாததே இதற்கான காரணம்.

மக்களை சந்தித்து விட்டு தாம் திரும்பும் நேரத்தில், பௌத்த சமய பஜனை மற்றும் அனுஷ்டானங்கள் தொடர்பான ஒலிப்பரப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாக காட்டில் விடப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற திரும்பிய சமூக செயற்பாட்;டாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கு இந்துகள் மற்றும் கிறிஸ்தவர்களை தவிர பௌத்த மதத்தினர் எவரும் இல்லை. எனினும இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரை உள்ளது. ஆச்சரியமாக தெரியகிறது, இந்த பௌத்த பஜனை அங்கிருந்துதான் ஒலிப்பரப்பபடுகிறது.

பௌத்த சமயமும் இன்று இலங்கை இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதியாக என்பதை பழிவாங்கலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு மறக்க முடியாத வகையில் நினைவூட்டப்படுகிறது. இந்த பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் காட்டுக்கு துரத்தப்பட்டு, அவர்களின் காணிகளை இராணுவம் பிடித்து வைத்துள்ளது. அந்த மக்கள் தாம் வணங்கள கோயிலோ, தேவாலயமோ இல்லை. இதற்கு பதிலாக இராணுவ பாதுகாப்புடன் பௌத்த பஜனை வானலையில் பறக்கிறது.

உங்களுக்கு இப்படியான சூழலில் வாழ நேர்ந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?. அல்லது உங்கள குடுமபத்தின் இளைஞர்களுக்கு என்ன தோன்றும்?. இப்படியான சூழலில் வளரும் உங்கள் பிள்ளைகள் எப்படியான மறுமொழியை கூறுவார்கள்?.

அச்சுறுத்துவதென்பது ராஜபக்ஷ நிர்வாகத்தின் காவலரணாகும். நாட்டில் மாற்று கருத்துக்கள், கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தமாக அச்சுறுத்துவதை தவிர ராஜபக்ஷவினருக்கு வழங்க பதில்கள் எதுவுமில்லை. எனினும் வன்னி பெண்கள் அந்த காவலை மீறி அச்சத்தை போக்கி கொண்டுள்ளனர். தம் மீது பலவந்தமாக ஏற்றப்பட்டுள்ள தலைவிதிக்கு எதிராக அவர்கள் உலகத்துடன் பேசியுள்ளனர். இந்த பத்தியில்; வரும் பல விடயங்கள் அந்த பெண்கள் உலகத்திற்கு கூறிய கதைகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டவையாகும். இது பகடை காயின் தவணை, அந்த பெண்களுக்கு வெற்றி கிட்டட்டும்.

சுனந்த தேசப்பிரிய

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84148/language/ta-IN/article.aspx

உங்களுக்கு இப்படியான சூழலில் வாழ நேர்ந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?. அல்லது உங்கள குடுமபத்தின் இளைஞர்களுக்கு என்ன தோன்றும்?.

இப்படியான சூழலில் வளரும் உங்கள் பிள்ளைகள் எப்படியான மறுமொழியை கூறுவார்கள்?.

[size=4]இதுதான் தமிழர்கள் நிலை. இதை சிங்களமக்கள் தெரிந்துகொள்வதில்லை. சில புலம்பெயர் மக்கள், தெரிந்தும் தெரியாத மாதிரி உள்ளார்கள் என்பது அதைவிட கவலை.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.