Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் - இந்தியா என்ன சொல்லக் கூடும் என்பதற்கு அப்பால் இந்தியாவால் என்ன செய்ய முடியும்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் - இந்தியா என்ன சொல்லக் கூடும் என்பதற்கு அப்பால் இந்தியாவால் என்ன செய்ய முடியும்?[/size]

யதீந்திரா

அடுத்த மாதம் 1ம் திகதி இலங்கை விவகாரம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்படவுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து திரும்பியிருக்கின்ற சூழலிலேயே கூட்டமைப்பின் மேற்படி விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஏழு பேர் கொண்ட குழுவினராக சென்றுள்ள த.தே.கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகாரச் அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்திக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்ற போதும் புளொட் மற்றும் த.வி.கூட்டணி ஆகிய கட்சிகள் இதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இது குறித்த விமர்சனங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மத்தியில் உண்டு. தவிர, இந்திய தூதரக வட்டாரங்களிலும் இரண்டு கட்சிகளை முக்கிய சந்திப்பொன்றில் தவிர்த்திருப்பது தொடர்பில் நல்லபிப்பிராயங்கள் இல்லையென்றும் அறிய முடிகிறது.

கூட்டமைப்புடனான சந்திப்பை தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை சவுதியில் இடம்பெறவுள்ள ஆசிய ஒத்துழைப்புக்கான மாநாட்டின் போதும், மீண்டும் மகிந்த - மன்மோகன் சந்திப்பொன்று நடைபெறக் கூடுமென்னும் செய்திகளும் வெளியாகியுள்ளன. இதன்போது கூட்டமைப்புடனான கலந்துரையாடல் விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியா கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குகொள்ளுமாறு கோரலாம் என்னும் எதிர்பார்ப்பு கொழும்பு வட்டாரங்களில் நிலவுகிறது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதனை நிராகரித்துள்ளதுடன், இந்தியா அவ்வாறான அழுத்தங்கள் எதனையும் தரவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குகொள்ளுமாறு இந்தியா வலியுறுத்த வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் காணப்படுகிறது.

இது குறித்து இந்து பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் மூலமே, இலங்கையில் அமைதியை கொண்டுவர முடியுமென்னும் கருத்தை இலங்கை அரச தலைமையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் சுமந்திரன் - 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பலவீனப்படுத்துவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தலாம் என்னும் அச்சம் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். எனினும் இந்தியா உத்தரவாதமளித்தால் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குகொள்ளும் என்று முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்தை முன்னிறுத்தி இலங்கை அரசும், கூட்டமைப்பும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டாலும், கூட்டமைப்பின் புதுடில்லி வருகையை தொடர்ந்து வெளிவரும் அபிப்பிராயங்கள் பிழையான அர்த்தப்படுத்தல்கள் என்று இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்து பத்திரிகை செய்தியிட்டுள்ளது - கூட்டமைப்பின் புதுடில்லி விஜயமானது ஒரு கட்டளை முன்னிலைப்படுத்தப்பட்ட அழைப்பு (Summons) அல்ல, மாறாக இது - தமிழ் அரசியல் குழு ஒன்று சில மாதங்களாக விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கு இசைவான ஒரு அழைப்பு ஆகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த சூழலில், உடனடியாக ஒரு தமிழ் அரசியல் குழுவினரை அழைப்பதில் இந்தியா விருப்புக் கொண்டிருக்கவில்லை. இந்த பின்னணியிலேயே மேற்படி வருகை இடம்பெற்றுள்ளது என்றும் மேற்படி இந்திய அதிகாரி கருத்துத் தெரிவித்திருக்கின்றார். இந்த இடத்தில் ஊகங்கள் எதுவாக இருப்பினும் இலங்கை அரசுக்கும் - கூட்டமைப்பிற்கும் இடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகளில் நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் முக்கிய இடத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை. இதில் இந்தியா என்ன சொல்லும் என்பதை விட இந்தியாவால் என்ன செய்ய முடியும் என்பதுதான் விடயம்.

இந்தியா இலங்கையின் வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் தனது உறுதியை வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால் அந்த நியாயமான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலங்கை அரசும் - தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பும் பேசி முடிவுகாண வேண்டும் என்பதிலும் இந்தியா தெளிவாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அத்தகையெதாரு தீர்வு நோக்கி செல்லுமாறு இலங்கை அரசின் மீது சில மென்அழுத்தங்களையே இந்தியாவால் மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, மகிந்த அரசுக்கும் ஆளும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு விரிசல் ஏற்பட்டது. இப்போதும் இந்தியாவின் மேற்படி முடிவு தவறானது என்னும் கருத்தையே மகிந்த அரசு வெளிப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா மேற்படி விரிசலை மேலும் அகலப்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை. ஆனால் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் முன்னைய அணுகுமுறைக்கும் தற்போதைய அணுகுமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுண்டு. முன்னர் இந்தியாவால் தமிழர் அரசியலை கையாள முடியாதளவிற்கு, வரலாற்று எதிரியாக இந்தியாவால் கணிக்கப்பட்டிருந்த பிரபாகரன் தலைமையில் தமிழர் அரசியல் இருந்தது. இதனை பிறிதொரு வகையில் பார்ப்பதாயின், இலங்கை அரசின் மீது அழுத்தங்களை கொடுக்க முடியாதளவிற்கு இந்தியா முடக்கப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில்தான் மேற்கின் ஆதரவுடன் இலங்கையில் சமாதானத்திற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க-இந்திய மூலோபாய உறவு முன்னர் எப்போதுமில்லாதவாறு நெருக்கமாகிக் கொண்டிருந்த ஒரு காலத்தில்தான் மேற்குலகு நோர்வேயின் தலைமையில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கான நடுநிலையாளராக களமிறங்கியது. ஆனால் அனைத்தும் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே இடம்பெற்றன. இந்த தகவல்கள் - சமாதான ஒப்பந்த காலத்தில் அதன் தொடர்பாளராக தொழிற்பட்ட நோர்வேயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாய்திறக்கும் வரை, ஒரு இரகசியமாகவே பேணப்பட்டு வந்தது. 1997 - 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட 'சமாதானத்திற்கான கையாளுகை' (Pawns of Peace - Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) என்னும் அறிக்கையை வெளியிட்டு வைத்து பேசும்போதே, எரிக் அதுவரையான மௌனத்தை கலைத்தார் - 'இலங்கையின் சமாதான முன்னெடுப்பு வெளிப்பார்வைக்கு நோர்வேயின் குழந்தை போன்று காட்சியளித்தாலும் உண்மையில் அதனை இயக்கிய சக்தி என்னவோ இந்தியாதான்' - என்று குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் பி.பி.சிக்கு கருத்துத் தெரிவித்திருந்த எரிக் சொல்ஹெய்ம் போர் ஒரு தீர்மானகரமான கட்டத்துக்குள் வந்துகொண்டிருந்த சூழலில் தாம் போரை நிறுத்துவதற்கான ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்க அனுசரணையுடன் ஒரு கடற்படைகலத்தை அனுப்பி புலிகளை பாதுகாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்தான், தற்போது சமாதான முன்னெடுப்புக்கள் அனைத்தினதும் ஏற்பாட்டாளராக இருந்த சொல்ஹெய்ம் இதனை பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார்.

இதனடிப்படையில் வடக்கு கிழக்குப் பகுதிக்கு ஒரு கப்பலை அனுப்பி, போரில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள், மக்கள் அனைவரையும் ஐ.நா அல்லது வேறு அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து அவர்கள் அனைவரையும் கொழும்புக்கு கொண்டு சென்று, பின்னர் பிரபாரகன், பொட்டு அம்மான் தவிர்ந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதென்று தீர்மானித்ததாக சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர், இதற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா என்னும் பிறிதொரு கேள்விக்கு அளித்திருக்கும் பதில் மிக முக்கியமானது - நான் இலங்கைப் பிரச்சனையில் தலையிட்ட கடந்த 10 வருடங்களில் இந்தியாவிற்கு தெரியாமல் எதனையுமே செய்ததில்லை. இவைகள் ஒருவருக்கு தெளிவாக சொல்லும் செய்தி என்வென்றால் இந்தியா நினைத்திருந்தால் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். பிரபாகரனையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அதனை செய்ய இந்தியா விரும்பியிருக்கவில்லை.

இத்தகையதொரு பின்புலத்தில்தான், மீண்டும் தமிழர் அரசியல் இந்தியாவின் அனுசரணையை நாடும் சூழல் உருவாகியது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கடும்போக்கு நிலைப்பாடு இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது. இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன சூழலில், அத்தகைய அழுத்தங்களுக்கு வெளியில் இந்தியா தன்னை நிறுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பின்புலத்தில்தான் இந்தியா அமெரிக்க பிரேரணையை ஆதரித்திருக்கிறது.

தற்போதைய இந்திய அணுகுமுறையை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும் - சர்வதேச அழுத்தங்களின் தொடர் பிடியிலிருந்து இலங்கை தப்ப வேண்டுமாயின் இலங்கையில் ஒரு சுமூகமான நிலைமையை தோற்றுவிக்கக் கூடியளவிற்கு இலங்கை முன்னோக்கி நகர வேண்டும் என்னும் நிலைப்பாட்டையே இந்தியா வெளிப்படுத்தி வருகின்றது. இதில் தமிழர் பிரச்சனைக்கான தீர்வும் பிரதானமானது. இலங்கை தனது பொறுப்புகூறும் விடயத்தில் குறிப்பிட்டளவு முன்னேற்றத்தை காட்டுமாயின் இந்தியாவால் மேற்படி அழுத்தங்களை கட்டுப்படுத்த முடியும். இதற்கான இலங்கை அரசின் பதில்கூறும் தன்மையைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.

இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு, இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் மோசமாக உரசும் நிலைமை ஏற்படின் இந்தியாவின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் தற்போதைய நிலையில் இந்தியா கொழும்புடன் தீவிரமாக முரண்படக்கூடிய நிலைமை இல்லை. கூடுமானவரை கொழும்பை அரவணைத்துக் கொண்டு செல்லும் ஒரு உபாயத்தையே இந்தியா கடைப்பிடிக்கும். இத்தகையதொரு பின்புலத்தில் இந்தியா கூட்டமைப்பை இலங்கை அரசுடன் பேசுமாறுதான் வலியுறுத்தவும் செய்யும். இலங்கை அரசுடன் கூட்டமைப்பு பேச வேண்டுமாயின் அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் நாடாளுமன்ற தெரிவுக் குழு யோசனையை தொடர்ந்தும் தவிர்க்க முடியாது போலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=02ed7512-d7c8-4a09-b970-48cc819a01c8

இந்தியா என்ன சொல்லக் கூடும் என்பதற்கு அப்பால் இந்தியாவால் என்ன செய்ய முடியும் :- [size=4]இவைகள் ஒருவருக்கு தெளிவாக சொல்லும் செய்தி என்வென்றால் இந்தியா நினைத்திருந்தால் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். பிரபாகரனையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அதனை செய்ய இந்தியா விரும்பியிருக்கவில்லை.[/size]

[size=4]கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்தை முன்னிறுத்தி இலங்கை அரசும், கூட்டமைப்பும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டாலும், கூட்டமைப்பின் புதுடில்லி வருகையை தொடர்ந்து வெளிவரும் அபிப்பிராயங்கள் பிழையான அர்த்தப்படுத்தல்கள் என்று இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்து பத்திரிகை செய்தியிட்டுள்ளது - கூட்டமைப்பின் புதுடில்லி விஜயமானது ஒரு கட்டளை முன்னிலைப்படுத்தப்பட்ட அழைப்பு (Summons) அல்ல, மாறாக இது - தமிழ் அரசியல் குழு ஒன்று சில மாதங்களாக விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கு இசைவான ஒரு அழைப்பு ஆகும் :- [/size][size=4]கூடுமானவரை கொழும்பை அரவணைத்துக் கொண்டு செல்லும் ஒரு உபாயத்தையே இந்தியா கடைப்பிடிக்கும். இத்தகையதொரு பின்புலத்தில் இந்தியா கூட்டமைப்பை இலங்கை அரசுடன் பேசுமாறுதான் வலியுறுத்தவும் செய்யும். இலங்கை அரசுடன் கூட்டமைப்பு பேச வேண்டுமாயின் அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் நாடாளுமன்ற தெரிவுக் குழு யோசனையை தொடர்ந்தும் தவிர்க்க முடியாது போலாம்.[/size]

[size=4]முரன்பட்ட கருத்துகளைகளை இழுத்துவந்து காட்டும் யத்தீந்திரா அவற்றை முடிச்சு போட்டு காட்டத்தக்க ஆற்றல் இல்லாமல் தவிக்கிறார். அதனால் கருத்துகள் கட்டுரையில் தொடுப்பின்றி அநாதைகள் போல் காணப்படுகின்றன.[/size]

[size=4]யத்தேந்திரா இன்னமும் கொஞ்ச அரசியல் முதிர்ச்சி அடைய இடம் இருக்கு. பிரதேச சபை தேர்தலில் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அதிக வெற்றி அடைந்தவுடன், "எது நடந்தாலும் கூட்டமப்பு இனி அரசு கொடுப்பதை எதும் சொல்லாமல் வாங்கிகொள்ள வேண்டியதுதான்" என்று எழுதியவர். சம்பந்தர் இன்னமும் தெரிவுக்கு குழுவுக்கே போகவில்லை. போய் கிடப்பதை கை கட்டி வாய் பொத்தி யத்தீந்திரா எதிர்வு கூறிய மாதிரி ஏற்றுகொள்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க முடியும்.[/size]

[size=4]இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை, புவிசார் பிராந்திய அரசியல் பற்றி எல்லோருக்கும் பாடம் எடுத்தவர் யத்தீந்திரா. ஆனால் இன்று சோனியா காங்கிரஸ் இருக்கையில் குண்டூசி அறையபட்டிருபதுபோல் பாரளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு லீவில் போக முயல்கிறது. புலிகளை வைத்து இந்தியாவின் சர்வதேச பாதுகாப்பு கொள்கைகளை அமைத்த நாராயன், நிருபம்மா, சிவசங்கர் மேனன் ஆகிய மூன்று குதிரைகளிலும் இன்னமும் ஓடி முடிக்க இருப்பது சிவசங்கர் மேனனே. மற்றைய இரண்டிலும் பணம் கட்டியவர்கள் கட்டுப்பணத்தைதான் இழந்தார்கள். முடிவு இன்னமும் இரண்டு மாதங்களில் தெரியலாம். பணம் கட்டுவோருக்கு கிடைத்திருக்கும் இரண்டு புது குதிரைகள் மம்மதாவும் யாதவும். கட்டி பார்த்துவிட்டால் போயிற்று. [/size]

[size=5]இலங்கை தொடர்பான இந்திய நிலை மாறும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்[/size]

[size=3][size=1][size=4]இலங்கை தொடர்பில் இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலகட்டம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=3]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், ஆர். சம்பந்தர் தலைமையில் டெல்லி வந்துள்ளனர்.[/size]

[size=3]அந்தக் குழுவில், இடம் பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்தார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்.[/size]

[size=3]எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை ஜனாதிபதி அரசிடமும் தன்னிடமும் அளித்த உறுதிமொழியின்படி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.[/size]

[size=3]இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.[/size]

[size=3]அகிம்சை போராட்டம்[/size]

[size=3]இலங்கை அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்று இந்தியாவும் கருதும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக, அகிம்சைப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அப்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று இந்திய அரசிடம் தாங்கள் எடுத்துரைத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.[/size]

[size=5]சீனாவின் செல்வாக்கு[/size]

[size=3]சீனாவின் ஆதிக்கம், குறிப்பாக வடமாகாணத்தில் ராணுவ முகாம்களை நவீனப்படுத்துவதிலும், ராணுவக் குடியிருப்புக்கள் கட்ட நிதியுதவி அளிப்பதிலும் சீனா அதிக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அது இலங்கைத் தமிழர் மக்களால் ஏற்க முடியாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இதுதொடர்பில் இந்தியா ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.[/size]

[size=3]தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகள் குறித்துக் கவலை வெளியிட்ட இந்தியப் பிரதமர், அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், மிக விரைவில் அதுதொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும் என்று பிரதமரிடம் சம்பந்தர் அவர்கள் உறுதியளித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.[/size]

[size=3]சர்வதேச ரீதியாக ஒரு சரியான அமைப்பை முன்னெடு்த்துச் செல்ல ஒரு வலுவான கட்சி தேவை. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அப்படிப்பட்ட வலுவான கட்சியாக மாற்ற சம்பந்தர் அவர்கள் நிச்சயம் பணியாற்றுவார் என்று நம்புவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.[/size][/size][/size]

http://www.bbc.co.uk...ndiatalks.shtml

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

<a href="http://vrojan.blogspot.ca/2010/10/blog-post.html">இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் திலீபன் மற்றும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட வேங்கைகளின் வீணான சாவுகள்

1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன.

இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது.

ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.

அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற்ற சில தமிழ் உறவுகளின் கூற்றுப்படி தமிழ் இளைஞர்களுக்கான பயிற்சி இலங்கை அரசின் இராணுவ நடமாட்டங்களைக் கண்காணிப்பதும் வெளிநாட்டு ஊடுருவல் இடம்பெறாமல் தவிர்ப்பதுமாகவே இருந்தது.

மேலும் உறுதியான தீர்வு கேட்டு அன்றைய வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதியிடம் மூன்று இலங்கையர் பேசிக்கொண்டிருந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியில் இந்திரா அவரது 3 சீக்கியக் காவலாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஆதி பராசக்தியாகவும் கருதப்பட்ட இந்திரா காந்தி வரம் தர வந்த சாமியா இல்லையா எனத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளும் காலம் வரும் முன்னரே அவரது உயிர் பறிப்பு நிகழ்ந்து விட்டது.

இந்திராவின் கொலையில் வெளிநாடுகளின் கைகள் இருக்குமாயின் இலங்கையின் கைகளும் இருப்பது சாத்தியமே. இந்திராவின் இடத்துக்கு வந்த அவரது மகன் ராஜீவோ அல்லது ஏனைய இந்தியத் தலைவர்களோ இந்திரா காந்தியின் கொலை பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை.

இவை எதனையும் தெரிந்து கொண்டவராகவோ அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவராகவோ இந்திராவின் இடத்துக்கு வந்த ராஜீவுக்கு இருக்கவில்லை. அதனை அவரது குறையாகவும் கருத முடியாது.

பரம்பரை அரசியல் நாகரிகத்துக்கு இந்திய ஜனநாயக முறை அடிமைப்பட்டுப் போன அவலமே காரணம் எனலாம். அத்துடன் அவர் அதிகார பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டு நாகரிகம், வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டுக் காதலியான மனைவி, பாரத மண் அவர் காலில் பட்டிருக்குமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்நியரானவர். செய்த தொழிலும் வானத்தில் பறக்கும் விமான ஓட்டி. மொத்தத்தில் பாரத மண்ணுக்கும் அவருக்கும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பு.

இப்படியான சூழலில் விமான ஓட்டியாக உலக சுகங்களை அனுபவித்து வந்த ராஜீவுக்கு இலங்கையின் இனப் பிரச்சனையிலும் விமானம் ஓட்டுவது போல் ஓட்டிவிடலாம் என நினைத்து விட்டார்.

அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத காரணத்தாலும் அக்கறையின்மையாலும் அவர் அருகில் உள்ளவர் நினைத்தபடி நினைத்த பாட்டுக்கு ஆடும் பொம்மை ஆனார். அந்த அருகில் உள்ளவரைக் கூட அணுவளவும் நம்பாத குணமும் திமிரும் இருந்தது.

அதனால் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் தமிழர் என்ற காரணத்தால் ஜே.ஆரின் விருப்பப்படி இந்திராவுடன் செயலாற்றிய பார்த்தசாரதியையும் பின்னர் கோபாலசாமியையும் ஒருவர் பின் ஒருவராக நீக்கி விட்டு வடநாட்டவரான ரொமேஷ் பண்டாரியை நியமித்தார்.

இதன் பின்னர் எல்லாமே ஜே.ஆர் நினைத்தபடியே நிiவேறின. வலுக்கட்டாயமாகத் தமிழர் மீது திணிக்கப்பட்ட மாகாண சபை கூட இயங்கவிடாத படிச் செய்தபடியே தமிழ் மண்பறிப்பும் தமிழின அழிப்பும் விடுதலை இயக்கங்களுக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியும் தமிழரின் அமைதி வழி அரசியல் தீர்வு கால் நீராகவே போக்கடிக்கும் செயல்களே நடந்தேறின.

இவற்றுக்கு ஒரு முடிவு தேடி தன்னைத் தீயாக்கித் தியாக தீபம் ஆனான் திலீபன். பல போர்முனைகளைக் கண்ட மாவீரன் திலீபன். விழுப்புண் ஏந்தியும் தமிழினத்துக்காகப் பல களமுனைகளைக் காணக் காத்திருந்தவன்.

காந்தி தேசத்துக்குக் காந்தியின் காந்தீயம் புரியும் என நினைத்தது திலீபன் மட்டுமல்ல. ஈழத் தமிழினமே நம்பிக்கையோடு திலீபனின் தவம் பலித்துத் தமிழீழ வரம் கிடைக்கும் என இலவு காத்த களியாகக் காத்திருந்தது. வந்து பார்த்துப் போன இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றும் இந்தியத் தூதுவராக நடக்காது ஜே.ஆரின் சிங்களத் தூதுவராகவே நடந்து கொண்டார்.

திம்புவில் பேசியதும் தமிழர் தரப்பை இந்தியா தண்டிக்க முயன்றதும் தமிழரது நியாயமான கோரிக்கைகள் சேரும் இடம் குப்பைக் கூடைதான் என்பதை உணரத் தவறிய இனமாகத் தமிழினம் மாறிவிட்டது. மீண்டும் மீண்டும் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் அடுப்புக்குமாக மாறி மாறித் தவிப்பதே தமிழினத்தின் தலைவிதியாக இன்றும் தொடருகிறது.

பன்னிரண்டு நாட்கள் அனல் மேல் புழுவாய்த் துடித்த பின் வரம் தரும் சாமி தரிசனம் கிடைக்காமலே திலீபனின் தவம் தீயிலே கருகியது. கருகியது திலீபனின் உடல் அல்ல தமிழினத்தின் உள்ளங்கள். இன்றும் நினைத்தாலும் தமிழினத்தின் உள்ளங்களைத் தீ தானாகவே பற்றிக்கொண்டு விடும். ஆனால் அவன் மறைந்த கொடூர நினைவுகள் அடங்கும் முன்னரே அடுத்த பேரிடி ஈழத் தமிழினத்தின் தலைகள் மீது விழுந்தது.

ஒக்டோபர் இலங்கை - இந்திய ஒப்பந்தம் அமுலாகி ஓரிரு மாதங்களே ஆகியிருந்த நிலையில் அந்த ஒப்பந்த விதிகளுக்கு அமைய ஒரு சில தற்காப்பு ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்படப் 17 பேர் சென்ற படகை இலங்கைக் கடற்படை தடுக்கிறது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் என ஒன்று இல்லாதிருந்தால் இடைமறித்த கடற்படை உயிர்தப்பியிருக்க முடியாது. கடற்படை தப்பியிருந்தால் 17 பேரும் சமராடி வீரச்சாவைத் தழுவியிருப்பர். ஆனால் திலீபனின் உயிரைக் குடித்த அதே இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இந்தியாவின் மீதுள்ள மதிப்பும் மீண்டும் கரங்களைக் கட்டிய காரணத்தால் இந்தப் 17 பேரும் சிங்களத்தின் சிறைக் கைதிகளாயினர். அவர்களைச் கொழும்புக்குக் கொணடு போய் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்ய முற்பட்ட சிங்களத்தை இந்திய பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அல்லது விரும்பவில்லை.

இந்திய அரசுடன் செப்டெம்பர் 28 ஆம் திகதி புலிகள் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருப்பதை அனுமதிக்கிறது எனச் சுட்டிக் காட்டியும் பயனற்றதால் 17 பேரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி குப்பி கடித்தனர். அதில் 12 பேர் மாண்டனர். யாழ். தளபதியான குமரப்பா மணமாகிச் சில நாட்களே ஆன நிலை.

புலேந்திரன் திருமலைத் தளபதி. ஏனைய 15 பேரும் அதிமுக்கியமும் அனுபவமும் வாய்ந்தவர்கள். திலீபன் மறைவால் பொங்கிய கண்ணீர் வெள்ளம் முடிவு காணும் முன்னரே 12 மாவீர மணிகளின் வித்துடல்களுக்கு விழியாலும் விம்மும் அழுகையாலும் மலர்தூவி வழி அனுப்பி வைத்தோம்.

இத்தனையும் கண்டு அனுபவித்த பின்னரும் இந்தியா நமக்கு வரம் தரும் எனச் சாமியாடும் தொண்டர் படையை நினைக்கும் போது அப்பாவித்தனம் என்பதா இனத் துரொகம் என்பதா? நாங்கள் இன்னமும் எமது சிந்தனையைச் சீர்செய்யாது இருப்போமானால் எப்படி எமது முன்னைய தமிழர் தலைவர்களைக் குறை சொல்லமுடியும்?.

ஈழத் தமிழினம் கொழும்புத் தமிழரால் வழிநடத்தப்பட்ட நிலை சேர் பொன் அருணாசலத்தின் அரசியல் யாழ். இளைஞர் பேரவையைத் தமது வழிக்குத் திருப்பிய 1920 களில் தொடங்கி விட்டது. இதனால் தொடர்ச்சியான விட்டுக் கொடுப்புகளால் எமது இனம் இழந்த நிலமும் வளமும் வாழ்வும் அளவிட முடியாதவை. இந்த நீண்டகால அசமந்தப் போக்கை எமக்கு உணர வைத்தவர் சிங்களத் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க. அவரே தமிழ்த் தலைவர்களுக்கு பதவி பாராட்டுக்களை வழங்கி தமிழரின் உயிர் குடித்த பருந்து.

தமிழினத்தின் ஏமாளித்தனத்தை ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமது 50:50 என்ற கோரிக்கை மூலம் தமிழ்ப் பொதுமக்களுக்கும் சிங்களத்துக்கும் வெளிப்படுத்தினார். பின்னர் அவர் குட்டைக்குள் விழுந்தாலும் அவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட தந்தை செல்வாவும் அவருடன் கோப்பாய்த் தொகுதிப் பிரதிநிதியாக 1947 இல் தெரிவான கு.வன்னியசிங்கமும் தமிழினத்தின் தர்மநோக்கும் உரிமைக்குரலும் தடம் புரளாமற் காப்பாற்றினர்.

இவர்கள் இருவரும் நல்லவராக இருந்ததால் இந்திய வம்சாவழித் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் அழிக்க முடியாத வரலாற்றுத் துரோக வழியில் தமிழினம் போகாது தப்பியது. இவர்களால் தொடங்கப்பட்ட தமிழரசுக் கட்சி முன்வைத்த சுவிஸ் அரசமைப்பு முறையிலான சமஷ்டி ஆட்சிமுறையைச் சிங்களத் தலைமை ஏற்றிருந்தால் இன்று இலங்கை பூலோக சொர்க்கமாக இருந்திருக்கும்.

இன்றைய இந்த அவல நிலைக்குப் படிக்காத சிங்கள மக்களும் தமிழ்ப் பொது மக்களும் காரணம் எனக்கூற முடியாது. ஆங்கிலக் கல்வி கற்ற சிங்கள, தமிழ்த் தலைவர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டியவர்கள்.

அப்பாவிப் பொதுமக்களுக்குப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வாக்கு மோசடிகளைச் செய்து பதவிக்கு வருவது, பின்னர் தமக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட போட்டிகளால் நாட்டைச் சூறையாடிக் குட்டிச்சுவராக்கும் அரசியல் நடத்துவது.

கடந்ந 80 ஆண்டுகளாக டி.ஏஸ் முதல் மகிந்தர் வரை நடக்கும் கதை இதுதான். இவ்வகையாக உருவாக்கப்பட்ட சிங்களத் தமிழ் அரசியல் முரண்பாடுகள் வெளியார் தலையிட வசதியாக இருந்தது.

இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமைப் பறிப்பும் நாடற்றவராக்கி நாடு கடத்தும் சிங்களத்தின் செயலும் இந்திய அரசுக்குத் தலையிட அன்றே போதுமான காரணிகளாக இருந்தன. தன்னால் முடியாது போனாலும் இந்தியா சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால் இரு தேசத் தலைவர்களும் ஆங்கில மோகத்தில் ஊறிய ஆதிக்கப் பிரபுக்கள் வகுப்பினர். காட்டிக் கொடுத்தே ஆங்கில அரசிடமிருத்து நற்பெயர் பெற்றவர்கள். அதனால் இவர்களுக்கு மக்கள் நலமோ நாட்டு நலமோ சுட்டுப் போட்டாலும் வராத சமாச்சாரங்கள்.

இரு நாடுகளிலும் இன்றும் ஆளும் கதிரைக்கு அதே ஆங்கில, அல்லது மேல்நாட்டு மோகம் கொண்ட பிரபுக்களின் வாரிசுகளே அலங்கரித்து வருகின்றனர். வாரிசுகள்தான் வரவும் முடியும் என்ற நிலையில் இந்திய அரசு உறுதியாக நிற்பது தெரிகிறது.

இன்று மக்களின் கருத்து உலகம் அளவு விரிந்த அறிவைப் பெற முடிவதால் ஆளும் வர்க்கத்துக்குப் பதவியில் இருக்கத் தேவையானது மக்களின் கவனமாகும். மக்களின் கவனத்தை இலகுவில் ஈர்க்கக் கூடியவையாக இன்று மதமும் மதம் சார்ந்த அடிப்படைவாத வன்முறைகளும் இருப்பதால் இலங்கையில் புத்தம், இந்தியாவில் இந்துத்துவம், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்கம், பாக்கிஸ்தான் ஆப்கான் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் என்பன இன்று வன்முறைக் களங்களாக உள்ளன.

இப்படியான சூழலில் இரத்தம் சிந்தும் கோரச் செயல்கள் சொத்தழிவு உயிர்க் கொலை என்பன முரண்பாடுகளின் பொதுமையான பின் விளைவுகள் என்ற உண்மைகள் மறைக்கப்படுகின்றன. அரச இயந்திரங்களிலிருந்து பாயும் துப்பாக்கி ரவைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் எத்தகைய அழிவுகளைத் தந்தாலும் அவை மக்களாட்சி என்ற பெயரால் நியாயப்படுத்தும் கொடுமை நடக்கிறது.

நியாயமான அரசியல் கோரிக்கைகளை அமைதியான வகையில் அணுகித் தீர்வு காணாது அரச இராணுவ இயந்திரங்களைக் கொண்டு வன்முறையால் அடக்குவது எப்படி மக்களாட்சி ஆகமுடியும்? மக்களால் மக்களுக்காக மக்களை ஆழும் முறை மக்களாட்சி என்றால் எப்படி ஒரு அரசு தான் ஆளும் மக்களையே அரசியல் காரணங்களுக்காகக் கொல்ல முடியும்?

அப்படிப் பார்த்தாலும் 1977 முதல் தமிழ் மக்கள் சுதந்திரமான வாக்களிப்பு மூலம் இனிமேலும் சிங்களத்துடன் ஒற்றையாட்சியில் இருக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர்.

ஆனாலும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் நோக்கமாகவே தேர்தல்களில் பங்களித்து வந்தனர்.

1972 இலும் 1980 இலும் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு மூலம் தொரிவான சம்மதம் இல்லாமலே சிங்களத்தாலும் அதன் நியமனத் தமிழ் பிரதிநிதிகளாலுமே ஏற்கப்பட்டவை. சிங்களத்தின் அணுகுமுறை மாறும் என நினைத்து ஏமாந்த நிலையில் இன்றைய அரசுத் தலைவர் தமிழ் மக்களின் வாக்குப் பெறாமலே பதவிக்கு வந்தவர். அவருக்குத் தமிழர் மீது ஆட்சி செய்யவோ ஆணை செலுத்தவோ எந்தவிதமான ஜனநாயக யோக்கியதையும் கிடையாது.

ஆனால் இன்று உலகம் எங்கும் மக்களாட்சி என்ற பெயரால் தன் மக்களைத் தானே கொன்று அழிக்கும் அரசுகள்தான் இயங்குகின்றன. இதில் இயங்கு சக்தியாக ஆளுவோர் யார் மீதும் எதற்காகவேனும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட முடிகிறது. இது இலங்கை அரசைப் பொறுத்த வரை தமிழரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைக்கச் சிறந்த ஆயுதமாக உள்ளது.

இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிப்பவருக்கு ஒன்று புரியும். மகிந்தரின் இடத்தில் எவர் பதவிக்கு வந்தாலும் இதே வழியைத்தான் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது பண்டாரநாயக்க ஜே.ஆர். 1940களில் தொடக்கி வைத்த அரசியலின் பரிணாம வளர்ச்சி. இதில் பின்நோக்கிப் போக முடியாதபடி 1960 இல் அரசுடமையாக்கப்பட்ட கல்வித்துறையும் அது புகுத்திய பாடநெறிப் புத்தகங்களும் செய்து விட்டன. இதனை அறியாதவர் இலங்கையின் இன முரண்பாடுகளை என்றுமே விளங்கிக் கொள்ள முடியாது.

ஒரு புதிய சிங்கள இனமேலாதிக்கச் சிந்தனைக்குள் முழுச் சிங்கள இனமும் சிக்கிக் கொண்டு விட்டது. வேறு இனங்களை முக்கியமாக அரசியல் பொருளாதார அறிவியல் என்பவற்றில் தொடர்ந்தும் மேல் நிலையைத்தக்க வைக்கும் தமிழினத்தை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை.

இராணுவ ரீதியாக மட்டுமல்ல வாழ்வியல் ரீதியாகப் பார்த்தாலும் சிங்களம் புலி வாலைப் பிடித்துக்கொண்டவன் கதையாகவே உள்ளது. இந்நிலை ஜே.ஆரின் காலத்தில் தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். திம்புவிலும் பெங்களூரிலும் நேருக்கு நேராகப் பொது மேடையில் எமது அரசியல் தோன்றியபோதே சிங்களம் புலிவாலைப் பிடித்து விட்டது.

இலங்கை அரசியல் உண்மையான மக்களாட்சியாக இருந்தால் திலீபன் போல் எத்தனையோ கல்வியிற் சிறந்த மாணவர்களைப் பாழாய்ப் போன சிங்களப் பேரினவாத அரசியலும் காட்டிக்கொடுக்கும் தமிழ் அரசியல் துரோகிகளின் தன்னலமும் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து முடிவில்லாத போருக்கு இன்று வரை பலியாக்கி வருவது எமது இனத்தின் சாபக்கேடாக உள்ளது. இதற்கு முடிவு காணும் வாய்ப்பும் வசதியும் புகலிடத் தமிழரிடமே உள்ளன. இன்று உள்ள நிலையில் இது வன்னி மக்களதோ தமிழீழ மக்களதோ பிரச்சனையாக இல்லை- மாறாக அனைத்துலகத் தமிழரதும் மனித இனத்தினதும் பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்

இன்று வன்னியில் நடப்பது மனித வதை, இன அழிப்பு மற்றும் மனித இனத்துக்கு எதிரான போரக்குற்றங்களாகும். இதே குற்றத்தைக் கிழக்கில் செய்தபோது அனைத்துலக அரசுகளும் அமைதிப் பேச்சின் அனுசரணையாளர்களும் நடவடிக்கை எடுப்பர் என நம்பி நாம் ஏமாந்து விட்டோம்.

வன்னியில் இடம்பெறும் குற்றச் செயல்களின் பொறுப்பாளிகளாக, முக்கிய குற்றவாளிகளாக இலங்கை இந்திய அரசுகள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்னியின் இலங்கைப் படைத் தளத்தில் காயம் பட்டவர்களில் இரு இந்தியர்கள் இருப்பது இந்திய அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போதுமானதாக உள்ளது. எமது அடுத்த நடவடிக்கை இது பற்றியதாக இருக்க வேண்டியது நியாயமான தேவையாக உள்ளது. காலத்தின் கட்டாயம் தெரிந்து இதனைச் செய்வோமா?.

http://vrojan.blogspot.ca/2010/10/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Prime Minister Manmohan Singh today affirmed India's commitment for a political solution to the Sri Lankan Tamils issue during a meeting with TNA leaders, who would now consider joining a Parliamentary committee provided Colombo assures they will not be "cheated again".

Singh also told a TNA delegation that India will not "backtrack" from its position that Tamils in Sri Lanka should lead a life of "dignity and self respect" in a peaceful environment, the team's head R Sampanthan said.

http://news.outlookindia.com/items.aspx?artid=777914

Krishna urges Lankan Tamil delegates to resume talks - Times Of India http://timesofindia.indiatimes.com/india/Krishna-urges-Lankan-Tamil-delegates-to-resume-talks/articleshow/16775421.cms?intenttarget=n

http://articles.timesofindia.indiatimes.com/2012-10-12/india/34411386_1_tna-parliament-select-committee-s-m-krishna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.