Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

வெருகல் ஆற்றுப் பகுதியில் மோதல் ஏற்பட வாய்ப்பு

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு இடையி லான வெருகல் ஆற்றுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு.

- இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் பேச் சாளர் பிரிகேடியர் சுமேதா பெரேரா.

பி.பி.ஸியின் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

ஷஷஎங்களுக்குக் கிடைத்த தகவலின்படி கிழக்கு மாகாணத் திலிருந்து சென்ற விடுதலைப் புலிகள், வெருகல் ஆற்றுக் கரை யோரங்களுக்குச் சென்றுள்ளனர். வடக்குப் பிரதேசத்திலிருந்து போராளிகள் அப்பகுதிக்குச் செல்ல எங்களுடைய அனுமதி பெறப்படவேண்டும். அவர்கள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் மேற்பார்வையிலேயே செல்லவேண்டும்| செல்ல வும் முடியும். அந்த அளவுக்கு வடக்கு - கிழக்குப் பிரதேசங்களு டைய எல்லைப் பரப்புக்கள் இரா ணுவக் கட்டுப்பாட்டிலேயே உள் ளன. கடந்த இரண்டு நாள்களுள் சில நகர்வுகள் இடம்பெற்றுள் ளன. சுமார் 50 இலிருந்து 60 போரா ளிகள் வரை வன்னியிலிருந்து திரு கோணமலைக்கு எமது அனுமதியு டன் சென்றுள்ளனர்.

- இவ்வாறு பிரிகேடியர் அப் பேட்டியில் குறிப்பிட்டார்.

நன்றி - உதயன்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம்.

Rameh.jpg

தளபதி ரமேஸ் தலைமையிலுள்ள புலிகள் -வெருவில்

அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம் என சண்டே ரைம்ஸ் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அதாஸ் ஆருடம் கூறி உள்ளார்.

இவர் மேலும் தெரிவித்திருப்பபதாவது

* கடந்த வெள்ளியில் இருந்து கருணாவின் 'ரேடியோ தொடர்பாடல்கள்' குழப்பப் படுகின்றது.

* வெருகலில் கிழக்கு மாவட்ட புதிய தளபதி ரமேஸ் தலைமையில் புலிகளின் சிறப்பு அணியில் அரணைமைத்து உள்ளார்.

* வெருகல் குடாவில் கடற்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கடற்புலிக் கப்பல்களும் நங்கூரமிடப்பட்டுள்ளது.

* வன்னியில் உள்ள கடற்புலித் தளங்களின் ரேடியோ தொடர்பாடல்கள் அதிகரித்துள்ளன.

karuna.jpg

கருணாவின் சகோதரர் ரெஜி மற்றும் உதவியாளர் - வெருகுலின் மறுபுறத்தே.

படங்கள் சண்டே ரைம்ஸ்

நன்றி - சூரியன் வெப்தளம்

  • தொடங்கியவர்

vw28p1.jpg

கொழும்பு ஜிந்துப்பிட்டி மலிபன் சந்தியில் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுடப்பட்ட இடத்தையும் வெற்றுத் தோட்டாக்களையும் படத்தில் காணலாம்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

மெய்ப்பாதுகாவலருக்குரிய சீருடையில் வந்தநபரே மகேஸ்வரனை சுட்டார்

(அ.கனகராஜா,கே.பி.மதன்,ப.தெய்வீக

  • தொடங்கியவர்

சங்கரியின் ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்

(ப.தெய்வீகனும், ஜோ. வோஷிங்கரனும்)

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரும், ஆதரவாளர்களும் நேற்றுக்காலை கைதடியில் கடுமையாகத் தாக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி கேசரிக்குத் தெரிவித்தார்.

காலை 10 மணியளவில் கைதடிச் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்திற்கென யாழ்.செயலகத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோதே கைதடியில் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அரவிந்தன், பத்மநாதன் ஆகிய இருவரும் தாக்குதலில் காயமடைந்தனர் என்றும் இவர்கள் பயணித்த வாகனங்களில் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் தலைமையிலான குழுவினரே இவர்களைத் தாக்கியதாகவும் வேட்பாளர்கள் பயணித்த ஐந்து வாகனங்களில் மூன்று வாகனங்கள் மீது பொல்லுகள், கொட்டன்கள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தமது வேட்பாளர்கள் திரும்பிவரும் போதும் கூட கலைத்து கலைத்து தாக்கப்பட்டனர் என்றும் கூறிய ஆனந்தசங்கரி, இச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் கூடுதல் பாதுகாப்பு வழங்குங்கள் மட்டு.பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஜோசப் வேண்டுகோள்

(தெய்வீகன் ,வோஷிங்ரன்)

இனந்தெரியாதோரால் தொலைபேசி மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

""நான் உயிர்வாழப்போவது சிறிது காலம் தான். ஆனாலும், இதுவரை காலமும் முன்னெடுத்து வந்த தமிழ்மக்களின் தேசியக்கொள்கையை எந்தக் காரணத்திற்காகவேனும் தியாகம் செய்ய மாட்டேன்.''

தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தக்கூடாது என்றும் மட்டக்களப்பை விட்டு வெளியேறி விடுமாறும் கருணா தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இந்நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க அடியோடு மறுப்புத் தெரிவித்திருக்கும் ஜோசப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் இருந்து வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுடனான கோரிக்கை நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.

ஆனால், அவரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என்று இளைஞர்களும், பொதுமக்களும் அன்புக்கட்டளையிட்டுள்ளனர். அவரது உயிருக்கு வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அவருக்குப் பக்க பலமாக நின்று எதிர்கொள்ளத் தயாராக இருப்பது என்றும் அவர்கள் சபதம் பூண்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

""மிரட்டலுக்கு பயந்து தேர்தலில் இருந்து ஒருபோதும் வாபஸ்பெறமாட்டேன். ஆனால் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நிறுத்தியிருக்கின்றேன்.

எனது நீண்ட காலக் கொள்கையை எந்தவொரு காரணத்திற்காகவும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வதன் மூலம் மட்டு.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதேச வாதத்தை விரும்பவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் நிரூபிப்பார்கள்''எனவும் ஜேசப்பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

போராளிகள் வன்னி நகருகின்றனர்

இது இவ்வாறிருக்கையில், புலிகளின் தலைமை மட்டு.அம்பாறை போராளிகளுக்கு விடுத்த அறிக்கையை அடுத்து அங்குள்ள போராளிகள் வன்னிக்கு நகருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக போராளிகளின் பெற்றோர்களே தமது பிள்ளைகளை வன்னிக்கு கூட்டிச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருணா தரப்பினர் தளம் அமைத்துள்ள தரவைக் காட்டினுள் ஊடகவியலாளர் எவரும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

பொலீஸ்..ராணுவத்திட்டை பாதுகாப்பு கோருறதுக்கு நம்மாக்களைக்கேட்டுத்தான்..

:lol: :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் எப்படியிருப்பினும் சனநாயக சோசலிசக் குடியரசில் தங்கள் பாதுகாப்பை கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது டக்ளசிற்கும் சங்கரிக்கும் பாதுகாப்பிற்குப் போகிறவர்கள் தானே பரராஜசிங்கத்திற்கும் பாதுகாப்புக் கொடுக்கட்டுமேன்

உங்களுக்கு ஓட்டைக் காதே.. அறுத்துறுத்து இராணுவத்திடம் பாதுகாப்புக்கோரியுள்ளனர் எண்டு நெடுகலும் உந்த றேடியோ சொல்லுது.. கடைசியா கேட்ட பாதுகாப்பு தேர்தலுக்குப் பிறகுதான் கொடுக்கப்படும் எண்டு மறுமொழியும் வந்திட்டுது.. உங்களுக்குத்தான் கேக்குதில்லை..

:lol: :P :D

என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு

"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்

சுட்ட அப்பத்தை தோசையை நின்மதியாயிருந்து சாப்பிடுவமெண்டால் இந்தாள் விடுதில்லை.. வெறியடிச்சிட்டுவந்து நாற்சந்தியிலை நிண்டு கூச்சல்போடுது.. கடத்தல் பிடிக்கவந்த ஆமிக்காரன் தொல்லையைவிட இந்தாள் தெல்லை தாங்கேலாமல்க்கிடக்கு.

:lol: :P :D

என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு

"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்

:P :roll: :x அவனவன் தமிழ் கதைத்துக்கொண்டு நாட்டில் நடமாடமுடியேல்லையே எண்டு கவலைப்படுறான். உமக்கு கள்ளு அடித்துவிட்டு நடமாடமுடியேல்ல என்று கவலையோ, இந்த லட்சணத்தில ஈழதமிழ் பிரைச்சனை பற்றி கருத்து எழுதுறீங்க

என்ரை ரெக்கமண்டிலை ஒருமாதிரி உள்ளை வந்திட்டியள்.

அப்பு ராசா உங்கை பார்

மனிசி சுட்ட அப்பம் தோசையை தின்னவிடுறாங்கள் இல்லையெண்டு மச்சான் மதிக்கு கவலை கூவில் கள்ளுக் குடிக்க முடியேலை எண்டு எனக்குக் கவலை

எல்லாத்துக்கும் என்ன காரணம் உந்த இனப்பிரச்சனை அதை எப்பிடித் தீர்க்கலாம்

தீர்க்கிறன் தீர்க்கிறன் எண்டு சொல்லி நிவாரணம் மட்டும் தந்த டக்ளஸாலையே எங்களுக்கு ஒழுங்கா கள்ளுக் கிடைக்க செய்யமுடியேலை

சாய்... இவனொருத்தன் யாழ்ப்பாணப் பொடியனாம் கள்ளுத் தெரியாதாம் :lol::D :P

வலை உமது கருத்தாடல் முறை வரவேற்ககூடியதாக உள்ளதே ;)

  • தொடங்கியவர்

உண்மைதான் எப்படியிருப்பினும் சனநாயக சோசலிசக் குடியரசில் தங்கள் பாதுகாப்பை கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது டக்ளசிற்கும் சங்கரிக்கும் பாதுகாப்பிற்குப் போகிறவர்கள் தானே பரராஜசிங்கத்திற்கும் பாதுகாப்புக் கொடுக்கட்டுமேன்

டக்ளசிற்கும் சங்கரியும் பாதுகாப்பு கேக்கிற மாதிரி பரராஜசிங்கமும் கேட்கும் நிலைமை என்றால் அவர்களுக்கும் பரராஜசிங்கத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளசிற்கும் சங்கரியும் பாதுகாப்பு கேக்கிற மாதிரி பரராஜசிங்கமும் கேட்கும் நிலைமை என்றால் அவர்களுக்கும் பரராஜசிங்கத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் அல்லவா?

இருவரும் ஒரே பகுதியினரிடம் பாதுகாப்பு கோருகின்றார்கள் என்றாலும் யாரால் பிரச்சனை வரும் என நினைக்கிறார்கள் என்பதுதான் உள்ளீடு

  • தொடங்கியவர்

இருவரும் ஒரே பகுதியினரிடம் பாதுகாப்பு கோருகின்றார்கள் என்றாலும் யாரால் பிரச்சனை வரும் என நினைக்கிறார்கள் என்பதுதான் உள்ளீடு

பரராஜசிங்கத்துக்கு பழைய புலி மத்தவங்களுக்கு ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்
சாரைப்பாம்புக்குப் பயப்பிடு அளவுக்கு மக்களுக்குப் பயமில்லை.. ஐந்தறிவு புலிக்கும் வாலுகளுக்கும்தான் பயமெண்டு நான் நினைக்கிறன்..

:lol: :P :D

  • தொடங்கியவர்

முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்

மக்களுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?

:?: :?: :?:

ஊர்காவற்றுறையில்

சிறுமி மீது துஷ்பிரயோகம்

ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன்

:!: :?: :?:

பாலியல் துஷ்பிரயோகம் பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுமையான அடக்குமுறை. இனப்பிரைச்சனை ஆரம்பித்த பிறகு தமிழ் பெண்கள் அதிகமாக இலங்கை ராணுவத்தால் இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இது போதாது என்று தமிழர்களே தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். இது யாராக இருந்தாலும் கண்டிக்கப்ப்டவேண்டிய ஒன்று. இது ஈ.பி.டி.பியால் செய்யப்பட்டிருந்தால் ஆயுதமேந்திய குழுவுக்கு எதிராக மக்கள் என்னதான் செய்யமுடியும்.

  • தொடங்கியவர்

நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
உதயன் பத்திரிகையில் செய்தி சொல்லப்பட்டிருக்கும் விதம்.. எதிர்மறையான கருத்தை தருகிறது..

மேலும் விசாரணைகள் ஏதுமின்றி குற்றம் நிரூபிக்கப்படதுபோன்ற நேரடிச் செய்தி.. வானொலிகளில் முதன்மைப்படுத்தி இரண்டுநாட்களாக சொல்லப்படும் விதம்.. என்பன என்னத்தை சொல்லுகின்றன..?

:?: :?: :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.