Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு: விடுதலைப் புலிகளின் மதியுரைஞர்

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன், சிறிலங்காவிற்கான நோர்வேத்து}துவர் ஹான்ஸ் பிறஸ்கர் ஆகியோர் ஜனாதிபதியின் செய்தியுடன் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களை கிளிநொச்சியில் சந்தித்தனர்.

நோர்வே து}துக்குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:-

கேள்வி:- இன்று நோர்வே தரப்பினர் அரசாங்கத்திடமிருந்து என்ன விடயங்களை அல்லது முடிவுகளை கொண்டு வந்தார்கள் எனக் கூற முடியுமா?

பதில்:- தீர்க்கமான முடிவுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை பிரச்சனைகளை எழுப்பியிருந்தோம். அனேகமான பிரச்சனைகள் வந்து எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. என்ன என்ன விடயங்கள் என்பதை விபரமாக சொல்ல விரும்பவில்லை.

அனால் ஒட்டுமொத்தமாக இந்தப் பேச்சுவார்த்தைகளை அரம்பிப்பதற்கான முன் முயற்சியை மிகவும் திருப்திகரமான முறையிலும், ஆக்கபூர்வமான முறையிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் எப்படியாவது இந்தப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமான அக்கறை காட்டி வருவதால் சில அடிப்படை விஷயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டு வருகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகளை எங்கே நடத்துவது, எப்போது நடத்துவது என்ற விடயங்கள் குறித்த முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் காணப்படும். ஆகவே இப்போது நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் இன்னும் சில பிரச்சினைகள் தொடர்பாக கதைத்து அவற்றை நோர்வேயின் சமாதானத் து}துவர் சந்திரிகா அம்மையாரிடம் எடுத்துச் சென்று அவருடன் கதைத்து எங்களுக்கு ஒரு இறுதி முடிவை சொல்வார்கள்.

ஆகவே, இரு தரப்பினருக்கும் மத்தியில் இணக்கப்பாடு கண்டு அடிப்படையான சில விடயங்களில் ஒத்திசைவு காணப்பட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான ஒரு நல்ல புறநிலை உருவாகி வருகிறது என்பதை மட்டும் நாங்கள் உறுதியாகச் சொல்லலாம்.

கேள்வி:- நீங்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் முக்கியமாக பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து உங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைதிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றீர்கள். அதைவிட முக்கியமான விடயங்கள் குறித்து மேலதிகமாக ஆராயப்பட்டதா? அல்லது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?

பதில்:- சில அடிப்படை விடயங்கள் சம்பந்தப்பட்ட hPதியில் உதாரணமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் அவர்களுடன் மட்டும் தான் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும், பேச்சுக்கள் மேல் அவர்களுக்கு சமத்துவமான அந்தஸ்துகள் வழங்கப்படல் வேண்டும். பேச்சுக்கள் இலங்கைக்கு வெளியே நடைபெற வேண்டும். இப்படியான சில பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு காணப்பட்டிருக்கின்றது.

இன்றும் திருப்திகரமான முறையில் இந்த இணக்கப்பாடு அமையப் பெற்றிருந்தது. ஆனால், மேலும் சில நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கின்றது. முதலாவது பேச்சு எங்கே நடத்துவது. எப்போது நடத்துவது என்ற hPதியில் இங்கே சில நடைமுறைப் பிரச்சினைகளிலும் சில சிக்கல்கள் இருப்பதும், இது சம்பந்தமாகத்தான் இன்றும் கதைத்து, இதற்கொரு தெளிவான முடிவை காண்பதற்கு நோர்வேத் து}துவரிடம் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே எல்லாவற்றுக்கும் ஒரு உறுதியான முடிவு காணப்படும். இறுதியில் இன்னும் ஓரிரு தினங்களில் அனேகமாக நோர்வே அரசுதான் ஒரு பொதுவான கூட்டறிக்கை மற்றும் இரு தரப்பிற்கும் மத்தியில் காணப்பட்ட இணக்கம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை விடுவார்கள்.

கேள்வி:- இறுதித்தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகசபை தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சமாந்தரமாக நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- எங்கள் நிலைப்பாடு இதுதான் திரும்பி திரும்பி இதைத்தான் சொல்கிறோம் முதலில் இடைக்கால நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் பேசப்படல்வேண்டும் அதில் ஒரு இணக்கப்பாடு காணப்படல் வேண்டும் அது நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் அதற்கு அப்புறம் தான் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சுக்கள் தொடரவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதைத்தான் நாங்கள் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம் ஆகவே எங்களுக்கு திருப்திகரமான இணக்கப்பாடு வரும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

புதினம்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கருணாவின் குடும்பத்தை கண்டுபிடிக்க புலிகளின் உளவுப்பிரிவினர் மலேசியாவிற்கு அனுப்பிவைப்பு

கருணாவின் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராணுவக் குழுவொன்றை மலேஷியாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்கள் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் கருணாவின் குடும்பத்தை கண்டு பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவர் என ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை கருணாவின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் உட்பட அவரின் குடும்பத்தினர் மலேஷியாவில் தங்கியிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

அவர்கள் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னரே மலேஷிய பயணத்தை மேற்கொண்டார்கள் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. கருணாவின் சகாக்கள் கிழக்கில் பல கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

கிழக்கிலிருந்து வெளியேறியுள்ள கருணாவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் கருணாவுக்கு பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடிவு கட்டப்பட்டுள்ளது. அதேவேளை கருணாவின் சகோதரர் ரெஜி, சுமார் 80 கொமாண்டோக்களோடு, அம்பாறை மாவட்டக்காட்டுப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலிகள் படையினருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பதே அவர்களின் நோக்கமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான், குட்டி என்பவரின் தலைமையில் நால்வரைக்கொண்ட குழுவினரை மே 10 ஆம் திகதி கோலாலம்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார். இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அங்கு கிளம்பியுள்ளனர் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம்!-நக்கீரன் (கனடா)

"ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று! "

அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் என்பது பழமொழி. உலக நாடுகளின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையை ஓரங்கட்டிவிட்டு இராக் மீது படையெடுத்த அமெரிக்க சனாதிபதி புஷ்சும் பிரித்தானிய பிரதமர் ரோனி பிளேயரும் இன்று புலியின் வாலைப் பிடித்தவன் கதையாக இராக்கில் தங்கவும் முடியாமல் மானத்தோடு வெளியேறவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள்.

நாளும் பொழுதும் அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். சென்ற மாதம் மட்டும் 131 அமெரிக்க இராணுவத்தினர் இராக் தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்கள். இந்த மாதமும் இந்தக் கொலைகள் தொடர்கின்றன. இராணுவத்தின் கவச வாகனங்கள், தாங்கிகள், உலங்கு வானூர்திகள் இராக் தேசியவாதிகளால் அவ்வப்போது தாக்கி அழிக்கப்படுகின்றன.

பெரிய வல்லரசான அமெரிக்கா உலகின் மிக நவீன ஆயுதங்களை தாங்கியுள்ள 135,000 இராணுவத்தினரை இராக்கில் வைத்திருக்கிறது. இருந்தும் இராக் தேசியவாதிகளது ஓயாத ஒழியாத தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்க இராணுவம் திணறுகிறது.

சனாதிபதி புஷ் கடந்த ஆண்டு மே 1ம் திகதி 'இராக்குக்கு எதிரான போர் முடிந்துவிட்டது" என்று வளைகுடாவில் ஏப்ரகாம் லிங்கன் என்ற போர்க்கப்பலின் தளத்தில் நின்று கொண்டு மிக்க ஆணவத்தோடு அறிவித்தார். ஆனால் போர் இன்றும் தொடர்கிறது. இதுவரை 700க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இராக் தரப்பில் 15,000 மேலான பொது மக்கள் குண்டு வீச்சுக்கும் துப்பாக்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியாகி உள்ளார்கள். இராக் பொது மக்கள் கொல்லப்படுவதை அமெரிக்கா கணக்கில் எடுப்பதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. இருக்கிற தலைவலி தோதாதென்று இப்போது அபு கிராய்ப் (Abu Ghraib) சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட இராக் கைதிகள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு இழித்துப் பழித்து அவமானப்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஐந்து நட்சத்திர சனநாயக நாடுகளான அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் பெரிய தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இப்படிச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இராக்கிய தீவிரவாதிகள் அல்ல. வெறுமனே வீடுகளிலும் வீதிகளிலும் நின்ற சாதாரண பொது மக்களே!

இந்தச் சிறைச்சாலைச் சித்திரவதையை அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக் காட்சிதான் முதன் முதலில் ஒளிபரப்பி அம்பலமாக்கியது. ஆரம்பத்தில் சனாதிபதி புஷ் சிறைச்சாலை சித்திரவதைகளின் தாக்கத்தை பூசிமெழுக எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின.

சித்திரவதை செய்யப்பட்ட இராக் கைதிகளின் படங்கள் ஊடகங்களில் வெளிவந்து முழு உலகத்தையும் உறைய வைத்துள்ளது.

உலகம் முழுதும் காட்டப்பட்ட இந்தப் படங்களில் ஒன்று இராக்கிய கைதிகள் பிறந்தமேனியுடன் பிரமிட் வடிவில் அடுக்கப்பட்டு பாலியல் உறவு வைத்துக்கொள்வதாக பாவனை செய்வதைக் காட்டுகிறது.

இன்னொரு படம் ஒரு இராக் கைதி நாய்ச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு அமெரிக்க படை வீரனால் தரையில் கொற கொற என இழுத்து வருவதைக் காட்டுகிறது. பிறிதொரு படம் பிறந்த மேனியுடன் நிற்கும் இராக் கைதியைச் சுற்றி நாய்களுடன் அமெரிக்க இராணுவத்தினர் நிற்கும் காட்சியைக் காட்டுகிறது.

மேலும் ஒரு படம் ஒரு கைதி மீது பிரித்தானிய இராணுவத்தினன் சிறுநீர் கழிக்கும் காட்சியைக் காட்டுகிறது. இவற்றைவிட மோசமான படங்கள், வீடியோ நடாக்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கின்றன. இந்தப் படங்கள் அரபு நாடுகளது மக்களை மட்டும் அல்லாது உலக மக்களையும் கொதிப்படைய வைத்துள்ளன.

அமெரிக்க நாட்டு அரசியல்வாதிகளே அந்தப் படங்களைப் பார்த்து ஆடிப்போனார்கள். இராக் நாட்டை சர்வாதிகாரி சதாம் குசேனின் பிடியில் இருந்து விடுவித்து அங்கு சனநாயத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டி விட்டோம் என்று புஷ் சொல்லி வந்தார். அது மட்டுமல்ல சதாம் குசேனின் ஆட்சிக் காலத்தில் இராக்கில் இருந்த சித்திரவதைக் கூடங்களையும் மனிதப் படுகுழிகளையும் இல்லாது செய்து விட்டோம் என்றும் புஷ் தம்பட்டம் அடித்துக் கொண்டார். உண்மை என்னவென்றால் சதாம் குசேனின் ஆட்சியைவிட மோசமான சித்திரவதைக் கூடத்தை அமெரிக்கா இராக்கில் இன்று உருவாக்கியுள்ளது.

இந்தச் சிறையில் இருந்த கைதிகள் பலர் சித்திரவதைக்குள்ளாகி இறந்துள்ளார்கள். பிரித்தானிய படை பிடித்து சிறையில் அடைத்த ஆயிரக்கணக்கான கைதிகளில் 37 பேர் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அகிலவுலக மன்னிப்புச் சபை பிரித்தானிய இராணுவம் எட்டு வயதுக் குழந்தை உட்பட பல இராக்கிய பொது மக்களை சட்ட விரோதமாகச் சுட்டுக் கொன்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. செஞ்சிலுவை சங்கமும் அமெரிக்க பிரித்தானிய இராணுவங்களின் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் பலமாகச் சாடியுள்ளன.

யுத்தத்தில் சிறைப் பிடிக்கும் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தும் ஜெனிவா மரபுகள் அமெரிக்க பிரித்தானிய படைகளால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

முன்னர் ஆப்பாகனிஸ்தான் மீதான தாக்குதலில் சிறை பிடித்த அல் குவைத்தா தீவிரவாதிகளை அமெரிக்கா கியூபாவில் உள்ள கவுத்தனமோ குடாச் சிறையில் (Guantanamo Bay) நீதி விசாரணை எதுவும் இன்றி ஆண்டுக் கணக்காக சிறையில் பூட்டி சித்திரவதை செய்து வருகிறது. இந்தக் கைதிகளைப் பார்க்க உறவினரோ வழக்கறிஞர்களோ அனுமதிக்கப்படவில்லை. இந்த கைதிகள் விடயத்தில் ஜெனிவா மரபுகளைத் தான் கைப் பிடிக்கப் போவதில்லை என்று சனாதிபதி புஷ் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

இதற்குக் காரணம் அமெரிக்க வெள்ளை மாளிகை அனைத்துலக சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் தங்களது கைகளைக் கட்டிப் போடுவதாக நினைக்கிறது. அல்லது அவை அமெரிக்காவிற்குப் பொருத்தமற்றவை என நினைக்கிறது. யுத்தவெறி பிடித்து அலையும் அமெரிக்கா தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி எனத் துக்கமோ வெட்கமோ இன்றி நடந்து கொள்கிறது.

அராபிய மக்கள் இராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை இஸ்லாமிற்கு எதிரான கிறித்தவர்களின் யுத்தம் எனக் கருதுகிறார்கள். சனாதிபதி புஷ்சும் இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான யுத்தம் என வர்ணித்துள்ளார். இராக் கைதிகள் இழிவுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் அமெரிக்க இராணுவம் அவர்களை மனிதர்களாக எண்ணிப் பார்க்க முடியாமல் இருப்பதே.

அமெரிக்க நாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலைகளிலும் இப்படியான சித்திரவதைகள் இடம்பெறுவதாக மனிதவுரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் சிறைச் சாலைகள் தனியார் கம்பனிகளால் நடத்தப்படுபவை ஆகும்.

அமெரிக்க அரச திணைக்களம் உலக நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்து ஆண்டு தோறும் அறிக்கை ஒன்றை வெளியிடுவது தெரிந்ததே. இந்த அறிக்கையில் அரசுகள் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் கெரில்லா இயக்கங்களும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.

வி.புலிகள் சிறார்களை படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும், வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டதாக அறிவிக்க வேண்டும் என இந்த அறிக்கையில் வற்புறுத்தப்படுவது உண்டு.

ஆனால் அபு கிராய்ப்பு சிறைச்சாலை சித்திரவதையை அடுத்து இந்த ஆண்டு அறிக்கையை வெளியிடுவதை அரச திணைக்களம் ஒத்திப் போட்டுள்ளது. ஒத்திப் போட்டதற்கு தொழில் நுட்பக் கோளாறு எனக் காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் சிறைச்சாலை வதைச் சாலையாக மாறியதுதான்.

மனிதவுரிமைகளைப் பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, அதே மனிதவுரிமைகளை காலில் போட்டு மிதித்து விட்டு மற்றவர்களுக்கு மனிதவுரிமைகள் பற்றி உபதேசிப்பது ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கில்லையடி என் பெண்ணே எனச் சொன்ன பாதிரியார் கதையை நினைவூட்டுகிறது.

இந்த இலட்சணத்தில் அமெரிக்கா தன்னை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் உலகத்தின் பொலிஸ்காரனாக காட்டிக் கொள்வது பெரிய பகிடிதான்! அமெரிக்கா தான் உலகத்தின் ஒரே வல்லரசு என்ற நினைப்பில் மனிதவுரிமைகளை, அனைத்துலக சட்டங்களை, மரபுகளை சட்டை செய்வதில்லை.

ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று!

அமெரிக்காவிற்கு வரலாற்றில் சந்தித்திராத பழியையும் இழிவையும் தலைக்குனிவையும் சனாதிபதி புஷ் வலிந்து தேடிக் கொடுத்துள்ளார்!

புஷ்சின் புண்ணியத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம் ஆகியுள்ளது!

நக்கீரன் (கனடா)

  • தொடங்கியவர்

Sonia factor in Lanka peace talks

New Delhi, May 16: President Chandrika Kumaratungas government, eager to restart the peace process with the LTTE, is using the Congress victory to pressure the Tigers to return to the talks table.

Foreign minister Lakshman Kadirgamar has told reporters that with Sonia Gandhi and the Congress at the helm, the move for the extradition of LTTE chief Prabhakaran will gather steam.

In 1991, an LTTE suicide bomber had killed Rajiv Gandhi and Prabhakaran is wanted in India for his involvement in the assassination. The NDA government led by Atal Bihari Vajpayee had not pressed too hard for the extradition, but with Sonia in power things would be different, Kadirgamar said.

Sources in the Lankan establishment believe Kadirgamars words are an attempt to persuade the LTTE chief to begin negotiations. He is indirectly trying to tell Prabhakaran that if he continues his engagement with Colombo, New Delhi would not want to disrupt the peace proc- ess which has the sanction of the international community by demanding his extradition.

  • தொடங்கியவர்

Eye of the Tiger: LTTE may get that hunted feeling, again

IANS[ MONDAY, MAY 17, 2004 12:50:49 AM ]

NEW DELHI: With Congress president Sonia Gandhi set to become prime minister, the man who ordered the assassination of her husband, over a decade ago, will certainly be worried. Those who follow Sri Lankas Tamil Tigers closely, will know that by now its chief Velupillai Prabhakaran, wanted in India for the 1991 killing of Rajiv Gandhi, will be holding consultations with his aides to discuss the unexpected political upheaval in New Delhi. There is no doubt he will be very, very concerned, a senior Indian official said, referring to Mr Prabhakaran, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) chief.

Significantly, the pro-LTTE media has made no comment on the dramatic election outcome that has catapulted Sonia Gandhi to power. A LTTE suicide-bomber blew up her husband at Sriperumpudur while he was on a comeback trail.

Tamil sources agree the LTTE would have even otherwise closely followed the election process in India, but Ms Gandhis dramatic victory would have certainly unnerved them. It may not have struck many, but the fact is that Mr Prabhakaran is the reason why Ms Gandhi is in politics today. Had he not killed her husband, she would have continued to be a housewife and would have remained at a safe distance from the hurly-burly of Indian politics.

Ms Gandhi has probably never expressed her views publicly on the Sri Lankan conflict, and the LTTEs fight for a Tamil state. But she met many actors of the Sri Lankan drama, including Tamils opposed to the LTTE.

The first consequence of Ms Gandhis rise to power is that the LTTE can forget the possibility, however remote, of India not extending the ban on the group in August this year. The LTTE was first outlawed by New Delhi in August 1992, and every two years the ban has been extended.

Since the Bharatiya Janata Party (BJP) took power in New Delhi in 1998, and even earlier, the LTTE had tried to warm up to it and its allied organisations, such as the Vishwa Hindu Parishad (VHP). The VHP is one of the rare groups the LTTE has allowed to operate in areas under its control in eastern Sri Lanka. When India exploded a nuclear device in May 1998, journals linked to LTTE wrote effusively about the feat.

In April 02, when Mr Prabhakaran addressed his first press conference in 12 years, he announced that the LTTE was in touch with India and expected New Delhi to lift the ban on the group. It also sought permission for its ideologue, Anton Balasingham, to be based in South India. New Delhi, however, did not accede to either of the requests.

The fact remains that the LTTE has not forgotten that it was Mr Gandhi who signed a peace pact with Sri Lanka in 1987 and sent the Indian Army to the island.

About a year ago, Mr Balasingham told a meeting of Sri Lankan Tamils in London that the LTTE is wary of three women Chandrika Kumaratunga, the Sri Lankan president, Jayaram Jayalalitha, the Tamil Nadu chief minister (who Mr Balasingham contemptuously referred to in Tamil as gundamma or fat woman) and Sonia Gandhi.

The LTTE is also constrained by the ban on it by the US, and is desperate to shed its terrorist tag. Also, knowing that killing Mr Gandhi cost the LTTE very heavily in the long run, it is highly unlikely that Mr Prabhakaran would try anything similar vis-à-vis Ms Gandhi. But the LTTE is a highly unpredictable group and it would do well for Indian agencies to review Ms Gandhis security arrangements.

  • தொடங்கியவர்

அப்போது கேட்காத ஹக்கீம் இப்போது கேட்பது ஏன்?

ஜனாதிபதி, கேள்வி

கடந்த ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் அரசின் முக்கிய அமைச்சராய் இருந்த ரவ10ப் ஹக்கீம் அப்போது, அரசிற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த சமாதானப் பேச்சுகளில் தனித்தரப்பாக கலந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி யுள்ள ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இப்போது ஹக்கீம் முஸ்லிம் மக்களின் சார்பில் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்கள் சார்பில் தனது கட்சியும் பங்கு கொள்ள வேண்டும் என ஹக்கீம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து பதிலளித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருக்கும் பொழுது பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்த ஹக்கீம் சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்தார். ஆனால், அப்போது அவர் தனித்தரப்பாகப் பேச்சுகளில் கலந்துகொள்ள எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு புலிகள் இயக்கத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுது, அந்தப் பிரதேச முஸ்லிம் தலைவர்கள் என்னைப் பல தடவை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அம்மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நான் பல நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இது சம்பந்தமகாப் பேச ரவ10ப் ஹக்கீமிற்கு பல தடவை அழைப்பு விடுத்தும் கூட அவர் ஒரு போதும் சமுகமளிக்கவில்லை. எனினும், பேரியல் அர்;ரப்பும் அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர், சமாதானப் பேச்சுகளில் முஸ்லிம்கள் சார்பாக தாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களின் வேண்டுகோளையடுத்து, பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம் மக்களின் பங்களிப்புக் குறித்தும் அரசாங்கம் புலிகளுடன் கருத்துகளைப் பரிமாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

கதிர்காமர் விரும்பினால் வன்னிக்கு வந்து தலைவரை நாடு கடத்த முயலட்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாயின், அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் வன்னிக்கு வந்து அதனைச் செய்யட்டுமென புலிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கதிர்காமர் கடந்த வியாழக்கிழமை வார்pங்டனில் தெரிவித்திருந்தார்.

இது பற்றி கூ றும் போதே, கதிர்காமரின் இந்தக் கூற்று குறித்து புலிகள் ஏளனம் செய்துள்ளனர்கதிர்காமர் விரும்பினால் கிளிநொச்சிக்கு வந்து எமது தலைவரை நாடு கடத்த முயற்சிக்கட்டும் எனவும் முதிர்ச்சியற்ற, இந்தப் பேச்சுக்கள் நகைச்சுவைக்குரியவை எனவும் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

அடுத்த கட்டப் பேச்சுக்களில், முதல் சந்திப்பு நோர்வேயில் இடம்பெறும்?

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 17 மே 2004, 22:34 ஈழம் ஸ

புதிய அரசுடன் விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது சந்திப்பு, நோர்வே நாட்டில் இடம்பெறுவதற்குத் தீர்மானமாகியிருப்பதாக எமது புதினம் நிருபர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் நடைபெறவேண்டுமென்று விடுதலைப் புலிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், நோர்வே நாட்டின் முக்கிய விடுதியொன்றில், இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும், நோர்வே பிரதமர் இப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைப்பார் என்றும் உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலாவது பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகளின் தரப்பில் மதியுரைஞர் அன்ரன் பாரசிங்கமும், அரசு தரப்பில் திரு.nஐயந்த தனபாலவும், தலைமை தாங்க, நோர்வே அனுசரணையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிப்பார்கள்.

இதற்கிடையில், அரச தரப்பில் nஐயந்த தனபாலவுடன், இரு முக்கிய அமைச்சர்களும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவு வழங்கிய கூட்டணிக்கட்சியான பேரியல் அஸ்ரப்பின் முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவரும் பங்கேற்கவுள்ளதாக கொழும்புப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நன்றி : புதினம்

  • தொடங்கியவர்

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினார் கடத்தப்பட்டார்

செவ்வாய்க்கிழமை, 18 மே 2004

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிக்கு ஒருவர் நேற்றிரவு இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற சபாநாயகர் தெரிவின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரான வண. களுதாலுவ ரதனசார தேரரே இவ்வாறு கடத்தப்பட்டிருப்பதாக மொறட்டுவ பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொறட்டுவ றாவத்தாவற்ற சிறி சம்புத்த விகாரையிலிருந்து இவர் கடத்தப்பட்டுள்ளார்.

இவருடன் கலந்துரையாட வந்த குழுவே தேரரைக் கடத்தியிருப்பதாக விகாரையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவின் போது இடம்பெற்ற வாக்களிப்பில் இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கொள்கைக்கு புறம்பாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்

  • தொடங்கியவர்

பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு

பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப செயலாளரும், பராளுமன்ற உறுப்பினருமான முருகன் சச்சிதானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு பதவிக்கான தெரிவுகளும் ஏகமனதாக இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது.

சபை அமர்வின் ஆரம்பத்தின் போது தேசிய பட்டியல் மூலம் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூவரும், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சத்தியப் பிரமாணம் செய்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மேர்வின் சில்வா, விஜயதாச ராஜபக்ஷ, ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜனதாச பீரிஸ், வீ.ஆர்.வீரசேகர மற்றும் மேரி லுசிடா ஆகியோர் பதவி விலகியதனையடுத்து இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பா.அரியநேந்திரன் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கிங்ஸ்லி இராசநாயகம் தமது பதவியை இராஜினாமா செய்தததையடுத்தே அரியநேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை பாராளுமன்றம் கூடிய வேளையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமை பிரச்சனைகளை எழுப்பினர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் அப்பரிக்க பஞ்சானந்த தேரர் ஆகியோர் இந்த சிறப்புரிமை பிரச்சனையை எழுப்பினர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான களுதாலுவ ரதனசார தேரர் நேற்றிரவு கடத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயராஐ; பெர்ணான்டோ புள்ளே பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சனையை ஒன்றை எழுப்பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக தாம் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக சபாநாயகர் லொக்கு பண்டார கூறினார்.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் தெரிவு அமைதியான முறையில் இடம்பெற்றதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிய அதனை மைத்திரிபால சிறிசேன வழி மொழிந்தார்.

குழுக்களின் பிரதித் தலைவராக முருகன் சச்சிதானந்தனின் பெயரை பாராளுமன்ற உறுப்பினரான முத்து சிவலிங்கம் முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வழி மொழிந்தார்.

பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித்தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரியவர்களை போட்டியின்றி தெரிவு செய்ய அரசாங்கம் இணங்கியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்த நியமனங்கள் தொடர்பாக பிரதமர், அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டுக்கு வந்ததாக சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடுகின்றது.

புதினம்

  • தொடங்கியவர்

ஆளும் கட்சி ஆசனத்துக்கு மாறிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ஹ_சைன் பைலா இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார்.

இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான ஹீசைன் பைலா அரசாங்க உறுப்பினர்களுடன் வந்து அமர்வதற்கான அறிவிப்பை விடுத்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்த பைலா ஆளும் தரப்பு ஆசனத்தில் வந்தமர்ந்ததாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

புதினம்

  • தொடங்கியவர்

சமாதானத்துக்கு குறுக்குவழிகள் உண்டா?

தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற மிகக்கவர்ச்சியான குறுக்குவழியொன்றை சந்திரிகா கண்டுபிடித்துவிட்டார் போலத்தோன்றுகின்றது. நாட்டிலுள்ள சுமார் எழுபதாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வேலைதரப்படும் என்று முன்பு சந்திரிகா வாக்களித்திருந்தார். இப்பொழுது அந்தவாக்குறுதியை அவர் எப்படியோ நிறைவேற்றப்போகிறார் என்பதான ஒரு பரப்பான தோற்றம் உண்டாகின்றது.

இதன்படி நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டாண்டுகால தொழிற்பயிற்சி வழக்கப்படும். இந்தப்பயிற்சி முடிந்ததும் அரச அலுவலகங்களில் பயிற்சிக்குரிய வேலை தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு 6000 ரூபா சம்பளம் தரப்படும் என்று தெரியவருகிறது.

இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது தெரியுமா? முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசு இளைஞர்கள் கூட்டுறவுத் திட்டம் என்ற ஒரு திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படமால் அப்படியே இருக்கிறதாம். அதைத்தான் இப்பொழுது சந்திரிகா எடுத்து பட்டதாரிகளுக்குச் சம்பளம் கொடுக்கப் போகிறார்.

இதன்மூலம்,வேலையற்று வீடுகளில் விரக்திவசப்பட்டு முடங்கிக் கிடக்கும் பட்டதாரிகள் ஏதோவொரு தொழில் பயிற்சியில் மினக்கெடப் போகிறார்கள். இது அவர்கள் எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பி வைத்திருக்கும். அதோடு, அவர்கள் ஜே.வி.பியின் கொள்கைகளின்பால் கவரப்படுவதையும் தடுக்கும்.

இங்கே உண்மையில் பட்டதாரிகளுக்கு வேலை தரப்படவில்லை மாறாக இரண்டாண்டுகளுக்கு அரைகுறைச் சம்பளத்துடன் பயிற்சி தரப்படுகிறது என்பதே சரி. அதோடு அவர்கள் பெறப்போகும் பயிற்சி அவர்களுடைய கல்வித் தகைமைகளுடன் தொடர்புடையதாக இருக்குமா? என்பதையும் இரண்டாடுகளின் பின் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வேலை அவர்களுடைய பட்டத்துடன் தொடர்புடையதாக இருக்குமா என்பதையும் ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை.

ஆனால் கிளர்ச்சிகளுக்குத் தலைமைதாங்கவல்ல இளைஞர்கள் யுவதிகளின் படை ஒன்றை இரண்டாண்டுகளுக்கு குறைச் சம்பளத்துடன் தாக்காட்ட இது உதவும்.ஆம் இதை அப்படித்தான் சொல்ல வேண்டும். இங்கே பிரச்சினை ஒத்திவைக்கப்படுகிறதே தவிர, தீர்க்கப்படவில்லை.

ஆனால் சந்திரிகா அதை மிகவும் கவர்ச்சிகரமாகச் செய்யப் போகிறார் என்பதே மெய்நிலை. இதற்காக அவர் முன்பு ரணில் தொடங்கிய ஒரு திட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியையே பெறப் போகிறார். இது ஒன்றைக்காட்டுகிறது. தனது இலக்குகளை அடைவதற்கு சாத்தியமான எல்லாக் குறுக்குவழிகளினூடாகவும் நாட்டைக் கொண்டு போக அவர் தயராகிவிட்டார்.

சமாதானத்தின் கதியும் அநேகமாக இப்படித்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது. நாடாளுமன்றத்தில் தனது கூட்டுமுன்னணியை ஸ்தரப்படுத்துவதற்கான ஒரு குறுக்குவழியாகவே அவர் சமாதானம் செய்யத் தொடங்கியுள்ளார். அதாவது, அவரைப்பொறுத்தவரை சமாதானம் எனப்படுவது ஒரு குறுக்கு வழிதான். அதேசமயம் அந்தச் சமாதானத்தை அடைவதற்கு உரிய குறுக்கு வழிகளையும் அவர் இனிக்கண்டுபிடிப்பார்.

யுத்தத்தில் குறுக்குவழிகள் இருக்கலாம். மாறாக சமாதானத்துக்குக் குறுக்குவழிகள் கிடையாது. விசுவாசமாகச் சமாதானம் செய்வதென்றால் அங்கே குறுக்குவழிகளுக்கு இடமில்லை. பரஸ்பரம் நம்பிக்கைகளின்மீது கட்டியெழுப்பப்படுவதே சமாதானம்.

இதில் குறுக்குவழிகளைத்தேடுவது என்பது சமாதானத்தின் வெளிப்படைத்தன்மையை சோதனைக் குள்ளாக்கும். முன்பு சந்திரிகாவுடன் செய்யப்பட்ட சமாதான முயற்சிகளை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் வஞ்சகத்தின் அரசியல் என்று வர்ணித்திருப்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.

இத்தகைய ஒரு பின்னணியில் இப்பொழுது சந்திரிகா சமாதானம் செய்யவேண்டுமானால் முக்கியமாக மூன்று தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.

முதலாவது, புலிகளுக்கும் அவருக்கும் இடையில் கடந்த பத்தாண்டுகளாக உருவாகி வந்திருக்கும் இடைவெளியைக் குறைத்து ஆகக்கூடியபட்ச புரிந்துணர்வு ஒன்றை உருவாக்குவது.

இரண்டாவது, சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது.

மூன்றாவது, ஜே.வி.பி.யை சமாதானத்தின் பங்காளியாக்குவது.

இம்மூன்றையும் செய்வதானால் அவர் ஒன்றேயொன்றைச் செய்தாலே போதும், அதுதான் விசுவாசமாகச் சமாதானம் செய்வது. விசுவாசமாகச் சமாதானம் செய்வராக இருந்தால் அதற்குக் குறுக்கு வழிகளைத் தேடவேண்டியிருக்காது. விசுவாசமாகச் செய்யப்படும் சமாதானத்தில்தான் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மெய்யான புரிந்துணர்வு உண்டாகும்.

ரணிலுடனான சமாதானத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையே முழு அளவிலான புரிந்துணர்வு இருந்தது என்பதல்ல. ஆனால் சமாதானத்திற்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் நல்லெண்ணச் சமிக்ஞைகள் பலவற்றை ரணில் ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார். புலிகள் மீதான தடையை நீக்கியது. மூடிக்கிடந்த பாதைகளைத் திறந்தது. காவலரண்களை அகற்றியது. சோதனைச்சாவடிகளை அகற்றியது... போன்ற சில நல்லெண்ணச் சமிக்ஞைகளை அவர் வெளிக்காட்டியிருந்தார்.

ஆனால் சந்திரிகாவைப் பொறுத்தவரை அவருடன் ஏற்கனவே ஒருதடவை சமாதானம் செய்த கசப்பான ஒரு மனப்பதிவு தமிழர்களுக்கு உண்டு. அவருடைய சமாதானத்துக்கான யுத்தத்தின் குரூரம் பொய்த்தன்மை கபடம் போன்றவைகள் குறித்து தமிழர்களின் மனதில் ஆழப்படித்துள்ள பயங்கரமான முற்கற்பிதங்களை களைய வேண்டிய ஒரு முதற்பணி சந்திரிகாவுக்குண்டு.

நடந்துமுடிந்த பொதுத்தேர்தலுக்கு முதல்நாள் அவர் தமிழர்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மென்மையாக மன்னிப்புக் கேட்டிருந்தார். குறிப்பாக அந்த உரையில், யாழ்ப்பாணத்தின் வெற்றியை தனது அரசு கொண்டாடிய விதம் குறித்து முதற்தடiவாயாக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழர்கள் அதை வெறுமனே ஒரு தேர்தல்கால தந்திரமாகவே பார்க்கிறார்கள். தவிர, அவருடைய வாக்குறுதிகளோ அல்லது மன்னிப்புக்களோ தமிழர்களுடைய காயங்களை ஆற்றலாம் என்றிருந்த காலங்கள் யாவும் எப்பொழுதோ தீர்ந்துபோய் விட்டன. இனி எதையும் செய்து காட்டினால்தான் உண்டு. சமாதானத்தைப் பொறுத்தவரை இது செயலுக்கான காலம்.

இப்பொழுதுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை கோட்பாட்டுரீதியாக அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில்தான். எனினும் நடைமுறையில் புரிந்துணர்வு உருவாகியது ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில்தான். ஆனால் அதே அளவு புரிந்துணர்வு சந்திரிகாவுக்கும் புலிகளுக்கும் இன்னமும் உருவாகி விடவில்லை.

எனவே, இப்பொழுது புரிந்துணர்வு உடன்படிக்கை உண்டு. ஆனால் மெய்யான புரிந்துணர்வு இல்லை. இதை உருவாக்குவதென்றால் சந்திரிகா துலக்கமான, திட்டவட்டமான நல்லெண்ணச் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியாகவேண்டும். அப்படிச் செய்தால்தான் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு கனம் ஏறும். அவர் அப்படி ஏதும் செய்வாரா?

மற்றது, சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது, ரணில் இதைச் செய்யவில்லை. சந்திரிகாவும் செய்வது கடினம். ஏனெனில், ரணிலை அச்சுறுத்துவதற்கு அவர் சொன்ன பொய்கள் கற்பனைகள் எல்லாவற்றையும் அவர் மறுதலித்தால்தான் சமாதானத்தை மக்கள் மயப்படுத்தமுடியும். இதற்கு சிங்களவர்களின் மறதியைக்கூட்ட ஏதாவது மருத்து கொடுக்கவேண்டும். அல்லது சமாதானத்தின் தியாகியாக மாறுவது என்று முடிவெடுக்க வேண்டும். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?

மூன்றாவது, ஜே.வி.பியை சமாதானத்தின் பங்காளியாக்குவது, இதிலொருவிசயத்தை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். ஜே.வி.பி 'சமாதானத்தின்' எதிரிபோல் தோற்றம் தருகிறதே தவிர மெய்யாகவே அது 'சமாதானத்தை' எதிர்க்கவில்லை. இலங்கைத்தீவில் இப்பொழுது எந்தக்கட்சிக்கு யுத்தநிறுத்தம் அதிகம் தேவைப்படுகிறது என்றுபார்த்தால் அது ஜே.வி.பி.தான். ஏனெனில் துரிதமாக வளர்ந்துவரும் ஒரு கட்சி என்ற அடிப்படையில், யுத்தநிறுத்தம் நிலவினால்தான் அவர்கள் இப்பொழுது பெற்றுள்ள அமைச்சுக்களை வைத்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து தமது ஆதரவுத்தளத்தை மேலும் பலப்படுத்தமுடியும்.

ஆனால் இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் சமாதானத்தை தப்பாக அர்த்தப்படுத்திய அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இதில் சந்திரிகாவை விடவும் படு தீவிரமாக சமாதானத்தைக் காட்டிக்கொடுத்தது அவர்களே. எனவே அவர்கள் திடீரென்று 180 பாகையில் திருப்புவது என்றால் அது அவர்களைப்பற்றி சிங்கள வெகுசனங்களின் மத்தியில் உள்ள படிமத்தை உடைத்துவிடும்.

தவிர,ஹெல உறுமயவும் எங்கே ஜே.வி.பி சறுக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜே.வி.பி எவ்வளவுக்கெவ்வளவு 'சமாதானத்தை' நோக்கிப்போகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள் ஹெல உறுமயவை நோக்கிப்போவார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில் அவர்கள் சமாதான முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிக்கமுடியாது. ஆனால் உள்ள10ர சந்திரிகா செய்பவற்றுக்கு அவர்கள் ஆதரவுதான். ஆனால் சமாதானம் பிசகும் என்று கண்டால் அவர்கள் சந்திரிகாவையும் சமாதானத்தோடு சேர்த்து காட்டிக்கொடுத்துவிடுவார்கள

  • தொடங்கியவர்

LTTEs Special Commander Colonel T. Ramesh on the firing Line.

Rumors are rife in Batticalao and Amparai region about the possible recall of Colonel Thambirasa Ramesh - Batticaloa Amparai Special Commander of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). It is added that Colonel Ramesh who hails from Kokkaddicholai, is unable to satisfy the Vanni leadership despite the rising opposition to the LTTE in the east.

According to unconfirmed reports Colonel Ramesh might be replaced with Karikalan, another LTTE Commander from Batticaloa and who is also expected to be a member of the LTTEs negotiation team replacing renegade leader Colonel Karuna Amman in the future peace talks with the Government of Sri Lanka.

At present, the general public in Batticaloa Amparai region - a region under the control and jurisdiction of the Liberation Tigers of Tamil Eelam are disgruntled with the daily killings of the youths from this region by the LTTE.

The sickening legacy of Tamil youths of this region being killed continues unabatedly.

On 09 May - Selvarasa Gunaseelan ( 28 ) of School Lane, located in Kiran, Batticaloa district was shot dead - Saturday around midnight, at Paththinipuram, a resettled village in Thampalakamam division, which is located about seventeen km off Trincomalee town along Trincomalee -Kandy highway. It was alleged that he was killed by LTTE operatives.

An unidentified group of pistol men suspected LTTE cadres shot dead two Tamils in Soruwilla, Mannampity, on 11 May (Tuesday) around 9.00 p.m.

Those two Tamils youths were - K. Packyaraja (27) of No. 199, Soruwilla, Aralangawilla and - Kokilan (23), of Main Street, Kiran, Batticaloa, suspected to be from a breakaway group of the LTTE They were shot and killed at close range by armed men from the LTTEs pistol group, who arrived at Packiyarajas residence while the latter was visiting him

. It was earlier reported that LTTE had already killed Rabert, Thurai and Kiran Visu who were formerly with Colonel Karuna Amman and subsequently surrendered to the LTTE’s special Commander Thambirajah Ramesh.

1. Visu (Sinnathamby Gopalan), was the political head of the Karuna group in Batticaloa and Amparai districts

2. Thurai - the cadre who was supervising the activities of the NGOs in the in the Batticaloa Amparai District.

3. Rabert - was a junior commander of the armed unit led by Colonel Karuna Amman.

These killings in the fratricidal war against Colonel Karuna Ammans men by the pistol group of the LTTE have begun to cause a telling effect on the day to day activities of the LTTE cadres in the East.

As on a daily basis Batticaloa - Amparai youths were being targeted and killed, which has begun to have a telling effect on Colonel Ramesh who is being looked upon by his very own people - sort of a traitor of the East.

According to sources in Batticaloa, the intelligence report received in Vanni about the inactivity of the special commander Ramesh has begun to irritate the leadership and therefore he is to be recalled and replaced by Karikalan.

It is said that Ramesh may end up in an inactive position in Kilinochchi.

- Asian Tribune -

  • தொடங்கியவர்

Sex, lies and missing monk dominate Sri Lanka's hung parliament

SGE_RFA69_180504073959_00_245x175.jpg

Rauf Hakeem

COLOMBO: Sri Lanka's main Muslim leader has accused the government of implicating him in a sex scandal to secure his vote while a Buddhist monk alleged that a fellow clergyman-legislator had been abducted.

Muslim leader Rauf Hakeem in a special address to parliament said the ruling party had fabricated a sex scandal to pressure his group into supporting the minority government of President Chandrika Kumaratunga.

"Certain papers have published news items relating to an illicit affair allegedly by me," Hakeem told the assembly. "It is my contention that it is fabricated to bring disrepute to me and to my party and bring pressure to vote for the government."

State-run newspapers and television have reported an affair between the Muslim leader and a married woman, who later told a private channel she was forced into implicating Hakeen to secure his support for a crucial vote in parliament.

Kumaratunga's Marxist-backed Freedom Alliance narrowly lost the election for speaker of parliament last month after three rounds of voting that went on for nearly 10 hours.

When parliament met Tuesday, the government and main opposition United National Party agreed to elect the deputy speaker and the chairman of committees without a vote that could have been bruising for both.

But Buddhist monk legislator Aparekke Pannananda said his fellow MP Kathaluwe Rathanaseeha had been abducted by unknown people overnight to prevent him from casting his vote at a possible election for deputy speaker.

The monks were among nine elected from the all-clergy National Heritage Party, but the two have broken ranks to support the ruling party.

In another development, a member of Hakeem's Sri Lanka Muslim Congress defected to the government Tuesday, but under anti-defection laws he would have only three months in parliament before his party has the right to sack him.

Kumaratunga's Freedom Alliance has been desperate to raise its support since the April 2 parliamentary elections as it is seven seats short of a simple majority in the 225-member house.

- AFP

  • தொடங்கியவர்

இராஜதுரை மறுப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்ட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட முன்னாள் விசேட தளபதி கருணா வெளிநாடு செல்வதற்கு மலேசியாவில் தான் உதவிகள் புரிந்ததாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் கருணாவுடனான விவகாரங்களில் தனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்றும் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார, பிரதேச அபிவிருத்தி, தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சர் செல்லையா இராஜதுரை தெரிவித்திருக்கிறார்.

பகவான் சத்யசாயி பாபாவைத் தரிசிப்பதற்காக கடந்த வருடம் நவம்பரிலேயே தான் தென்னிந்தியா வந்ததாகவும் இன்னமும் தான் அங்கேயே தங்கியிருப்பதாகவும் புட்டபர்த்தியில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இராஜதுரை தெரிவித்தார்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதான முயற்சிகளிலிருந்து மட்டுமன்றி முஸ்லிம்களின் பிரதிநிதிப்பதவியிலிருந்தும

  • தொடங்கியவர்

moorthy.gif

தினக்குரல்

  • தொடங்கியவர்

எம்முடன் இணைந்துள்ள அதாவுல்லாவும் பேரியலுமே முஸ்லிம் தனித்தரப்பு குறித்து வலியுறுத்தினர் ஹக்கீம் அல்ல என்கிறார் ஜனாதிபதி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்து சமாதான பேச்சுவார்த்தையில் அரசாங்க பிரதிநிதியாக கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் தனித்தரப்பு குறித்து வலியுறுத்தவில்லை. ஆனால் பேரியல் அஷ்ரப்பும், அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர் தான் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இவ்வாறு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்று மு.கா. தலைவர் ஹக்கீம் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியதாக ரூபவாஹினி தனது ஞாயிறு மாலைச் செய்தியில் குறிப்பிட்டது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் கருத்துக்கள் வருமாறு:

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாமே அவர்களின் பாதுகாப்புக்கு உச்ச கட்ட நடவடிக்கை எடுத்தோம். எதிர்காலத்திலும் முஸ்லிம்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக பதவிவகித்தார்.

அத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் அந்த அரசின் பிரதிநிதியாகவும் இருந்தார்.

அதன்போது சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த அரசின் போது அவ்வப்போது புலிகள் அமைப்பின் அச்சுறுத்தலுக்குள்ளாகினர்.

சொத்துக்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தொடர்பாக அப்பிரதேச முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் பேசினர்.அப்போது நான் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.

இது தொடர்பாக பேசுவதற்கு நான் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்தும் அவர் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சமுகமளிக்கவில்லை. இருப்பினும் பேரியல் அஷ்ரப்பும் அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர் சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து வருகின்றது.

வீரகேசரி

  • தொடங்கியவர்

Race for UN Secretary-General Hots Up Will Dhanapala enter the fray?

Bandula Jayasekara in Colombo, NYT 4.15 P.M Tuesday 18 May. By Bandula Jayasekara at the United Nations-New York -With two years to go, the race for the post of the UN Secretary-General is hoting up with members of the ASEAN countries announcing at the United Nations last week that they are carrying out intensive consultation to come up with a common Asian candidate for the Secretary-Generals post. Malaysia, Thailand and Philippines are staking their claim for the top post at the United Nations.

If Sri Lanka is planning to field a candidate it is time for the government to come forward with a respected and a suitable candidate. Diplomatic sources a the United Nations told The Island that former foreign minister Tyrone Fernando’s candidacy was dead on arrival even when he was Foreign Minister. However, speculation at the United Nation is that former United Nations Under-Secretary-General for Disarmament Affairs; Jayantha Dhanapala, who now heads the Peace Secretariat and also an Advisor to President Kumaratunga, will be a strong candidate for the job if he declares his candidacy.

UN sources also said if Sri Lanka is seriously thinking of fielding a candidate a full time diplomat should begin to campaign for the country.

  • தொடங்கியவர்

ம் இலங்கையில் பதவி சண்டை போதாது என்று இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவியை பிடிக்கவும் முயற்சி.

  • தொடங்கியவர்

Kadigarmar's stand creates suspicion: LTTE

Colombo, May 18 (UNI) Expressing disappointment over Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar's contradictory stand in the peace process, expected to begin shortly LTTE political wing head S.P. Thamilselvam has said that the foreign minister's stand creates suspicion on the fresh peace initiatives made by President Chandrika Kumaratunga.

''We expected Kadirgamar to change from his stand following his appointment by the President to an important portfolio in the present government. But his adverse statements on the peace process and on our leadership leave room for us to suspect the peace initiatives made by the President,'' Mr Thamilselvam was reported as saying at a press conference held in Killinochchi this evening after meeting with the visiting Japanese Special Envoy Yasushi Akashi.

His announcement comes a couple of days after Kadirgamar, during his official visit to United States, said that the Interim Self-Governing Authority (ISGA), proposed by the LTTE, is a blue print for a future separate State and it will be difficult for a sovereign government to accept the proposal as a whole.

This is notably against President Kumaratunga's present position conveyed through the Norwegian facilitators to the LTTE last week, that her Freedom Alliance government was prepared to accept LTTE's blueprint Interim Self Rule proposal as the basis for future negotiations with the LTTE, he pointed out.

In another meeting in US, Mr Kadirgamar also expressed his optimism that the new Indian government led by Sonia Gandhi might press on the extradition of LTTE leader Velupillai Prabhakaran in connection with the assassination of former Indian Prime Minister Rajiv Gandhi.

தன்னாட்சி அதிகாரசபை கோரிக்கையை அடிப்படையாக வைத்தே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்: யசூசி அக்காசி

[ கொழும்பிலிருந்து சேரலாதன் ] [ புதன்கிழமை, 19 மே 2004, 14:57 ஈழம் ]

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்னாட்சி நிர்வாக அதிகாரசபை கோரிக்கையை அடிப்படையாக வைத்தே ஆரம்பிக்கப்படுமென்று ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.

தாம் திறந்த மனதுடன் கலந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அக்காசி, பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் கலந்து கொள்வார்கள் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை உருவாக்கப்படுவதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். எனவே இந்த விடயத்திற்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வழங்கப்படுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கையும் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று அக்காசி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் ஹில்ரன் ஹோட்டலில் இன்று பிற்பகல் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜப்பானின் விசேட பிரதிநிதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.

நன்றி புதினம்

  • தொடங்கியவர்

உயிருக்கு உத்தரவாதமளிக்குமாறு சபாநாயகரிடம் பிக்கு எம்.பி. வேண்டுகோள்

தனக்கு பெரும் உயிராபத்து சூýழ்ந்திருப்பதாகவும், தனது உயிருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரான அபரக்க புஞ்ஞானந்த தேரர் பாராளுமன்றத்தில் சபாநாயகர் லொக்குபண்டாரவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூýடிý புதிதாக சிலர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற பின்னர், இந்தக் கோரிக்கையை விடுத்த தேரர், பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மற்றொரு தேரர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 8.மணிக்கு சிலரால் மூýர்க்கத்தனமாக தாக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டிýருப்பதாகவும் கூýறினார்.

பௌத்த மக்களின் உரிமைகளையும், பௌத்த மதத்தின் உரிமைகளையும் மீட்டெடுக்கவே கடந்த தேர்தலில் தான் போட்டிýயிட்டதாகவும், ஆனால் தற்போது தனக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டிýருப்பதாகவும் தனது உயிருக்கு உத்தரவாதமளிக்கும் படிýயும் சபாநாயகரைக் கோரினார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருடன் கதைத்திருப்பதாகவும், உரிய நடவடிýக்கைகளை எடுப்பதாகவும் சபாநாயகர் உறுதியளித்தார்.

இவ்வாறு பாதுகாப்புக் கோரிய அபரக்க புஞ்ஞானந்த தேரரும், தாக்கப்பட்டு கடத்தப்பட்ட தேரருமே ஜாதிக ஹெல உறுமயவில் அரசாங்கத்துக்கு சார்பான இரு எம்.பிக்களுமாவர்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருந்த ஹெல உறுமய பிக்கு எம்.பி. ராஜிநாமா

கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த ஜாதிக ஹெல உறுமயவின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான கதளுவே ரத்னசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து தனது இராஜிநாமாக் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக ஜாதிக ஹெல உறுமய வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அதுருலியே ரத்ன தேரர் இந்த ராஜிநாமாவை உயர்சங்க பீடம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னர் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தேசிய அமைப்பாளருமான கொலன்னாவே சுமங்கல தேரருடன் பாராளுமன்றத்திற்கு வந்த கதளுவே ரத்னசார தேரர், சபாநாயகர் டபிள்ய10.ஜே.எம்.லொக்குபண்டாரவை

  • தொடங்கியவர்

அரசியல்வாதியாகியுள்ள பெளத்த துறவிக்ளும் அடி உதை உபயோகித்து தான் உறுப்பினர்களை வழிக்கு கொண்டு வருகின்றார்கள் போல் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.