Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

கொழும்பு பாலத்துறையில் பாலத்தின்கீழ் 7-1/2 கிலோ கிளைமோர் குண்டு மீட்பு

கொழும்பு பாலத்துறையிலுள்ள பாலம் ஒன்றின் கீழ் மறைத்துவைக்கப்பட்டிருந்த 7-1ஃ2 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டொன்றும் 6 கைக்குண்டுகளும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே 7-1ஃ2 கிலோ எடையுள்ள கிளைமோர் மற்றும் 6 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பாலத்துறை }மாவோ பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள பாலமொன்றின் கீழேயுள்ள புதரொன்றின் மறைவிலிருந்தே இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கிளைமோர் குண்டு அதி சக்தி வாய்ந்த சீ.போரக வெடிபொருள் 3-1ஃ2 கிலோவினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்துள்ளது

  • Replies 2.2k
  • Views 133.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

morthy.gif

தினக்குரல்

  • தொடங்கியவர்

Suspected Tamil rebel kills Sri Lankan policeman

Associated Press, Wed May 19, 2004 05:45 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) A suspected Tamil Tiger rebel shot and killed a police officer in eastern Sri Lanka - on Wednesday, police said.

M.S. Dassanayake, of the Anti-Subversive Unit of the Batticaloa Police, was fatally shot as he was buying stamps at the local post office, said a police officer on condition of anonymity.

No claim of responsibility was made, but the police officer blamed the rebels for the attack.

The eastern town of Batticaloa, 220 kilometers (136 miles) east of the capital Colombo, is under government control, but the Tamil Tiger rebels operate in surrounding areas.

The Anti-Subversive Unit guards major government installations in the area against attacks by the rebels, who had waged a 19-year separatist war until a truce halted the fighting in February 2002.

  • தொடங்கியவர்

புலனாய்வு பொலிஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 11.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.

தற்போது சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

puthinam

  • தொடங்கியவர்

LTTEs Special Commander Colonel T. Ramesh on the firing Line.

Rumors are rife in Batticalao and Amparai region about the possible recall of Colonel Thambirasa Ramesh - Batticaloa Amparai Special Commander of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). It is added that Colonel Ramesh who hails from Kokkaddicholai, is unable to satisfy the Vanni leadership despite the rising opposition to the LTTE in the east.

According to unconfirmed reports Colonel Ramesh might be replaced with Karikalan, another LTTE Commander from Batticaloa and who is also expected to be a member of the LTTEs negotiation team replacing renegade leader Colonel Karuna Amman in the future peace talks with the Government of Sri Lanka.

At present, the general public in Batticaloa Amparai region - a region under the control and jurisdiction of the Liberation Tigers of Tamil Eelam are disgruntled with the daily killings of the youths from this region by the LTTE.

The sickening legacy of Tamil youths of this region being killed continues unabatedly.

On 09 May - Selvarasa Gunaseelan ( 28 ) of School Lane, located in Kiran, Batticaloa district was shot dead - Saturday around midnight, at Paththinipuram, a resettled village in Thampalakamam division, which is located about seventeen km off Trincomalee town along Trincomalee -Kandy highway. It was alleged that he was killed by LTTE operatives.

An unidentified group of pistol men suspected LTTE cadres shot dead two Tamils in Soruwilla, Mannampity, on 11 May (Tuesday) around 9.00 p.m.

Those two Tamils youths were - K. Packyaraja (27) of No. 199, Soruwilla, Aralangawilla and - Kokilan (23), of Main Street, Kiran, Batticaloa, suspected to be from a breakaway group of the LTTE They were shot and killed at close range by armed men from the LTTEs pistol group, who arrived at Packiyarajas residence while the latter was visiting him

. It was earlier reported that LTTE had already killed Rabert, Thurai and Kiran Visu who were formerly with Colonel Karuna Amman and subsequently surrendered to the LTTE’s special Commander Thambirajah Ramesh.

1. Visu (Sinnathamby Gopalan), was the political head of the Karuna group in Batticaloa and Amparai districts

2. Thurai - the cadre who was supervising the activities of the NGOs in the in the Batticaloa Amparai District.

3. Rabert - was a junior commander of the armed unit led by Colonel Karuna Amman.

These killings in the fratricidal war against Colonel Karuna Ammans men by the pistol group of the LTTE have begun to cause a telling effect on the day to day activities of the LTTE cadres in the East.

As on a daily basis Batticaloa - Amparai youths were being targeted and killed, which has begun to have a telling effect on Colonel Ramesh who is being looked upon by his very own people - sort of a traitor of the East.

According to sources in Batticaloa, the intelligence report received in Vanni about the inactivity of the special commander Ramesh has begun to irritate the leadership and therefore he is to be recalled and replaced by Karikalan.

It is said that Ramesh may end up in an inactive position in Kilinochchi.

- Asian Tribune -

தேசியத் தலைவரை சந்திக்க தளபதிகள் வன்னி பயணம்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் மற்றும் தளபதிகளான ராம், ஜனார்த்தனன், ஜெயாத்தன் ஆகியோர் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் விசேட சந்திப்பை மேற்கொள்வதற்காக இன்று வன்னி பயணமானார்கள்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் வழித்துணையுடனும், இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடனும் இவர்கள் செங்கலடி கறுத்தப்பாலம் இராணுவ சோதனைச் சாவடியூடாக சென்றுள்ளனர்.

இதேவேளை, இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வந்திருந்த விடுதலைப் புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன், விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் கே.பி.றெஜி அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் தியாகராஜா, மற்றும் நரேன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த சந்துரு ஆகியோரும் இவர்களுடன் வன்னி திரும்பியுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவர்களது வாகன அணி புறப்பட்டுச் சென்றுள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்

தற்போதைய அரசினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது: மகேஸ்வரன் எம்.பி.

தற்போதைய அரசாங்கத்தினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகஸே;வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசு மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தமிழர்க்கெதிரான கட்சி. இவர்களால் சமாதான முயற்சிகளை சரியான வழியில் முன்னெடுக்க முடியாது.

தற்போதைய அரசு ஆகக் கூடியது இன்னும் சில மாதங்களே நீடிக்குமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தியாராசா மகேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.

கந்தப்பொல விவகாரத்தை கண்டிக்கும் வகையிலான சுலோகத்தை ஏந்தியவாறு தியாகராசா மகேஸ்வரன் சபை அமர்வுகளில் கலந்து கொண்டார்.

ம.ம.மு. பாராளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரன்

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திரசேகரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அதன் போது குறுக்கிட்ட ஆளும் கட்சியினர் ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றை கிளப்பினர்.

கந்தப்பொல சம்பவம் தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கூட தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை. தமிழர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றதென்றும் சந்திரசேகரன் தனதுரையில் தெரிவித்தார்.

இ.த.க. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழர்களைக் கொலை செய்து நட்ட ஈடு வழங்குவதனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர், இத்தகைய கொலைச் சம்பவங்கள் தொடர் கதைகளாகவே உள்ளன என்றும் தெரிவித்தார்.

இத்தகைய வன்முறைகள் சமாதான நடவடிக்கைகளை பாதிக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்

கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், கந்தப்பொல விவகாரம் ஒரு இனப்பிரச்சனையல்ல. இதனை பெரிதுபடுத்தி சிலர் அரசியல் லாபம் ஈட்ட முயல்வதாக கூறினார்.

புதினம்

  • தொடங்கியவர்

தேர்தல்கால வாக்குறுதிகளும் முஸ்லிம் காங்கிரஸின் நெருக்கடியும்

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் தகுதியற்றவர் என்ற எதிர்பிரசாரத்திற்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை தீர்மானிக்கும் சக்தியாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டம் எவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு இதயமாக விளங்குகின்றதோ அதேபோன்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் மரத்திற்கு ஆணிவேராக அம்பாறை திகழ்கின்றது. இம் மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தேர்தலில் நின்று வெற்றிபெற்றிருப்பதுடன் மு.கா. இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இங்கு ரவூப் ஹக்கீம் அடைந்த வெற்றி முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமை தாங்குவதற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

தலைமைத்துவ போட்டி, தலைமைத்துவத்திற்கு எதிரான பிரசாரங்கள், கருத்துக்கள், கட்சிக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கிடையே இருக்கும் செல்வாக்கு என்பவற்றில் வெற்றியடைந்து நிம்மதிப் பெருமூச்சினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. விட்டபோதிலும் தலையிடி தீர்ந்தபாடில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் அனைவரையும் ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டிய தேவையும் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றன. தற்போது ஆளும் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலேயேயுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களை பட்டம், பதவிகளையும், கோடிகளையும் காட்டி தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளை முகவர்களின் உதவியுடன் செய்துகொண்டு வருகின்றது. இந்த வலையில் தமது கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் மு.கா.வின் தலைமைக்கு நிறையவே உண்டு.

அண்மையில் மு.கா.வின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்நான்கு பேரும் கூட்டாக மு.கா.விற்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமாக அறிக்கைவிட்டனர். இவ்வறிக்கை வந்திட்டபோதிலும் தலைவர் ரவூப்ஹக்கீம் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கழுகுப் பார்வையை தொடர்ந்தும் வைத்துள்ளார். இதனிடையே ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதிலும் நெருப்பில்லாமல் புகைவருமா? என்று அரசியல் அவதானிகள் கேட்கின்றார்கள்.

""முஸ்லிம் மக்களின் விடுதலைக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இந்த இலட்சியத்தினை அடைந்துகொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேர்தலில் நிற்கின்றோம்'' என்று தேர்தல் காலங்களில் கூறியவர்கள் உண்மையாகவே முஸ்லிம் சமூகத்தை விசுவாசிப்பவர்களாக இருந்தால் பட்டம், பதவிகளுக்காக ஆளும்தரப்பிற்கு மாறக்கூடாதென்று மு.கா.வின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள். அதுமட்டுமன்றி தேர்தல் காலங்களில் இவர்களின் தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியின் பக்கம் முஸ்லிம் ம்க்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க துடித்துக்கொண்டிருப்பவர்கள

  • தொடங்கியவர்

Change in India's Lanka policy unlikely: Japan

Colombo, May 19 (UNI) The Indian policy on Sri Lanka would not change despite a change in guard at New Delhi, the Japanese special peace envoy said today.

Yasushi Akashi, the Japanese special envoy in Sri Lanka's peace process with the LTTE said ''foreign policies of a country unlike economic policies tend to remain more consistent''.

He said he held talks with the Indian envoy Nirupam Sen during his five-day visit which conluded today.

Without a direct response to the question if the new Indian government would seek extradition of the LTTE leader Velupillai Parabakaran, Mr Akashi said India was very much interested in peace in Sri Lanka.

''India seems to be prepared to accelarate economic assistance programmes and willing to co-ordinate activities of international donors,'' Mr Akashi said.

He said he was satisfied with what India has been doing but ''one should not expect too much before the new goverment defines the precise outlines of its policies towards Sri Lanka. There may be elements of continuity and there may be changes of emphasis.'' ''All of us try hard to work with India which has enormous interests in Sri Lanka so that India feels comfortable and parties in Sri Lanka feel reassured about not working at loggerheads with each other,'' Mr Akashi stressed.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடையாது என்று யப்பானிய விசேட தூதர் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தையில் அரசும், புலிகளும் அக்கறை தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச வேண்டும்

இந்தியா வெளியுவுக் கொள்கையினை மாற்றாது என்கிறார் அகாசி

அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை கடைப்பிடிப்பதிலும், சமாதானப் பேச்சுவார்த்தையிலும் விடுதலைப் புலிகள் ஈடுபாடு காட்டிவருகின்றனர். இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான புலிகளது திட்டம் தயாராகவுள்ளமையினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தினமானது நாளையோ அல்லது நாளை மறுதினமோ அடுத்த வாரமோ தீர்மானிக்கப்படும் என்று நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே பேச்சுகள் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்தியாவில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ள போதிலும் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வருமென நான் கருதவில்லை என்றும் யசூசி அகாஷி சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை வந்த யசூசி அகாஷி நேற்று புதன் கிழமை நாடுதிரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றை தெரிவித்தார்.

ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களுக்கு அமையவே இலங்கைக்கான நிதி உதவிகள் வழங்கப்படும். வடகிழக்குக்கான இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முக்கியமான விடயமாகும்

. இது தொடர்பான விடுதலைப்புலிகளின் திட்டமும் தயாராகவுள்ளது. எனவே பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இது குறித்தே இணக்கம் காண்பது பொருத்தமானதாகும் என்றும் செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது யசூசி அகாஷி தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறியதாவது:

எனது விஜயத்தின் போது ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் சமாதான செயலகத்தை அமைத்து அதற்கு பணிப்பாளரையும் நியமித்துள்ளார். சமாதான முயற்சிக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கின்றது.

தமிழ்ச்செல்வனையும் சந்தித்து நான் பேச்சுக்களை நடத்தினேன். விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைக் கடைப்பிடிப்பதிலும், சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டி வருகின்றனர்.

டோக்கியோவில் இணைத்தலைமை வகித்த உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடனும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஜுன் மாதம் 1ஆம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ளது. உதவி வழங்கும் நாடுகள் தற்போதைய நிலையினை அவதானித்து வருகின்றன.

இவ்விடயம் குறித்து ஆராய்வதும் எனது விஜயத்தின் நோக்கமாகும்.

டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் தான் இலங்கைக்கான நிதி உதவிகளை உதவி வழங்கும் நாடுகள் வழங்கும். இந்தியத் தூதுவருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

காங்கிரஸ் கட்சியின் புதிய அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையினை மாற்ற மாட்டாது என்றே நம்புகின்றேன். இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா அக்கறை காட்டி வருகின்றது. இலங்கைக்கு இந்தியா உதவிகளையும் வழங்கியுள்ளது. எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு நன்றாகவுள்ளது. இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையினை இந்தியா மாற்றுமென நான் நினைக்கவில்லை.

பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டுமென டோக்கியோ பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து திகதியை கூறமுடியாதுள்ளது. நான் நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிராஸ்கரையும் சந்தித்து பேசினேன்.

பேச்சுவர்த்தைக்கான திகதி இடம் குறித்து நாளையோ அல்லது இந்த வாரமோ தீர்மானிக்க முடியும் என நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே சமாதானப் பேச்சினை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

வீரகேசரி

  • தொடங்கியவர்

அமைச்சுப்பதவியும் பெருந்தொகைப்பணமும்

தருவதாக ஆசைவார்த்தை கூறினார்கள்

துரோகமிழைக்க விரும்பவில்லை என புஷ்பகுமார சபையில் தெரிவிப்பு

பிரதி அமைச்சர் பதவியும் தேவையான பெருந்தொகைப்பணமும் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் என்னை வற்புறுத்தினர். ஆனாலும் நான் அசைந்து கொடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் புஷ்பகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகரின் அனுமதியுடன் நேற்று சபையில் விசேட உரையாற்றிய புஷ்பகுமார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். ஆனால் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் எதனையும் அவர் சபையில் கூறவில்லை.

புஷ்மகுமார தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: பௌத்த சிங்களவனாக இருந்தும் என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்காக நான் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பொருத்தமானது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்காக மிகவும் உறுதியாக செயற்படுகின்றார். அவரது தலைமைத்துவத்தை மாசுபடுத்த சிலர் முற்படுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.

எங்களுக்கு ஆசைவார்த்தை காட்டினார்கள். பிரதி அமைச்சர் பதவியும், பிரதேச அமைப்பாளர் பதவியும், பணமும் தருவதாக கூறி வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதேவேளை புஷ்பகுமார உரையாற்றிய போது அரசதரப்பு உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர்.

வீரகேசரி

  • தொடங்கியவர்

TI.jpg

வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே அண்ணன் கதிர்காமருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று யாராவது கேட்டுச் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

அரசியலமைபில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது புலிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: பேராரிசியர் நிஹால் ஜெயவிக்கிரம

[ கொழும்பிலிருந்து சண்முகப்பிரியா ] [ வியாழக்கிழமை, 20 மே 2004, 7:51 ஈழம் ]

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது விடுதலைப் புலிகளையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டுமென பேராசிரியர் நிஹால் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ~மக்களும் அரசியலமைப்பும்| என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகளானது, அரசியலில் மாற்றம் கொண்டு வர சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இடம்பெற்ற பொதுத் தேர்தல் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. சகல இன மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படும் அரசியலமைப்பே சிறந்தது. பெரும்பான்மையினரது நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அவை இயக்கப்படக் கூடாதென்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்ட மூலம் ஏற்கும் பொறுப்பு சுதந்திரமான ஒரு ஆiணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்காத அரசியல் கட்சிகளுக்கும் அதே போன்று இந்த விடயம் தொடர்பாக ங்களுக்கு கரிசனை காண்பிக்கும் குழுக்களுக்கும் ஆலோசனைகள் முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ஜெயவிக்கிரம மேலும் தெரிவித்தார்.

நன்றி புதினம்

  • தொடங்கியவர்

இடிபாடுகளுக்குள்ளிருந்தும் எழத்தெரிந்தவர்கள்

.

" .. உலகெங்கும் சிதறிய நம் துளிகளும், சிந்தையால் ஈழவர் என்ற இனம் அன்றோ! கூடு திரும்பும் 5 லட்சம் உறவுகளோடு எல்லோரும் சேர்ந்தால் எழாதோ இங்கோர் புது யுகம்! .. "

நினைவுகளைப்போலவே நீண்டு செல்லும் நெடுஞ்சாலைகள் போக இரண்டு, வர இரண்டு என இடப்பட்ட வரிசைக்குள் விரையும் வாகனங்கள், பாதையின் இருமங்கிலும் பசுமைமிகுந்து கிடக்கும் வயல்கள், தோட்டங்கள், இடையிடையே கனரவாகங்கள் நெஞ்சாலையிலிருந்து வெளியேறித் தம் பாதை தேடி அடையும் கைத்தொழில்பேட்டைகள், ஊர்மனைகளிலிருந்து தொழிலாளர்களை தம் மடியில் அள்ளிக் கொண்டு வந்து சேர்க்கும் நீளம் குறைந்த தொடருந்துகள்.

அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தும், அநாவசியங்களைத் தவிர்த்தும், ஊருக்கொரு நூலகம், விளையாட்டு திடல், பாடசாலை, வைத்தியசாலை, மற்றும் பொதுமக்கள் கூடிமகிழ்த்த குதூகலித்திருக்க ஓர் மண்டபம் இப்படியாக இருக்கும் பல ஊர்மக்களுக்குப் பொதுவாய், மாவட்டத்திற்கு ஒன்றென நவீன உலகின் அற்புதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நகரங்கள் விண்ணை முட்டும் கட்டடங்கள், வீதிகளின் இருபக்கங்களும் வகைக்கொன்றாய் வசதியாய் அழகான கடைகள், கண்ணும் கருத்துமாய் காவலில் ஈடுபட்டிருக்கும் காவற்துறையினர், வீதிகளின் நடுவே விதம் விதமான வண்ணமலர்ச் செடிகள், கல்வி கற்கும் ஒரு வகையினர். வெவ்வேறு கடமைகளில் ஈடுபட்டுள்ள இன்னுமொரு வகையினரை இவற்றிற்கடுத்த மூன்றாவதாய், ஓங்கி வளர்த்திருக்கும் இத்தேசத்தினை கட்டியெழுப்பிய தலைமுறையினர், இளைய தலைமுறையிடம் தம் பணியை ஒப்படைத்துவிட்டு ஓய் வாய்ச் சேர்ந்து நாட்டு நடப்புகள் பேசுவதிலும் நற்பணிகள் ஆற்றுவதிலுமாய்! இழிந்தோர் மற்றும் ஏற்போரென்று எவருமே இல்லாத நன்னெறிச் சமத்துவ தேசம் ஒன்றாக நம்முடைய தேசம் ஆகினால்... ஆக்கப்பட்டால்!....

நிச்சயமற்ற ஒரு சமாதான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மீண்டும் ஒரு போர் ஆரம்பிப்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக, தென்னிலங்கையின் இனவாதமே அமையும். இந்த வகையில் தொடர்ச்சியான அழிவுகளும், இழப்புக்களும் மக்கள் மனங்களில் இனி நாம் உய்யும் வழியில்லை', என்ற ஒரு விரக்தி நிலைக்கு இட்டுசெல்லலாம். ஆனால் இடிபாடுகளும், இல்லாமைகளும் நிறைந்திருந்த இப்பூமியின் ஒரு பகுதியிலிருந்து எவ்வாறு இப்படி வியக்கத்தகு 'சொர்க்காபுரி' உருவானது என்று அறிந்து கொள்வதன் மூலம் அழிவு என்பது முடிவல்ல ஒரு புதிய தொடக்கத்திற்கான அடிக்கல் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இன்று நம்முடைய மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கு ஜரோப்பிய தேசங்கள், முழுமையான போர்க்கோலம் பூண்டிருந்த 2ம் உலகயுத்தகாலகட்டம் அது. முதலாம் உலகயுத்தத்திலிருந்து மீண்ட தேசங்கள், இரண்டு தசாப்பதங்களில் தான் கண்டுவிட்ட வளர்ச்சிகளையெல்லாம் போர்த்தளபாடங்களாகப் பரீட்சித்துக்கொண்டிருந்தவே

  • தொடங்கியவர்

Tamil rebels say Sri Lankan peace talks will be delayed because of unresolved key differences

Associated Press, Thu May 20, 2004 03:52 EDT . KRISHAN FRANCIS - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Stalled peace talks between the Sri Lankan government and Tamil Tiger rebels will not resume soon because of unresolved key differences between the two sides, a senior guerrilla official said, reversing earlier optimism that talks were imminent. Pulithevan said Norwegian peace broker Eric Solheim is expected visit Sri Lanka - soon to try to settle the differences.

He said a rebel team will also visit Europe before the peace talks resume to meet constitutional experts and discuss a rebel blueprint for self-rule in the island's north and east.

The blueprint would give the rebels sweeping powers over law enforcement, tax collection, control over state land and other matters currently handled by the government. It also calls for the withdrawal of Sri Lanka - 's army from Tamil-owned lands and the right to receive foreign aid directly.

Kumaratunga previously rejected the blueprint.

The Liberation Tigers of Tamileelam rebels began fighting in 1983 to create a separate state for minority Tamils, accusing the majority Sinhalese of discrimination.

About 65,000 people were killed in the conflict until the Norway-brokered cease-fire halted the fighting. The truce has largely held despite the deadlock in peace talks.

  • தொடங்கியவர்

Defence Authorities devising new plan to protect the lives of Army and Intelligence officers

Alladin Hussein in Colombo, May 20, 2004, 11.56 p.m.. Following the spate of killings of Army and intelligence officers allegedly by the LTTE, Defence Authorities have devised a special security programme to protect the lives of Army and Intelligence Officers. According to Army Spokesman Col. Sumedha Perera necessary instructions in this regard has already been issued to the respective departments.

This Special Security plan comes after a LTTE cadre allegedly shot dead another Army Intelligence Officer in Batticaloa yesterday. Police and Army are currently questioning several persons in connection to yesterdays killing. Meanwhile Police sources also said, that they have already begun special security operations in the Batticaloa area, as a precautionary measure against such incidents.

  • தொடங்கியவர்

Reprieve for Tamil Tiger 'leader' facing deportation

Toronto: A man accused by Canadian intelligence services of being a Tamil Tiger leader won a stay of his deportation to Sri Lanka, after claiming he could face torture.

Muralitharan Nadarajah was to be put on a flight from Toronto on Thursday night to Colombo, but a judge gave him a stay of deportation on Wednesday, after a last ditch appeal by his lawyer.

Judge Sandra Simpson ruled in Federal Court that Nadarajah had the right to challenge the Canadian government's claim that he was unlikely to be tortured if deported.

Since he is currently in a detention centre in Toronto, she also ruled that he was not a risk to the public.

A document released in 2000 by the Canadian Security Intelligence Service identified Nadarajah as a 'top international leader' of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Nadarajah's lawyer was not immediately available on Thursday, but in an interview from a Toronto detention centre, the accused Tamil 'leader' denied he had supported the armed struggle.

"I never, ever carried arms," Nadarajah told the National Post newspaper. "I never even touched a gun in my whole life," he said, arguing that he had not played a military role, despite supporting self-determination for Tamils.

Canada's Federal Court of Appeal is expected to rule on his case later this year.

Nadarajah entered Canada at a border crossing south of Montreal in 1998, and lived and worked freely in the country for around six years.

Sify News

இயன் மார்ட்டினுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

[ வவுனியாவிலிருந்து மகாமுனி ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 13:04 ஈழம் ]

சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவருமான இயன் மார்ட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமாதான முன்னகர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாகவும் இனிவரும் காலத்தில் எவ்வாறு முன்னகர்த்த வேண்டுமென்பதும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அவர்களின் விடுதலை தொடர்பாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக சிவநாதன் கிஷார் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கனகரட்ணம், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவநாதன் கிஷோர், ஈழவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி புதினம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்க வாஜ்பாய் மறுப்பு

[ காவலு}ர் கவிதன் ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 2:48 ஈழம் ]

சோனியா காந்திக்கெதிரான பிரச்சாரங்களால் கோபமடைந்த முன்னாள் பிரதமர் அடேல் வாஐ;பாய், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பா.ஐ.க. தலைவர்களான சுஸ்மா சுவராஐ_ம் உமா பாரதியும் நடத்திய போராட்டங்களே வாஐ;பாய்க்கு எரிச்சலை ஊட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துணைப் பிரதமராக இருந்த அத்வானியே ஏற்கட்டும் என்று வாஐ;பாய் கூறியுள்ளார். எனினும் தேசிய ஐனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவராகப் பதவியில் நீடிக்க வாஐ;பாய் இணங்கியுள்ளார்.

இதற்கிடையில், சோனியா காந்தி பிரதமராக வந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை விரைவாக விழுத்தியிருக்கலாம் என்று கருதும் சங் பரிவார் உட்பட பா.ஐ.க.வினர் பலர், அவர் பிரதமராக வருவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உமா பாரதியும் சுஷ்மா சுவராஐ_ம் காரியத்தைக் கெடுத்து விட்டதாகக் கருதுவதாக செய்திகள் கூறுகின்றன.

வாஐ;பாய் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்காவிடில், அத்வானியின் பொறுப்பில் பா.ஐ.க. விரைவில் பிளவுபட்டுவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

நன்றி புதினம்

  • தொடங்கியவர்

One rebel killed in Sri Lanka's volatile east

COLOMBO, May 21 (Reuters) - At least one Tamil Tiger has been killed in Sri Lanka's volatile east, officials said on Friday, but residents in the region said an explosion heard from rebel-held areas could mean many more had died.

The violence is the latest in a spate of killings that have plaguing the eastern district of Batticaloa since the Tigers retook areas of the region that had been seized by a breakaway rebel commander who goes by the nom de guerre Karuna.

The ongoing violence overshadows peace efforts at a time when the island is expecting an imminent announcement from peace broker Norway of a date for fresh talks to end the war that killed 64,000 people.

Military spokesman Colonel Sumedha Perera said troops heard an explosion in the Batticaloa district late on Thursday and came to know of one death when the Liberation Tigers of Tamil Eelam (LTTE) requested permission to bring a body into government-held territory, apparently for a funeral.

The pro-rebel Tamilnet Web site said one guerrilla was killed in the explosion, but monitors overseeing a two-year truce between the Tigers and government said the rebel had died of a gunshot wound.

"Our monitors found one dead LTTE cadre. But it was most likely not from an explosion but from a gunshot," said Agnes Bragadottir, spokeswoman for the Sri Lanka Monitoring Mission.

Residents said there were reports of as many as seven dead. The military cannot investigate further since the incident took place in a rebel-controlled area.

The LTTE has implicated the army in the previous deaths -- a charge the military denies -- and called for an investigation, saying the ongoing killings threaten the island's peace bid to end 20 years of civil war.

At least one army intelligence soldier and one police officer attached to a counter-terrorism unit have been also killed in the past few weeks, in what could be tit-for-tat attacks.

Norwegian envoy Erik Solheim is due in Sri Lanka next week for talks with both sides that are expected to finalise a date to resume negotiations the Tigers suspended in April last year.

http://www.reuters.com/

  • தொடங்கியவர்

ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதியும்

புலித்தேவனும் நேற்று பேர்லின் பயணம்

அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ணவும், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் நேற்று ஜேர்மன் தலைநகரமான பேர்லினுக்கு சென்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ள இவர்கள் இருவரும் பேர்லின் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேர்லின் சென்றுள்ள இவர்கள் இருவரும் சமாதான முயற்சியினை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்

இவர்கள் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டு அமைப்பொன்றின் ஏற்பாட்டிலேயே இவர்கள் சில கருத்தரங்குகளிலும் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.

சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது எப்போது என்பதை தீர்மானிப்பதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். இவரின் விஜயத்தினையடுத்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் இணங்கியமைக்கு அமைய கூட்டறிக்கை ஒன்றினை நோர்வே அரசாங்கம் வெளியிடவுள்ளது.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுள்ள போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியதும் இரண்டு மூன்று பேச்சுக்களில் மட்டும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை குறித்து கலந்துரையாடுவது என்றும் அதன்பின்னர் இறுதி தீர்வு குறித்த பேச்சுக்கள் அதனடிப்படையில் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

இத்தகைய நிலைப்பாட்டிற்கு தீர்வைக்கண்டு பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பதற்காகவே எரிக்சொல்ஹெய்ம் இலங்கை வருகின்றார். இவரது வருகையையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் உள்ள தமது சட்ட நிபுணர்களை அழைத்து விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான பேச்சுக்களில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக புலிகள் சட்டநிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பேர்லின் சென்றுள்ள புலித்தேவன் அங்குள்ள சட்ட நிபுணர்கள், மற்றும் இராஜதந்திரிகளுடன் ஆராய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

புலித்தேவன், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்து பலருடனும் கலந்துரையாடவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றிலேயே நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளமையின

  • தொடங்கியவர்

யாழ்.அரியாலை பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கலாசாரச் சீரழிவு மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சங்கிலியன் படைகடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சங்கிலியன் படை எனும் பெயரில் அரியாலைப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன சங்கிலியன்படை எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் இச்சுவரொட்டிகள் அரியாலையிலுள்ள நாலாம் சந்தி நொத்தாரிஸ் வீதிச் சந்தி, கனகரத்தினம் மகாவித்தியாலய மதில்கள் மற்றும் கனகரத்தினம் மகா வித்தியாலயச் சந்தி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வீரகேசரி

  • தொடங்கியவர்

புதிய அரசு அமைந்ததும் அதனிடம் இலங்கை

தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்

பி.பி.சி.க்கு வைகோ தெரிவிப்பு

இந்தியாவில் புதிய அரசு அமைந்ததன் பின்னர் அந்த அரசிடம் இலங்கை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

கடந்த காலங்களில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிக்கு இந்திய அரசாங்கம் உதவுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்; இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடுதலைப் புலிகளின் கைகளில்தான் இருக்கின்றது. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் புலிகளை விலக்கிக் கொண்டு சமாதானப் பேச்சினை முன்னெடுக்க முடியாது என்பதுடன் இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர நேரடியாக பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.

வீரகேசரி

  • தொடங்கியவர்
காங்கிரஸ் மேலிடம் வைகோவை கண்டு கொள்வதில்லை என்று தட்ஸ் தமிழ் இணையம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
  • தொடங்கியவர்

கலைஞர், வைகோ, நெடுமாறன்

தமிழகத்தில் சிவாஜிலிங்கம் சந்திப்பு

தமிழகத்திற்குச் சென்றிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான எம்.கே. சிவாஜிலிங்கம், அங்கு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக் கது. இந்தச் சந்திப்புகள் தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் உதயனுக்கு| தகவல் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

வைகோவுடன் சென்னையில் உள்ள மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தலை மைச்செயல கமான தாயகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வைகோவுடன் சந்திப்பு இடம் பெற்றது.

ஈழத்தமிழர்களுக்காக வைகோ சிறைசென்று வந்தமைக்காகவும்,உரிமைக்காகக

  • தொடங்கியவர்

அடிப்படை நான்கு விடயங்கள் தொடர்பாக

முதலில் அரசின் உறுதிமொழி எழுத்தில்,

பின்பே பேச்சுக்கான திகதி நிர்ணயம்!

பிரபாவின் விடாப்பிடி நிலைப்பாடு இது!

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை குறித்து மட்டுமே முதலில் பேசுவது என்பது உட்பட சமாதானப் பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள நான்கு விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் சார்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறுதிமொழியை எழுத்தில் பெற்றுக்கொண்ட பின்னரே நேரடிப் பேச்சுக்கான திகதி, இடம் ஆகியவை நிர்ணயம் செய்யப்படுவதும், அவற்றை அறிவிப்பதும் இடம்பெறமுடியும்.

- இவ்வாறு திட்டவட்டமான - விடாப்பிடியான - உறுதியான - நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இருக்கின்றார். புலிகளின் தலைமையோடு நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் இத்தகவலை உதயனுக்குத்| தெரிவித்தன.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னைய அரசுடன் 1994 - 1995களில் பேசிய அனுபவம் புலிகளுக்கு நிறையவே உண்டு. அடிப்படை விடயங்களில் திட்டவட்டமான இணக்கம் கண்டு, அதை எழுத்தில் பெறாமல் சமாதானப் பேச்சில் இறங்கினால் பின்னர் வீண் ஏமாற்றங்களை வழமைபோல் எதிர்கொள்வதோடு, நெருக்கடிகளையும், அதனால் சர்வதேச அபகீர்த்தியையும் சம்பா திக்க வேண்டி நேரிடும் என்பதை பழைய பட்டறிவு தங்களுக்கு உணர்த்துவதாகத் தலைவர் பிரபாகரன் கருதுகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விடயங்கள் தொடர்பாக அனுசரணைப் பணியாற்றும் நோர்வேத்தரப்பு ஊடாக சில சமாதான சமிக்ஞைகளை ஜனாதிபதி காட்டியுள்ளார் என்பது வாஸ்தவம்தான். அவை ஆக்கப10ர்வ மானவையாகவும் உள்ளன என்பதும் உண்மைதான்.

ஆனால், வெறும் சமிக்ஞைகளையும் செய்திகளையும் நம்பி மோசம் போகத் தலைவர் பிரபாகரன் தயாரில்லை. திட்டவட்டமான - தெளிவான - உறுதிமொழிகளை ஜனாதிபதி எழுத்து மூலம்வழங்கினால் மட்டுமே மேற்கொண்டு சமாதான முயற்சி முன்நகரும் பேச்சுக்கான திகதி, இடம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்த நான்கு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அனுப்பும் தகவல்கள் ஒரு மாதிரியாக உள்ளன. வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக் கள் வேறுமாதிரியாக உள்ளன. அரசின் பங்காளிக் கட்சிகளிடம் இருந்து விடப்படும் அறிவிப்புகள் முற்றிலும் மாறாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் பேச்சுக்கான அடிப்படைகள் குறித்து அரசிடம் எழுத்தில் உறுதியுரை பெற்ற பின்னரே மேற்கொண்டு நகருவது என்பதில் தலைவர் பிரபாகரன் மிகவும் உறுதியாகவும் பிடி வாதமாகவும் இருக்கின்றார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கச் செய்யும் முயற்சியாக அடுத்தவாரம் கொழும்பு வரும் விசேட அனுசரணையாளர் எரிக்சொல்ஹெய்மிடமும் இதே நிலைப்பாட் டையே புலிகளின் தலைமை வெளிப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.