Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவைத் துரத்தும் ஓயாத அலைகள்

Featured Replies

அண்மையில் இடம் பெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் சார்பில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டார்.

அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. வழமையாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தவறாது பங்குபற்றும் ஜனாதிபதி இந்த முறை அதனைத் தவிர்த்ததேன்? என்ற கேள்வி பலரது மனதைக் குடையும் ஒன்றாக அமைந்தது.

இலங்கை ஒரு சிறிய நாடான போதிலும், உலகின் எந்தவொரு வல்லரசுக்கும் முன்னால் தலை தாழ்த்த மாட்டாது என்பதை வெளிப்படுத்தவே ஜனாதிபதி மஹிந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு முன்னர் தாம் பங்கேற்ற சகல பொதுச் சபைக் கூட்டத் தொடரிலும் ஜனாதிபதி இதனையே மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளார்.

உண்மையில் முன்னைய தடவைகளைவிட இம்முறையே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு மேற்குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு பின்னர் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் இது என்பதே இதற்கான காரணமாகும்.

பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதைத் தவிர்த்ததேன்?

எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுமானால், அதனால் வெட்கமுற வேண்டியேற்படும் எனக் கருதியே ஜனாதிபதி இம்முறை அக்கூட்டத் தொடரில் பங்கேற்பதைத் தவிர்த்துக் கொண்டார் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாகும். தாம் கோரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படாததாலேயே தமது ஐ.நா. விஜயத்தைத் தவிர்த்துக் கொண்டார் என்பது மற்றொரு தரப்பாரின் கருத்து. தமது முன்னைய லண்டனுக்கான பயணத்தின்போது புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமக்கெதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் போன்று, இம்முறையும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டால் தாம் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடக் கூடுமென்ற சந்தேகம் காரணமாகவே இம்முறை அவர் தமது ஐ.நாவுக்கான விஜயத்தை இரத்துச் செய்தார் என்பது பிறிதொரு தரப்பினரின் கருத்து.

மேற்குலகும் புலம்பெயர் தமிழர்களும்

மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் உண்மை பொய் எதுவாயிருந்த போதிலும், அண்மைய ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுவதற்கு சில நாள்கள் முன்னர், அரசின் முன்னாள் அமைச்சரும், தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்படுபவருமான பிரமுகரொருவர் ஜெனிவா நகரில் வைத்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர் அமைப்பின் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த பிரமுகர் உலகத் தமிழ்ப் பேரவை அமைப்பின் தலைவர்களான பிதா எம்மானுவல் அடிகளார் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோருடன் சில சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஜனாதிபதி மஹிந்தவின் வெளிநாட்டு விஜயங்களின் போது அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்பு முன்னெடுக்கும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதே அந்தப் பிரமுகரது அந்தச் சந்திப்பின் நோக்கமாகும்.

விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சுக்களை மேற்கொள்ளுமாறு மேற்குலக நாடுகள் நீண்டகாலமாக இலங்கை அரசுக்கும் கூறி வருகின்றன. கே.பி என்ற முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரொருவரைக் கைது செய்த பின்னர், விடுதலைப் புலிகளது உத்தியோக பூர்வமற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனையும் கைது செய்து விட இலங்கை அரசு தீவிரம் காட்டிச் செயற்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த உருத்திரகுமாரனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு அமெரிக்காவைக் கோரி வந்தது. ஆனால் உருத்திரகுமாரன் விடுதலைப் புலிகளது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர் என்பதை இலங்கை அரசு நிரூபிக்குமானால், அவரை இலங்கையிடம் ஒப்படைக்க இயலுமென அமெரிக்கா பதிலிறுத்து வந்தது.

அதேவேளை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கோ இலங்கை அரசு உருத்திரகுமாரனுடன் பேச்சு மேற்கொண்டு புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் தொடர்பு பேணி செயற்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்தார். இலங்கை அரசு அவரது அக்கருத்தை முற்றுமுழுதாக நிராகரித்ததுடன், அப்படிச் செய்வது புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு அங்கீகாரம் வழங்குவதாக அமையும் எனவும் கருதியது.

அதேவேளை அரசின் பாதுகாப்பில் இருக்கும் கே.பியோ, அரசு உருத்திரகுமாரனுடன் தொடர்பு பேணுவதன் மூலம் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்த இயலும் என்ற கருத்தை முன்வைத்த போதிலும் அது நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரிப்பதாக அமையுமென்ற அச்சத்தில் இலங்கை அரசு கே.பியின் அந்த ஆலோசனையை நிராகரித்தது.

ஆனால் உருத்திரகுமாரன் மட்டுமன்றி, உலகத் தமிழ்ப் பேரவை அமைப்பின் எம்மானுவல் அடிகளார் மற்றும் சுரேன் சுரேந்திரன் போன்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் தலைவர்கள், அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் மற்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இவற்றுக்கு மேலாக லண்டனில் வைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் அவர்கள் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதிலிருந்து புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் அரசு தொடர்பு பேணினாலும் சரி, பேணாவிட்டாலும் சரி, சர்வதேச ரீதியில் அவர்களுக்கு அங்கீகாரம் கிட்டியுள்ளது என்பது தெளிவாகிறது.

வெளிநாட்டுப் பயணங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்

இலங்கை அரசு இவ்விதம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைக் கணக்கில் எடுக்காது புறந்தள்ளினாலும், ஜனாதிபதி மஹிந்த மேற்கொள்ளும் வெளிநாடுகளுக்கான பயணங்களின்போது அவர்கள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசுக்குப் பெரும் தலைவலி ஏற்படுத்துபனவாகவே உள்ளன. அந்த அமைப்புக்களது எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ஆற்றவிருந்த சொற்பொழிவை இரத்துச் செய்ய நேரிட்டது. இவ்வாண்டில் லண்டனில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர்நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட நேர்ந்தது.

இதனால் ஜனாதிபதியின் மதிப்புக்கு மட்டுமன்றி இந்த நாட்டின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட நேர்ந்தது. விசேடமாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளின் தலைவர்களது கவனத்துக்கு உள்ளாகியதால், ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதில் அம் அமைப்புக்கள் வெற்றி கண்டதாக கருதவைத்தது.

இவ்விரு பயணங்களின்போதும், ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கருத்தில் எடுத்தே ஜனாதிபதி இம்முறை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கான தமது விஜயத்தை இரத்துச் செய்திருக்கக் கூடும்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் இந்த முறை நடத்த ஆலோசிக்கப்பட்ட போதும், அதில் வெளிநாடுகளின் தலைவர்களைக் கலந்து கொள்ளாமல் செய்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பரப்புரை செய்யக் கூடுமென்பதையும் ஜனாதிபதி ஊகித்திருந்தார்.

இத்தகைய காரணங்களைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் பேச்சு மேற்கொள்ள இலங்கை அரசு முடிவு செய்திருக்கக் கூடும். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமொன்றே இதற்கான பின்னணியை, வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஜனாதிபதியின் வெளிநாடுகளுக்கான பயணங்களின் போது புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும், மேற்கொள்ளக் கூடாதென்ற கோரிக்கை ஜனாதிபதியின் ஆலோசகரால் அந்தப் பேச்சின் போது முன்வைக்கப்பட்டது.

அதே சமயம் தாம் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் சென்று தமிழ் மக்களுக்கான புனருத்தாபனப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

உண்மையில், ஒரு வகையில் குறிப்பிட்ட இப் பேச்சுக்கள் புலம்பெயர் தமிழர் தரப்புக்கு கிட்டிய வெற்றியாகக் கொள்ளத்தக்கதே. புலம்பெயர் தமிழர் தரப்பால் அரசுக்கு எவ்வித சிரமங்களையும் ஏற்படுத்த இயலாதென்றே போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசு கருதி வந்தது. ஆனால் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களின் போது பெரிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுப் பிரேரணையைக் கொண்டுவரச் செய்ததன் மூலமும் புலம்பெயர் தமிழர் தரப்பு தனது பலத்தை இலங்கை அரசுக்கு தெளிவாகக் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் லண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நிகழ்த்தவிருந்த உரையை இரத்துச் செய்வித்த தமது முயற்சிக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு "ஓயாத அலைகள்I' எனப் பெயரிட்டு அடையாளப்படுத்தியிருந்தது. இவ்வாண்டு பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி நிகழ்த்தவிருந்த உரையை இரத்துச் செய்வித்த தமது நடவடிக்கையை "ஓயாத அலைகள்II' என அத்தரப்பு அடையாளப்படுத்தியது. ஆதலால் இந்த ஓயாத அலைகளை நிறுத்தியாக வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அன்று இந்த ஓயாத அலைகள் நடவடிக்கை வடபகுதியிலிருந்து உருவாகியது. இன்று அது சர்வதேசத்திலிருந்து உருவாகி வருகிறது. ஆதலால் அரசு அந்த அலைகள் மீண்டும் எழாமல் தடுக்க பேச்சுக்கு முயன்றிருக்கலாம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வதை இரத்துச் செய்ததிலிருந்து, குறிப்பிட்ட அந்தப் பேச்சு சாதகமான முடிவை எட்டாது முறிவடைந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

தமிழில் : வீயெஸ்ரி

மூலம்: மவ்பிம

இது தமிழ் அமைப்புகளை உடைக்க எழுதப்பட்ட கட்டுரை போலப்படுகிறது. சுரேன் சுரேந்திரன் போன்றோர் தமது கருத்தை ஒத்த யாரும் தெற்கில் இல்லை என்பதை புரிய வேண்டும். தெற்கில் உள்ளோர் இன்னொரு தடவை தமிழரை உபயோகப்படுத்தி, மேலையை நாடுகளை வைத்து, தமக்கேற்ற அரசை கொண்டுவர நாம் கருவியாக இருக்க கூடாது. சந்திரிக்காவின் பின் இதை உணராதார் எதையும் உணரபோவதில்லை. இலங்கையின் மிக நல்ல பிரதமர் டட்லி, SJV யை நாயாகத்தன்னும் மதியாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தவர்.

ராஜபக்சாவை மாற்றுவது நமது நோக்கமல்ல. போர்க்குற்றவிசாரணை- அரசியல் தீர்வு தான் நமது தேவை. இதில் நாம் இந்தியாவுடன் உடன் படலாம்.(இந்தியா தற்போதைய அரசை மாற்ற முயலவில்லை. அரசியல் தீர்வை கேட்கிறது). ஆனால் சுரேன் சுரந்திரனின் தெற்கு சக்திகளுடன் சேர்வதை ஆதரிக்க முடியாது.

Edited by மல்லையூரான்

[size=5]விக்கிரமபாகு கருணாரத்ன தவிர தெற்கிலுள்ள சகல கட்சிகளும் தமிழின விரோத சிங்களப் பயங்கரவாதிகளே.

புத்தி சுவாதீனம் உள்ளவர்களே தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயங்கரவாதி மகிந்தவை பதவியிலிருந்து அகற்றவோ அல்லது போற்குற்றச் சாட்டிலிருந்து சிங்களப் பயங்கரவாதிகளை விடுவிக்கவோ முயல்வர்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.