Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. சர்வதேச குற்றவாளி: ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UNP(2)(8).jpg

[size=2][size=4]கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'எந்த அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளியாக கூறப்பட்டு இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர். அவருக்கு நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல்.

இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கமே கூறுகிறது.

ஆயிரக்கணக்கான எமது இராணுவத்தினரை கொல்வதற்கு ஆயுதம் வழங்கியவரை எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுவித்திருக்கின்றது அரசு. இதன் மூலமாக எமது நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முழுமையாக மீறியுள்ளது.

அது மட்டுமின்றி அவரை கைதுசெய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பாதுகாப்பு படையினரையும் அவமதிக்கும் செயலாகும்.

விடுதலைப்புலிகளிடம் உள்ள 20 கோடி நிதி, கப்பல்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவை அனைத்தையும் அரசாங்க உடமையாக்கி அந்த நிதியினை நாட்டிற்கு கொண்டு வருவதே தமது நோக்கம் என கே.பி யை கைது செய்யும் போது அரசாங்கம் கூறியது. எனினும் தற்போது எல்லாமே தலை கீழாக நடைபெறுகின்றது' என்றார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...3-13-49-10.html[/size][/size]

கருணா / பிள்ளையான் மாதிரி கதாநாயகன் ஆக்கப்பட்டவர், வீரியம் குறைக்கப்பட்டு தேசிய நீரோட்டத்தில் இடப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனைச் சொல்ல ஐ தே கட்சிக்கு உரிமையில்லை.

பெரும் இனக்கலவரங்களுக்கும்.. தமிழின அழிப்புக்கும் முன்னோடியாக இருந்த ஐ.தே.கட்சியின் முன் கே பி செய்த குற்றங்கள் சிறியவை.

ஐ. தே.கட்சியும் அதன் ஆட்சியாளர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதை மறந்து அலட்டுகிறார்கள்..!

கே பி என்னதான் துரோகம் செய்திருந்தாலும் அவர் உளமார இயங்கிய ஒரு விடுதலைப் போராளியாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் கே பி யை அழிக்க.. அல்லது தண்டிக்க சிங்களம்.. எல்லா வழியிலும் முனையும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.