Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்துவந்தால் நன்மை பயக்கும்

Featured Replies

[size=4] [/size]

[size=4]இலங்கை கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க காலத்து உறுதியான நிலைப்பாடு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இங்கு ௭ந்தவித ஊழலும் கிடையாது ௭ன்று நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஆளும் கட்சி ௭ம்.பி. ஏ.௭ச்.௭ம். அஸ்வர் மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும் ௭ன்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஆட்ட நிர்ணய சதி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்வர் ௭ம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 1996 இல் அர்ஜுன ரணதுங்கவினால் உலகக் கிண்ணம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இலங்கை அணி உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. அதே நிலைமை இன்றுவரை நீடித்து வருகிறது.

௭னவே, இலங்கை கிரிக்கெட்டில் ௭ந்தவித ஊழலும் மோசடியும் கிடையாது. தற்போது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். வடக்கு, கிழக்கிலும் கிரிக்கெட் துறை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடயங்களில் இளம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பங்களிப்பு மகத்தானதாகும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை மந்திரமாக உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும். இதேவேளை, கிரிக்கெட் வர்ணனையாளர் டொனி கிரேக் தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை அறிந்த அவர் இலங்கையில் மாத்திரமே தான் பாராளுமன்றத்தில் புகழப்பட்டிருப்பதாக பெருமையடைந்தார். அவரது வர்ணனையூடாக சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார். ௭னவே, அவரது உடல் நலத்துக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் ௭ன்றார்.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=1263[/size]

  • தொடங்கியவர்

[size=5]இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய ரணிலே காரணம்: ஸ்ரீரங்கா [/size]

[size=5][size=4] [/size][/size]

[size=4]நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி.யான ஜோன் அமரதுங்கவினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் அணி நான்கு தடவைகள் மாத்திரமே கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ நடைபெற்ற 29 தேர்தல்களில் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. இன்றைய காலக் கட்டத்தை பொறுத்தவரையில் ஜனநாயகம் தொடர்பில் ௭த்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அது குறித்து பேசாது கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணயம் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் தறுவாயில் இருந்தது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ௭திர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்தே இலங்கை அணி தோல்வியை தழுவியது. 29 தடவை தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு வந்தமையாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது. [/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=1264[/size]

[size=5]என்ன சென்டிமன்ட்,சுவரில் மோதினாலும் உயிர் போகாது[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்துவந்தால் நன்மை பயக்கும்

உச்சரிப்பதற்கு இது என்ன ஸ்ரீராமஜெயமா!

Posted Today, 08:45 AM

நல்ல காலம் நாங்கள் தப்பிவிட்டம்.

இந்த கோமாளியைத்தான் மகிந்தா வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்க இருந்தவர்.

அஸ்வார் இதை விட கொஞ்சம்தன்னும் நல்லது சொல்ல தெரிந்து வைத்திருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110164&#entry815979

  • கருத்துக்கள உறவுகள்
makintha-thaaitamil1-300x253.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரித்திரம் பிடிப்பான் ஆட்சிக்கு வந்தபிறகுதான் நாடே பஞ்சத்தில போகுது இந்த எருமை என்னண்ட நாமத்தை சொல்லி எங்களையும் நாசமாக போகச் சொல்லுது

  • கருத்துக்கள உறவுகள்

Mubarakamajeed-seithy-20120918-150.jpg

[size=4]மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை பயக்கும் என ஏ. எச். ஏம். அஸ்வர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.[/size] [size=4] [/size]

[size=4]அஸ்வரின் இக்கருத்து சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மை கிடைக்கும் என்றும் இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.[/size]

[size=4]இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏ எச்.எம். அஸ்வர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் அவர் இஸ்லாத்தை வேண்டுமென்றே அவமதித்துள்ளதோடு தனது எஜமான விசுவாசத்துக்காக இறைவனைக்கூட உதாசீனம் செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.[/size]

[size=4]நாடாளுமனறம் என்பது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதற்குமான உயரிய இடமாகும். அப்படியான இடத்தில் பேசப்படும் அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இக்கூற்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய அழுக்காகவே பதிவு செய்யப்படும். இவருடைய கூற்றை பார்க்கும் போது இவர் உணவு உண்ணும் போதும் பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் போல இருக்கின்றது. இத்தகைய ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறோம்.[/size]

[size=4]இன்றைய பதவிகள் என்பன உலகின் இன்பங்களாகவும் சோதனைகளாகவுமே உள்ளன. அப்பதவிகளுக்காக இஸ்லாத்தையே அவமதிப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகவே அஸ்வர் தனது இணைவைப்பு கருத்திற்காக மன்னிப்பு கோருவதோடு இதற்கெதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பகிரங்க தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்
cart.jpg
  • கருத்துக்கள உறவுகள்

உச்சரிப்பதற்கு இது என்ன ஸ்ரீராமஜெயமா!

ராமரின் நாமமோ, மகிந்தாவின் நாமமோ உச்சரித்து வந்தால் ஒரு நன்மையும் கிடையாது.

உச்சரிப்பதற்கு இது என்ன ஸ்ரீராமஜெயமா!

ராமரின் நாமமோ, மகிந்தாவின் நாமமோ உச்சரித்து வந்தால் ஒரு நன்மையும் கிடையாது.

உச்சரிப்பதற்கு இது என்ன ஸ்ரீராமஜெயமா!

ராமரின் நாமமோ, மகிந்தாவின் நாமமோ உச்சரித்து வந்தால் ஒரு நன்மையும் கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.