Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன்

Featured Replies

அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்

norway8kn.jpg

  • தொடங்கியவர்
denmark4ow.jpg
  • தொடங்கியவர்
germany2kp.jpg

யேர்மனி உட்பட உலகம் எங்கும் ஒரே நேரத்தில் ஒலிக்கப்போகும் தமிழர்களின் உரிமைக்குரல்.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கையை எதிர்த்தும் தமிழீழத்தில் அண்மையில் அதிகரித்துள்ள இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரியும் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என்று வலியுறித்தியும் எதிர் வரும் 29ம் திகதி திங்கள்கிழமை உலகம் எங்கும் ஒரே நேரத்தில் புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் பேரணிகளை முன்னேடுக்கவுள்ளனர்.

அந்தந்த நாட்டு பாராளுமன்றங்களிற்கு முன்பாக இந்த பேரணிகள் நடைபெறவுள்ளன. யேர்மனியில் டுசல்டோவ் நகரத்தின் புகையிரதநிலைய முன்றலில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி பாராளுமன்ற முன்றலில் முடிவடையும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

  • தொடங்கியவர்
swiss27ao.jpg
  • தொடங்கியவர்

வடக்கு-கிழக்கில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் உரிமைக்குரல் ஒன்றுகூடல்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த உரிமைக்குரல் ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

மனித உரிமைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி கண்டனங்களை வெளியிடும் சர்வதேச சமூகம், 4 மாத, 4 வயது குழந்கைள் உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் ஓரிரவில் அல்லைப்பிட்டியில் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித கண்டனங்களும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டித்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிறிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூட இருக்கின்றார்கள்.

அன்புத் தமிழ்ச் சமூகமே,

அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி, எமது ஒருங்கிணைந்த எதிர்ப்பை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.

காலம்: மே மாதம் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை)

நேரம்: காலை 10 மணி

இடம்: கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக

சிட்னியில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் ஜெகன் 0410 310 499, 02-9642 1126 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

மெல்பேணில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விவரங்களுக்கும் டொக்டர் சிவா 03-9803 6239 அல்லது சிவகுமார் 0404 894 591 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் மீது தொடரும் சிறீலங்காவின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திட உதவிடுமாறு உலக சமூகத்தினைக் கோரி

உரிமைக்குரல்!

29 மே 2006 - திங்கட்கிழமை

இடம்: Sergels Torg, Stockholm

நேரம்: 10.30

(ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி செல்லல்)

சிறிலங்காவின் முப்படைகளும், துணைப்படைகளும் இணைந்து நடத்தும் இன அழிப்பு வன்முறைகள் சமாதான காலத்தில் - சர்வதேச சமூகத்தின் கண்முன்னே - தினசரி நடந்தேறுகின்றது.

தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு திருமலை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளடங்கலாக தமிழர் நகரங்களும் கிராமங்களும் கொலைக்களங்களாக்கப்பட்டு வருகின்றது.

பலநு}று மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மிகப்பெரும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கிற்கு எதிரான சர்வதேச கவனஈர்ப்பைக் கோரி அணிதிரளும் மிகப்பெரும் தேசியப் பணி இது!

சர்வதேச சமூகமே...

சிறிலங்காவின் இன அழிப்பை தடுத்து நிறுத்து!

ஆக்கிரமிப்புப் படைகளே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு!

போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை குற்றக்கூட்டில் நிறுத்து!

தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி !

தமிழர்களின் தேசிய தலைமைக்கு மதிப்பளியுங்கள்!

எங்கள் வேர்கள் ஆழப் பதிந்த தாயகத்தின் பாதுகாப்பிற்குக் குரல்கொடுப்பது எங்கள் சனநாயக உரிமை!

அனைவரும் வாருங்கள் - அனைத்துலகையும் திரும்பிப்பார்க்க வைப்போம்!

தொடர்புகள்: ராஜன்: 070 594 20 47

புனிதா: 070 759 30 88

  • தொடங்கியவர்

'உலகே உனக்கு கண்ணில்லையா?"

'உலக மக்கள்தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?"

அனைத்துலக மனக்கதவின் மேல் எங்கள் கரங்களை தட்டி எமது உடன் பிறப்புகளை காப்பாற்றுவோம்.

அமைதி வழிமூலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சிறிலங்கா அரசும் அதனுடைய கூலிப்படைகளும்; தமிழ் மக்களை கொன்றொழித்து தமிழர்களின் சாத்வீக போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றன. இவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் நான்கு மாத குழந்தை, நான்கு வயுது குழந்தைகளை கொல்லுகிறார்கள்.

நியுூசிலாந்து தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை வெலிங்டனிலும, நீர் கூட அருந்தாமல், ஒருநாள் உண்ணாவிரத்தை ஒக்லாந்திலும் நடாத்துகிறார்கள்.

ஒக்லாந்து - உண்ணாவிரதப் போராட்டம்

காலம்: 29.05.2006 (திங்கட்கிழமை)

நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை

இடம்: அயோத்தியா சதுக்கம் ஒக்லாந்து நகர மையம்

வெலிங்டன் - கவனயீர்ப்பு போரட்டம்

காலம்: 30.05.2006 (செவ்வாய்கிழமை)

நேரம்: மதியம் 12.15 மணி முதல் 1.30 மணிவரை

இடம்: பாராளுமன்றம் முன்பாக

எமது இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் இறுதித் தருணம் இது என்பதால் அனைத்;து தமிழ் மக்களையும், மனிதாபிகளையும் உணர்வெழுச்சியுடன் வந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

மனிதாபிமானம் உள்ள உலகத் தமிழினம் அனைத்தும் ஒன்று திரண்டு திடசங்கற்ப்பம் கொண்டிருக்கும் இவ்வேளை நியுூசிலாந்து தமிழர்களாகிய நாங்களும் எழுந்து எமது இனத்தின் உயிர்களை காக்க முயல்வோம்.

'புலம் பெயர் தமிழர்களாகிய எமது குரல்களே ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்கும்"

ஒலிவடிவில்

http://www.tamilnaatham.com/audio/2006/may...em20060522.smil

நன்றி தமிழ்நாதம்.

யேர்மனி உட்பட உலகம் எங்கும் ஒரே நேரத்தில் ஒலிக்கப்போகும் தமிழர்களின் உரிமைக்குரல் நிகழ்வை பெல்யியத்தில் நடைபெற்ற "எழுகதமிழ்" நிகழ்வை போன்று புலம்பெயர் தமிழ் ஊடகங்களுடன் நின்றுவிடாது

சர்வதேச ஊடகங்களையும், முக்கியமாக ஐரோப்பியர்களின் ஊடகங்களையும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் நடைபெருகிறது. பதிவு இணையத்தளத்தில் இருந்து

கனடா ரொரன்ரோவில் எழுச்சி பெறும் உரிமைக் குரல்.

தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை எமது கனடா அரசாங்கம் தடை செய்ததன் காரணத்தால் உந்தப்பெற்ற இனவெறி சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், மனிதஉரிமை மீறல்களையும் உடன் நிறுத்துவதற்கு கனேடிய அரசும், சர்வதேச சமூகமும் உடன் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

ஈழத்தமிழரின் அடிப்படை அபிலாசைகளாம் தன்னாட்சியுரிமை, தாயகம், தேசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் தேசியத்தலைமை என்ற யதார்த்தம் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

எமது கனேடிய அரசானது எவ்விதத்திலும் பொருத்தமற்ற சூழ்நிலையில் பக்கச்சார்புடன் தமிழர் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்தமை தவறு என்பதை சுட்டிக்காட்டவும், அதனை மீளாய்வு செய்யக்கோரியும்,

யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு ஆதார சக்தியாக விளங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யும் முயற்சியான தற்போதைய பக்கசார்பு நிலைப்பாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியும்

புலம் பெயர் தமிழரோடு கனேடிய தமிழர் சமூகமும் அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எமது உணர்வுகளை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் நாம் அனைவரும் பெருந்திரளாக சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் ஒன்றிணையும் உரிமைக்குரல்.

சிறீலங்கா அரசினது தமிழ் அழிப்பு மனப்பான்மை இன்று சர்வதேசத்திற்கும் சந்தேகமின்றித் தெரிகிறது. தமிழ் விரூட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் இலையும் குருத்துக்களும் வெட்டவெளிச்சத்தில் பேரினவாதக் கோடரியால் வெட்டப்படுகின்றன. நிலைமையின் கொடூரமுணர்த்தும் எண்ணற்ற ஆவணங்கள் உடனிற்குடன் உலகெங்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. இருந்தும், வெட்டுவோரைத் தடுப்பதை விட்டு, உலகு நம் வேரிற்குக் குறி வைக்கிறது. கோடரி ஓங்கும் கைகளைக் கீறிவிடுமோ என்பது போல் சர்வதேசம் தானுமிறங்கி நம் கொப்புக்களை வெட்டுகின்றது. சனநாயகச் சத்தமிடும் மனித உரிமைப் பேரிகைகள், தமிழினத்தின்; சனநாயக பிரதிநிதிகளைத் தடைசெய்து தொடர்கிறது.

தழிழினம் அமைதியானது. அகிம்சைக்குப் பெயர் பெற்றது. ஆனால் தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் எனத் திடமாக நம்புவது. பொறுமை எங்கள் பெறுமதி. நாகரிகத்தின் தோற்றுனர்களில் நாங்களும் முதல்வாகள்;. அநீதியின் அசிங்கப் பிடிகளைத் இனங்காணும் ஆற்றல் எங்களிற்குண்டு. பேசச் சொன்னாக்கள். இவர்கள் சொல்லுமுன்பிருந்தே நாங்கள் பேசுகின்றோம். இவர்கள் சொன்ன பின்னும் பேசுகின்றோம். நாங்கள் நியாயமானவர்கள். ஆங்கில காலனித்துவத்தின் அந்திம காலத்தில் ஒன்றாயிருந்த பல தேசங்கள் பிரிந்து எழுந்தன. ஆனால் நாங்கள் இரண்டாய் இருந்தவர்கள் ஒன்றாய் வாழ ஆசைப்பட்டோம். மனிதத்தை மதிப்பவர்கள், விருந்தோம்பி மகிழ்பவர்கள், நட்பின் வாஞ்சையோடு சேர்ந்து வாழக் கரங் கொடுத்தோம். என்ன செய்வோம் நட்பின் சமிக்ஞையினை அவர்கள் காட்டவில்லை.

வீரத்தின் பாரம்பரியம் எங்களுடையது. மறவரைப் வணங்கும் வழக்கம் தொன்று தொட்டு எங்களுடன்.

கார்த்திகை பதினொன்றில் கனேடிய தேசத்தின் தியாக மறவரை மனமார நினைத்து நெஞ்சிலே பொப்பிப் பூவை பெருமையுடன் அணியும் தமிழர், அதே மாதம் இருபத்தியேளில் கார்த்திகைப் பூவை பிடித்திருத்தல் தவறென இன்று கனேடிய மண்ணில் சட்டம். அமெரிக்க அரசு கேட்டதற்கிணங்கக் கனடாவில் தமிழரிற்குத் தடைவிதிக்கப்பட்டதாகச் சொல்கிறார் நம் சட்டத் தரணி. எமதாருயிர்த் தேசம், அடைக்கலந்தந்த பூமி, கனேடிய தேசத்தின் இறமையின் இன்றைய நிலை கண்டு நாம் கதி கலங்கி நிற்கையிலே செய்தி வந்ததது. |அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐரோப்பி ஒன்றியம் தமிழரிற்குத் தடைவிதிக்கச் சம்மதம்| என்று. உலகை நாம் புதிதாகப் பார்க்கின்றோம். மேற்குல எல்லைகள் எங்கே எனத் தேடுகின்றோம். மேற்கின் அரியல் முறைமை என்னவெனக் குழம்புகின்றோம். இலங்கைத் தீவின் இறைமை பற்றிப் பேசுபவர்கள், சமஸ்டி என்றும் ஏதேதோவென்றும் தம்நாட்டின் நடமுறையை எமை அழைத்துக் காட்டியவர்கள.; உண்மையிலே இவர்கள் முறைமை என்னவென்று புரியாது விழிக்கின்றோம்.

ஊககெலம் தமிழனின் உரிமைக்குரல் இணையட்டும். எல்லைகள் வரம்புகள் மீறிக் குரல் உயரட்டும். கண்டமெலாம் வாழ்ந்தாலும் எங்கள் உயிர் தமிழீழம் எங்களவர் வீழ்கையில் எங்களிற்கா உறக்கம் வரும்.

திட்டமிட்டு நாங்கள் பட்டியலிடப்படுகின்றோம். ஈனப்படுத்தப்படுகின்றோம். உயிர் வதை செய்யும் பேரினவாதம் பற்றி நாம் பேசமுடியாத படி எங்களின் உரிமைகளைத் துரத்திப் பிடுங்குகிறார்கள். இனிமேல் ஓட இடமில்லை என நாம் அங்கலாய்க்கும் வகையில் நம்மைத் துரத்துகிறார்கள். பயங்கரவாதத்ததால் பலியெடுக்கப்படும் எம்மைப் பயங்கரவாதிகள் என இதயமின்றி இகழ்கிறார்கள்.

எங்களின் உறவுகளிற்காய் இன்னுமொருமுறை முயல்வோம். மேற்கின் இதயங்களில் ஈரம் வேண்டி ஒலிப்போம். ஓன்று திரண்டு இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உரிமை கேட்டு எழுவோம். எங்களின் சொந்தங்கட்கு நாங்களேனும் உள்ளோம் என்று உரத்துக் குரல் கொடுக்கத் திரள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீது தொடரும் சிறீலங்காவின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திட உதவிடுமாறு உலக சமூகத்தினைக் கோரி

உரிமைக்குரல்!

29 மே 2006 - திங்கட்கிழமை

இடம்: Sergels Torg, Stockholm

நேரம்: 10.30

(ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி செல்லல்)

சிறிலங்காவின் முப்படைகளும், துணைப்படைகளும் இணைந்து நடத்தும் இன அழிப்பு வன்முறைகள் சமாதான காலத்தில் - சர்வதேச சமூகத்தின் கண்முன்னே - தினசரி நடந்தேறுகின்றது.

தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு திருமலை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளடங்கலாக தமிழர் நகரங்களும் கிராமங்களும் கொலைக்களங்களாக்கப்பட்டு வருகின்றது.

பலநு}று மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மிகப்பெரும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கிற்கு எதிரான சர்வதேச கவனஈர்ப்பைக் கோரி அணிதிரளும் மிகப்பெரும் தேசியப் பணி இது!

சர்வதேச சமூகமே...

சிறிலங்காவின் இன அழிப்பை தடுத்து நிறுத்து!

ஆக்கிரமிப்புப் படைகளே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு!

போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை குற்றக்கூட்டில் நிறுத்து!

தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி !

தமிழர்களின் தேசிய தலைமைக்கு மதிப்பளியுங்கள்!

எங்கள் வேர்கள் ஆழப் பதிந்த தாயகத்தின் பாதுகாப்பிற்குக் குரல்கொடுப்பது எங்கள் சனநாயக உரிமை!

அனைவரும் வாருங்கள் - அனைத்துலகையும் திரும்பிப்பார்க்க வைப்போம்!

தொடர்புகள்: ராஜன்: 070 594 20 47

புனிதா: 070 759 30 88

சுவிடன் நேரம் மாற்றப்பட்டுள்ளது (மாலை 2.00 மணிக்கு). கவனத்திற்கு

http://www.tamilnaatham.com/advert/2006052...SWEDAN/

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் http://www.tamilnaatham.com/advert/20060520/FRANCE/

கனடாவில்

http://www.tamilnaatham.com/advert/20060520/OTTAWA

வேலையில் இருந்து திங்கள் கிழமை லீவு கிடைத்துவிட்டதால் நானும் கன்பரா பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். சிட்னியில் 4 இடங்களில் இருந்து பேருந்து வெளிக்கிடும். மேலும் சில இடங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் வெளிக்கிடும். காலை 5.30 - 6 மணிக்கு பேருந்துக்கள் வெளிக்கிட்டு 3௪ மணித்தியாலங்களில் கன்பராவில் சென்றடையலாம். சில தமிழ் அமைப்புக்களால் கலந்து கொள்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு சிட்னிக்கு பேருந்தில் திரும்பிவிடலாம்

இத்தாலியில்

http://www.tamilnaatham.com/pdf_files/ital...rimaikkural.pdf

கனடா ரொறோன்ரோ நகரில்

http://www.tamilnaatham.com/pdf_files/ital...rimaikkural.pdf

கனடா ஒட்டாவா நகரில்

http://www.tamilnaatham.com/advert/20060520/OTTAWA/

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் 4 இடங்களில் இருந்து தான் பேருந்துக்கள் வெளிக்கிடவுள்ளதாக இருந்தது. பலர் ஆர்வத்துடன் கலந்துகொள்வதற்காக பெயர்களினைக் கொடுத்துக் கொண்டிருப்பதினால் சில ஊர்களில் அதிக மக்கள் வருவதினால் அவ்வூர்களில் இருந்தும் பேருந்துக்கள் வெளிக்கிடவுள்ளது. பலர் வேலைகளில் லீவு எடுத்துக்கொண்டு, பிள்ளைகளுடனும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வயது போனவர்களும் தங்களின் பெயர்களினைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் திங்கக்கிழமை நடைபெறவுள்ள ஊரிமைக்குரல் வேலை நாள் என்பதினால் குறைந்தளவான மக்கள் தான் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் மக்கள் தாங்களும் கலந்து கொள்வதாகப் பெயர்களினை முன்கூட்டியே பதியத் தொடங்கிவிட்டார்கள். நேற்று இரவிற்குள் பேருந்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணி ஆயிரத்தினைத்தாண்ட மேலதிக பேருந்துக்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சிட்னியில் இது வரை நடந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையினை விட இத்தொகை அதிகம் என்று சொல்லப்படுகிறது. மக்கள் உணர்வுடன் இருப்பதினைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒலிக்கப் போகும் குரல் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பம்படியாக இருக்கவேண்டும். இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஒலிப்பதன் மூலம், தமிழீழத்தின் விடிவிக்காய் உழைப்போம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கன்பராவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது ஒற்றுமையையும் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான கருத்துகளையும் மீண்டும் ஒரு முறை முண்வைத்த இருக்கிறார்கள்..அவுஸ்திரேலய பொலிஸாரே எதிர் பாத்திராத இளவுக்க கூட்டம் கூடியதால்..மேலதிக பொலிஸார் கொண்டு வந்து குவிக்க பட்டதையும் அவதானிக கூடியதாக இருந்தது..

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் படம் எடுக்க முடியுமானால் எடுத்து இணைப்பில் இடுங்கள்! :P :D

  • கருத்துக்கள உறவுகள்

படம் ஏனைய கள உறவுகள் எடுத்து இருப்பாhகள் என்ற நம்பு கின்றேன்..பல வேலைகளில ஈடுபட்டதினால் என்னால் அதை செய்ய முடியவில்லை அனாலும் நான் புழுகுக்காக சொல்ல வில்லை எதிர் பாக்காத அளவு கூட்டம் நிஜமாகவெ தமிழர்கள் மத்தியில் ஒரு உணர்சி ஏற்ப்பட்டு இருக்கின்றது..சிட்னியில் இருந்து மட்டும் அதிகார புூர்வமாக 14 பேருந்துக்கள் நிறைய மக்கள் சென்று இருந்தார்கள் அதை விட பலர் தனியா வாகணங்களை அமர்தியும் தங்கள் சொந்த வாகணங்களிலும் வந்து இருந்தார்கள்..வந்த அத்தனை மக்களுக்கும் கன்பரா வாழ் தமிழ் உள்ளங்கள் உணவு உபசரிப்பில் ஈடுபட்டு இருந்தாhகள்..உண்மையஜல் பல ஆhப்பாட்டங்கள் தமிழர்களால் இதற்க முதல் நட்தபட்டாலும்..இன்று போல் கூட்டம் என்றும் கூடியது இல்லை...குறிப்பாக இளையர்கள்..அதுவும் பல்கழைக்கழக மாணவர்கள் பெரும் எண்ணிகையில் கலந்து கொண்டு இருந்தார்கள்...அங்க வந்த இருந்த அவுஸ்திரேலய பொலிசாரே கூறி இருந்தார்கள் தாங்கள் இப்படி ஓரு கூட்டதை எதிர்பாக்கவே இல்லை என்று...மேலதிக விபரங்களை நமது கந்தப்பு அண்ட் கோ தரும் எண்டு நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

இவ் ஒன்று கூடலுக்கு இன்பத்தமிழ் வானொலியும். அவுச்திரெலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமும

சிகரம் தொலைக்காட்சியில் நேற்று இரவு 9.20க்கு கன்பரா ஊரிமைக்குரல் ஓளிபரப்பு செய்தனர். இதன் தொடர்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு காணத்தவராதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கன்பரா உரிமைக்குரல் தொடர்பான கந்தப்புவின் கருத்துக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு விளம்பரம் பாரியளவில் செய்யவில்லை என்பதை கள உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அவர்கள் தமது வானொலியில் சமூக அறிவித்திலில் ஒரு அறிவித்தலாக மட்டும் வாசித்திருந்தனர்.

இன்பத் தமிழ் ஒலி வானொலி 19.05.06 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்தேச்சியான அறிவித்தல், வேண்டுகோள்கள் மூலம் பெருந்திரளான மக்களை வரச் செய்தது என்பதே உண்மை.

இதனை களத்தில் உறவாடும் நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மூலம் அறிய முயலுங்கள். கந்தப்பு தெரிந்தோ தெரியாமலோ தவறான தகவல்களை தந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பெயரை வைத்து நடத்தும் பலர்களில் கந்தப்பு குறிப்பிடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஒன்று. ஆனால் சோகம் என்னவெனில், இந்த "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு மக்களை உணர்வாக வைத்திருக்கவில்லை. மாறாக அவர்கள் தமது வழமையான நிகழ்ச்சிகளையே செய்திருந்தனர்.

உதாரணத்துக்கு கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இன்பத் தமிழ் ஒலியில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தனர்.

இந்நிகழ்விற்கு "இன்பத் தமிழ் ஒலி" வானொலி, "சிகரம்" தொலைக்காட்சி செய்திருந்த பாரியளவு பங்களிப்பில் ஒரு சதவீதத்தையேனும் செய்யவில்லை என்பதே உண்மை.

பெயருக்கு ஒரு பேரூந்தை ஏரிபிசி என்று போட்டு வந்தனர் அப்படியெனில் அந்த வானொலியால் 50 பேரைத் திரட்ட முடிந்தது என்கிற உண்மையும் இதில் வருகின்றது. (கள உறவுகளே இதனை கருத்திற் கொள்ளுங்கள்)

பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் "உரிமைக்குரல்" நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து நேரடி வர்ணனை செய்தனர். இந்த வர்ணனைக்கு செலவழித்த நேரத்தை வானொலியில் "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு வருமாறு விளம்பரம் செய்திருந்தால் இன்னும் அந்த வானொலி கேட்டுக் கொண்டிருப்பவர்களில் 100? பேராவது வந்திருப்பார்கள் அல்லவா.

இந்நிலை தான் கனடாவிலும் நடந்தது. கனடாவில் சிரிஆர், ஐரிஆர், தமிழ்ச்சோலை, தமிழோசை, கீதவாணி ஆகிய வானொலிகளுடன் ரிவிஐ தொலைக்காட்சி வேண்டுதல்களிலேயே 30,000 மக்கள் திரண்டிருந்தனர்.

ஆனால் இதற்கு உலகின் முதல் 24 மணிநேர வானொலி என்று கூறிக்கொள்ளும் துரோகத்துக்கு துணைபோகின்ற வானொலியான சிரிபிசி (முதியவர்களை ஏமாற்றி பிழைக்கும் வானொலி) தமது பிரச்சாரத்தினால் தான் பெருமளவு மக்கள் திரண்டனர் என்று கூறியுள்ளது.

ஆக, மொத்தத்தில் பிறர் உழைப்பை சுரண்டத்தான் எமது சமுதாயத்தில் உள்ள பலர் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர்.

உலகில் அனைத்து புலம்பெயர்ந்த நாடுகளிலீருந்தும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு எமக்கு பாரிய வெற்றியைத்தந்துள்ளது.

தேசியத்தை வளர்க்க புலத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் தேசியத் தலைவர் கூறியது போன்று "நீ பெரிது நான் பெரிது என்றிராது நாடு பெரிது" என்று பணியாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிர்மலன். எனது வீட்டில் இன்பத்தமிழோசையும், சிகரம் தொலைக்காட்சியும் தான் இருக்கிறது. இரண்டும் தொடர்ச்சியாக விளம்பரம் செய்தார்கள். அவுச்திரெலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் எனது வீட்டில் இல்லை. இவ்வானொலி வைத்திருந்த நேயர்கள் கூறியதினால் தான் நானும் இங்கே எழுதினனான். தவறான செய்தியாக இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை நீங்கள் அறிந்து கூறுவது நல்லது.

மற்றவர்கள் கூறுவதனை வைத்து களத்தில் உள்ள உறவுகளை திசை திருப்பாதீர்கள். நீங்கள் சிட்னியில் இருந்தால் அங்கிருப்பவர்களிடமே கேட்டு உறுதிப்படுத்தி எழுதுங்கள். அப்போது தான் நாம் உங்கள்மீதும், உங்கள் கருத்தின்மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்து வாசிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.