Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பதின்மூன்று பிளஸ்' எவ்வேளையும் 'பதின்மூன்று மைனஸ்' ஆகலாம்! -  பனங்காட்டான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பதின்மூன்று பிளஸ்' எவ்வேளையும் 'பதின்மூன்று மைனஸ்' ஆகலாம்! -  பனங்காட்டான்

[Friday, 2012-10-26 12:30:36]

கடந்த இரண்டு வாரங்களாக முக்கிய பேசுபொருளாக இருப்பது பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டம். ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தின் மூலங்களின் ஒன்றான பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஊசலாடுகின்றது.

மகிந்த ராஜபக்சவினால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட உறுதிகளில் ஒன்று பதின்மூன்றுக்கும் அப்பால் (பதின்மூன்று பிளஸ்).

இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பதின்மூன்றாவது திருத்தம் போதாது. அதற்கும் மேலே சென்று (பதின்மூன்று பிளஸ்) தீர்வு காணப்படும்� என்பது இதன் அர்த்தம்.

இது ஓர் அறுந்த கயிறு (நேர்மையற்ற வாக்குறுதி) என்பது புரியாமல் இதனை மன்மோகன் சிங் நம்பியதால் ஏற்பட்ட வினையே இன்று இதற்கு ஏற்பட்டுள்ள கதி.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னதாக முன்மொழிந்தவர் கோதபாய ராஜபக்ச.

இதனால் பயனேதும் இல்லையெனவும் இதனை நீக்கவே வேண்டும் எனவும் வழிமொழிந்தவர் பசில் ராஜபக்ச.

இருவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினதும், சபாநாயகர் சாமல் ராஜபக்சவினதும் சகோதரர்கள்.

பசில் ராஜபக்ச ஓர் அமைச்சர். ஆனால், கோதபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனப்படும் அரசாங்க சேவையாளர். எனவே நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அமைச்சருக்கோ உள்ள கருத்துரிமை அவருக்குக் கிடையாது.

இந்த வகையில் பதின்மூன்றாவது திருத்தத்தை அழிப்பது தொடர்பான கருத்துக் கூறுவதற்கு கோதபாய உரிமையற்றவர்.

ஆனால், பெரிய கதிரையில் இருப்பவர் அண்ணன் என்ற வகையில் இரத்த பந்தத்தால் கோதபாய எதுவும் பேசலாம், எதுவும் செய்யலாம் என்பது இலங்கையின் எழுதாத அரசியல் சட்டம்.

இதனால் கோதபாய சொன்ன விடயம் முக்கியத்துவம் பெற்றதில் வியப்பேதும் இல்லை.

பசில் ராஜபக்ச இதற்குக் கொடுத்த வியாக்கியானம் மிகவும் சுவையானது.

வடபகுதி மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க பதின்மூன்றாவது திருத்தம் தடையாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்கிறார்.

உணவு சமைக்கவே நெருப்புப் பயன்படுத்த வேண்டும். அந்த நெருப்பு ஊரையே அழிக்கும் அளவிற்கு மாறினால் அதை அணைத்துத்தான் ஆகவேண்டும்� என்பது இவரது உதாரணம்.

வடக்கில் இன்னமும் உருவாக்கப்படாதிருக்கும் மாகாண சபையை கருச்சிதைவு செய்வதற்கான திட்டத்தை வேறுவிதமாக சுற்றி வளைத்துக் கூறுகின்றார் பசில்.

அதுமட்டுமன்றி, பதின்மூன்றுக்குப் பதிலாக பத்தொன்பதாவது அரசியல் திருத்தத்தைக் கொண்டுவரலாமென்றும் இவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீடெரிக்கும் அரசனுக்கு நெருப்புக்கட்டை கொடுக்கும் மந்திரி போன்ற விமல் வீரவன்ச ஓர் அடி எட்டி வைத்து, பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவதற்குத் தேவையானால் மக்கள் கருத்துக் கணக்கெடுப்பு ழீசுநகநசநனெரஅ) நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணக்கெடுப்பை நடத்தி, வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைப்பதற்கு எதிர்த்தவர்கள், பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவதற்கு கருத்துக் கணக்கெடுப்பு நடத்தக் கேட்பது விநோதமானது.

இப்படியான விடயங்களுக்காகவே காத்திருக்கும் ஜாதிக ஹெல உறுமய பதின்மூன்றாவது திருத்த நீக்கத்துக்கு தனது பரிபூரண ஆதரவை வழங்கியுள்ளதுடன், அதனை விரைந்து நிறைவேற்றுமாறும் கேட்டுள்ளது.

மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 21 அரசியல் கட்சிகளில், சமசமாஜ � நவசமசமாஜ � கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன. அரசாங்க கட்சிகளின் எண்ணிக்கையில் இவர்கள் மூவரும் சிறுபான்மையினர்.

பதின்மூன்றாவது அரசியல் திருத்தத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை என்று கூறிவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதனை நீக்குவதற்கு எதிராகக் குரல்கொடுத்தது காலத்தேவையை ஒட்டியது.

1987ஆம் ஆண்டு பதின்மூன்றாவது திருத்தத்திற்கு ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தில் இணக்கம் கண்ட ஐ.தே.க. இதனை நீக்குவதற்கு எதிர்ப்பது புதினமல்ல.

இப்படியாக இந்த விடயம் சூடெறிக்கொண்டிருக்கையில் திடீரென கோதபாய ராஜபக்சவை இந்தியா அழைத்துள்ளது.

இவரது பதின்மூன்றாவது திருத்த ஆலோசனை தொடர்பாக இந்திய அரசு கடுப்பாக இருக்கிறது என்பது அந்நாட்டின் முன்னணி ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவ்விடயம் தொடர்பாக மன்மோகன் சிங் அவசர கடிதமொன்றை அனுப்பியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் கடித விபரங்கள் தெரியவரவில்லை.

இப்படியாக கருத்துகளும் அறிக்கைகளும் மோதிக்கொண்ட வேளைகளிலும், ஜனாதிபதி தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வரவில்லை. அதற்காக அவருக்குத் தெரியாமல் இவ்விடயங்கள் நடைபெறுவதாக எவரும் கருதக்கூடாது. எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுப்பவரே அவர்தான்.

இதற்கு உதாரணமாக இலங்கையின் �டெய்லி மிறர்� பத்திரிகை ஆசிரியர் தொடர்பாக அண்மையில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் சிறு பகுதியைப் பார்க்கலாம்.

டெய்லி மிறரில் வெளியான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு செய்தி தொடர்பாக அதன் ஆசிரியரை அழைத்த கோதபாய ராஜபக்ச அவரை எச்சரித்து அனுப்பினார். இச்செய்தி பரவலாக வெளியே வரத் தொடங்கியதும் அந்தப் பத்திரிகை ஆசிரியரை அலரி மாளிகைக்கு அழைத்த மகிந்த ராஜபக்ச �ஒன்றுக்கும் பயப்படவேண்டாம், எந்தப் பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்� என்று தெம்பூட்டி அனுப்பினார். இது அண்ணனும் தம்பியும் இணைந்து நடத்தும் ஒருவகை நாடகம் என்று அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவது தொடர்பான கருத்துப் பரிமாறல்களும் இப்படியானதுதான்!

ஆனால் இவ்வளவு விரைவாக - அதுவும் நவம்பர் முதல் நாள் ஜெனிவாவில் பூகோள மீளாய்வு பரிசீலணைக் கூட்டத்தில் இலங்கை பற்றி விவாதிக்க இருக்கும் வேளையில், இது பூதாகரமாக மாறும் என ராஜபக்ச சகோதரர்கள் நினைக்கவில்லை.

மேற்படி மீளாய்வுக்கான மூன்று நாடுகளின் குழுவுக்கு இந்தியாவே தலைமை தாங்குகின்ற சமயத்தில், அதற்கே சவாலாக அமையும் பதின்மூன்றாவது திருத்த நீக்கத்தை முன்மொழிந்தது பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என இவர்கள் எதிர்பார்க்கவில்லை.

இதனால் உடனடியாக ஒரு குத்துக்கரணம் அடிக்க நேர்ந்தது. �பதின்மூன்றாவது திருத்தத்தை அகற்றுவது அரசின் உத்தியோகபூர்வமான கொள்கை அல்ல� என்று ஊடகங்கள் வாயிலாக தமது திருத்தக் கருத்தை வெளிப்படுத்திவிட்டு கோதபாய இந்தியா சென்றுள்ளார்.

இது போதாதென்று ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வல தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

�பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மிக முக்கியமானது. பதின்மூன்று பிளஸ் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென்று மன்மோகன் சிங்கிடம் மகிந்த ராஜபக்ச நேரடியாக உறுதியளித்துள்ளார். பதின்மூன்று பிளஸ் என்பது செனட் சபையை உருவாக்கி அதன் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டுவது� என்று அமைச்சர் ரம்புக்வல விளக்கமளித்தார்.

அப்படியானால், அதனை நீக்குவதுபற்றி ஏன் கூறினார்கள் என்று சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப, மக்கள் பிரதிநிதிகளுக்கு கருத்துரிமை உண்டு� என்று வெட்டிப் பதிலளித்தார் அமைச்சர்.

உயிரபாயம் கருதியோ என்னவோ கோதபாய ராஜபக்ச மக்கள் பிரதிநிதியா? என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை.

இப்படித்தான் ராஜபக்ச சகோதரர்கள் அந்தக் குட்டித் தீவை சீரழிக்கின்றார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரம்புக்வல தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் அரசாங்க ஊடகமான டெய்லி நியூஸ் ழீஊநலடழn னுயடைல நேறள) இட்ட தலைப்பையும் முக்கியமான ஒரு பந்தியையும் இங்கு கவனிப்பது அவசியம்.

செய்தியின் தலைப்பு: ழே னுநஉளைழைn வழ யbழடiளா 13வா யஅநனெஅநவெ (பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவதாக எந்த முடிவும் இல்லை)

குறித்த செய்திப் பந்தி இதுதான்: ஜூஐவ உயn bந உர்யபெநன யவ யலெவiஅநஇ bரவ உரசசநவெடல றந ர்யஎந ழெவ வயமநn யலெ னநஉளைழைn வழ யbழடiளா வாந 13வா யஅநனெஅநவெஜி. (எந்த வேளையிலும் இது மாற்றப்படலாம். ஆனால் இப்போது பதின்மூன்றாவது திருத்தத்தை ஒழிப்பது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை� என்பதே இதன் தமிழாக்கம்.

கெஹலிய ரம்புக்வல என்ன சொல்ல முனைகிறார்?

கோதபாய � பசில் சகோதரர்கள் சொல்வதுபோல பதின்மூன்றாவது திருத்தம் என்றோ ஒருநாள் இல்லாமற் போகும். ஆனால் இப்போது இந்தியாவைப் பகைக்க முடியாமல் இருப்பதால் இதனைச் செய்ய முடியவில்லை என்பதே அவர் சொல்லாமல் சொல்வது.

ஆக, மன்மோகனுக்கு மகிந்த கூறிய பதின்மூன்று பிளஸ் என்பது ஒரு பம்மாத்து.

இது, சந்தர்ப்பம் வரும்போது பதின்மூன்று மைனஸ் (பதின்மூன்று இல்லாமற்போவது) ஆவது நிச்சயம்.

கனடா உலகத் தமிழர் (26-10-12)

http://seithy.com/listArticle.php?newsID=69044&category=Article&language=tamil

ரம்புகவெல தான் கூட 13ம் திருத்தம் போகவேண்டும் என்றவர். மார்ச் 2013 க்கு பின் அங்கு என்ன நடந்தாலும் இது போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, மன்மோகனுக்கு மகிந்த கூறிய பதின்மூன்று பிளஸ்.

splendor_plus1.jpg

13 இல்லை அங்கிட்டு (ஒண்ணுக்கே) ஒண்னுக்கடிக்கவவே உரிமைய காணோம் .. அதற்குள்ள 13+

இதென்ன ஸ்பெலண்டர் + பிளஸ் விளம்பரம் மாறி கிடக்கு.. எதாவது எக்ஸ்ரா பிஎச்பி எனர்சிய ஏத்தி போட்டார்களோ..?

டிஸ்கி:

அவன் சுதந்திரமாக ஒண்ணுக்கடிக்கிற உரிமைதான் கொடுப்பான்.. அதை ஜப்பானுக்கான ரோபோ ரோல் மாடல் (சிங்கு) எல்லா உரிமையும் வாங்கி கொடுத்துட்டம் என்று த்முக்கடிப்பான்.. நடுவில் நீங்கதான் குச்சி மிட்டாய் சப்பிட்டு நிற்கணும்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
1984754210117444261Oct-26-L.jpg
  • கருத்துக்கள உறவுகள்

921106.gif

பதின்மூன்று கெட்ட நம்பர், பதினைஞ்சை..... தாங்கோவன். வாயிலை... வருது, தூ.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.