Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களுள் ஒருவர் புனர்வாழ்வின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவ்வகையிலேயே இக்கடத்தல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஏற்கனவே அரசு கூறிவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட போராளிகளினில் பலர் வன்னியிலும் அதே போன்று யாழ்.குடாநாட்டிலும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த போதிலும் அவர்கள் பற்றி பின்னர் தகவல்கள் ஏதுமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்கள் பற்றி தகவல்களை வழங்க படைத்தரப்பு தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப புலிகளது சொத்துக்களை பேணிவருபவர்களே இலக்கு வைக்கப்படுவதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85126/language/ta-IN/article.aspx

[size=4]இவ்வாறான சூழ்நிலையில் புலம்பெயர் அமைப்புக்களால், தனிப்பட்டவர்களால் உதவுவது என்பது சவால் நிறைந்த ஆனால் நிச்சயம் செய்யவேண்டிய ஒன்றாக எம் முன்னா[/size]ல்உள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வழி சர்வதேசத்திடம் கொண்டு செல்வது தான்

Edited by நியானி

ஒரே வழி சர்வதேசத்திடம் கொண்டு செல்வது தான்

அவ்வாறு சர்வதேசத்திடம் கொண்டு செல்பவர்களை தானே திரி திரியாக நக்கலடித்தீர்கள். ஐநாவுக்கு மனு அனுப்புகிறார்கள். அனுப்பி என்ன செய்வது? அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதைவிட இலங்கையில் போய் இருக்கலாம். நாடு நல்லா இருக்குது என்றெல்லாம் சொன்னீர்கள்.

இப்பொழுது நீங்கள் சர்வதேசம் பற்றி சொல்கிறீர்களா? :o நம்ப முடியவில்லை... வில்லை... வில்லை... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.