Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஒழியுமா இல்லையா? ஜனாதிபதியிடம் கேட்கிறார் சுமந்திரன் எம்.பி.

Featured Replies

[size=2]

[size=4]"மாகாணசபை முறைமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படுமா இல்லையா? என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்'' என்று நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.[/size][/size]

[size=2]

[size=4]"கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர், சர்வதேச மனித உரிமைகள் பேரவை என்பவற்றுக்கும் இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் சுயமாகவே அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் இருந்து இந்த அரசு விலகிச் செல்கின்றது'' என அவர் குற்றஞ்சுமத்தினார்.[/size][/size]

[size=2]

[size=4]வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size][/size]

[size=2]

[size=4]ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரை நாட்டின் பொருளாதாரம் தொடர்பானதாக இருந்ததை விட அரசியல் விமர்சனமாகவே இருந்தது. சந்தேகம்அரசியல் தீர்வு தொடர்பாக, மாகாணசபை முறைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். [/size][/size]

[size=2]

[size=4]ஜனாதிபதியின் கூற்று மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதையே அது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையை இங்கு தொட்டுக் காட்டுகிறேன்.[/size][/size][size=2]

[size=4]சொன்னவைகள்[/size][/size]

[size=2]

[size=4]"13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு கூடுதலான அக்கறையுடன் செயல்படும். அதிகாரப் பகிர்வின் மூலம் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்படும்'' என்று அந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]2009 மார்ச் மாதம் சர்வதேச மனித உரிமைகள் சபையில் பேசிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, ""தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் நாடு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டின் மூலம் நிரந்தரமான தீர்வு அவசியம்'' என்றார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுக் கலைந்தது.[/size][/size]

[size=2]

[size=4]ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் என்ன கூறினார்? தமிழ்க் கட்சிகளுடன் துரிதமான பேச்சுக்களை நடத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் மேலாக அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் என்றார். [/size][/size]

[size=2]

[size=4]இத்தோடு நின்றுவிடவில்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில் பெப்ரவரி மாதம் இங்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் 13 ஆவது திருத்தச் சட்டம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார். வாக்குறுதிகள் காற்றில் கடந்த மூன்று வருடங்களாக வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் முற்றாக மீறப்பட்டுள்ளன. [/size][/size]

[size=2]

[size=4]ஒருசிறு பகுதி கூட நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசு தமிழர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றியே வந்துள்ளமை இப்பொழுது உறுதியாக்கப்பட்டுவிட்டது.[/size][/size][size=2]

[size=4]நேற்று இந்தச் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி எமது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க நாம் வெளியே செல்லவேண்டிய அவசியம் இல்லை. வெளித் தலையீடுகளும் தேவை இல்லை. எமது பிரச்சினைகளை நாமே சுயமரியாதையுடன் தீர்க்க முடியும் என்றார்.[/size][/size]

[size=2]

[size=4]அப்படியானால் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதிலும், இதுவரை அளித்த உறுதி மொழிகளிலும் இருந்து அவர் விலகிச் செல்வதாகவே தெரிகின்றது. சர்வதேசத்தை மதியுங்கள் நாம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இருக்கின்றோம். எல்லா நாடுகளின் நட்புறவும் அவசியம்.[/size][/size]

[size=2]

[size=4]எமக்குத் தேவைப்படும் போது இந்தியாவைப் போற்றுவதும், தேவையில்லை என்றால் தூற்றுவதும் தவறு. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சர்வதேசதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசே தீர்க்க நேரிடும் என்றார்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=212441598910480187

  • கருத்துக்கள உறவுகள்

ஒழியும் என்று கூறினால் சுமந்திரன் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத்தையரா? செய்து விட்டு தமிழ் மக்களுக்காக போராடவும் தயாரா? என்று தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் .

  • தொடங்கியவர்

2009 மார்ச் மாதம் சர்வதேச மனித உரிமைகள் சபையில் பேசிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, ""தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் நாடு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டின் மூலம் நிரந்தரமான தீர்வு அவசியம்'' என்றார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுக் கலைந்தது.

[size=4]ஒன்றில் நாட்டு இன [/size] [size=4]பிரச்சனையை தீர்க்கவேண்டும் இல்லை இனங்களை இல்லாமல் செய்யவேண்டும் :icon_idea:[/size]

காலங்கடத்த பயன்படும் இந்த திருத்த சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணடிக்க தேவையில்லை.

13ம் திருத்தம் எங்களுக்கு தேவை இல்லை. ஆனால் இடம் கொடுக்காமல் கட்டிபிடித்து உருண்டால்த்தான் சில விடயங்கள் வெளிவரும்.

1. சுப்பீரிம் கோட்டுக்கு தனிப்பட்டவர் போட்ட வழக்கால் வடக்கு-கிழக்கு 3 மில்லியன் மக்களுக்கு தேவையான இணைப்பு உடைக்கப்பட்டது.

2.சகல நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி அதை செல்லாக்காசாக்குகிறார்.

3. தேர்தல் நடத்தி மக்களின் கைகளில் 13ம் திருத்த அதிகாரங்களைகொடுக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. அதாவது சட்டம் அமுலாவது, மத்திய அரசுக்கு அதில் என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதில் இருக்கிறது.

4. தேர்தல் நடத்தினால் மாகண அரசு அமைக்க வேண்டும் என்று நிபந்தனை இல்லை.

5. பயங்கரவத சட்டங்கள் போன்றவற்றால் மாகண பொலில் பாதுகாப்பின் பலன் பூச்சியமாக்கப்படலாம்.

6.அவசரகாலம் என்று மாகண ஆட்சி தடுக்கப்படலாம்.

7.திவி நிகும போல சட்டங்கள் இயற்றி மாகாண அதிகாரத்தை திருடலாம்.

8.சுப்பீரிம் கோட்டை நிர்ப்பந்திதித்து 13ம் திருத்தத்திற்கு பிழையான வியாக்கியானம் கொடுத்து சட்டதினை மக்களுக்கு எதிராக ப்யன் படுத்தலாம்.

9.2/3 பெரும்பாண்மையை வைத்து முழுவதாகவே தூக்கி எறிந்து விடலாம்.

நமது அனுபவத்தில் கண்டவை இவை. திறமையான சட்டத்துறையினர் அதில் இருக்க கூடிய மேலும் பல பிழைகளை தெரிந்து வைத்திருக்கலாம்.

எங்களுக்கு மாநிலங்கள் தன்னிச்சை படி இயங்க வேண்டும் போல உணர்வு இருப்பத்தில்லை. நியூயோர்க்கில் நாம் பார்ப்பது cityயையும் federalலையும் மட்டும்தான். இந்த மனநிலையில் இலங்கைத்தூதவராக ஒருவர் போனால் அவருக்கு தானாக ஏன் 13ம் திருத்தம் கூடாது எனபது விளங்க சந்தர்ப்பம் குறைவு. இந்த இயல்பை நாம் பிளேக்கில் நிறைய பார்த்தோம். எனவே 13ம் திருத்ததை வேண்டாம் என்று கூறும் போது அதில் என்ன பிழையை நாம் காண்கிறோம் என்பதை சர்வதேசத்தவர்களுக்கு விளங்க வைக்க வேண்டியது எமது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைகளுக்கு ஆப்புவைக்க வருகிறது 19வது திருத்தம்

[ ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012, 01:01 GMT ]

basil_rajapaksa.jpg

தற்போதுள்ள மாகாணசபைகளுக்குப் பதிலாக, தமிழர்களின் குறைகளை நீக்கும் வகையில் புதிய அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை கொண்டு வரவுள்ளதாக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“இந்தத் திருத்த வரைபு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சேரவில்லை.

அதற்கு காலஅவகாசம் கொடுப்போம். அவர்கள் இணைந்து கொள்ளாது போனால், நாம் முன்னே செல்ல வேண்டியிருக்கும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, தற்போதுள்ள 13வது திருத்தத்துக்கு பதிலீடாக 19வது திருத்த முன்மொழிவு அமையும்.

ஏற்கனவே சிறிலங்காவின் இரண்டு அமைச்சர்கள் 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற பரப்புரைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை, வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மக்களுக்கு அர்த்தமுள்ள கூடுதலான அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு மாகாணசபை முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், பசில் ராஜபக்சவும் 19வது திருத்தத்தை கொண்டு வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20121111107272

மனோகனேசன் சிலவற்றை எதிர்வு கூறியிருர்ந்தாரகள். அவை முதல் பார்வைக்கு உண்மயாக மாறலாம் போல்த்தான் பட்டது. எனவே 19ம் திருத்தம் ,13ம் திருத்ததை அழிக்காமல், மாகாண எல்லைகளை மீள் வரைவத்தாக அமையலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.