Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாயின் கதை

Featured Replies

[size=4]

Hachiko.JPG[/size]

[size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size]

[size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் செல்வார். ஹசிகோவும் கூடவே செல்லும். [/size]

[size=4]ரயிலில் ஏறி, ஹசிகோவுக்கு ‘டாட்டா’ சொல்லி விடைகொடுப்பார் யூனோ. திரும்பவும் மாலை ஆறுமணி ரயிலில் வருவார். தனது எஜமானரின் வருகைக்காக ஐந்தரை மணி வாக்கிலிருந்தே ரயில்நிலையத்தில் தேவுடு காப்பது ஹசிகோவின் வழக்கம். இருவரும் ஒன்றாக விளையாடிக்கொண்டேவீட்டுக்குத் திரும்புவார்கள்.[/size]

[size=4]இந்த மகிழ்ச்சி ஓராண்டுக்குதான் நீடித்தது. மே 21, 1925 அன்று மாலை ஷிபுயா ரயில் நிலையத்தில் தன் எஜமானரின் வருகைக்காக ஹசிகோ காத்திருந்தது. ஆறு மணி ரயிலில் அவர் வரவில்லை என்றதும் பரபரப்பு அடைந்து, ரயில் நிலையம் முழுக்க தேடியது. எங்குமே காணவில்லை. அடுத்த ரயிலுக்காக காத்திருந்தது. அடுத்த ரயிலிலும் டாக்டர் யூனோ வரவேயில்லை. துரதிருஷ்டவசமாக அன்று மதியமே அவர் இதய அதிர்ச்சியால் காலமாகி விட்டார்.[/size]

[size=4]பொதுவாக அகிடா வகை நாய்கள் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமானவை. புதிய எஜமானர்களிடம் கூட எளிதாக ஒட்டிக்கொள்ளும். எனவே யூனோவின் உறவினர்கள் ஹசிகோவை தங்களுடன் அழைத்துச் சென்று வளர்க்க விரும்பினார்கள். ஆனால் அவர்களொடு செல்ல ஹசிகோ மறுத்துவிட்டது. [/size]

[size=4]தன் எஜமானர் வாழ்ந்த ஷிபுயாவை விட்டு வேறெங்கும் செல்ல அதற்கு விருப்பமில்லை. டாக்டர் இறந்துவிட்டார் என்பதை அந்த விசுவாசமிக்க பிராணியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.[/size]

[size=4]

shibuya+railway+station.JPG[/size]

[size=4]வழக்கம்போல தினமும் மாலை ஷிபுயா ரயில் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய எஜமானர் வருவார் என்று தவமிருக்கத் தொடங்கியது ஹசிகோ. ஆறு மணி ரயிலில் யூனோ வரவில்லை என்றதுமே ஏமாற்றமாக எங்கோ சென்றுவிடும். ஆனால் மறுநாள் நம்பிக்கையோடு சரியான நேரத்துக்கு வந்துவிடும். இப்போது ஹசிகோவுக்கு வீடில்லை, எஜமானர் இல்லை. தெருவில் கிடைப்பதை உண்டு, உயிர் வாழ்ந்துக் கொண்டிருந்தது.[/size]

[size=4]தினமும் ரயில் நிலையத்துக்கு வருபவர்கள் ஹசிகோவை கவனிக்கத் தொடங்கினார்கள். தன் எஜமானர் மீது அது வைத்திருந்த விசுவாசத்தை மெச்சினார்கள். அதற்கு உணவளிக்கத் தொடங்கினார்கள். அவர்களோடும் ஹசிகோ நட்பாக பழகியதே தவிர, எடுத்து வளர்க்க விரும்பிய யார் வீட்டுக்கும் செல்ல மறுத்தது. உள்ளூர் செய்தித்தாள் ஒன்று ஹசிகோவை குறித்த விலாவரியாக படத்தோடு செய்தி வெளியிட்டது. ஜப்பானில் ஹசிகோ பிரபலம் ஆனது. ஷிபுயா ரயில் நிலையத்தின் வாடிக்கையான பயணிகளும், அதிகாரிகளுமாக இணைந்து ஹசிகோவுக்கு ஒரு சிலையே அமைத்தார்கள்.[/size]

[size=4]

hachiko+statue.jpg[/size]

[size=4]வருடங்கள் கூட கூட ஹசிகோவுக்கும் வயதானது. பார்வை மங்கியது. நோய்வாய்ப்பட்டது. ஹசிகோவின் நண்பர்கள் மருத்துவர் உதவியோடு சிகிச்சை அளித்தார்கள். கடைசியாக 1935, மார்ச் 8 அன்று ஹசிகோவின் உயிர் பிரிந்தது. தன் எஜமானர் இறந்தபிறகு பத்தாண்டு காலம் உயிர்வாழ்ந்த இந்த விசுவாசமான நாய், ஒரு நாள் கூட ஆறு மணி ரயிலுக்காக காத்திருக்கத் தவறியதில்லை. அதனுடைய எஜமானரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஹசிகோவும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.[/size]

[size=4]ஷிபுயா நகர மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நாயின் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. மரணத்துக்குப் பிறகாவது அது சொர்க்கத்தில் தன் எஜமானரை சந்தித்திருக்கும் என்று சிலர் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். இன்றும் கூட ஹசிகோவின் நினைவுநாள் அன்று ஷிபுயா ரயில் நிலையத்தில், சிலைக்கு முன்பாக கூடி நகரமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.[/size]

[size=4]

hachiko+dead.jpg[/size]

[size=4]ஹசிகோவின் கதை 1987ல் ஜப்பானிய மொழியில் படமாக்கப்பட்டு பெரும் வெற்றி கண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹசி : ஒரு நாயின் கதை’ என்கிற பெயரில் ஹாலிவுட்டிலும் படமாக்கப்பட்டது. ஹசிகோவின் கதை காமிக்ஸாகவும், புத்தகங்களாகவும் ஆனது. வீடியோ கேமாக கூட ஹசிகோ இன்று குழந்தைகளால் விளையாடப்படுகிறது.[/size]

[size=4]வரலாறு விசுவாசத்தை மட்டும் மறப்பதேயில்லை.[/size]

http://www.luckylookonline.com/2012/11/blog-post_10.html

  • தொடங்கியவர்

[size=5]Hachiko: A Dog's Story is a 2009 American drama film based on a true story from Japan about the faithful dog Hachiko who waited for nine years for his master to fetch him at the train station (hachiko's waiting place when his master arrive from work). His faithfulness to his master's memory impressed the people of Japan as a spirit of family loyalty all should strive to achieve.[/size]

[size=3][size=5]A well-known Japanese artist rendered a sculpture of the dog, and throughout the country a new awareness of the Akita breed grew.

Hachiko's legendary faithfulness became a national symbol of loyalty.[/size][/size]

http://www.youtube.com/watch?v=rUNQjYe870A

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் ஈழப்போரில் வீட்டினை விட்டு இடம் பெயர்ந்தபின்பு, சில மாதங்களின் பின்பாக இந்திய இராணுவ காலத்தின் பின்பு மீண்டும் சொந்த இடத்துக்கு திரும்பிய போது பல நாட்கள் எங்களைக் காணாமல் தவிர்த்த நன்றியுள்ள நாய் எங்களின் வாகன சத்தத்தினைக் கேட்டு ஓடி வந்தது ஞாபகத்துக்கு வருகிறது.

இந்திய இராணுவங்கள் எங்கள் ஊருக்கு வரும் போது உரக்கக் குறைத்து இராணுவப்பிசாசுகள் வருகிறார்கள் என்று பலருக்கு உதவி செய்தவையும் நாய்கள்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.