Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சுக்கான சிறிலங்கா தூதர் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை - பேரா.பீற்றர் சல்க்

Featured Replies

[size=4]பிரான்சுக்கான சிறிலங்கா தூதர் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை - பேரா.பீற்றர் சல்க்[/size] [size=4][ திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 09:42 GMT ] [ நித்தியபாரதி ][/size]

[size=4]Prof.%20Peter%20Schalk.jpgபுலிகள் அமைப்புத் தொடர்பில் தயான் ஜெயதிலக கொண்டுள்ள வெறுப்பான கருத்துக்களே பாரிசில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இவரது தூதரகத்துக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக உள்ளது.

இவ்வாறு சுவீடன் நாட்டிலுள்ள உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் சல்க் [Prof. Peter Schalk] சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆய்வுக்கழகம் [Centre National de la Recherche Scientifique - CNRS] என்கின்ற நிறுவனத்தால் நவம்பர் 07,2012 அன்று பாரிசில் நடாத்தப்பட்ட கருத்தமர்வு ஒன்றில் நான் கலந்துகொண்டிருந்தேன். 'சிறிலங்கா மற்றும் தென்னாசியா: பிராந்தியக் கோட்பாட்டுக்கான புதிய சவால்கள்' என்பதே இக்கருத்தமர்வின் பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது.

இக்கருத்தமர்வின் மூலம் புதிய, மிக ஆழமான பூகோள அரசியல் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என நான் எதிர்பார்த்திருந்தேன். இது ஒரு மறக்க முடியாத கருத்தமர்வாக உள்ளது.

சிறிலங்காவின் பிரான்சுக்கான தூதர் என்ற வகையில் இக்கருத்தமர்வில் தயான் ஜெயதிலக பிரதான உரையாற்றியிருந்தார். எழுத்தில் எழுதியவாறு தான் கொண்டு வந்த உரையை தயான் ஜெயதிலாக வழங்கியிருந்தார். இவர் சமூக விஞ்ஞானி என்ற வகையில் இக்கருத்தமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை. மாறாக பிரான்சில் பணியாற்றும் சிறிலங்காத் தூதுவர் என்ற வகையிலேயே இதில் நடந்துகொண்டிருந்தார். இக்கருத்தமர்வில் கலந்து கொண்டிருந்த பலர் இவரது உரையை வெளிப்படையாக வரவேற்றிருந்தனர்.

ஸ்கண்டிநேவியா, பிரித்தானியா அல்லது ஜேர்மன் போன்ற நாடுகளிலுள்ள கல்விசார் நிறுவனம் ஒன்று இவ்வாறான கருத்தமர்வு ஒன்றிற்கு நீண்ட கால யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான நாடொன்றின் ஒரு தரப்பு பிரதிநிதிக்கு மட்டும் அழைப்பு விடுத்தததை 42 ஆண்டுகால எனது கல்வித்துறைச் சேவையில் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

சிறிலங்காத் தூதரால் வழங்கப்பட்ட உரையை மறுதலித்து கருத்துக்களை வழங்குவதற்கு CNRS எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு மேலும் குழப்பத்தை உண்டுபண்ணியது. சிறிலங்காத் தூதரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு எவ்வித எதிர்க் கருத்துக்களையும் இக்கருத்தமர்வின் தலைவர் கூறாது அமைதி காத்ததானது தூதரின் கருத்துக்களை தனது நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

இக்கருத்தமர்வானது சிறிலங்கா அரசாங்கத்தின் மூலோபாயக் கோட்பாட்டை பரப்புரை செய்வதற்கான ஒரு களமாக பயன்படுத்தப்பட்டது எனக் கூறலாம். அதாவது வழமைபோல சிறிலங்காத் தூதர் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தனது உரையில் விளக்கினார். விடுதலைப் புலிகள் தம்முடன் சமரசத்தை மேற்கொள்வதில் விரும்பாததால் யுத்தம் தீவிரம் பெற்று மே 2009ல் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டதாக தயான் ஜெயதிலக தனது உரையில் நியாயப்படுத்தியிருந்தார்.

தமிழ் பேசும் மக்கள் ஏன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குகின்றனர் என்ற விடயத்தை ஆராய்வதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தையும் சிறிலங்காத் தூLதர் தனது உரையை வழங்குவதற்காக எடுத்துக் கொண்டார். வழமை போல் தனது உரையில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை ஜேர்மனின் நாசிக்கள் தோற்கடிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு தூதர் கருத்துரை வழங்கியிருந்தார்.

தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உத்திகள் காரணமாகவே புலிகள் அமைப்புக்கான தமிழ் பேசும் மக்களின் ஆதரவுகள் குறைந்ததாக தூதர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ்ப் பொதுமக்கள் புலிகள் அமைப்புக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களின் துயரம் தோய்ந்த வரலாற்றின் விளைவாக உருவாகியது என்பதற்கான சாதகமான கருத்துக்கள் எவையும் இக்கருத்தமர்வில் எடுத்துக் கூறப்படவில்லை. தமிழ் மக்கள் தாம் அனுபவித்த துயர வரலாற்றின் பெறுபேறாகவே 1976ல் தமிழீழம் என்கின்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என பிரகடனம் செய்திருந்தனர்.

புலிகள் அமைப்புத் தொடர்பில் தயான் ஜெயதிலக கொண்டுள்ள வெறுப்பான கருத்துக்களே பாரிசில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இவரது தூதரகத்துக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக உள்ளது.

புலிகள் அமைப்புக்கு தற்போதும் ஆதரவை வழங்கும் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் 70 மில்லியன் வரையான மக்கள் தொடர்பில் சிங்களவர்கள் அச்சம் கொண்டுள்ளதாக சிறிலங்காத் தூதரான தயான் ஜெயதிலகவின் உரையிலிருந்து அறியமுடிந்தது. இவர் தனது உரையில் இந்தியா தொடர்பான சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சில தடவைகள் சுட்டிக்காட்ட முயன்றபோதும் சீனாவை மட்டுமே அதிகம் குறிப்பிட்டிருந்தார்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் புலிகள் தடையாக இருந்ததாகவும் தற்போது புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்குள் 'கலந்துரையாடல்கள்' மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்காத் தூதர் தனது கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காத் தீவு தொடர்பாக 1970களிலிருந்து இன்று வரை அவதானித்து வருபவன் என்ற வகையில், தயான் ஜெயதிலகவின் இவ்வாறான பல மட்டரகமான நடவடிக்கைகளை அறிந்துள்ளேன். இவ்வாறான ஒருவர் 18வது திருத்தச் சட்டம் நல்லதல்ல எனக் கூறுவதைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்துள்ளேன்.

இக்கருத்தமர்வின் போது தமிழ் மக்கள் பட்ட இன்னல்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அகப்பட்டு, பின்னர் மெனிக் பாம் முகாமில் தங்கவைக்கப்பட்ட 300,000 வரையான தமிழ் மக்கள் தொடர்பாகவோ அல்லது அவர்கள் பட்ட வேறு இன்னல்கள் தொடர்பாகவே இக்கருத்தமர்வில் கருத்துரைக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி பல்வேறு புத்தகங்கள் ஆங்கிலத்திலும் ஜேர்மன் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக 'நான் அறியவில்லை' என எவரும் கூறிவிடமுடியாது.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் (1956-2008) எனப் பெயரிடப்பட்ட ஆங்கில மொழி மூல நூல் ஒன்று 2009ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே நூல் Damit wir nicht vergessen என்கின்ற பெயருடன் ஜேர்மனிய மொழியில் எழுதப்பட்டு 2012ல் கெய்டில்பேர்க்கில் வெளியிடப்பட்டது. இதன் பிரெஞ்சு மொழி வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதன் தமிழ் மொழி மூல நூலையும் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறிலங்கா அரசாங்கங்கள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்ட ரீதியிலேயே தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டன என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில் 'ஒற்றையாட்சியின் கீழ் சுயாட்சி வழங்குதல்' என்பதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கம் செயற்படுவதாக, தனது கருத்துரையின் நிறைவில் தயான் ஜெயதிலக குறிப்பிட்டிருந்தார்.

உண்மையான சமூக விஞ்ஞானி ஒருவர் இவ்வாறான கருத்தை ஒருபோதும் கூறமாட்டார். ஒற்றையாட்சி கட்டமைப்பானது சுயாட்சியை உள்ளடக்கியதாக இருக்காது. சுயாட்சியைக் கோரும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் செவிமடுப்பதையே தயான் ஜெயதிலகவின் உரையானது சுட்டிநிற்கிறது. இது அரசியல் ரீதியாக மக்களைக் கவர்வதற்காக கூறப்பட்டதாகும்.

இக்கருத்தமர்வானது எந்தவொரு அறிவியல் சார் கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தயான் ஜெயதிலக கடந்த கால வரலாற்றிலிருந்து எந்தவொரு பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்பதை இக்கருத்தமர்வு சுட்டிநிற்கிறது.

Peter Schalk is a professor (emeritus) of Uppsala University, Sweden.[/size]

http://www.puthinappalakai.com/view.php?20121119107309

தயான் ஜெயதிலக மட்டுமல்ல சிங்கள அரசியல் வாதிகள் அனைவருமே வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை என்பதே உண்மை.

தயான் ஜெயதிலக மட்டுமல்ல சிங்கள அரசியல் வாதிகள் அனைவருமே வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை என்பதே உண்மை.

[size=1]

[size=4]இவர் தமிழர்களுக்கு உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்படல் வேண்டும் என அண்மைக்காலம் வரையில் கூறியவர். [/size][/size]

[size=1]

[size=4]பின்னர் மகிந்தர் நாட்டிற்கு கூப்பிட்டு ஆளை வெருட்டி அனுப்பியதுடன் ஐவரும் இனவாதத்தை கக்கும் பாம்பாகி விட்டார். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

"தயான் ஜெயதிலக மட்டுமல்ல சிங்கள அரசியல் வாதிகள் அனைவருமே வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை என்பதே உண்மை"

ஏன் நாங்ககூடதான் வரலாறு தரும் பாடங்களை கற்கவில்லை என்பது எனது அபிப்பிராயம் !!

[size=5]“I am aware that Constitutions create fictions about regional autonomy within unitary states, but Tibet is a good example of the tension between theory and practice, much like it is the case in Lanka,” Schalk said, responding to Dayan’s reply that appeared in Lankaweb on Sunday.

Earlier in November, the SL ambassador was entertained by France’s Centre National de la Recherche Scientifique (CNRS), to come out with the ‘autonomy’ model while preserving the unitary character of the Sri Lankan state.

Arguing that autonomy and unitary are fundamentally paradoxical, Schalk had said on Thursday that a social scientist would not have uttered such a thing.

The structural genocide practised by the unitary state in the island for decades is not an occasional aberration or some nuts, he had said.[/size]

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35768

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.