Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடனான உறவுகள் தொடர்ந்து பேணப்படும் - EU

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறைகளுக்கு முடிவு கட்டி, சமாதான பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உறுதி செய்து, இன்று அதிகாரபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை, கடந்த செப்ரம்பர் மாதம் 27ம் திகதி முதல் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை அமுலுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இருந்த போதும், தொடரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழும் சகல விதமான வன்முறைகளையும் கட்டுப்படுத்தி, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் பண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை, சிறீலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், அனைத்துக் குடிமக்களுக்குமான சட்டம் - ஒழுங்கை உறுதி செய்து, இது வரை விசாரணைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படாத சகல வன்முறைச் சம்பவங்களையும், விசாரணைக்கும், குற்றப்பதிவிற்கும் உட்படுத்துவதற்கு, சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் நீதிக்கு புறம்பாடு படுகொலைகள் குறித்து கவலை வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், கருணா குழுவின் நடவடிக்கைகளை மிகவும் பாரதூரமானவையாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இயல்பு நிலையை சீர்குலைப்பதிலும், சமாதான முன்னெடுப்புக்களை அபாயகரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கும், கருணா குழுவின் நடவடிக்கைகள் வழிகோலியிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், கருணா குழுவின் நடவடிக்கைகளை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

அத்துடன், இருபது வருட மோதலுக்கு முடிவு கட்டி, நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் உண்மையான பற்றுறுதியுடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரகரகோகரா.....

என்ன கூத்து இது?

பயங்கரவாதம்! பயங்கரவாதிகள்!! தடை!!! ... உறவு!!!! ...

கேணையள் கேட்குதுகள் எண்டு நினைச்சு, உதென்ன இன்னும் விடுவங்கள்!!! ம்ம்ம்ம்ம்...

ரோகரா....

விடுதலைப் புலிகளை அதாவது தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகளைத் தடை செய்த நாடுகளின் பிரதி நிதிகளை ஈழத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

எனக்குத் தடை என்றால் உனக்கும் தடை. இது தான் சரியான பதில்.

ஒவ்வொரு தாக்கத்துக்கும் அதற்குச் சமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு- நியூட்டனின் மூன்றாவது விதி.

விதி என்று கிடப்பதை விட புது விதி செய்வதே எம் வெற்றிக்கு வழி வகுக்கும்.

அந்த இந்த அமைப்புகள் என்று ஈழத்தில் உளவு பார்க்கும் அனைவரையும் எல்லைகளுக்கு அப்பால் துரத்த வேண்டும்.

தடை விதித்தவர்களுடன் பேச்சு வார்த்தையே வைக்கக் கூடாது.

உலகில் இன்னும் இருக்கக் கூடிய ஜனநாயக சக்திகளை இனம் கண்டு அணி சேர வேண்டும்.

எங்களுடன் பேச வேண்டுமானால் தடையை அகற்றி விட்டு வரும் படி நிபந்தனை வைக்க வேண்டும்.

தலைவர் கவனத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.

புலம் பெயர் மக்களே உங்கள் தூக்கத்தைக் கலையுங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் வன்னியைப் பார்ப்பதை விடுத்து சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள்.

அநுகூலங்களை அனுபவங்களை ஆவணப் படுத்துங்கள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படும் விடயங்கள் இவை. புரிந்து கொள்ளுங்கள்.

புரிதலுடன் - எல்லாள மகாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மிரட்டிப்பார்ப்பார்கள்! பணியமாட்டார்கள் என்றால் இறங்கி வருவந்து விடுகின்றனர். உந்த விளையாட்டை எத்தனை தரம் தமிழர் சமூகம் கண்டுவிட்டது!

±ýÉò¨¾.. ¯È¨Å....?

±ýÉò¨¾.. §À½¢.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது புலன்வாழ் மக்களின் உரிமைக்குரல் எழுச்சியைக் கண்டு தடுமாற்றம் கொண்டே இந்த அறிக்கை வந்திருக்கிறது. உடனடியாக தடையில் இருந்து நீக்க முகமில்லாமல், இப்படியொரு தடவல். சும்மா இவங்கட கட்டுப்பாட்டில் இருப்பதைவிட்டுவிட்டு, பயங்கரவாதிகள் என்ற முத்திரையுடன் சுதந்திரமாக எதிரிகளை விரட்டியடிப்பதே மேல்.

அல்லிகா :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

சமநிலையை குலைத்துவிட்டு தொடர்புகளைப் பேணுவதில் பயனில்லை: ஐரோப்பாவுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்

சமநிலையை குலைத்துவிட்டு எம்முடன் தொடர்புகளைப் பேணுவதில் ஐரோப்பா ஒன்றியம் என்ன பயன் பெறப் போகிறது? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிச்செல்வனை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிசன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் முற்பகல் 10.30 மணிமுதல் 11.30 வரை இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: கண்காணிப்புக்குழுத் தலைவர் கடந்த மூன்று நாட்களாக இங்கு தங்கியிருந்து நிலைமைகளை பார்வையிட்டார். எமது தளபதிகள், மக்களைச் சந்தித்து பேசியிருக்கின்றார். இன்று அவர் எம்மை சந்தித்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் கண்காணிப்புக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று பேசியிருக்கின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியத் தடை வந்ததன் பின்னர் சமாதான முன்னெடுப்புக்கள், கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் எமது தலைமைப்பீடம் தீவிரமாக பரிசீலிக்க இருக்கின்றது.

அதன்பின்பு கண்காணிப்புக் குழுவினரோடும் அனுசரணையாளர்களோடும் தொடர்பு கொள்வோம் என்று அவர்களிடம் கூறியிருக்கின்றோம்.

கேள்வி: நோர்வேக்கு செல்லவிருக்கின்றீர்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்ககை தொடர்பாகவும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசுவதற்கு நோர்வே அழைத்திருக்கின்றது. இந்த அழைப்பை எமது தலைமைப்பீடம் சாதகமாக பரிசீலிக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்குப் பின்னர் எமது தலைமைப்பீடம் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவிருக்கின்றது, எடுத்திருக்கின்றது என்பதை எடுத்துச் செல்வதாகவே இந்த ஒஸ்லோ பயணம் அமையவுள்ளது.

கேள்வி: ஒஸ்லோவில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு சிறிலங்கா அரசாங்கத்தையும் நோர்வே அழைத்திருக்கின்றது. எனவே, இச்சந்திப்பானது இரு தரப்பையும் ஒன்றாக சந்தித்து பேசவுள்ளதா அல்லது தனித்தனியாக பேசவுள்ளதா?

பதில்: இது பேச்சுவார்த்தை அல்ல. இருதரப்பும் சந்தித்து பேசுவதற்கு ஒஸ்லோவுக்கு செல்லவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரு தரப்பு என்ற வகையில் இருதரப்பையும் நோர்வே அரசு அழைத்திருக்கின்றது.

கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசுவதற்கும், முக்கியமாக அனுசரணையாளர்கள் என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னால் எழுந்திருக்கின்ற நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக இனி முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக எமது தலைமைப்பீடத்தின் தீர்க்கமான சில நிலைப்பாடுகளையும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அந்த அடிப்படையில் தான் எமது தலைமைப்பீடம் இதை சாதகமாக பரிசீலிக்கின்றது.

கேள்வி: கண்காணிப்புக்குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறுப்பினர்களும் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தடை இந்த உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: நிச்சயமாக அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், எமது தலைமைப்பீடம் ஓரிரு நாட்களில் கூடி இது பற்றி பரிசீலிக்கவிருக்கின்றது. அமைதி முயற்சிகளிலோ சமாதான முன்னெடுப்புக்களிலோ இருதரப்பும் சமத்துவமாக சமதரப்பு என்ற நிலையில் பார்க்கபடுவது அவசியம். அத்தகைய நிலைப்பாடுள்ளவர்களோடு தான் சமாதான முயற்சிகள் பற்றியோ அமைதி முயற்சிகள் பற்றியோ பேசலாம். பக்கச்சார்பான நிலையில் இருதரப்பையும் கையாள, தலையீடு செய்ய, பங்காற்ற முற்படுவதை மக்களாலும் எமது தலைமைப்பீடத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி: தூதுக்குழுவில் யார் யார் செல்கின்றீர்கள்?

பதில்: இதுவரை தலைமைப்பீடம் முடிவெடுக்கவில்லை. ஒஸ்லோவுக்கு செல்வதாக இருந்தாலும் ஒஸ்லோவில் என்ன விடயம் பேசப்படவிருக்கின்றது என்பதை எமது தலைமைப்பீடம் ஓரிரு நாட்களில் கூடி முக்கியமான முடிவுகளை எடுத்து அம்முடிவுகளை எடுத்துச்செல்வதாகவே ஒஸ்லோ பயணம் அமையும்.

கேள்வி: தற்போதைய நெருக்கடி நிலையில் தங்களது போக்குவரத்து ஒழுங்குகள் எந்தளவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொண்டதாக இருக்கும்?

பதில்: புறப்படுவதாக இருந்தால் முழுமையாக பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குகள் அனைத்துக்குமே நோர்வே அனுசரணையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருக்கின்றோம். அதை மீண்டும் நாம் உறுதிப்படுத்திய பின்னர் தான் பயணம் அமையும்.

கேள்வி: நோர்வேப் பயணத்துக்கு தென்தமிழீழத்தில் இருந்து தளபதிகள் வன்னிக்கு வருதல் என்ற விடயமும் அடங்குமா?

பதில்: ஒஸ்லோவுக்கு பேச்சுவார்த்தைக்காக நாங்கள் செல்லவில்லை. தலைமைப்பீடம் முக்கியமான கட்டத்தில் முக்கியமான தீர்மானத்தை எடுத்து நோர்வே அனுசரணையாளர்களுக்கு தெரிவிப்பதற்கான பயணமே தவிர, சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான பயணம் இல்லை என்பதால் நாம் அதை வலியுறுத்தவில்லை, அதை எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் எமது தளபதிகள் போராளிகளின் பயணம் தொடர்பாக கண்காணிப்புக்குழுவின் தலைவர் சாதகமான முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள முயன்றுகொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியமும் இணைத்தலைமை நாடுகளும் சிறிலங்கா அரசு மீது அழுத்தம் கொடுத்த வெளியான செய்தி உண்மையானதா அல்லது வெறுமனே அறிக்கை மயப்பட்டது என்று நினைக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா அரசு பற்றியும் சமாதான விரோதப் போக்குகள் பற்றியும் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மைக்கு மாறானவை அல்ல. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான். இருந்தாலும் அரசின் பயங்கரவாதத்தை எப்படி தடுக்கலாம்? பயங்கரவாத அரசை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி சர்வதேச சமூகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையாகத்தான் அவர்களின் அறிக்கையின் வெளிப்பாடு இருக்கின்றது.

ஏனெனில், அதில் கூறப்பட்ட பெரும்பாலான விடயங்கள் அரச பயங்கரவாதத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மோசமான நடவடிக்கைகள் பற்றி அவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் விடுதலைப் புலிகள் மீது போடப்படுகின்ற அழுத்தத்துக்கு நிகராக அல்லது அதை விட மேலாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தத்தை போட வேண்டிய நிலையில் அனைத்துலக சமூதாயம் இருக்கின்றது.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கின்றது. ஆகவே, இந்த அறிக்கை ஒரு சிந்திக்க வைக்கின்றதாகவும் வெளிப்பாட்டை பார்க்கின்ற போது பயங்கரவாத அரசுகள் பற்றி அனைத்துலக சமுதாயம் விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதாகவுமே இந்த அறிக்கை அமைந்திருக்கின்றது.

கேள்வி: இணைத்தலைமை நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைகளில் புலிகளின் நடவடிக்கைகள் பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருக்கின்றது. அரசின் செயற்பாடுகளை துணை இராணுவக் குழுக்களின் மீது போட்டுவிட்டு தப்பியுள்ளதாக தோற்றப்பாடு தெரிகின்றதா?

பதில்: அனைத்துலக சமூகம் தொடர்ந்து ஒரு தவறை இழைத்துக் கொண்டிருப்பதாகவே கருதுகின்றேன். ஏனெனில், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரிய கொடுமைபடுத்தப்படுகின்ற மக்கள் மீதும் தலைமை மீதும் அனைத்துலக சமுதாயம் போட்டிருக்கின்ற அழுத்தமும் அதற்கு காரணமானவர்களை கண்டிப்பதில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றமை தான் இலங்கைத்தீவில் இன்று பல இடங்களில் நெருக்கடிக்கு காரணமாக அமைந்து கொண்டிருக்கின்றது.

அனைத்துலக சமுதாயம் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்ற பயங்கரவாத அரசுகளை எவ்வாறு கையாள்வது என்று தீர்க்கமான முடிவுகளை எடுக்கின்ற நேரம் ஏற்பட்டிருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்துள்ள நிலையிலும் தொடர்புகளை பேணப்போவதாக கூறியுள்ளதே?

பதில்: தொடர்பு எவரும் கொள்ளலாம். எமது சமநிலையை குலைத்து விட்டு தொடர்பு கொள்வதால் எந்த விதமான பயன்களைப் பெறப்போகின்றார்கள் என்பது தான் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையென்பது தெற்கிலே சிங்கள இனவாதிகள் மட்டத்தில் அரச மட்டத்திலும் கொண்டாடப்படும் நிலையை நாம் பார்க்கின்றோம். எந்தவிதமான பயங்கரவாதத்தையும் தமிழர்கள் மீது ஏவிவிடலாம் என்ற துணிவை சிங்களப் பேரினவாதத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. கருத்துக்கள் அறிக்கைகள் இதையே உணர்த்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத் தடை தமிழர்களை கடும்பாதிப்புக்குள் தள்ளியுள்ளது என்பதே எம்மால் உணரமுடிகின்றது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலன்வாழ் மக்களின் உரிமைக்குரல் எழுச்சியைக் கண்டு தடுமாற்றம் கொண்டே இந்த அறிக்கை வந்திருக்கிறது. உடனடியாக தடையில் இருந்து நீக்க முகமில்லாமல், இப்படியொரு தடவல். சும்மா இவங்கட கட்டுப்பாட்டில் இருப்பதைவிட்டுவிட்டு, பயங்கரவாதிகள் என்ற முத்திரையுடன் சுதந்திரமாக எதிரிகளை விரட்டியடிப்பதே மேல்.

அல்லிகா :twisted:

நிச்சயமாக! இதே மாதிரியாக, அல்லது இன்னும் அதிகமான மக்கள் எழுச்சியைக் கொடுப்போமாக இருந்தால் உலகம் தன் பார்வைகளை மாற்றிக் கொள்ளும்! ஒரு நாளுக்குள்ளகவே ஜரோப்பிய யுூனியனின் மாற்றத்தை உரிமைக்குரல் மூலம் எடுத்து இயம்பிய எம் மக்களுக்கு நன்றிகள் மட்டுமல்ல, இன்னும் சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டிய கடப்பாடு உண்டு! தொடர்ந்து ஒன்றிணைவோம்!!

ஜரோப்பிய ஒன்றியம் தடைபோடப்படும் என்றதை முற்கூட்டியே புலிகளிற்கு அறிவித்ததன் மூலம் புலிகளுடன் தொடர்ந்து இராஜதந்திர உறவுகளை போணவிரும்புகிறார்கள் புலிகள் இராஜதந்திர மரபுகளில் உறவுகளை வைத்துக்கொள்வதற்குரிய பண்புகளையும் தகுதிகளையும் கொண்டவர்கள் என்பதை ஜரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றும் காட்டுகிறது. இதே நிலை தான் கனடா தடை போடும் பொழுதும் நடந்தது.

ஈரான் அணுமின் தொழில்நுட்ப ஆராச்சி விடையத்தில் ஜரோப்பிய ஒன்றிய நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா ஒத்துழைத்து விட்டுக்கொடுத்து இறங்கிவருவது போல் வெளிப்பார்வைக்கு நடந்து கொள்கிறது அண்மைக்காலங்களில். இதற்கு பிரதியுபகாரமாக புலிகள் விடையத்தில் ஜரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் சொல்கேப்பது போல் நடந்து கொள்வதற்கு பகடைக்காயாக்கப்பட்டிருக்கல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.