Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை

Featured Replies

21வது ஆசியான் உச்சி மாநாடும் பல உச்சி மாநாடுகளும் 18 முதல் 20ஆம் நாள் வரை, கம்போடியாவின் தலைநகர் பினோம் பெனில் நடைபெற்றன.

[size=3][size=4]தென் சீனக் கடல் பற்றிய அறிக்கை ஒன்றைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது, தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாட்டை விரைவில் முன்னேற்றுவது குறித்து விவாதிப்பது ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாகும். அமைதியான புரிந்துணர்வான அடிப்படையில் தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த தென் சீனக் கடல் நடவடிக்கைகளின் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் விருப்பத்தைப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.[/size][/size]

[size=3][size=4]ஐ.நாவின் கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தையும் தென் சீனக் கடல் பற்றிய பல்வேறு தரப்புகளின் நடவடிக்கை அறிக்கையையும் பல்வேறு நாடுகள் பின்பற்றி, சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பல்வேறு தரப்புகளுக்குமிடையிலான கருத்து வேற்றுமையை ஆக்கப்பூர்வமாக தீர்க்குமாறு அகினோ அரசுத் தலைவர் வேண்டுகோள் விடுப்பதாக பிலிப்பைன் வெளியுறவு அமைச்சர் ஆல்பர்ட் டெல் ரொசாரியோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]தென் சீனக் கடல் நடவடிக்கை கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தையைச் சீனா ஊக்கத்துடன் முன்னேற்றியது. இதை ஆசியான் நாடுகள் உறுதிப்படுத்தின. தற்போது, உலக அமைப்பில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. பொருளாதார நெருக்கடி, சில பிரதேசங்களின் கொந்தளிப்பான நிலைமை ஆகியவற்றின் பின்னணியில், ஆசியா, குறிப்பாக ஆசியான் பிரதேசத்தின் நிலைமை, அமைதியாகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஃபு யிங் தெரிவித்தார். [/size][/size]

[size=3][size=4]ஒத்துழைப்பு, சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் முக்கிய நோக்கமாகும். மேலதிக நாடுகள், ஆசியாவின் அமைதி, நிதானம், செழுமை ஆகியவற்றிலிருந்து பயனடையும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், இம்மாநாட்டில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். ஃபு யிங் கூறியதாவது தென் சீனக் கடல் பிரதேசத்தின் நெருக்கடி நிலைமையைத் தணிவு செய்வது அவசியம். [/size][/size]

[size=3][size=4]தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து, இதே நிலைப்பாட்டைச் சீனா எப்போதும் நிலைநிறுத்தி வருகின்றது. தென் சீனக் கடல் பிரதேசத்தின் அமைதிக்கும் நிதானத்துக்கும் சீனா மாபெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூறினார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தென் சீனக் கடல் பிரச்சினை பற்றிய பல்வேறு தரப்புகளின் நடவடிக்கைக் கோட்பாட்டைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். தொடர்புடைய ஒத்தக் கருத்துக்களை உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும். முதிர்ச்சியடைந்த நிலைமையில், தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தையை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.[/size][/size]

[size=3]http://tamil.cri.cn/.../103s123224.htm[/size]

[size=5]ஆரஞ்சுநிற உடையில் வித்தியாச பிரதமர் மன்மோகன்[/size]

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் கம்போடியா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஹன்சென் விருந்து அளித்தார். இந்த விருந்தில் அங்கு பிரத்யேகமாக வழங்கப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

இவரது சட்டை ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் விதமாக இருந்தது. கறுப்பு நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். எப்போதும் கோர்ட், சூட்டில் காணப்படும் பிரதமருக்கு இந்த ஆடை சற்று வித்தியாச தோற்றத்தை அளித்தது.

http://tamil.yahoo.c...-012300876.html

Edited by akootha

இவரது சட்டை ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் விதமாக இருந்தது. கறுப்பு நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். எப்போதும் கோர்ட், சூட்டில் காணப்படும் பிரதமருக்கு இந்த ஆடை சற்று வித்தியாச தோற்றத்தை அளித்தது

பழுத்து வந்த பழத்தைப் போல

பருவம் இன்று விஜயம்

பார்த்து நீங்கள் பழக வேண்டும்

தெரியும் உங்கள் விஷயம்

எங்க வீட்டு ராஜாவுக்கு

இளமை திரும்புது வயது

ஏற ஏற பருவமேறி

காதல் அரும்புது

http://www.youtube.com/watch?v=-MH6-OkHvTk

இலங்கையின் பிரபலமான இராஜதந்திர முயற்சிகளை சீனா படித்து தெரிந்து பயன்படுத்த ஆரம்பிக்கிறது. தென் சீனக்கடலை தனது என்று அடாவடித்தனம் விட்டு, அண்மையில், யப்பானிய மீன்பிடிவள்ளங்களை சூழ்ந்து மிரட்டிய சீனா, குரலை மாற்றியிருக்கு.

ஏர்கனவே படைப்பலத்தில் ஆயத்தமாக இருக்கும் அமெரிக்கா, தென்சீனக்கடலை சுற்றிவளைப்பதைத் தணித்து, தன்னை தயார் செய்ய நினக்கிறது சீனா. இதற்காக சந்திரிக்கா 2002 இல் செய்த உடன் படிக்கை மாதிரி அயல் நாடுகளுடன் சமாதானம் அறிவிக்கிறது சீனா.

கார்த்திகை தேர்தல் நேரம் அமெரிக்காவின் இரண்டுகட்சிகளுமே சீனாவை தாக்கித்தான் பிரசாரம் செய்தன. இதன் கருத்து ஒபாமா சீனாவுக்கு எதிராக கொண்டுவரும் நடவடிக்கைகளை, குடியரசுகட்சியால் கட்டுப்பத்தும் மக்களவை, நிபந்தனைகளுடன் தன்னும் ஆதரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும், இந்த பசப்பு வார்த்தகளை நம்பி நடப்பதிலும் பார்க்க, அமெரிக்க பொருளாதாரம், மத்திய கிழக்கு நெருக்கடிகள், என்பன தான் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.

உலகத்தில், எந்த மூலையிலும், எந்த நாட்டு ராஜதந்திரிகளையும், மிஞ்சி, மிஞ்சி போய்கிடக்கும் அன்னிய செலவானியால் வாங்கிவிடும் சீனாவின் பண வலிமை இது வரையில் மேற்கு நாடுகளில் தன் கைவரியை காட்ட தொடங்கவில்லை. ஆனாலும் இந்த தந்திரத்தால், காது காதும் வைத்தால் போல் கச்சிதம்மாக காரியங்களை செய்த்துவிடும் சீனா, தேர்தல் நன் கொடை என்ற பெயரில் இதை அமெரிக்காவிலும் ஆரம்பித்து, தன் கைவரியை காட்டலாம். சுப்பர் பக் தேர்தல் சட்டங்கள் சீனாவுக்கு இந்த அறையின் பின வளக்கதவுகளை திறந்து தான் விட்டிருக்கிறது. சீனாவின், பல நாடுகளுக்கு பணம் விநியோக்கிகும் நிலையமாக இருந்த கொழும்புவில் கடமையாற்றிய ரோபேட் பிளேக் சீனா ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து, இலங்கையை சீனா பக்கம் சரிய வெளிப்படையாக அனுமதி கொடுத்திருந்தார் என்பது கவனிக்க தக்கது. இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர், லியாம் பொக்ஸ்,நோர்வே அமைச்சர் சொலெயும் வெளிப்படையாக விவாதிக்கப்படதா காரணங்களுக்காக பதவி இழந்தார்கள். இது சீனாவின் முயற்சின் ஆரம்ப தோல்விகளா என்பது ஒரு விவாத பொருள்.

எது அரசியல் சரி, பிழையாக இருந்தாலும், தனது கடல்படையில் 50% கடல்படையை தென் சீனக்கடலில் வைத்திருக்கும் அமெரிக்காவை மெலியப்படுத சீனா, தான, தண்ட, சாம பேத சாணக்கிய முறைகளில் இறங்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை..

இந்து சமுத்திரத்தில், இலங்கை, பாகிஸ்த்தான், வங்காள தேசம், மாலைதீவு, இந்திய அதிகாரிகளில் பலரை என்று, காசை காசு என்று பாரமல் பணம் கொடுத்து வாங்கியதால், அமெரிக்காவை அங்கு அணில் ஏறவிட்ட நாயாக மாற்றியிருக்கிறது சீனா. இது தென் சீனக்கடலிலும் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.