Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தம் அல்லது மனவுளைச்சல்

Featured Replies

இது நான் பங்கு பற்றிய கருத்தரங்கள் கூகுள் என்பற்றின் உதவியுடன் எழுதியது. பிழைகள் இருந்தால் அறியத்தாருங்கள், மற்றவர்களுக்கு உதவும். உங்கள் பெறுமதிமிக்க கருத்துகளை இங்கே மற்றவர்களுக்காக பகிருங்கள். ஈழத்தில் 65,000 பேர் மனநோயல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கையரசின் தகவல்படி, ஆனா இதைவிட கூட இருக்கலாம்.

அத்துடன் நான் எழுத்தில் தேர்ச்சி பெற்றவனுமல்ல, அதனால் எழுத்துநடை & போக்கு வித்தியாசமாக இருந்தால் மன்னிக்கவும்

===========================================================

மன அழுத்தம் அல்லது மனவுளைச்சல்

"அறிவியல் தந்த துள்ள கொடிகளை அச்சாணியாக்கி மனித வாழ்கை சுழல்கின்றது, வேதனைகள் அனைத்தும் வேதிப் பொருட்கள் வடிவில்" - எங்கேயோ பார்த்த வசனம்

தேவைகள் கூடக் கூட மனவுளைச்சல் அதிகரிக்கின்றது.

ஒவ்வொருவரும் மன அழத்திற்கு உள்ளாகின்றோம். நம்பிக்கை, குணங்கள், நடத்தைகள், மன உறுதி, எதிர்பார்ப்புகளை பொறுத்து மனவுளைச்சலை கையாளும் விதங்கள் மாறுகின்றது.

stress-test-woman-with-phones-stressed.jpg

எமது வாழ்க்கைக்கு அழுத்தம் ஒரளவுக்கு தேவைப்படுகின்றது, அதை தீர்மானிக்கும் அளவு ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. கீழே உள்ள மனவுளைச்சல் வரைபடம் இதை விளங்கப்படுத்துகின்றது

stress-chart.jpg

வெளி அழுத்தங்கள் எப்படி எம்மை பாதிக்கிறது

சூழல் - வெப்பம், குளிர், காற்று மண்டல ஈரப்பதன் இப்படிப்பட்டவை உ+ம் - சிலருக்கு வெப்ப காலநிலை பிடிக்கும், மற்றவருக்கு குளிர், சிலருக்கு மழையை கண்டால் சந்தோஷம் வரும்,

வேலை தளம்: முதலாளி, சக வேலையாட்கள், வாடிக்கையாளர்கள்...

சமூக கலாச்சார சூழல்கள்

உள் சூழல்

உடம்பு - மொத்தமா, மெல்லிசா, இருப்பதை நினைத்து

நோயால் அவதிப்படும் போது.

நடத்தை - நடத்தல், பேசுதல், உடை அணிதல் ..

எண்ணங்கள் - உங்களுக்கே தெரியும் நல்ல & கெட்ட எண்ணங்களினால் எப்படி நாம் பாதிப்புறுகின்றோமென்று.

உணர்ச்சி - கோபம், மகிழ்ச்சி....

ஒருவருக்கு மன அழுத்த அறிகுறி அறியப்பட்டதும் தகவல் நரம்பு மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு மூளைக்கு அறிவிக்கப்பட்டுவிடும், இதன் தொடர்ச்சியாக இரத்த அழுத்தம் மாற்றங்கள் உடம்பில் உண்டாகும்

இதனால் தலையிடி, கழுத்து, முதுகு & நெஞ்சு நோவுகளின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் நித்திரையின்மை களைப்பு சேமிபாட்டு பிரச்சனை வேகமாக சுவாசித்தல் வியர்த்தல் தோல் கடி சிரங்கு நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம்.

இவற்றினால் பின்வரும் சம்பவங்கள் நிகழலாம்: கோப ப்படுதல், எரிச்சல், அமைதியின்றி காணப்படுதல், ஒரு வேலையில் மனதை ஒருமுகப்படுத்த முடியாத நிலை, மனநோய் / விசர், மன நினைவுகலும் மாற்றமடையும்,………... எங்களின் திறமையில் சந்தேகம் அல்லது தோல்வியடைகின்றோம் என்ற எண்ணங்கள், சூழ்நிலையை அறியும் தன்மையை இழத்தல், அதிக பிழைகள் விடுதல், பிழையாக அர்த்தம் கொள்ளுதல், சுலபமாக குழப்பமடைதல், ஞாபகமறதி……….

Stress_2.gif

stress%20(2).jpg

மன அழுத்தத்தில் / மன உளைஞ்சலில் இருக்கவிரும்பினால்:

உடற்பயிற்ச்சி செய்ய வேண்டாம்

விரும்பிய அனைத்தையும் சாப்பிடவும்

உடலின் நிறையை கூட்டவும்

சமூகத்தில் இருந்து ஒருங்கியிருக்கவும்

தியானம் இவற்றை தவிர்க்கவும்

அதிக வேலைகளை உங்களால் செய்யக் கூடியதிலும் பார்க்க எற்றுங்கெள்ளுங்கள்

எல்லா பிழைகளையும் உங்கள் தலையில் போடவும்

உங்களை நீங்களே விமர்சிக்கவும்

உதவியென்று யாரையும் கேட்க வேண்டாம்

எதற்கும் இலாயக்கில்லாதவன் என பழிநை உங்கள் மீதே போடவும்

சிரிப்பை தூக்கியெறியுவும்

சிடு மூச்சியாக இருக்கவும்

எப்பவும் படபடப்பாக வேலை செய்யவும்

இப்படி பல...

மன அழுத்தம்/ உளைச்சலில் இருந்துவிடுபட:

நாங்கள் எதை நினைக்கின்றோமோ அதையே உணர்கின்றோம். எண்ண அலைகளுக்கு சக்தி அதிகம். மன அழுத்திற்கும் எண்ண அலைகளிற்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு. இதை நீங்கள் எப்ப உணரத்தெடங்குகின்றீர்களோ, அன்றிலிருந்து உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.

உங்களை அனுக பயப்பட்டவர்களே தேடி வருவார்கள், உங்களை சுற்றி எப்பவும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த நேர்மறையான சிந்தனையுள்ள கூட்டம் சுற்றியிருக்கும்.

உங்களுக்கிருக்கும் பிரச்சனை கவலை இவற்றின் அளவை தீர்மானியுங்கள், அதற்கேற்ப்ப அந்த பிரச்சனைக்கு தீர்வை கண்டுபிடிக்க வழி பிறக்கும், இந்த உலகில் பிரச்சனை கவலை இல்லாத மனிதர்களோ இல்லை, கையாளும் முறைதான் வித்தியாசப்படுகின்றது.

இந்த புத்தகத்தில் பல முறைகள் உண்டு http://www.starseaesp.wa.edu.au/resilience.pdf

Catastrophe-Scale-141k2r8.jpg

உங்கள் சிந்தனை ஒரு கவலையை நோக்கி போய்க்கொண்டிருந்தால் நிறுத்து என்ற அறிவுறுத்தலை பலகையை மனதில் கொண்டுவாருங்கள், உங்கள் நினைவை உங்களுக்கு பிடித்த மகிழ்ச்சி தரக்கூடிய நினைவிற்கு மாற்றிவிடவும்

stop.jpg

மனதிற்கு அமைதியை தாரும் பயிற்ச்சிகளை செய்தல் - தியானம், யோக, கடற்கரையில் காற்று வாங்கல், பாட்டு கேட்டல், கூட்டி கழிச்சு கணக்கு போடுதல், மூச்சை ஆழ இழுத்துவிடுதல்….

4761929-woman-and-kids-having-fun-relaxing-on-the-spring-meadow.jpg

உடற்பயிற்ச்சி சைக்கிள் ஓடுதல், நடத்தல், நீந்துதல், சிறுவர்களுடன் விளையாடுதல்,….

எது உங்களுக்கு சந்தோஷத்தை தருகின்றதோ அதை சொய்யுங்கள் (ஜெயம்ரவி மாதிரி, எதிலும் ஒரு கிக் இருக்கனும் - படப்பெயர் மறந்துவிட்டது)

மனது கவலையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும்போது இவற்றை நினைத்து பாருங்கள்:

இதுவும் கடந்து போகும்

இது மனதிற்க்கு கவலையான விடயம்தான், ஆனா வாழ்கையின் முடிவல்ல

மனதை நன்மை தரக்கூடிய விடத்தில் ஒரு முகப்படுத்தவும்

குளித்தல், வாய்விட்டு சிரித்தல், உடம்பை மசாஜ் செய்யலாம். உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம், அல்லது யாழ் இணையத்திற்கு வருகை தரவும் (www.yarl.com)

ஒரு அளவுக்கு அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் & அதன் நன்மை தீமைகளையும் அறிந்து வைத்திருங்கள்

எந்த பிரச்சைனையையும் உங்கள் மூக்கு நுனிவரைதான், அதை தோளில் ஏற்றுவதும் கையாளுவதும் உங்களின் திறமை.

உங்கள் திட்டங்களை குறுகிய நீண்ட காலங்களுக்கு ஏற்றவாறு திட்டமிடுங்கள்

வேலையை ஒழுங்கு செய்யுங்கள் அவற்றின் முக்கியத்திற்கேற்ப

இல்லை என்று சொல்ல பழகுங்கள், ஆம் என்று சொல்லி எல்லாவற்றையும் உங்கள் தலையில் ஏற்ற வேண்டாம்

உங்கள் திறமைகளை அட்டவனைப்படுத்துங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையிருக்கு

உடம்பை நன்றாக வைத்திருங்கள் & சத்துள்ள உணவை உட்கொள்ளவும்

நன்றாக ஓய்வெடுங்கள்

நடந்தவை நடந்தவையே, தற்காலத்தில் என்ன நடக்கிறதோ அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

உதவிக்கு மற்றவர்களை அனுகவும்/நாடவும் தேவைப்பட்டால்

எப்ப நீங்கள் மருத்துவரின் அல்லது உங்கள் மேல் அக்கறை கொண்டவரின் உதவியை நாடவேண்டும்:

உங்களே நீங்களே கட்டுப்படுத்த முடியாது போகும் நிலை

உங்களை நீங்கள் தாழ்வாக எடைபோடும்போது

மனதை ஒரு முகப்படுத்த முடியவில்லை என்றால்

உங்களிடமிருந்து பலர் விலகி ஓடும்போது / உங்களுடன் சேருவதை தவிர்க்கும்போது

இதை ஆரம்பத்தில் கண்டுபிடத்தால் உங்களுக்கும் & உங்களை சுற்றியிருப்போருக்கும் நல்லது.

எனக்குப்பிடித்த ஒரு பாட்டு

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் வாழ்க்கை திறந்த ஏடு

அது ஆசைக் கிளியின் கூடு

என் வாழ்க்கை திறந்த ஏடு

அது ஆசைக் கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி

பரிமாறும் உண்மைகள் கோடி

இது போன்ற ஜோடி இல்லை

இது போன்ற ஜோடி இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் மாடம் முழுதும் விளக்கு

ஒரு நாளும் இல்லை இருட்டு

என் மாடம் முழுதும் விளக்கு

ஒரு நாளும் இல்லை இருட்டு

என் உள்ளம் போட்ட கணக்கு

ஒரு போதும் இல்லை வழக்கு

இது போன்ற ஜோடி இல்லை

இது போன்ற ஜோடி இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

தை மாத மேக நடனம்

என் தேவி காதல் நளினம்

தை மாத மேக நடனம்

என் தேவி காதல் நளினம்

இந்த காதல் ராணி மனது

அது காலம் தோறும் எனது

இதில் மூடும் திரைகள் இல்லை

இதில் மூடும் திரைகள் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை!..

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்”

ஆக்கம் - வந்தியத்தேவன் (யாழ்களம்)

கீழே உள்ள இணைப்பில் இன்னும் பல விடயங்கள் இருக்கு

http://www.indg.in/health/mentalhealth/baeba9-b85bb4bc1ba4bcdba4baebcd-baebb1bcdbb1bc1baebcd-baeba9-ba8bafbcd-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/view?set_language=ta

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.