Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை விருந்தினராக அழைத்த ராஜீவ் காந்தி, விடுதலை புலிகளை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியது ஏன்? :ராம் ஜெத்மலானி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ram-methlani-seithy-150.jpg

புதுடெல்லியில் நடந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்தார். அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார். அதே சமயம், விருந்தினராக வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்வோம் என்று நாம் உறுதியளித்ததற்கு மாறாக, தமிழர்களுக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தையும் அனுப்பிவைத்தோம். இது துரோகச் செயலாகும். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நடத்தையை என்னால் இன்று வரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

இவ்விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? இலங்கை போரின் போது இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு செய்த இராணுவ உதவிகள் என்ன? என்று விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி சென்ற முறை இந்தியா வந்த போது ம.தி.மு.க. தொண்டர்களுடன் அதை எதிர்த்து போராடினேன் மீண்டும் ஒருமுறை அவர் இந்தியா வந்தால் பிரதமர் வீட்டின் முன் போராட்டம் நடத்துவேன்.

http://www.seithy.co...&language=tamil

[size=5]இறுதிப் போரில் இந்திய உதவிகள் என்ன? ஆணைக்குழு நியமிக்கவும்: வைகோ[/size]

[size=4]இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோவின் 'ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் ரத்தம்' என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளுடன் இலங்கைப் போர் தொடர்பான இருவட்டு ஆகியவற்றை வெளியிடும் நிகழ்வு, டெல்லியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே வைகோ மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,

'2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு ரேடார் கருவிகள், இராணுவ உதவி உள்ளிட்டவற்றை இந்திய அரசு வழங்கியது. இது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இலங்கை அரசும் தெரிவித்திருக்கிறது. போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தனி அரசாங்கத்துடன் கூடிய தேசம் அமைக்க வேண்டும்.

இந்த பொது வாக்கெடுப்பை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்க வேண்டும்' என்றார். [/size]

[size=4](தற்ஸ்தமிழ்)[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.