Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கு தீர்வின்றி கடலில் யுத்தம் வெடிக்கும், இரத்தஆறு ஓடும்; யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் உள்ளூர் இழுவைப்படகுகளைக் கண்டித்தும் இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அதனைக் கண்டிக்கும் முகமாக இன்று காலை 10.30 மணியளவில் யாழ். சென் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக இந்த கண்டனப் போராணி ஆரம்பமானது.

இதன் போது இந்திய தமிழக அரசே உமது மீனவரை எல்லை தாண்டி வராமல் தடுத்து நிறுத்த உங்களால் முடியாதா? சுரண்டாதே சுரண்டாதே எமது கடல் வளத்தை சுரண்டாதே, அழிக்காதே அழிக்காதே கடல்வளங்களை அழிக்காதே, வதைக்காதே வதைக்காதே எம் மீனவர் குடும்பங்களை வதைக்காது, அடிக்காதே அடிக்காதே எம் வயிற்றில் அடிக்காதே, எமது கோரிக்கைகளும் மகஜர்களும் எருமை மாட்டில் பெய்த மழையா? கோன்ற கோசங்களை எழுப்பியும் சுலோக அட்டைகளைத் தாங்கியும் பேரணியை முன்னெடுத்தனர்.

பேரணி இந்திய துணைத்தூரகத்தை அடைந்தது. எனினும் இதன் போது தூரதகக் கதவுகள் பூட்டப்பட்டு சமாசத்தைச் சேர்ந்த சிலரும் பொலிஸாருமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது தூதரகத்திற்குள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இங்கு மகஜரைக் கையளித்த சமாசத்தினர். மீண்டும் பேரணி மாவட்டச் செயலகத்தை நோக்கிச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் மகஜர் வீதியில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலகத்தின் வாயில் கவுகள் பூட்டப்பட்டு வீதியில் வைத்தே மேலதிக அரச அதிபர் கடற்றொழிளர்களையும் சங்கத்தினரைரயும் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜரையும் பெற்றுக் கொண்டார்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்ததாவது, இது இரண்டு நாடுகளுக்கு உரிய பிரச்சினை இதனை பேசித் தீர்க்க வேண்டும். அமைதியான இருங்கள் விரைவில் தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்.

எனினும் இந்த மகஜரை மீன்பிடி அமைச்சர், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்போது இன்றிலிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் இதற்கு தீர்வு வழங்கப்படவில்லை ஆயின் கடலில் ஒரு யுத்தம் நடக்கும் இரத்த ஆறு ஓடும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேரணி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை அடைந்து அங்கும் மகஜரைக் கையளித்து விட்டு மீண்டும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதன் போது இதற்கான தீர்வை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 11 சமாசங்களைக் கொண்ட 117 சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முன் ஆயத்தமாக கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருந்தனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பொலிஸார் ஆதிக்கம் அவர்களது பேச்சுக்களிலும் அவர்களது செயற்பாடுகளிலும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அதனைக் கண்டிக்கும் முகமாக இன்று காலை 10.30 மணியளவில் ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகியது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அரசாங்க அதிபர், இந்திய துணைத் தூதரகம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநனந்தா ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=554651657529374865

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.