Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்க்கட்சியை உருவாக்க ஒன்று சேருங்கள்: சரத் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்க்கட்சியை உருவாக்க ஒன்று சேருங்கள்: சரத் அழைப்பு

[Thursday, 2012-11-29 19:50:44]

இன்று நாட்டில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடடை ஆட்சி செய்பவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது நண்பர்களுமாக சுமார் 6000 பேர் இன் நாட்டின் சொத்துகளை கொள்ளையிடும் குழுவினர்களாக கணிக்கமுடியும். இராணுவத்தில்; சுமார் 300 பேர், பொலிஸில் சுமார் 500 பேர், அரச சேவையில் சுமார் 2000 பேரும் இவர்களில் அடங்குவர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சாதாரண மக்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது 6000 இலட்ச ரூபா பெறுமதியுள்ள பந்தயக் கார்களை இறக்குமதி செய்கின்றனர். இவை யாருக்காக? என சரத் பொன்சேகா கேள்வியெழுப்பினார்.

நேற்று மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய பிக்கு முன்னணி ஒழுங்கு செய்த இப் பொதுக் கூட்டம் கண்டி எட்மன் சில்வா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஐக்கிய பிக்கு முன்னணி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் கூட்டத் தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும். இங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோகா, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்கள் பத்துப் பேரிடம் பேசினால் அதில் எட்டுப் பேர் எமக்கே வாக்களித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் வெற்றி எமக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது வெற்றி கொள்ளையடிக்கப்பட்டமையாகும். சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு என்பன அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனையும் அரசியல் ஆதரவு பெற்றவர்களே செய்கின்றனர். இவற்றைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. நாங்கள் நிச்சயமாக அதிகாரத்துக்கு வந்து இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம்.

பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியாமல் செய்மதி ஒன்றை அனுப்புகின்றனர். இதற்கான பணத்தை யார் கொடுப்பது. இவ்வாறு வீண் விரையம் செய்யும் பணத்தைக் கொண்டு பல மாதங்களுக்கு ஏழைகளுக்கு உதவி செய்ய முடியும். அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் 2015 ஆம் ஆண்டு வரை பெற்றுக் கொள்ளும் கமிஷன் தொகையின் பெறுமதி 15 இலட்சம் மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு மில்லியன் என்றாலே பயமாக உள்ளது. இன்றைய அரசாங்கம் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்களுக்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று இல்லாததன் காரணமாக அவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். எமக்கு தற்போது தேவைப்படுவது ஒரு சக்திவாய்ந்த பொது எதிர்க் கட்சியாகும். நான் இதற்காக பலமுறை பலருக்கும் அழைப்பு விடுத்தேன். சிலர் பொது எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க பயப்படுகின்றனர். நான் இன்றும் வேண்டிக் கொள்வது தத்தமது தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க ஒன்று சேருங்கள் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71084&category=TamilNews&language=tamil

[size=4]பொன்சேகா,[/size]

[size=1]

[size=4]இதெல்லாம் சரிவராது, ஒரு இராணுவ புரட்சிதான் வழி.[/size][/size]

பொன்சேக்கா தான் நேரத்திற்கே விட்டுப் போய்ச்சேர்ந்திருந்தால் நாடு இப்படி கெட்டிருக்காது.

பிறகும் என்ன நடக்கிறது என்று விளங்காமல் தனக்கு பின் வரசொல்லுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.