Jump to content

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக யாழ் மீனவர் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

பதியப்பட்டது

121129120535_jaffna_fishermen_protest_indian111_304x171_bbc_nocredit.jpg

[size=4]இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை யாழ் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். [/size]

[size=4]இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தமது வலைகளை அறுத்து நாசம் செய்வதாகவும், இதனால் தாங்கள் தொழிலில் ஈடுபட முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். [/size]

[size=4]இந்திய இழுவைப் படகுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் வந்து தமது கடல் வளம் முழுவதையும் அள்ளிச் செல்வதனால், தமது மீன் வளங்கள் பாதிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். [/size]

[size=4]இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் மீனவ பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.[/size]

[size=4]இது குறித்து உடனடியாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாக இந்திய துணைத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். [/size]

[size=4]இந்த மகஜரின் பிரதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. [/size]

121129120646_fishermen_protest_jaffna_304x171_bbc_nocredit.jpg

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121129_fishermenprotest.shtml

Posted

P09(5).jpg

P08(10).jpg

P03(73).jpg

P1(4).jpg

Posted

P08%2810%29.jpg

போராட வேண்டியிருந்தாலும் பார்வைக்கு நல்லாய்த்தான் இருக்கிறார்கள் இந்த மீனவர்கள்.

P1%284%29.jpg

ஆர்ப்பாட்டத்திற்கு போன பல்கலைகழக மாணவர்களைவிட நன்றாகத்தான் உடுக்க பழகியிருக்கிறார்கள் இந்த மீனவ இளசுகள்.

Posted

[size=5]எனகென்னவோ இது மகிந்த + டக்லஸ் வேலை போல தெரிகின்றது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.