Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன? என்பதினை புதுவை ரத்தினதுரை அவுச்திரெலியா இன்பத்தமிழோசைக்கு வழங்கிய நேர் காணல்.

http://www.tamilnaatham.com/interviews20060221.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் பல மடங்கு பணத்தினை வீசி பரப்புரைப்போரில் ஈடுபட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்கள் அப்பரப்புரைப்போரில் வெல்ல பல வழிகளினைக் கையாள வேண்டும். அவற்றில் ஒன்று கலைகளில் ஊடாகச்செய்யலாம். ஒவியங்கள், நாடகங்கள், குத்துக்கள் மூலம் செய்யலாம்.

'தமிழ் மொழியில் படைப்புக்கள் செய்து நாங்களே அவற்றினைப்பார்ப்பதினால் ஒரு பிரயோசனமில்லை என்றும், வாழும் நாட்டு மொழிகளில் ஆங்கிலத்தில், டொச்சு மொழியில், பிரென்சு மொழியில், ஜேர்மன் மொழியில் படைப்புக்கள் வரவேண்டும் என்றும் வியட்னாம் போரில் எவ்வாறு வியட்னாமியர்கள் படைப்புக்கள் மூலம் பரப்புரை செய்தார்கள் என்றும், வேறு விடுதலை அடைந்த மக்கள் கலைகள்,படைப்புக்கள் மூலம் பரப்புரை செய்தார்கள் என்றும் புதுவை இரத்தினதுறை குறிப்பிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்பரா எழுச்சிப்பேரணியின் போது சிட்னிவாழ் படைப்பாளிகள் ஈழத்தில் நடந்த சம்பவங்களான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை, அல்லைப்பிட்டி சம்பவம், சிவராம் கொலை, உலகனாடுகள், நோர்வே, இலங்கை அரசாங்கத்தின் பார்வைகளினை காட்சிப்படுத்தியிருந்தார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடைபெறும் சம்பவங்களினை நாடகங்களாகச் செய்யலாம். அல்லைப்பிட்டிச் சம்பவத்தினையும், அகதிகள் இந்தியாவுக்குச் செல்லும் போது படகு கவிழ்ந்து மக்கள் இறந்த சம்பவத்தினையும் தமிழர் அல்லாதவர்கள் கூடும் இடத்தில் செய்துகாட்டாலாம். தேசியப்போராட்டத்தில் ஈடுபாடற்று தூக்கத்தில் இருக்கும் தமிழர்களைத்தட்டி எழுப்புவதற்காக தமிழிலும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்களுக்கு நன்றி கந்தப்பு.

இப்படியான தமது படைப்புக்களை, குறிப்பாக நாடகங்கள் போன்றவைகளை இந்தக்களத்திலும் இணைக்கலாம். விரும்பியவர்கள் மொழிபெயர்ப்புச்செய்து திரும்பவும் இக்களத்திலே போடலாம், வேறு களங்களிலும் போடலாம். விரும்பியவர்கள் அதனை தரவிறக்கம்செய்து நடிக்கலாம். இவற்றை வாசித்தபோதும், புதுவை அவர்களின் உரையைக் கேட்டபோதும் என் மனதில் எழுந்தவற்றைத்தான் இங்கே எழுதினேன். மீண்டும் எனது நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி கலைபண்பாட்டுக்கலகத்தினர் விரைவில் தாயகனிகழ்வுகளினை தமிழரல்லாத மக்களுக்கு வெளிப்படுத்த நாடகங்களாகச் செய்யவுள்ளார்கள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு

தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்:

உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட இனங்கள் எல்லாமே இறுதியில் வெற்றி பெற்றிருப்பது எமக்கு ஆறுதலானது. எமக்கும் அந்த நிலைமையே ஏற்படும். நாங்கள் போர்ச் சூழலுக்குள் திரும்பவும் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய படைப்பாளிகள் பங்களிப்பைக் கேட்டு நிகழ்வு ஒன்றைச் செய்திருந்தோம்.

1990 முதல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எங்களுடைய படைப்பாளிகள்தான் தர்மம்சார் எமது போராட்டத்தின் பக்கத்துணையாக இருந்து மக்களை இணைத்தவர்கள். உலகுக்குச் சொன்னவர்கள். இந்த அமைதிக்காலத்தில் நாங்கள் ஏன் கரைய வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்ப எமது பயணத்தை மீளத் தொடங்கியுள்ளோம். மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.

எமது போராட்டம் வேறு ஒரு வடிவம் எடுத்தது. இராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஈழத் தமிழனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அழுகைதான் பரிசாம். அடங்கிப் போவதுதான் விதி என்று சிறிலங்காத் தரப்பு எச்சரிக்கை வைத்திருக்கிறது. நாங்கள் அடங்கிப் போக முடியாது. இதுவரை போராட்டத்துக்கான பணிகளைச் செய்த எமது படைப்பாளிகள் இப்போது போருக்கான பணிகளைச் செய்கிறோம்.

புலத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் இரட்டைச் சுமை. 1995 ஆம் ஆண்டு காலம் முதல் 2000 ஆம் ஆண்டு காலம் வரை வன்னியிலே நாங்கள் வெற்றிகளைச் சந்தித்த போதும் அது சிறையாக இருந்தோம். எமது அழுகையின் குரல் பெரிதாக வெளிவரவில்லை. எமது கண்ணீர் பெரிதாக வெளியில் தெரியவில்லை.

இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர்.

நாளை திரும்பவும் வன்னி என்ற வட்டத்துக்குள் அடக்கி- அடக்க முடியாது- ஒடுக்கி- ஒடுக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது நாங்கள் எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க முடியாது. அந்தச் சுமையை உலகம் முழுமைக்கும் பரவிய உறவுகள் கூற வேண்டும். எமது அழுகையையும் கண்ணீரையும் நீங்கள் கூற வேண்டும். எங்களுடைய அழுகையை தாயகத்தின் மொழியில் உங்களால் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும். புலம்பெயர் தமிழராக இருப்பவர் ஆர்ட்டிலறி அடிப்பது பற்றியோ செல் அடிப்பது பற்றியோ எழுத முடியாது.

எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச், டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள்.

ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே... ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும்.

நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கிய, மாயவோஸ்கி, பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர்.

ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே!

அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே!

இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்!

ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும்.

உங்களுக்கு இரட்டை வேலை. நீங்களே வதை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாயகமும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களது துன்பத்தை எமக்குத் தெரியப்படுத்துங்கள். எமது துன்பத்தை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள்.

என் பிரியத்துக்குரிய எமது புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குள்ளே பூத்துக் கிடக்கிற இளம் படைப்பாளிகளே!

உங்களுக்கு இரட்டை வேலை இருக்கிறது. எங்களுக்கு ஒற்றைச் சுமை.. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உங்களது பங்களிப்பு பெரிது என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

இது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் குரல் அல்ல. உங்களுடைய தாயகத்தின் குரல்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாதிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நாம் அவர்களைப் பிழையாகக் கருதவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விடுதலையின் தாற்பரியத்தையும் எமது அழுகையையும் கண்ணீரையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் அவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும்.

எங்களுடைய புலம்பெயர் தமிழர்களில் கொஞ்சம் பேர் இன்னும் உறக்கத்தில்தான் இருப்பார்களாக இருந்தால் புலம்பெயர் படைப்பாளிகளுக்குப் பெரிய பணி இருக்கிறது. இதனுடன் சேர்த்து அவர்களுக்கு மூன்று பணியாகிறது. புலம்பெயர் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நித்திரையில்லா பணி தங்களது காலடியிலே விழுந்து கிடக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல்தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும்.

நடுநிலைமைக்காரர்கள்தான் இப்போது பிரச்சனை. அது என்ன நடுநிலைமை?

நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா?

சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம்- அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம்.

இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை.

தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்.

அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள்.

குளத்தோடு கோபித்துக் கொண்டு என்னமோ செய்யக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.

இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற- சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.

எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.

இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?

அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும்.

அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது.

முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம்.

எமது விடுதலை நாம் நிச்சயம் பெறுவோம். ஆயிரம் தடைகள் வரட்டும். உலகில் ஆயிரம் தடைகள் வந்தபின்னர்தான் மக்கள் வென்றிருக்கிறார்கள். நாடுகள் வென்றிருக்கின்றன. இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது. நாங்கள் வெல்லுவோம். தமிழ் மக்களின் சக்தியோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம்.

மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள். ஊரெங்கும் அணிவகுப்புகள். நீங்கள் வந்து பார்த்தீர்கள் எனில் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஆகையால் இந்த எரிகின்ற நெருப்புக்கு நீர் ஊற்றிவிடாதீர்.

எவனொருவனுக்கு விடுதலை உணர்வு வந்து நெஞ்சுக்குள் சிறகு முளைத்து பறக்காமல் இருக்கிறானோ அவன் படைப்பாளியே இல்லை ஐயா! அவன் கலைஞனே அல்ல- அவனுக்கு முதுகுகளில் இறக்கை முளைக்கும் போதுதான் படைப்புத் தளத்தை செய்ய வெளிக்கிடுகிறான்.

எனவே முதுகில் இறக்கை முளைத்த எனது உறவுப் படைப்பாளிகளே!

சிறகுகளை அகல விரியுங்கள்!

விடுதலையின் வானத்தை நோக்கியதாக அது இருக்கட்டும்!

எல்லோரும் சேர்ந்து வாருங்கள் வடம் பிடிப்போம்! இழுத்து வந்து சரியான இடத்தில் நிறுத்துவோம்!

உங்களிடமிருந்து நம் தேசம் வேண்டுகிறது- உங்கள் படைப்புளம் இன்னும் இன்னும் விரிய வேண்டும் என்று தாயகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார் புதுவை இரத்தினதுரை.

-புதினம்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சிட்னி லிட்கம் உக்கிரேனியன் மண்டபத்தில் நடைபெற்ற கருப்பு யூலை நிகழ்வின் போது----

மகிந்த அரசு பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக "தெருக்கூத்து" சிட்னி கலை பண்பாட்டுக் கலைஞர்களால் தயாரித்து வழங்கப்பட்டது.

அல்லைப்பிட்டி சம்பவத்தை தொடர்ந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய "குருதியில் குளிப்பதுதான் எங்கள் விதியா?" என்ற கவிதையை கலைஞர்கள் இசையமைத்து பறை முழக்கத்துடன் பாடலாக தெருக்கூத்து தொடங்கியது.

தெருக்கூத்தில் இரு பெண்கள், சிறுமி உட்பட 15 பேர் பங்கேற்றிருந்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

நாடகத்தில் சிறிலங்கா அரச தலைவராக வர்ணிக்கப்படுபவர் தனது கையில் இரு கடிவாளங்களை வைத்திருந்தார். அக்கடிவாளங்களில் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தை சித்தரிக்கும் வகையில் இராணுவத்தைச் சேர்ந்தவர் போன்று ஒருவரையும் மறு கடிவாளத்தில் துணை இராணுவக் கும்பலைச் சித்தரிக்கும் வகையில் துணை இராணுவக் கும்பல் உறுப்பினர் போன்று ஒருவரும் நடித்தனர்.

இந்த தெருக்கூத்தில் படுகொலைகளை விசாரணை செய்ய வரும் வரும் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்தவரை சித்தரிக்கும் வகையில் ஒருவர், படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு வந்து "அரசு மறுத்திருந்தாலும் தமிழ் மக்களின் கொலையில் சிறிலங்கா இராணுவத்தினர்தான் ஈடுபடுகின்றனர் என்பதனை நாம் நம்புகின்றோம்" என்று கூறுவார். அப்போது, அரச தலைவர் தனது கைகளில் உள்ள கடிவாளத்தில் இருக்கும் இராணுவத்தையும், துணை இராணுவத்தையும் ஏவி கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்தவரை சுற்றிவளைத்து குரைத்து கண்காணிப்புக்குழுவை பயமுறுத்துவது போன்று பாவனை செய்தனர்.

அதன் பின்னர் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்தவர் தயங்கியபடி"அரச படையினரின் ஒரு பகுதியினர்தான் இக்கொலைகளில் ஈடுபடுகின்றனர். நிகழ்வுகள் தீவிரமாக உள்ளன" என்று தான் முன்னர் கூறிய கூற்றுக்கு மாறுபட்ட கூற்றினை கூறினார்.

திரண்டிருந்த பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த தெருக்கூத்து நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அல்லைப்பிட்டி கோரக்கொலைச் சம்பவ படத்தினையும் வங்காலை படுகொலைச் சம்பவ படத்தினையும் பார்த்த பலர் கண்களிலில் இருந்து கண்ணீர் கசிந்தது.

http://www.eelampage.com/?cn=27761

º¢Ä÷ ÍõÁ¡ þÕó¾¡§Ä Á¢¸ô ¦Àâ ¯¾Å¢Â¡¸ þÕìÌõ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.