Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதம நீதியரசருக்கு பதிலாக பதில் பிரதம நீதியரசரை நியமிக்க மகிந்த திட்டம்

Featured Replies

பிரதம நீதியரசர் வெளிநடப்பு மக்கள் ஆணைக்கு எதிரான செயல்: ஜனாதிபதி
 
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தமை பாராளுமன்ற கௌரவம், மக்கள் ஆணை, மற்றும் இறையாண்மைக்கு எதிரான செயாகுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவுக்குழு மீது நம்பிக்கை வைத்து அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

நேற்று அலரிமாளிகைக்கு அராசங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் திடீரென அழைத்து அவசர சந்திப்பொன்றை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.
 

இதன்போதே மேற்கொண்டவாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச் சந்திப்பு குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்,

 

விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவினூடாக பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை மீதான விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் தெளிவுபடுத்தினார்.
 

இதன்போது பிரதம நீதியரசர் விசேட தெரிவுக்குழுவிலிருந்து வெளிநடப்புச் செய்தமையானது

பாராளுமன்ற கௌரவத்தை பாதிக்கும் செயலெனக் குறிப்பிட்டார்.
 

எனினும் அனைத்து உறுப்பினர்களும் தெரிவிக்குழு மீது நம்பிக்கை வைத்து நல்ல தீர்ப்பிற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=1999



பதில் பிரதம நீதியரசரை நியமிக்க அரசு முயற்சித்தால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்: ஜ.ச. சங்கம்
 
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மிகவும் இழிவான சொற்களைக் கொண்டு விமர்சித்துள்ளார்.
 

இதனை இந்நாட்டு சட்டத்தரணிகள் வன்மையாக கண்டிக்கின்றனர். அத்துடன் இதற்கு எதிராக நாடளாவிய ரீதியிலான

நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 

அரசாங்கம் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிக்க முயற்சிக்கின்றது. இதற்கு அரசியலமைப்பில் எந்தவொரு சந்தர்ப்பமும் கிடையாது. அவ்வாறானதொரு பாரிய அரசியலமைப்பு துரோகச் செயலை அரசு மேற்கொள்ளுமானால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2000

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, அவரது கணவர் பிரதீப் காரியவசம் மற்றும் மகன் ஆகியோர் இன்று தலதா மாளிகைக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.



CJ01(3).jpg



Ongoing Concerns on Rule of Law in Sri Lanka



Mark C. Toner
Deputy Spokesperson, Office of the Spokesperson
Washington, DC
December 7, 2012



The United States remains deeply concerned about actions surrounding the ongoing impeachment trial of Sri Lankan Chief Justice Shirani Bandaranayake. As Embassy Colombo’s statement noted earlier today, we urge the Government of Sri Lanka to guarantee due process, and to ensure that all investigations are conducted transparently and in accordance with the rule of law.

 

These latest developments are part of a disturbing deterioration of democratic norms in Sri Lanka, including infringement on the independence of the judiciary. The United States, along with our partners in the international community, continues to urge Sri Lanka to uphold the rule of law and democratic governance and to continue to address outstanding accountability and reconciliation issues.



http://www.state.gov/r/pa/prs/ps/2012/12/201684.htm

  • தொடங்கியவர்

'புதிய தலைமை நீதியரசரை நியமித்தால் புறக்கணிப்போம்'



தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு, அவரது இடத்துக்கு புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால், புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதியரசரை புறக்கணிக்குமாறு கோரும் தீர்மானமொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் எதிர்வரும் 15-ம் திகதி நடக்கவுள்ளது.


தலைமை நீதியரசருக்கு எதிரான விசாரணையை நியாயமாக நடத்தாமல் அவரை பதவிநீக்கம் செய்வதற்கு அரசாங்கம் முயன்றுவருவதாக தீர்மானத்தை முன்வைத்துள்ள சட்டத்தரணி உபுல் ஜயசூரிய பிபிசியிடம் கூறினார்.
 

புதிதாக நியமிக்கப்படக்கூடிய தலைமை நீதியரசரை புறக்கணிக்காவிட்டால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

இன்று முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
ஷிராணி விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பின்படி, தமக்குள்ள சட்டவரம்புகளுக்கு ஏற்ப தாம் செயற்பட்டுவருவதாக சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.



http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121208_shiranibasl.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.