Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அமைதி காக்கும் படையினரைக் கண்காணிக்கும் சவேந்திரசில்வா! கொதிக்கும் தமிழ் உணர்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

savendra-silva.jpg

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை கண்காணிக்கும் பொறுப்பு, ஐ.நாவிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி லெபனானில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அமைதி காக்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பு சவேந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது லெபனானில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் 58ஆவது டிவிசனை வழிநடத்திச் சென்றவர் இவர். அங்கு கணக்கிடப்படாத மனித படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் மீறலுக்கு இவரே முக்கியபொறுப்பில் உள்ளவர்.

இதனால் இவருக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இருப்பினும் ஐ.நா செயலகத்தினால் இவர் தெரிவு செய்யப்படவில்லை என்றும் ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போரில் ஏராளமான மக்களின் படுகொலைகளுக்கு காரணமான ஒருவரும், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புக்களினதும் மனித உரிமையை மதிக்கும் நாடுகளினதும் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தவரான சவேந்திரசில்வாவுக்கு ஐநா அமைதி காக்கும் படையில் முக்கிய கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டமையை இட்டு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17776:2012-12-09-11-04-52&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் ஐ.நா அமைதிப் படையினர் சவேந்திரா சில்வாவால் கண்காணிப்பு! – இன்னர் சிற்றி பிரஸ் விசனம்!!

 

போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகளை கண்காணித்தமை தொட்ர்பில் இன்னர் சிற்றி பிரஸ் விசனம் வெளியிட்டுள்ளது. 

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தவர்.

 

இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களோடு தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பின்னர் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட போது, சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

 

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் ரமேஸின் படுகொலைக்கு இவர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி இவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்ட போதிலும், இராஜதந்திரிகளுக்கான வழக்கு விலக்குரிமையைக் காரணம் காட்டி அமெரிக்க நீதிமன்றம் இவ்வழக்கை நிராகரித்திருந்தது.

 

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினருக்கான ஆலோசனைக் குழுவுக்கு இவர் நியமிக்கப்பட்ட போதும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கடும் விசனத்தையும், கண்டனங்களையும் வெளியிட்டிருந்தன.

ஆயினும் இந்த நியமனத்தை தான் வழங்கவில்லை எனவும், ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே இந்நியமனத்தை வழங்கியிருந்தன எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையிலேயே அவர் தற்போது லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

 

இதனிடையில் தென்னாபிரிக்காவுக்கான துணைத் தூதுவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறிலங்கா அரசாங்கம் அந்நாட்டுக்கு பரிந்துரைத்திருந்தது.

ஆனால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்காவின் துணைத் தூதுவராக நியமிக்கப்படுவதை தென்னாபிரிக்கா நிராகரித்திருந்தமை தெரிந்ததே.

 

http://tamil24news.com/news/?p=32866

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் சிங்களவன் அசத்திறான்.. :D எங்களுக்கு விநாயகம், நெடியவன் ரேஞ்சுதான் லாயக்கு.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.