Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களை விடுவிக்க கூட்டமைப்பு உதயம்

Featured Replies

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு’ என்ற ஓர் அணியின் கீழ் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இக் கூட்டமைப்பில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வண.பிதா சக்திவேல், சி.பாஸ்கரா ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

 

இது குறித்து கஜேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்,

 

பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தினுடைய மூளை. அந்த வகையில் அரசாங்கம் ஒரு இனத்தின் மீது கைவைத்து அந்த இனத்தின் எதிர்காலத்தை அழிக்க முற்படுகின்ற தென்பதை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள் வெளிப்படுத்துகின்றன. இதுவே அரசாங்கத்தின் நோக்கமும் ஆகும். இந் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத் திடம் பத்து மாணவர்களின் பெயரடங்கிய பட்டியல் ஒன்றை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். இதில் 5 பேர் மருத்துவ பீட மாணவர்கள் என்பதோடு இப்பட்டியலில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் யூனியன் தலைவர்களின் பெயர்கள் உள்ளடங்குகின்றன.


ஆனால் அவை உத்தியோகபூர்வமான பத்திரத்தில் வழங்கப்படவில்லை. காரணம் எதிர்காலத்தில் வரவுள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. எனவே இக் கூட்டமைப்பானது அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக போராடவே உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தாக்குதல் மற்றும் ஏனைய தமிழ் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பாகவும் எமது போராட்டம் தொடரும். இதேவேளை கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாளை 10ஆம் திகதி கிளிநொச்சியிலும் 14 ஆம் திகதி வவுனியாவிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

http://valampurii.com/viewnews.php?ID=35786

  • தொடங்கியவர்

ஏகலைவச் சகோதரர்காள் துரோணர்கள் விரும்ப மாட்டார்கள்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-12-08 12:45:16| யாழ்ப்பாணம்]


வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மாணவர்களை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையி லான குழுவினர் சந்தித்திருந்தனர். இதன்போது; கைதான மாணவர்களில் ஒருவர், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன் என்று கூறினாராம். அந்த மாணவனின் நம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் எங்கள் பாராட்டுக்கள். ஆனாலும் அந்த அன்பு மாணவன் சிங்களவர்களின் அரசியலைப் புரிந்து கொண்டிருந்தாலும் எங்களவர்களின் அரசியலைப்புரிந்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டோம்.

 

 

அன்புச் சகோதரா! ஏகலைவர்கள் குருவாக வரு வதை துரோணாச்சாரிகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்க. உங்கள் தமிழ் உணர்வும் தடுப்பு முகாம்களில் நீங்கள் படும் வதைகளும் தமிழ் உணர்விற்கான உங் களின் கடும் உழைப்பாக-முயற்சியாக இருக்கலாம். ஆனால் துரோணர்களுக்கு அதுதான் கட்டை விரல். அதைத்தான் அவர்கள் தானமாகக் கேட்பார்கள். தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் வாழவிட்டு, உங்கள் உணர்வுகளுக்கு நெய்யூற்றி அக்கினித் தீ மூட்டி தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள் ளும் எங்கள் துரோணர்களுக்கு நீங்கள் ஏகலை வன்கள். அன்புத் தம்பிகாள்! ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ யாரைச் சந்தித்தாலும் அவருடன் குறைந்தது இரண்டு பேர் இருப்பார்கள்.

 

ஆனால் எங்கள் சம்பந்தன் ஐயா ஜனாதி பதியை தனித்துச் சென்றுதான் சந்திப்பார். அந்தத் தனிமை எதற்கானது? மிக நீண்ட அரசியல் அனுபவமுடைய, ஆரம்ப காலங்களில் தமிழர்களுக்காக, சிறை சென்ற மாவை சேனாதிராசாவையாவது அவர் கூட்டிச் செல்லலாம் அல்லவா? ஏன் அதைச்செய்யவில்லை. இப்போது கூட, பிரதம நீதியரசருக்கான விசார ணைகுழுவில் சம்பந்தர் இடம் பெற்றது ஏன்? நீங் கள் ஆச்சு உங்கள் விசாரணை ஆச்சு என்று பேசா மல் இருந்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை. அருமைத் தம்பிகாள்; தம்பி பிரபாகரன் யாரை நம்பிக் கெட்டாரோ அதை நாம் செய்யாமல் இருக்க அதனை நல்ல அனுபவப் பாடமாகக் கொள்ள வேண்டும்.

 

ஓ...! பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஞ் ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவனின் தாய் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் யாழ்ப் பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து துணைவேந்தரின் அலுவலகம் வரை ஐயகோ! என்று அழுத ஒலி கேட்டு கலங்காதவர் யாரும் இருக்க முடியாது. உன் தாயின் கண்ணீரில் என் அரசியல் பிழைப்பு என்ற வஞ்சத்தனம் ஒழியும்வகையில் உங்கள் அரசியல் இலக்கை நிறைவேற்றுங்கள். அழுதாலும் சிரித்தாலும் நாம் அனைவரும் என்ற நிலைமை உருவாக வேண்டும். அப்போது தான் உரிமை வெல்லப்படும்.

 

http://www.valampurii.com/viewnews.php?ID=35770

Edited by akootha

இப்போது கூட, பிரதம நீதியரசருக்கான விசார ணைகுழுவில் சம்பந்தர் இடம் பெற்றது ஏன்? நீங் கள் ஆச்சு உங்கள் விசாரணை ஆச்சு என்று பேசா மல் இருந்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை. 

 

தமிழ்ர்கள் விரும்பவில்லை. ஆனால் அதை சிங்களவரின் தெரிவுக்குழு என்று பகிஸ்கரிக்க கூடாது என்றுதான் சம்பந்தர் பகிஸ்கரிக்கவில்லை. அதாவது தான் பிரச்சனைகள் இல்லையாயின் தெரிவுக்கு குழுவுக்கு போவேன் என்பதை காட்டத்தான் செய்தார். ஆனால் இந்ததெரிவுக்குழுவில் பிரச்சனை இல்லை என்று கூற முடியாது. விமல், மற்றும் ஒருவர் சிராணியுடன் கோடு மூலம் முரணியிருந்தார்கள் என்பதை எதிர்தரப்பு வழக்கறிஞ்ஞர்கள் காட்டியிருந்தார்கள். 

என்னுடய அப்பிபிராயம் சம்பந்தடர் தனக்கு தீர்வுக்கான குழுவிலோ அல்லது இந்த குழுவிலோ நமபிக்கை இல்லை என்று கூறியிருக்கலாம். சிராணியின் வழக்கு ஆவணங்களை வழமையான கோட்டு முறைப்படி சிராணியின் வழக்கறிஞ்ஞர்களுக்கு நேர்முக விசாரணௌ வரும் வரையில் கையளிக்கவில்லை. இதை செய்யும் வரை தன்னும் போக மறுத்திருக்கலாம்.   போகாமல் விடுவதை விட போனதால் எதாவது நனமை வந்தது என்பதை கூட்டமைப்பு பொது இடங்களில் விளங்க படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.