Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை தமிழர்களே தமிழர்களாக ஆளுவதற்கான....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை தமிழர்களே தமிழர்களாக ஆளுவதற்கான தமிழ்த்தேசியத்தைபெற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலமை தொடர்பில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றுவது அவசியமா?

 
sampaa%20kajeendran.jpgஇன்று பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவராக விளங்கக்கூடிய சம்பந்தன் அவர்கள் உலகத்தில் பரந்து வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வுகளை சிதைக்கும் வகையில் உரையாற்றினார்.

யுத்தநிறுத்தம் நிறுவப்பட்டு சமாதானம் தோன்றிய காலத்தில் தமிழர் தேசத்திலும், மலையகத்திலும் இருந்த தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமாபெரும் அரசியல் சக்தியை உருவாக்க வேண்டுமென விரும்பி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. விரும்பியும் விரும்பாமலோ மிகவும் வயதுமுதிர்ந்தவரான  இரா சம்பந்தன்   வேறுவாய்ப்பின்றி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவராக மாறினார்.  விடுதலைப்போர் மௌனிப்புக்கு பிறகு உலகுக்கு தமிழர்களது பிரச்சனைகளை எடுத்துக்கூறும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைமையும் விளங்கும் என உலகத்தமிழர்களால் பெரிதும் நம்பப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கக்கூடிய ஐயா சம்பந்தன் அவர்கள் இந்த கூட்டமைப்பையே உருவாக்கிய ´´´´தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாலே அவர்களுக்கு அழிவு நேர்ந்தது என்றும், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறு தாம் கோரவில்லை´´´´ எனவும் இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியுள்ளார்.

இவரது இந்தக்கூற்று உலகத்தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகத்தில் வாழுகின்ற அனைத்து மக்களைப்போல எம்மின மக்களும் அனைத்து சுதந்திரத்தோடும், தன்மானத்தோடும் வாழவேண்டும் என நினைத்து உயிரை ஆயுதமாக வைத்து களமாடிய வீரர்கள் எமது தேசியவீரர்கள். ஆனால் நீங்களோ எமது மண்ணையும், எம்மக்களையும் எம்வாக்குகளைப்பெற்றே ஆளவேண்டும் என்று வந்தவர்கள். ஏன்என்றால் எங்களுக்கு எங்களது உரிமைகளையும், எங்கள் அடிப்படைபிரச்சனைகளையும் தீர்ப்பதாக தேர்தல் நேரங்களில் முழங்கி எம்வாக்குகளைப்பெற்ற நீங்கள் இந்தியாவுக்கும், அமேரிக்காவுக்கும் இன்னும் சில நாடுகளுக்கும்  செல்வதைத்தவிர வேறுஎன்ன உங்களால் சாதிக்கமுடிந்தது ஐயா. நீங்கள் அங்கு சென்றும் எப்படி நீங்கள் எங்கள் பிரச்சனைகளை சரியாக கூறியிருக்கிறீர்கள் என்று நம்புவது. நீங்கள் இன்று பாராளுமன்றத்தில் நேரடியாகவே சொல்லிவிட்டீர்களே தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று. உறுதியாக சொல்கிறோம் ஐயா அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் நீங்கள் ஒதுங்கி விடுங்கள். இல்லை நீங்கள் திரும்பவும் வருவீரகள் ஆனால் நீங்கள் போட்டியிடும் தொகுதியிலே துரத்தி துரத்தி அடிப்பார்கள். நீங்கள் இப்போது மட்டுமல்ல பல தடவைகள் ஏமாற்றியிருக்கிறீர்கள். எனது மக்களையும், எங்களது சொத்துக்களையும் அழித்த சிங்கக் கொடியை ஏந்திப்பிடித்தீர்கள். என்முப்பாட்டனார்களும், என் அண்ணன் பிரபாகரனும் ஏந்திப்பிடித்த புலிக்கொடியை ஏந்த மறுத்தீர்கள் ஐயா நீங்கள் செய்தவற்றில் எல்லாவற்றிற்கும் மகுடம் சேர்க்கும் முகமாக இன்று பாராளுமன்றத்திலும் பேசிவிட்டீர்கள். நீங்கள் உண்மையிலே எங்களுக்காக பாராளுமன்றம் செல்லவில்லை எங்களை ஆளவே சென்றீர்கள் என்பது இதிலிருந்து தெளிவாக புலப்படுகிறது.

நீங்கள் இதனையும் விட நாங்கள் இராணுவத்தை வடக்கு பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு கோரவில்லை என்கிறீர்கள். இராணுவத்தால் தினந்தோறும் நடாத்தப்படும் அடாவடித்தனங்களை அறிந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியும் போருக்கு பின்னர் எஞ்சியிருக்கும் எம்முறவுகளை அழிக்க இராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவுவது போல் பேசியிருக்கிறீர்கள். உங்களையும். உங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் நம்பி வந்த இளைஞர்களை இன்று நடுவீதிக்கு தள்ளியிருக்கிறீர்கள். நாங்கள் எமது தேசியத்தலைமையின் மௌனிப்புக்கு பின் ஏதுமற்ற ஏதிலிகளாக நின்ற போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும் ஓங்கி குரல் கொடுத்தார்கள். இவர்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் இலங்கை இராணுவத்தாலும், இராணுவக்காடையராலும் தாக்கப்பட்டார்கள். மிரட்டப்பட்டார்கள், எச்சரிக்கப்பட்டார்கள். ஆனால் நீங்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் எமது சுயநிர்ணய உரிமை பற்றியோ, எங்கள் தேசியம் பற்றியோ கதைப்பதில்லை. நீங்கள் உங்கள் அதிகாரத்தின் மூலம் உங்கள் உறுப்பினர்களையும் கதைக்கவிடுவதில்லை. நிலமை இவ்வாறிருக்க நீங்கள் எங்கள் உரிமையை பற்றி பேசாது இருந்தாலும் பேசுபவர்களையாவது விட்டிருக்கலாம். அதைத்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய பயணத்தின் போது தாம் சுயமாக பேச சிலர் விடுவதில்லை என்றும், தொடர்ந்தும் இப்படியான சூழ்நிலை உருவாகுமானால் நாங்கள் அதனை மக்களுக்கு பகீரங்கப்படுத்தி    நாங்களும் பல உறுதியான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் கூறியிருந்தார்.

இப்போதய சூழ்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழர்களது உரிமை, தன்னாட்சி அதிகாரம், தாயகக்கொள்கைகளை முன்னிறித்தி அதி தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களது போராட்டங்களில்  சில தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காண முடிகிறது, ஆனால் தலைவராக விளங்கும் நீங்களோ வருவதுமில்லை, போராட்டங்களையும் பெரும்பாலும் நடத்துவதும் இல்லை.

ஒரு உயரிய போற்றுவதற்குரியதுமான விடுதலை நோக்கிற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று அதனையே சீர்குலைத்தும் வருகிறது. விடுதலைப்புலிகளின் மௌனிப்புக்கு பின் உலக நாடுகள் தமிழரின் பிரதிநிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே பார்த்து வரும் நிலையில்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சனையை விற்பனைப்பொருளாக மாற்றி விற்று வருகிறது. இதனால் பல அதிரடியான, புரட்சிகரமான மாற்றங்கள ஏற்படுத்தாவிட்டால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலமும், அதிலும் உயரிய எம்மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

எமது மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக ஆயிரமாயிரமாக மடிந்தார்களோ அவர்கள் கண்ட கனவை நனவாக்கவும் தமிழர்களை தமிழர்களே தமிழர்களாக ஆளுவதற்கான அதிகாரத்தை பெற உலகநாடுகளுக்கு கடந்த கால வரலாறுகளை தெரியப்படுத்தி தனித்தமிழீழமே எமக்கான தீர்வுஎன அறிவிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை கருத்தில் கொண்டே அரசியல் முன்னகர்வுகளை நகர்த்த வேண்டும். அதன் முதல்கட்டமாக தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொள்பவர்களே கூட்டமைப்பில் இருக்கமுடியும். எவரெவர்தேசியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு கூட்டமைப்பு இடமளிக்கக்கூடாது. முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலமை அவசரமாகவும், அவசியமாகவும் மாற்றப்படவேண்டும். ஏன் என்றால் தமிழ்த் தேசியத்தையே மதிக்காத தலைவர் தமிழ்த் தேசியகூட்டமைப்புக்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும்.சம்பந்தரின் தலைமைக்குரிய ஆயுள் தமிழ்த்தேசிய இனத்தின் இருளாக காணப்படுகிறது. எனவே நிச்சயமாக தலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இப்படியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடிப்படையான மாற்றங்களை புரட்சிகரமான மாற்றங்களை செய்யுமாகில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும்பக்கபலமாக உலகில் பரந்து வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழர்களும் ஒருமித்த குரலில் குரலெழுப்புவார்கள். இதன் மூலம் தமிழர் தாய்நிலமெங்கும் பெரும்புரட்சி வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஈழதேசம் இணையத்திற்காக ஈழப்பிரியன்

 

நன்றி -ஈழதேசம்

 

http://www.eeladhesam.com/index.php?option

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.