Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தகைய சவால்கள் வந்தாலும் பிரதம நீதியரசர் பதவி விலக மாட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எத்தகைய சவால்கள் வந்தாலும் பிரதம நீதியரசர் பதவி விலக மாட்டார்! 
[Monday, 2012-12-10 09:32:25]
 
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி விலகப் போவதில்லை. எத்தகைய சவால்களையும் சந்திப்பதற்கு அவர் தயாராக உள்ளார் என்று அவரது சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக மறுக்கின்றோம். அந்தக் குற்றச்சாட்டுகளையோ அல்லது முடிவினையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற நீதியரசர் சிராணி திலகவர்த்தன சாட்சியமளித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  
கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறி பிரதம நீதியரசர் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்ததுடன் அதன் விசாரணைகளிலிருந்தும் விலகியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தெரிவுக்குழு கூடியபோது எதிர்க்கட்சிகளைச் சோ்ந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களும் பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைகளிலிருந்து விலகியிருந்தனர். எனினும் எதிர்க்கட்சிகளின் அங்கத்தவர்கள் இல்லாத நிலையில் தொடர்ந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளின் முன் தோன்றிய உயர்நீதிமன்ற நீதியரசர் சிராணி திலகவர்த்தன பிரதம நீதியசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி பதவி விலகுவது மடமை. ஆரம்பத்தில் மகிந்தாவுடன் ஒரு டில் போட்டு மந்திரி பதவி ஒன்றை வாங்கிகொண்டு பிரதம நீதி அரசர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கலாம். இப்போ செயத்தக்கது, குற்றத்தை மறுத்து அதனால் கிடைக்ககூடிய தீர்ப்பாகிய சிறைக்கு போவது.  அப்போது பொன்சேக்காவுக்கு மாதிரி மேற்கு நாடுகள் தலை இடும். வெளியில் வரும் போது எதிர்க்கட்சித் த்லைவராகலாம். இது தமிழருக்கு பேச்சுவார்த்தை முன்னேற்றம் கட்ட மேற்குநாடுகளை கிட்ட அழைத்துவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.