Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க தடைவிதிப்பு !

Featured Replies

படையில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க தடைவிதிப்பு !

10 Dec 2012

10 December, 2012 

army-tamil-girls.jpgதமிழ்ப் பெண்கள் 100 பேரை தாம் படையில் இணைத்துள்ளதாக சமீபத்தில் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் வெறும் பணிப் பெண்கள் போலப் பாவிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந் நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் வைத்து படையில் இணைந்துகொண்ட தமது பிள்ளைகளை பாக்கசென்ற பெற்றோர்களுக்கு படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்திகளும் கசிந்துள்ளது.

தமது பெற்றோர் தம்மைப் பார்க்க வந்துள்ளார்கள் என அறிந்த சில பெண்கள் வெளியே வந்து அவர்களைப் பார்க்க எத்தணித்துள்ளார்கள். இருப்பினும் அவர்களையும் படையினர் தடுத்துவிட்டனர். இதனையடுத்து, சில பெண்கள் தாம் இராணுவத்தில் இனி இருப்பதில் பயனில்லை என்று கூறி, அங்கிருந்து புறப்படத் தயாராகியுள்ளனர். இவர்களையும் இலங்கை இராணுவம் அச்சுறுத்தி, வெளியே செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது

 

http://maavirarmann.com/news.php?newsid=43126

 

SRI LANKA: Tamil women coerced into joining the military



Womens Action Network (WAN), as a collective of 11 women's groups from the North and the East, is deeply concerned by the recent efforts to recruit women into the military in the districts of Killinochchi and Mullaitheevu.

 

Post-war development has failed to provide the most basic needs for those who live in Killinochchi and Mullaitheevu, especially the women of the area. People continue to live in vulnerable situations without sufficient security and independence, so may even lack the basics such as a safe place to sleep. After the war over 60% of families in Vanni are headed by women and they have become the primary wage earners of their families, in addition to being the main care givers in the household.



http://www.humanrights.asia/news/forwarded-news/AHRC-FST-060-2012

படையில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க தடைவிதிப்பு !

10 Dec 2012

10 December, 2012 

தமிழ்ப் பெண்கள் 100 பேரை தாம் படையில் இணைத்துள்ளதாக சமீபத்தில் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் வெறும் பணிப் பெண்கள் போலப் பாவிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந் நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் வைத்து படையில் இணைந்துகொண்ட தமது பிள்ளைகளை பாக்கசென்ற பெற்றோர்களுக்கு படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்திகளும் கசிந்துள்ளது.

தமது பெற்றோர் தம்மைப் பார்க்க வந்துள்ளார்கள் என அறிந்த சில பெண்கள் வெளியே வந்து அவர்களைப் பார்க்க எத்தணித்துள்ளார்கள். இருப்பினும் அவர்களையும் படையினர் தடுத்துவிட்டனர். இதனையடுத்து, சில பெண்கள் தாம் இராணுவத்தில் இனி இருப்பதில் பயனில்லை என்று கூறி, அங்கிருந்து புறப்படத் தயாராகியுள்ளனர். இவர்களையும் இலங்கை இராணுவம் அச்சுறுத்தி, வெளியே செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது

 

http://maavirarmann.com/news.php?newsid=43126

 

 

மேலே உள்ள செய்தி உண்மை என்றால் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டிற்கும் இந்த பெண்கள் விடயத்தில் சிங்கள 'அரசு' நடப்பதற்கும் என்ன வித்தியாசம்??

  • கருத்துக்கள உறவுகள்
ராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை பெற்றோர் பார்வையிடுவதற்கு அனுமதி மறுப்பு; பயிற்சிக்காக வேறு இடத்துக்கு அனுப்ப ஏற்பாடு
 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகள்  கிளிநொச்சி, கிருஷ்ணபுரத்தில் இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்பிள்ளைகளை 3 மாதங்களுக்குப் பார்வையிட முடியாது எனவும் அவர்கள் மேலதிக இராணுவப் பயிற்சிக்காக வேறு இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர் என்றும் இராணுவத்தினரால் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அறியவருகிறது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் ஏமாற்றத்துடன் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்டனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகள் கிளிநொச்சி, கிருஷ்ணபுரத்தில் இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களைப் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெற்றோர்  பிள்ளைகளைப் பார்வையிடச் சென்றுவந்தனர். இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தமது இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளைப் பார்வையிடச் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
 
உங்கள் பிள்ளைகளை மூன்று மாதங்களுக்குப் பார்வையிட முடியாது என்று அங்கு கடமையிலிருந்த  இராணுவ அதிகாரி ஒருவர் பெற்றோருக்குத் தெரிவித்து அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
 
தமது பிள்ளைகள் இராணுவத்தில் இணைக்கப்படும்போது அந்தந்தப் பகுதிகளிலேயே பயிற்சியளிக்கப்படுவர் என்றும், சொந்த இடங்களிலேயே கடமையாற்றுவர் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது வேறு இடங்களுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டதால் தாம் பயமுற்று இருப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
 
12 டிசெம்பர் 2012, புதன் 9:25 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.