Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிந்தனை செய் மனமே !!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதுரிய மனிதர்கள்.

 

ஒருவன் தான் விரும்புவதை மற்றவர்களின் கருத்தாக அவர்களிடம் இருந்தே வெளிவரும்படி சாமர்த்தியமாகப் பேசுவதுதான் சாதுரியம்.சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவதும், செய்வதும் சாமர்த்தியமே. மற்றவர்கள் கோபம் கொள்ளாதபடி தன கருத்துக்களை அமைதியாக மென்மையாக எடுத்து சொல்லும் கலையே சாதுரியம்.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/01/blog-post_4.html

ஒரு பக்கத்தாலை பார்த்தால் சுழியர்கள் எனவும் கூறலாம்.

தாங்கள் நினைத்த கருத்தை  மற்றவர்களின் விருப்பமான கருத்தாக  மாற்ற 

ஒரு திறமை வேண்டும் கோமகன்  தொடருங்கள் :D

  • Replies 208
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அடக்கம்

 

கோயில் யானை ஒன்று நன்றாக்க்குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம். ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம். யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்,

 

“பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

 

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை,

 

“அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.

 

அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.

 

“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

 

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?

 

 

ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
 
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
 
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
 
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.
 
நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.

 

படித்ததில் பிடித்தது

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச்சிறுவன்பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தனவிலை 500ரூபாய் என்றார் கடைக்காரர்கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்றுதனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.

 
"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறதுஇது விற்பனைக்கு இல்லையா?'' என்றுகேட்டான் சிறுவன்.
 
Dog.jpg
"இது உடற் குறைபாடுள்ள குட்டி.ஒரு கால் இல்லாமலேயேபிறந்ததுஆகவே இதுவிற்பனைக்கு இல்லை'' என்றார்கடைக் காரர்.
 
அந்தக் குட்டியைத் தூக்கிவிளையாடிய சிறுவன்தனதுபையில் இருந்து 500 ரூபாயைஎடுத்து நீட்டினான். "இந்தக்குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.
 
"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனேநீ வேறு நல்ல குட்டியைவாங்கிக் கொள்ளலாமேகால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன்தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.
 
சிறுவன்தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக்காட்டினான்அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.
 
உடற் குறைபாடு உள்ள சிறுவன்தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல்இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும்பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
 
நீதி:- மற்றவரது இடத்தில் நம்மை வைத்துஅவர்களது பிரச்னைகளையும்துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும்

 

http://tamil.okynews.com/2012/12/blog-post_5046.html?utm_source=blog&utm_medium=gadget&utm_campaign=bp_random

  • 2 months later...
  • தொடங்கியவர்

மற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச்சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500ரூபாய் என்றார் கடைக்காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்றுதனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.

 
"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்றுகேட்டான் சிறுவன்.
 
Dog.jpg
"இது உடற் குறைபாடுள்ள குட்டி.ஒரு கால் இல்லாமலேயேபிறந்தது. ஆகவே இதுவிற்பனைக்கு இல்லை'' என்றார்கடைக் காரர்.
 
அந்தக் குட்டியைத் தூக்கிவிளையாடிய சிறுவன், தனதுபையில் இருந்து 500 ரூபாயைஎடுத்து நீட்டினான். "இந்தக்குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.
 
"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியைவாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன்தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.
 
சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக்காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.
 
உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல்இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும்பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
 
நீதி:- மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும்துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும்

 

http://tamil.okynews.com/2012/12/blog-post_5046.html?utm_source=blog&utm_medium=gadget&utm_campaign=bp_random

 

 

ஆக்கபூர்வமான இணைப்பிற்குமிக்க நன்றிகள் நுணா .

  • தொடங்கியவர்

கண்ணுக்கு தெரியாத வேலி

 

நம்மில் பலர் பெரும்பாலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வோரு மாதமும், ஒவ்வோரு வருடமும் ஒரு குறுகிய வட்டதுக்குள்ளேயே நமது ஒட்டம் நின்று விடுகிறது.
 
ஏன் நாம் மாற்றத்தை விரும்புவதில்லை?
ஏன் நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்தி புதிதாக நாம் ஏதுவும் முயற்சிப்பதில்லை?
 
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான்… அதுதான்  கண்ணுக்கு தெரியாத வேலி ,
 
கூண்டுக்குள் இருக்கும் கிளியை பாருங்கள். நாள் கணக்கில் அது கூண்டுக்குள்ளேயே இருந்து பழகி விடுகிறது. பின்னர் அதை கூண்டுக்கு வெளியே விட்டாலும் சிறிது நேரம் உலாவி விட்டு திரும்ப கூண்டுக்கே திரும்பி விடும்.
 
ஆட்டு மந்தையை பாருங்கள். மந்தையை சுற்றி வேலி போடப்பட்டிருக்கும். ஆடுகளை அந்த வேலிக்குள்ளேயே மேய்த்து பழக்குவார்கள். ஆடுகளும் அந்த வேலிக்குள்ளேயே மேய்ந்து பழகிவிடும்.  பின் அங்கு வேலி இல்லையென்றாலும் அது குறிப்பட்ட தூரத்தை தாண்டிச் செல்லாது.
 
நாமும் அப்படித்தான். நாம் வளர வளர தவறான எண்ணங்களும், அவநம்பிக்கையும் கூடவே வளர்கிறது. நாமும் அதை நம்ப ஆரம்பித்து விடுகிறோம். நமது வட்டத்தை சுருக்கிக் கொள்கிறோம். வழக்கத்தை மாற்றி, மீறி புதுமையாக எதையாவது செய்தால் உலகம் பழிக்குமோ என்று அஞ்சுகிறோம். கண்ணுக்கு தெரியாத வேலியை நமக்கு நாமே போட்டுக் கொள்கிறோம். அதை உண்மையான வேலி என்று நம்பி விடுகிறோம்.
 
நமது வேலையிலும் வாழ்க்கையிலும் ஒரு சவால் விடும் சூழ்நிலை வரும்போது இந்த வேலியின் பயத்தினால் அதை எதிர்க்கொள்ளாமல் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறோம். கானல் நீரை உண்மை என்று நம்புவதைப் போல இந்த கற்பனை வேலியை உண்மை என்று நம்பி நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம்.
 
வேலியை எதிர்கொள்ள தயாராகுங்கள். அதற்கு சவால் விடுங்கள். இனிமேல் 
சவாலான சமயங்களை எதிர்கொள்ளும் போது, அதை பார்த்து ஒதுங்காமல் உங்கள் 
மனததையும் எண்ணத்தையும் ஒருங்கிணைத்து அதை எதிர்க்கொள்ளுங்கள்.
 
ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
எதை பார்த்து நீங்கள் ஓதுங்குகிறீர்களோ அது உங்களை விடாமல் எதிர்கொள்ளும்
அதையே நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்கள் கையில் வெற்றி நிச்சயம்!!
 
  • தொடங்கியவர்

கோபம் கூடாது.

 

கோபம்!எல்லோருக்கும் சுலபமாக வந்து விடுகிறது.எத்தனை பேரால் அதை அடக்க முடிகிறது?உங்கள் வளர்ச்சி நிச்சயம் கோபத்தில் இல்லை.கோபத்தை அடக்குவதில்தான் இருக்கிறது.அதற்கு என்ன வழி?

 

*இப்போது நாம் கோபமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் ,அதை ஒப்புக் கொண்டால் மட்டுமே அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது பற்றி யோசிக்க முடியும்.யோசித்தால் இந்தக் கோபம்  நாமே வரவழைத்துக் கொண்டது தான் என்பது புரியும்.

 

*கோபத்தின் போது பேசும் வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்பது  அமைதியாக இருக்கும்போதுதான் தெரியும்.எனவே சூடான பேச்சுக் கிளம்பும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறி சூடு ஆறியபின் திரும்ப வரலாம்.

 

*கோபத்திற்கு ஒரு இலக்கு வேண்டும்.எனவேதான் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம்.கோபம் வரும்போது யார் மீது கோபப்பட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

 

*கோபத்தின் அடிப்படைக் காரணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். இல்லாவிடில் யார் மீதாவது குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பீர்கள்.காரணம் தெரியாமல் போகும்.அம்மாதிரி நேரங்களில் மனைவியிடமோ,நெருங்கிய நண்பனிடமோ மனம் விட்டுப் பேசுங்கள்.காரணம் தெரிய வரும்.

 

*அனுபவமே நல்ல ஆசான்.யார்யார் உங்களுக்கு கோபமூட்டுகிறார்கள் என்னென்ன இடத்தில் எந்தெந்த சந்தர்ப்பத்தில் கோபம் வருகிறது என்பதை அறிந்து அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.அதேபோல நீங்கள் என்ன பேசினால் அல்லது என்ன செய்தால் மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது என்பதை அறிந்து கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

 

*கோபம் வரும்போது உங்களை ஏதாவது ஒரு வேலையில் மூழ்கடித்துக் கொள்ளுங்கள்.நிதானம் திரும்பி விடும்.

 

*இன்று ரொம்பத் தலை போகிற விசயமாக தெரிவது கொஞ்ச நாள் கழித்து அப்படித் தெரியாது.அல்பமான விஷயமாகக் கூடத்தெரியும்.நாள் கடத்திப் பாருங்கள்.

 

*சில அக்கிரமங்களைக் காணும்போது கோபம் வருவது நியாயமே.ஆனால் வெறுமனே கோபப்படாமல் நாலு பேருடன் சேர்ந்து அந்த நிலைமைக்குப் பரிகாரம் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.

 

The guide to knowing yourself என்ற நூலிலிருந்து.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

திருடன்

 

பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இதுதான் நமக்குள் இருக்கும் திருடன். அந்தத் திருடனோடு நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை. வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்.

 

புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது. ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர். குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள். காமவயப்பட்டவரே பாலுறவைக் கண்டித்துப் பேசுவர். நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும்.  ''ஒருவன், 'திருடன்,திருடன்,விடாதே பிடி,'என்று கத்தினால், அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்'' என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்.

 

நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை  கூறும்போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம். நமக்குள் ஏற்படும் போராட்டமே இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது. நமக்குள் முரண்பாடு தோன்றாதபோது, போராட்டம் இல்லாதபோது இன்னொருவர் மீது பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று விடுகிறது. மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/06/blog-post_15.html

  • தொடங்கியவர்

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல

 

நாம் சில வேளையில் வெற்றி பெறுகின்றோம். சில சமயங்களில் தோல்வி அடைகின்றோம். இவை இரண்டும் நிந்தரமானாது அல்ல.
 
இரவும், பகலும் போல இவை இரண்டும் மாறி மாறித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வந்து போகிறது.
 
வெற்றி கிடைத்தால் மிகவும் பூரிப்பு அடைகின்றோம். தோல்வி அடைந்தால் மிகவும் துவண்டு போய் விடுகின்றோம். எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்க என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் உலகம் அறிய ஒரு மா மனிதராக திகழ்ந்தார்.
 
நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.
 
ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
 
நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான். தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள்.
 
தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும். உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும். தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல.
 
ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக வெற்றி அடைகின்றார்கள். எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள்.
நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.
 
  • தொடங்கியவர்

அல்வா துண்டு யாருக்கு ?

 

 

போய்யா ! ஒரே போர் அடிக்குது.. . என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் !

அதுவும் பள்ளி, கல்லூரிகள் எல்லாம் விடுமுறையில் இருக்கிற நேரத்தில் வீட்டுல உட்கார்ந்துகிட்டு பயங்கர போரடிக்குது... என்ற வார்த்தைகளை எந்த வீட்டுக்குப் போனாலும் பஞ்சமே இல்லாமல் கேட்கலாம் !

 

சரி.. . போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்.. .? சுருக்கமாகச் சொன்னால் வெறுமனே உட்கார்ந்து கிடப்பது, தூக்கம் வராதபோதும் படுத்திருப்பது போன்ற செயல்களை - நம் மனதுக்குப் பிடிக்காத செயல்களை.. . வேறு வழி தெரியாமல் செய்யும்போதுதான் நமக்கு போரடிக்கிறது !

 

நம் மனதுக்குப் பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்துச் செய்தாலும் நமக்கு போரடிக்காது ! ஆனால், இந்த விஷயத்தில் நம்மில் பலருக்கு விளங்குவதில்லை ! நாம் விருப்பப்பட்டுச் செய்வதற்கென்றே சில வேலைகள் காத்திருந்தால்கூட, அதை நாம் தள்ளிப்போடுகிறோம் !

 

உன் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் இருந்தால், அதைச் செய்வதற்கு நேரத்தைத் தள்ளிப்போடாதே. .. என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு !

வெள்ளைக்காரன், அரேபின், இந்தியன் இந்த மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகச் சின்ன அல்வா துண்டு அது !

 

அதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு, இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கும் அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு.. . என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

 

மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவை பகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சற்றி உட்காருகிறார்கள்.

முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான். நேற்றிரவு என் கனவிலே கடவுள் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார்.. . என்றான்.

 

அடுத்து, அரேபியன் தான் கண்ட கனவைச் சொன்னான் - நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்.. . கடைசியாக இந்தியன் பேச ஆரம்பித்தான். நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை ! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாளே.. . எதிரிலேயே இவ்வளவு இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே.. . முதலில் தூக்கத்தை விட்டொழி ! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு ! என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா ? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன். என்று சொன்னான். மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க. . . உள்ளே அல்வாவைக் காணோம் !

 

இந்த கதை சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறதோ, அந்த வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது, அந்த வேலையை நாம் தள்ளிப்போடவே கூடாது ! இந்த வாக்கியத்தைக் கொஞ்சம் இப்படியும் திருத்திச் சொல்லலாம். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதைச் சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். போரடிக்கிறது என்ற வார்த்தை உங்கள் அகராதியிலிருந்து தானாகவே மறைந்துவிடும் !

 

உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றால் நீச்சல் கற்றுப் பாருங்கள், படகில் போனதில்லை என்றால், படகில் போய்ப் பாருங்கள் ! அல்லது ஏதாவது இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ! உங்களுக்குத் தெரியாத தெலுங்கு, மலையாளம் போன்ற புதுமொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் ! இதெல்லாம் கஷ்டம் என்றால், குறைந்தபட்சம் நீங்கள் பல ஆண்டுகளாகச் சந்திக்காத ஒரு பழைய நண்பரையாவது போய்ச் சந்தியுங்கள் !

ஜென் மதத் துறவி ஒருவர் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் கவிழ்ந்த தலைகளுடன் நிற்கும் சீடர்கள், குருவே.. . நீங்கள் எங்களுக்கு உபதேசிக்கும் கடைசி போதனை என்ன.. .? என்று கேட்கிறார்கள். ஜென் துறவி இவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், எனக்கு ஒரு துண்டு இனிப்பு கொண்டு வாருங்கள்.. . என்று கேட்கிறார்.

இனிப்பு வருகிறது ! அந்தக் கடைசி தருணத்திலும் ஜென் துறவி அந்த இனிப்பை, ஒரு குழந்தையைப் போலப் பார்த்து ரசிக்கிறார். பிறகு, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து ருசித்துத் தாளம் போட்டுக் கொண்டே சாப்பிட்டுவிட்டு இறந்துவிடுகிறார் ! இனிப்பு சாப்பிடுவது என்ற ஒரு சாதாரண காரியத்தைச் செய்யும்போதுகூட, அதை முழு ஈடுபாட்டோடு ரசித்து, ருசித்துச் செய்ய வேண்டும் என்பதே ஜென் துறவி, தன் சீடர்களுக்குச் சொல்லாமல் சொன்ன கடைசி போதனை !

 

வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்கும் என்பதில்லை ! செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக்கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.

 

எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு -

 

ஒன்று - தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது Intimate life !

அடுத்தது, குடும்பம்.

மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை !

நான்காவது சமூக வாழ்க்கை !

 

ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளையுமே வாழ்ந்தாக வேண்டும்.

 

வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை என்று மூன்று அறைகளையும் அற்புதமாக அலங்கரித்து சுத்தமாக வைத்துவிட்டு, டாய்லெட் இருக்கும் அறையை மட்டும் சுத்தம் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் ? டாய்லெட்டின் வாடை வீட்டின் மற்ற அறைகளுக்கும் பரவி விடும் இல்லையா.. .? அதே மாதிரி நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி.. . மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

  • தொடங்கியவர்

தந்திர மனது

 

நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார். என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ  அப்படியே இருக்கலாம். நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார். அவருக்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.

 

''இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது? இந்த மனம் எவ்வளவு தந்திரமானது! இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான். ஞானி சாரஹா,

 

'' நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.

சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள். எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள். இது மிகவும் தந்திரமானது. மிக மோசமாக ஏமாற்றக் கூடியது. உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும். நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும். இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/06/blog-post_12.html

  • தொடங்கியவர்

உடம்பைச் சுற்றி ஒரு கவசம் !

 

 

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் நடந்திருக்கும். மனது கனமாகிவிடும் நிமிடங்களில் எல்லாம் இந்தச் சந்தோஷ நிமிடங்களைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பாருங்கள் ! காயங்களை மறந்து, மகிழ்ச்சியான நினைவுகளில் நீந்த ஆரம்பிப்பீர்கள் ! இந்த யுக்திக்கு சூப்பர் இம்போஸிஸ் டெக்னிக் என்று பெயர்.

இது எப்படிச் சாத்தியம் .. ? என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும் ! எனக்குத் தெரிந்த செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் சொன்ன உண்மை நிகழ்ச்சி இது.

 

அன்று, அந்தப் பெண்ணுக்குப் பிறந்த நாள் ! காலையில் கண்விழித்த அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளது அறை கலர் கலர் பலூன்களாலும் வண்ண வண்ண ஜிகினா காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது ! இரவோடு இரவாக, அந்தப் பெண்ணின் கணவன்தான் தன் மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இத்தனை விஷயங்களையும் சந்தடியே இல்லாமல் சிரத்தை எடுத்து செய்திருக்கிறான் ! இதை அறிந்தபோது அவளுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. கணவனை ஆரத்தழுவி, தனது அன்பைக் காட்டுகிறாள் !

 

பிறகு, தன் அறையைவிட்டு வெளியே வருகிறாள். பல நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் இவளது பெற்றோர், தங்கள் மகளின் பிறந்த நாளன்று ஓர் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகத் திடுதிப்பென்று வந்திறங்கி, இவளைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கிறார்கள் ! இவளுடைய ஏழு வயதுக் குழந்தைகூடத் தன்னுடைய தந்தையின் உதவியோடு வாங்கிய ஒரு சின்னப் பரிசைக் கொடுத்து, இந்த பெண்ணை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்துவிடுகிறது !

 

குளித்து முடித்து, தன் கணவன் எடுத்துத் தந்த பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, அவள் தன் குடும்பத்தோடு கோயிலுக்குப் போகிறாள். அங்கே விளக்கிலிருந்த எண்ணெய் கொஞ்சம் இவளுடைய பட்டுப்புடவையில் பட்டுக் கறை உண்டாக்கிவிடுகிறது.

அவ்வளவுதான். .. விடிந்ததிலிருந்து தனக்கு நேர்ந்த சந்தோஷமான நிகழ்ச்சிகளின் நினைவுகள் மொத்தமும் இந்தப் பெண்ணின் சிந்தனையிலிருந்த விலகிப் போய்ப் புடவையில் எண்ணெய்க் கறை படிந்ததால் உண்டாக துக்கம் மட்டுமே பூதாகாரமாக இவளின் சிந்தனையைச் சிறைப் பிடித்துக் கொள்கிறது ! பிறகு, இவளின் கணவன் இவளை ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். சினிமாவுக்கு அழைத்துப் போகிறான். பரிசுப் பொருட்கள் வாங்கித் தருகிறான். ஆனால், அவள் பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டதை நினைத்தே, அன்று முழுதும் அவள்  வேதனைப்படுகிறாள்.

இப்படிச் சந்தோஷமான நினைவுகள் மீது துயரம் தரும் சிந்தனைகளை சூப்பர் இம்போஸ் செய்ய முடிகிற நம்மால், இதைத் தலைகீழாகச் செய்ய முடியாதா என்ன ..? முடியும்.

வார்த்தைகளால் மனதைக் காயப்படுத்துபவர்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அப்படிக் காயப்படுகிறவர்கள் யார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். Low Energy level உடையவர்கள்தான் அடுத்தவரின் வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும் சுலபத்தில் காயப்பட்டுப் போகிறார்கள் !

 

எந்த ஒருவரின் energy level உச்சத்தில் இருந்து அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் உங்களை நோக்கி யார் எத்தனை கூர்மையான வார்த்தைகளை வீசியிருந்தாலும், அவை உங்களைப் பாதித்தே இருக்காது. இதுதான் உண்மை ! ஆகவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையுமே காதலி நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்ன நிமிடங்களாக நினைத்து உற்சாகமாக அமைத்து கொண்டால், நம் உடம்பைச் சுற்றி உருவாகும் Energy field ஒரு கவசம் மாதிரி இருந்து, பிறரின் வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தாமல் காப்பாற்றும்.

சரி.. . உடம்பைச் சுற்றி Energy field என்று கூட ஒன்று உண்டா என்ன ? இதென்ன கலாட்டா.. .?  என்று சிலர் சந்தேகப்படலாம். இந்தச் சந்தேகம், கிர்லான் என்ற ரஷ்யக் கலைஞர் கண்டுபிடித்த காமிராவின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது.
 

 

ஒரே சொடக்கில் உற்சாக ஊற்று !

 

எனர்ஜி ஃபீல்டைப் பலப்படுத்தி, எப்போதும் உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் வைத்திருப்பது எப்படி ?

 

திருஷ்டி - சிருஷ்டி வாதா என்று நமது வேதங்களில் சொல்லப்படுகிறது. திருஷ்டி என்றால் பார்வை. சிருஷ்டி என்றால் உருவாகுதல் அல்லது உருவாக்குதல் ! நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே நாம் உருவாகிறோம் என்பது இதற்கு அர்த்தம். குறிப்பாகச் சொல்வதானால், நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ, நாளடைவில் அப்படி ஆகிவிடுகிறோம். நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள். அந்த நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே இருப்பீர்கள். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத தத்துவம் போலத் தோன்றுகிறதா ? சந்தேகம் இருந்தால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

 

இரவு நன்கு தூங்கி, விடியற்காலையில் எழுந்த இளைஞன் ஒருவன், உடற்பயிற்சி செய்துவிட்டுப் பிறகு குளித்து டிரஸ் செய்து ஆபீஸ் கிளம்புகிறான்.

அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வந்து, என்ன தம்பி டல்லா இருக்கீங்க ? உடம்பு சுகம் இல்லையா ? என்று கரிசனத்தோடு கேட்கிறார். தெருமுனையில் அவன் நண்பன் எதிர்ப்படுகிறான். அவனும் என்னடா ஆச்சு உனக்கு ? முகம் இத்தனை சோர்வா இருக்கே ? உண்மையான அன்போடுதான் கேட்கிறான். ஆபீஸில் நுழைகிறான் இளைஞன். இவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், என்ன சார் ஜுரமா ? கண் எல்லாம் உள்ளே அடங்கிப் போய்க் கிடக்குது. ஆபீஸுக்கு லீவினா போன் பண்ணியே சொல்லியிருக்கலாமே ? என்கிறாள் அக்கறையோடு ! வீட்டைவிட்டுக் கிளம்பும் போது இளைஞன் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி, உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லை என்று நம்பி, ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலே போய்ப் படுத்துக் கொள்கிறான். இது கற்பனைக் கதை அல்ல ! ஒர் ஆராய்ச்சிக்காக, அந்த இளைஞனிடம் சொல்லாமல் நடத்திப் பார்க்கப்பட்ட உண்மைச் சம்பவம் !

 

நமது எண்ணம், நமது உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது ! சில சமயம் நமது உடம்பே கூட எண்ணங்களைப் பாதிப்பது உண்டு.

டென்ஷனாக இருக்கும்போது, நகம் கடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, சாதாரணமான மனநிலையில் இருக்கும்போது நகம் கடித்தால்கூட, மனதில் டென்ஷன் வந்து புகுந்துவிடும். சோர்வாக இருக்கம்போதெல்லாம் கன்னத்திலோ நெற்றியிலோ கைவைத்து உட்காரும் மானரிசம் உடையவர்களுக்கு, எதேச்சையாகக் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தால்கூட சோர்வு தானாக வந்து ஆட்கொண்டு விடும். அவ்வளவு ஏன் ? சலவை செய்த சட்டை, பாண்ட் மாட்டிக் கொண்டாலே, வெளியில் கிளம்புகிற  உற்சாகம் மனதுக்குள் வந்துவிடுகிறது இல்லையா ? சொடக்குப் போடும் நேரத்தில் உற்சாகத்தை நம் மனதுக்குள் ஊற்றெடுக்க வைக்க முடியும்.

 

தீ மிதித் திருவிழாவை நீங்கள் அனைவருமே பார்த்திருக்கக் கூடும் !

தீ மிதிக்கும் பக்தர்கள் யாரும் அதில் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லை. என்றாலும், தீ மிதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் வந்தவுடன், அவர்களுக்குத் தேர்ந்த ஒரு வீரனின் உற்சாகமும் வேகமும் எப்படி வருகிறது ? மனதிலிருந்தான் ! நாம் இங்கே விவாதித்த கருத்துக்கள் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். இருந்தாலும், நம்மை நாமே தேற்றிக்கொள்ள முடியாமல் பல சமயங்களில் சோர்ந்துவிடுகிறோம். கவலையில் மூழ்கி விடுகிறோம்.

 

இது ஏன் ? மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட நம்முடைய கருத்து (point of view) ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் நம்மில் பலர் குறியாக இருக்கிறோம்.

பெங்களூரில் பெரிய பணக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். அவருக்கு நகரின் மையப்பகுதியில் மாளிகை போல ஒரு பங்களா. அது அவரது பரம்பரைச் சொத்து ! பங்களாவை ஒட்டியிருக்கும் ஒரு சின்ன அவுட் ஹவுஸை விற்றால்கூட, ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அதில் அவர் நிறைய வசதிகள் செய்துகொள்ள முடியும். ஆனால் அவருடைய point of view என்னவென்றால், பரம்பரைச் சொத்து எதையும் விற்கக்கூடாது.

சரி.. . அதனால் இப்போது என்ன ? கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் இருந்து வேறு வருமானம் இல்லாததால், சொத்து வரி கட்டவும், டெலிபோன் பில் கட்டவும், எலெக்ட்ரிக் பில் கட்டவுமே அவர் இன்று திண்டாடிக் கொண்டிருக்கிறார், பாவம் ! தனது point of view ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தற்கொலை வரை போகிறவர்கள்கூட இருக்கிறார்கள்.

 

நமது கருத்துகளைவிட, நமது சந்தோஷம்தான் முக்கியம் என்ற நினைப்பு நமக்கு வர வேண்டும். நியாயமான வழிமுறைகளில் சந்தோஷமும் நிம்மதியும் நம்மை எப்படித் தேடி வந்தால் என்ன ? என்று பழக்கிக் கொள்ள வேண்டும். இந்த மனநிலை கைவந்துவிட்டால், அப்புறம் பாருங்கள்.. . பஞ்சம் இல்லாமல் உற்சாகம் பீறிடம் !
 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

பேசத்தெரிந்து கொள்ளுங்கள்.

 

உரையாடல் ஒரு கலை. இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை. அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :

*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் , தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. கேட்பவர்க்கும் போர்.

*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள்.  நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள். நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள். எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.

*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள். 'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது. அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.

*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள். அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.

*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள். அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும். அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள். உரையாடல் இனிமையாய் அமையும்.

*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள். இது பண்பாடு மட்டும் அல்ல, அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.

*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள். எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.

*தாக்காதீர்கள். கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள். கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும். ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/06/blog-post_30.html

  • தொடங்கியவர்

சுதந்திர மலர்

 

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை  எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான். அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் , ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்? அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது. அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் , அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான். பிறகு , நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர்,  உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்? அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர். இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/03/blog-post_5.html

  • தொடங்கியவர்

குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு....

 

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
 
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
 
சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.
 
அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.
 
அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
 
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
 
ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
 
இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.
 
இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
 
அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
 
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.
 
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.
 
இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
 
அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.
 
அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…
 
நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
 
இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,
 
”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.
 
அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.
 
ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,
 
எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,
 
உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.
 
அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,
 
பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.
 
என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
 
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!
 
எனவே,
 
அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.
 
  • தொடங்கியவர்

அசரீரி.. . அதிசயம் !

 

பிரச்னைகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், நாமே வலியப் போய் இழுத்துப்போட்டுக்கொள்ளும் பிரச்னைகளும் உண்டு ! இந்த வகை பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் மூலகாரணம் - பேராசை !

ஜென் மதத்தில் இது சம்பந்தமாக ஒரு கதை உண்டு.

 

அது ஒரு கிராமம். ஒரு நாள் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்களில் பலர், என் பிரச்னைகள் எல்லாம் ஒழிய வேண்டும் ! நான் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும் ! இது மட்டும் நிறைவேறினால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என்றெல்லாம் துறவியிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட துறவி, அடுத்த நாள் அந்தக் கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார்.

 

நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. ஆம், உங்களின் எல்லாப் பிரச்னைகளையும் ஒரு கற்பனையான கோணிப்பையில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிடுங்கள். பிறகு, அதே கற்பனைக் கோணிப் பையில் வீடு, நகை, உணவு என்று எதை ஆசைப்பட்டாலும் அதில் போட்டு வீட்டுக்குக் கொண்டுவருவதற்காக கற்பனை செய்யுங்கள் ! உங்கள் கற்பனை பலிக்கும் !

 

இந்த அசரீரி உண்மையா ? இல்லையா ? என்பதைப் பற்றி ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம். என்றாலும், அசரீரியான குரல் அவர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கியது. அது சொன்னபடி செய்து, எல்லாம் தொலைந்து, நாம் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால் நன்மைதானே. அசரீரி வாக்குப் பொய்த்துப் போனாலும் நஷ்டம் ஏதும் இல்லையே ! அதனால் அசரீரி சொன்னபடியே செய்துதான் பார்ப்போம் ! என்று அடுத்த நாள் நண்பகல், ஊர்மக்கள் தங்களின் பிரச்னைகளை மூட்டைக்கட்டிக் கொண்டுபோய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிட்டு பங்களா, வைர நெக்லக்ஸ், கார் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்துப் பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள் !

 

திரும்பியவர்கள் அச்சரியத்தில் மூழ்கித் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்துவிட்டது ! கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடிவீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு, மாடிவீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை ! ஆனால், அந்தச் சந்தோஷம் கொஞ்சம் நேரம்தான் !

 

தங்களைவிட அடுத்த வீட்டுக்காரன் அதிக சந்தோஷமாக இருப்பது போல் ஒவ்வொருவருக்குமே தோன்றியது. ஏன் என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த கணம் கவலை மீண்டும் அவர்களின் காலை வந்து கட்டிக்கொண்டுவிட்டது.

 

ஐயையோ, நாம் ஒற்றை வடம் தங்க செயின் கேட்டோம். அதுதான் கிடைத்தது. ஆனால், அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடம் செயின் கேட்டு வாங்கிவிட்டாளே ! நாம் வீடுதான் கேட்டோம். ஆனால், எதிர் வீட்டுக்காரன் சலவைக்கல் பதித்த பங்களா வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட்டானே.. . நாமும் அதுபோலக் கேட்டிருக்கலாமே ! நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று சந்தர்ப்பம் கிடைத்தும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று கவலைப்பட்டவாறே மீண்டும் அந்தத் துறவியைச் சந்தித்துப் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். மறுபடி அந்த ஊரை விரக்தி ஆக்கிரமித்தது.

 

பிரச்னைகள் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் இதுதான்.

பிரச்னைகளை சந்தோஷத்தோடு முடிச்சுப்போட்டு பார்க்காதீர்கள் ! பிரச்னைகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும்.. . பிரச்னைகள் ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டும். நான் சந்தோஷமாக இருப்பேன் ! என்று ஒவ்வொருவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். இப்படிச் சொல்வதால், பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன என்றே சிந்திக்காதீர்கள் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை.

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விடவா ஒருவருக்குப் பிரச்னை இருந்துவிட முடியும் ! கர்ப்பத்தில் உருவானதில் இருந்தே கிருஷ்ணரைக் கொல்வதற்காக அவர் மாமா கம்சன் காத்திருக்கவில்லையா ? யுத்தகளத்தில் எந்த அர்ஜுனனுக்காக அவர் தேரோட்டிக்கொண்டு போனாரோ அவனே, ஐயையோ.. . நான் சண்டை போட மாட்டேன் என்று வில்லையும் அம்பையும் தூக்கியெறிந்து கடைசி நேரத்தில் தலைவலி கொடுக்க வில்லையா ? குருஷேத்திரப் போர்க்களத்தில் தினம் ஒரு பிரச்னை ! அதையெல்லாம் சமாளிக்கும் போதும் கிருஷ்ணரின் முகத்தை விட்டுச் சந்தோஷப் புன்னகை ஒரு கணம் கூட விலகவில்லையே !

 

கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லியிருப்பதும் இதையேதான் ! சுகம், துக்கம் இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கக் கற்றுக்கொள் ! இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து சரியான பாடம்  கற்றுக்கொண்டால் தெளிவு பிறக்கும். அந்த தெளிவு ஆனந்தத்தைக் கொடுக்கும் !

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF..-.-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

சுதந்திர மலர்

 

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான். அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

 

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் , அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் , ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது. அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

 

 நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான். பிறகு , நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்? அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்.
இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/03/blog-post_5.html

 

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
கணவன், மனைவியிடமும் மனைவி, கணவனிடமும் தோற்றுப் போகத் தயாராக இருந்தால் அங்கே குடும்பம் ஜெயிக்கிறது . ஞாபக மறதி நடந்த நல்ல விஷயகளில் மிதந்து கொண்டிருப்பதற்காக "ஞாபக"த்தையும், நடந்த கெட்ட விஷயங்களில் மூழ்கி விடாமல் இருப்பதற்காக "மறதி"யையும் ஆண்டவன் நமக்குத் தந்திருக்கின்றான்.
 
பல நேரங்களில் பேச்சு சாதிப்பதை விட மௌனம் அதிகம் சாதிக்கும் . சில நேரங்களில்
பேச்சு காயப்படுத்திவிடவும் கூடும் ... முடிந்தவரை பிறர் மீதான கோபங்களில் மௌனம் காத்து மகிழ்ச்சி சேர்க்க முயலலாமே.
 
  • தொடங்கியவர்

'கைசன் கொள்கை' தெரியுமா?

 

செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் நாடுகளின் மக்கள், தங்கள் நாடுகளை உயர்த்த எந்த விதமான கொள்கைகளைக் கையாண்டார்கள் என்பது பற்றி சொல்லட்டுமா?

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாட்டினரிடம் ஒரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்று அவர்கள் நிர்ணயித்ததால். அந்த இலக்கை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக பாடுபடுவார்கள். அந்த ஒரு ஏக்கர் நிலம் செழிப்பானதோ இல்லையோ, அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ரசாயன உரத்தைப் பயன்படுத்தியாவது ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிளை அவர்கள் விளைவித்துவிடுவர்கள். அவர்களின் இந்த Result Oriented Management என்று பெயர்.

 

செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் ஜப்பானியர்களின் அணுகுமுறை வேறுவிதமானது. இவர்கள் அமெரிக்கர்களைப் போல் ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்க மாட்டார்கள். 'ஆப்பிளை என்ன மாதிரியான நிலத்தில் பயிரிட வேண்டும் எத்தனை நாளைக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும் ' என்ற எண்ணிக்கையில் குறியாக இல்லாமல், அதை அடையும் வழி முறையில் முழுக்கவனத்தையும் செலுத்துவர்கள். இந்த அணுகுமுறைக்கு Process Oriented Management என்று பெயர்.

 

ஒரு ஏக்கரில் அமெரிக்கர்களைவிட ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளின் எண்ணிக்கை சில சமயம் குறைவாகக் கூட இருந்தது. ஆனால், ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளில்தான் சுவை கூடுதல் இருக்கும். ஜப்பானியர்கள் இந்த அணுகுமுறை 'பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்' என்ற நமது கீதையின் சாரம்தானே.

 

ஜப்பானியர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இன்னொரு கொள்கை - 'கைசன்'. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?.

 

மேலும் மேலும் சிறப்பு. அதாவது, 'ஒரு வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்த முறை இந்த வேலையை இதைவிடச் சிறப்பாக செய்ய வேண்டும்' என்பதுதான் அந்தக் கொள்கை.

 

நாம் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வணக்கம் சொல்லிக் கொள்வதுபோல் ஜப்பானியர்கள் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி' என்று கூறிக் கொள்வார்கள். ஜப்பானியர்களுக்கு வெற்றி என்பது இலக்கு அல்ல. ஒவ்வொரு கணத்தையும் பொழுதுபோக்காக நினைக்காமல் வெற்றி என்ற நோக்கிலேயே பார்க்கிறரர்கள். ஜப்பானியர்களுக்கு வாழ்க்கை என்பதே வெற்றிதான்.

 

வெற்றியைப் பற்றி பேசும்போது இதையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு பேர் சண்டைபோட்டால் ஒரு வெற்றி பெறுவார்... இன்னொருவர் தோல்வி அடையத்தான் செய்வார். இருவருமே வெற்றியடைய முடியுமா?

முடியும் அதற்கு Win Win Method என்று பெயர்.

 

கம்பெனியில் ஒரு பிரச்னை... இரண்டு நிர்வாகிகள் இது பற்றி விவாதிக்கிறார்கள். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அடுத்தவர் இவரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை
வைத்திருக்கிறரர். இருவரும் விவாதம் செய்கிறார்கள். இந்த விவாதத்தில் ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்க வேண்டும்.

 

ஆனால், இந்த இருவருமே, 'உன்னுடைய கருத்து சரியா?' என்று பார்க்காமல், இந்த நேரத்துக்கு எந்தக் கருத்து சரி என்று கருத்தின் தன்மையை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்போது, பிரச்னைக்குச் சரியான தீர்வைக்கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவருமே வெற்றி அடைந்ததைப் போல சந்தோஷப்படுவார்கள். இதுதான் Win Win Method.

 

மேலை நாட்டினரின் இந்த யுக்தியை இப்போது நம் நாட்டிலிலுள்ள நிர்வாகிகள் கூடத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும்போது பயன்படுத்துகிறரர்கள்.

இதையெல்லாம் படித்து விட்டு 'வெற்றி மீது எனக்கு ஆசை இருக்கிறது. எனக்குத் திறமையும் இருக்கிறது. ஆனால் உடன் வேலை செய்பவர்கள்தான் என்னை அமுக்கி வைக்கிறரர்கள், முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்' என்று யார் சொன்னாலும் அதை நம்புவது சிரமமாக இருக்கும். ஏனென்றால், வெற்றிப்படிகளில் ஏற விரும்புவது யாராக இருந்தாலும் அவர்களைக் குப்புறத் தள்ளிக் குழி தோண்டி மண்ணுக்கு அடியில் புதைத்தாலும் அவர்கள் மரமாக மீண்டும் முளைத்துக் கொண்டு மேலே வருவது நிச்சயம்.

 

தீப்பந்தத்தைப் பூமியை நோக்கிக் கவிழ்த்தாலும், தீயின் ஜுவாலை வானத்தை நோக்கித்தான் இருக்கும்.

 

ஒரு மரம், சிறந்த மரமா, இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பழங்களை வைத்துதான் மரம் சிறந்ததா இல்லையா? என்று ஊரார் தீர்மானிப்பார்கள்.

 

அதேபோல்தான், நீங்கள் சாதிக்கப் பிறந்தவரா இல்லையா என்பதை உங்களைக் கேட்டு இந்த உலகம் தெரிந்து கொள்ளாது. உங்களின் சாதனையை வைத்துதான் உலகம் உங்களை எடை போடும்.

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

  • தொடங்கியவர்

மகிழ்ச்சி

 

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி  இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது. பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது. மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது. ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது. வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான். ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது. கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது. மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம். அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும். கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை. அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது.

 

கோபப்படாதே என்று சொன்னால்  அவன் புன்னகை புரிவான். அந்த புன்னகையோ போலியானது. உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை, வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது. பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை. பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி, அப்பாவை நேசி, என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது. தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன. பற்று என்பது உறவுமுறை. அன்பு என்பதோ ஒரு மனநிலை.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/02/blog-post_28.html

  • தொடங்கியவர்

வலி தரும் நினைவுகளை நீக்குவது எப்படி?

 

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார். 
 
ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?
 
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும். 
 
உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.
 
அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம். 
 
அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி. 
 
வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே. 
 
சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே. 
 
உங்கள் வேதனைகளிலிருந்து மள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம். 
 
இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
 
பயிற்சியை ஆரம்பிப்போமா? 
 
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள். 
 
இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள். 
 
காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.
 
இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.
 
தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.
 
நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும். 
 
வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும்.
 
  • தொடங்கியவர்

மனிதன் எத்தனை வகை!

 

மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.Introverts:

 

மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது.

2.Extroverts:

 

எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts:

 

மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தைல புத்தி:

 

ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி:

 

நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி:

 

விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண்  புத்தி:

 

எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/08/blog-post_6.html

  • தொடங்கியவர்

நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி

 

அவன் ஒரு அரசன். தான் என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச் சென்றபோது, காட்டிலே ஒரு துறவியைச் சந்தித்தான். கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி.

 

"நான் பல நாடுகளை வென்று, என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால், என் கஜானா நிரம்பி வழிகிறது. அந்தப்புரம் எங்கும் நான் கவர்ந்து வந்த மாற்று தேசத்து அழகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்?" அரசன் கேட்டான்.

தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக 'நான் செத்தால் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்...' என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

நான் எத்தனை பெரிய அரசன்.. . என்னையே அவமானப்படுத்துகிறாயா? என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல், துறவியைக் கொல்வதற்காக இடுப்பிலே இருந்த கத்தியை உருவினான்.

 

"அட மூடனே! நான் என்றால் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை.... நான் என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்..." என்று துறவி விளக்கினார்.

 

நம்மைவிடப் படிப்பிலோ, பதவியிலோ, செல்வத்திலோ குறைவானவன் என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒருவர்  ஒரு விவாதத்தின் போது நாம் சொல்லும் கருத்துக்கு ஆமாம்.. . சாமி போடாமல் மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ள நம் ஈகோ இடம் கொடுப்பதில்லை.

 

இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற ஈகோ உடையவர்கள், நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்... நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்... என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் இவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால், எனக்கு மரியாதை கொடு... என்று மற்றவர்களிடம் மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள். மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் இவர்களுக்குக் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறி போய் விடுகிறது. சந்தோஷம் தொலைந்து விடுகிறது.

 

நமது வேதங்கள் ஆண்டவனை ஆனந்தம் என்று குறிப்பிடும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'Ediging God Out' என்பதன் சுருக்கம்தான் Ego.. அதாவது, நம்மைவிட்டு ஆண்டவன்... அதாவது ஆனந்தம் வெளியேறும் நிலைதான் ஈகோ!

கடவுளே, நான் என்ற அகங்காரத்தை இதோ உனக்கு எதிரே உடைத்து விடுகிறேன்.. என்று நமக்கு நாமே உணர்த்தத்தான் தேங்காயை ஒரு அடையாளப் பொருளாகக் கோயிலிலே உடைக்கிறோம்.

 

தேங்காயின் கடுமையான ஓடு உடையும் போது எப்படிச் சுவையான இளநீர் வெளிப்படுகிறதோ. அதே மாதிரி நமது அகங்காரம் என்ற ஈகோ உடையும்போது சந்தோஷம் வெளிப்படும்.

 

அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து எடுபடவில்லை. நீங்கள் ஈகோ இல்லாதவராக இருந்தால். இதுபற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்... உங்களின் கருத்தை மற்றவர்கள் பாராட்டினாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும் சரி, கண்டு கொள்ளாவிட்டாலும் சரி இதனால் பாதிக்கப் படாமல் இருப்பீர்கள்.

 

கவிர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

 

ஒரு முறை படகில் ஏறி, யமுனை நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர். அது இரவு நேரம். படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார்.

 

ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை... பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்தது தான் தாமதம்.. . நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது.

இதைப் பார்த்ததும் தாகூருக்கு கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்...?

 

ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ, அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை அது மறைத்து விடும்.

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

  • தொடங்கியவர்

தோல்வி மனப்பாங்கு

 

பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?

நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத்  தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.

தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும்  அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.

தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது.தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.

தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை  நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/12/blog-post_18.html

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’

 

 

AANAL INDHA GUNAM SINGALA BUDDHIST KITTA IRUKARA MAADHIRIYE THERIYALAYE

  • தொடங்கியவர்

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’

 

 

AANAL INDHA GUNAM SINGALA BUDDHIST KITTA IRUKARA MAADHIRIYE THERIYALAYE

 

உங்கள் கருத்துக்கு நன்றி . பௌத்தம் என்ற மதத்தை ஓர் குறுகிய இனக்குழுமமாக அடையாளப் படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை . மேலும் உங்களுக்குத் தமிழ் எழுத வசதியாக பின்வரும் இணைப்பை அறிமுகம் செய்கின்றேன் . அதில் தமிழ் என்ற மொழியைத் தெரிவு செய்து விட்டு தமிங்கிலிசில்   டைப் பண்ணுங்கள்  .

 

http://www.google.co.in/inputtools/cloud/try/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.