Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பதிலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தக் கூடாது

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசக் கூடாது - றியர் அட்மிரல் சரத் வீரசேகர [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 00:51 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] Rear-Admiral-Sarath-Weerasekera.jpgஇராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பதிலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தக் கூடாது என்று, சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா கடற்படை அதிகாரியாகவும், குடிமக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும் இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஏரன் விக்கிரமரத்னவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச வேண்டும் என்று வாதிட்டனர். 

இது நியாயமற்றது. சிறிலங்கா அரசினால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பதிலியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. 

இந்தச் சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் யாராவது கேட்பார்களேயானால், அது, ஹிட்லர் அழிக்கப்பட்ட பின்னர் நாசிக்களுடன் பேச வின்ஸ்டன் சேர்ச்சில் எதிர்பார்த்தது போலாகி விடும். 

வடக்கு கிழக்கில், சிறிலங்கா இராணுவம் தமிழர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்துவதாக இரா.சம்பந்தன் கூறினார். 

நான் இதுவரை கேட்ட மிகவும் துரோகத்தனமான கருத்து இது. 

உண்மையில் தமிழர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தியது விடுதலைப் புலிகளா அல்லது சிறிலங்கா இராணுவமா என்று இரா.சம்பந்தனிடம் கேட்கிறேன்.  

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கவில்லை. அமைதியாக இருந்தது. 

சட்டம், ஒழுங்கை சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் தான் பேணுகிறது. 

பெருமளவு தமிழர்கள் காவல்துறையில் இணைக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கிறது. 

சிறிலங்கா இராணுவம் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது என்று இரா. சம்பந்தன் கூறினார். 

பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடங்கியிருக்க வேண்டும். 

பிரபாகரன் நினைவாக தீபம் ஏற்றும்படி, மாணவர்களை நிர்ப்பந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். 

துரோகத்தனமான தமது நோக்கங்களை அடைவதற்கு, அப்பாவி மாணவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரிக்கிறேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20121210107421

 

யாழில் மாற்றுக்கருத்துகள் கூறிருந்த கருத்தான "புலம் பெயர்மக்கள்த்தான் மாணவர்களை தூண்டினார்கள்" என்பதை இலங்கை அரசு மறுத்து மாணவர்களை தூண்டிவிட்டவர்கள் கூட்டமைப்பினரே என்று பாராளுமன்றத்தில் கூறுகீறது.. இப்போ எங்கே தவறு நடந்ததௌ. அரசு  தனக்கு விருப்பாமான பகுதியை தெரிந்து எடுத்துக்கொள்ளமுதல் மாற்றுக்கருத்துகள் அவசரமாக அறிக்கை விட்டுவிட்டார்களா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.