Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லயன் எயார் பயணிகளின் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

K01(89).jpg
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 14 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானப் பயணிகளின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

கௌதாரிமுனைக் கடற்கரையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பயணிகளின் சடலங்களைத் தோண்டும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இதனையடுத்து அப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

இந்நிலையில், தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ஆய்வு ரீதியில் மூன்றாம் கட்டமாக இந்த சடலங்களைத் தோண்டுப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.  

1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி மேற்படி விமானம் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைத் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்போது குறித்த விமானத்தில் 48 பயணிகளும் 7 விமானப் பணியாளர்களும் உட்பட 55பேர் பயணித்திருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான விமானம் இரணதீவு நடுக்கடலில் விழுந்த நிலையில், உயிரிழந்தவர்களில் 31பேரின் சடலங்கள் கௌதாரிமுனைக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவை அக்கடற்கரையின் மூன்று இடங்களில் மீனவர்களால் புதைக்கப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்தது. 

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி சடங்களைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மூன்று தினங்களாக் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கௌதாரிமுனை கடற்கரையின் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் 6 – 7 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு இந்த சடலங்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக கொழும்பு பிரதான மரண விசாரணை நிபுணர் டாக்டர் ஆனந்த சமரசேகர தெரிவித்தார். 

'பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான் இந்த சடலங்களைத் மீட்கும் மூன்றாவது கட்ட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்' என்று அவர் மேலும் கூறினார். 

இதேவேளை, 'கடந்த 14 வருடங்களில் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடற்கரையின் நீளம் மற்றும் அகலத்தில் சுமார் 10 அடி தூரத்துக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இதனால், சடலங்களைப் புதைத்த மீனவர்களாலும் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாலும் அடையாளம் காட்டப்பட்ட இடங்கள் மாறியிருக்கலாம். இதனாலேயே குறித்த சடலங்கைளைக் கண்டுபிடிப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளது' என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

'இருப்பினும், விரைவில் அப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். (ரொமேஸ் மதுசங்க) 
K02(87).jpg
K03(57).jpg
K04(34).jpg
K05(19).jpg
K06(13).jpg
K07(8).jpg
K08(6).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/54581-2012-12-11-14-54-46.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.