Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

President says ready to reconsider impeachment

Featured Replies

President says ready to reconsider impeachment

[Tuesday, 2012-12-11 21:40:27]
mahinda-rajapaksa_seithy-20120926-150.jp

President Mahinda Rajapaksa said today (Dec. 11) that he was prepared to appoint an independent committee to reconsider the impeachment motion against the chief justice. He referred to the issue during a speech at the opening of a building complex for the Sri Lanka Institute of Chartered Accountants in Colombo. The president said he was sorry and was not much in agreement with the impeachment motion submitted by a group of ruling MP's, adding that as a lawyer himself, he disagreed with any action that demeans the judiciary. He went onto say that any offence should not be made public or spoken about in the open. The president said that he was bound to act with regard to the impeachment, adding that he was accountable only to his conscience and that that was why he was prepared to give it a fair hearing

http://www.seithy.com/breifNews.php?newsID=71852&category=EnglishNews&language=tamil

  • தொடங்கியவர்
தெரிவுக் குழுவின் அறிக்கையை ஆராய ஒரு குழு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2012 - 13:59 ஜிஎம்டி
110619110624_mahinda_rajapaksa_304x171_e

மகிந்த ராசபக்ஷ

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, அலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுயாதீனக் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளைப் புறக்கணித்துவிட்டு, அந்த விசாரணைகள் நியாயமற்றவை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக தெரிவுக் குழுவின் விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்ததைத்தான் ஜனாதிபதி, அவரின் காரியாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தின் போது குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஜனாதிபதியின் மீதுகூட கண்டனத் தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சாதாரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கூட, குற்றவியல் நடைமுறைகளில் பங்கேற்று, தான் குற்றமற்றவர் என்று நிருபிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வாரம் தலைமை நீதிபதியை குற்றம் சாட்டிப் பதவி விலக்கும் தீர்மானம் மீதான தெரிவுக் குழுவின் விசாரணை துவங்கியது. அதில் முதல் நாள் ஆஜரான தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக, தெரிவுக் குழு தந்துள்ள ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை படித்து பார்க்கவும், இத்தீர்மானத்துக்கு ஆதரவாக கைச்சாத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை குறுக்கு விசாரணை செய்யவும் தனக்கு அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

மேலும் விசாரணைக்கு வந்த தன்னை ஆளும் தரப்பினர் தகாத வார்த்தைகளால் ஏசியதாகவும் புகார் கூறி தெரிவுக் குழுவின் விசாரணைகளில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

அதற்கு அடுத்த நாள் தெரிவுக் குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்கட்சியினர் 4 பேரும் விலகினர். இந்த அமர்வு முறைப்படி நடக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மூன்றாம் நாள் அமர்வின் போது, தலைமை நீதிபதி மீதான 4 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதாக தெரிவுக் குழு கூறியது. அவரை பதவி நீக்கம் செய்ய இவையே போதுமானவை என்றும் அது தெரிவித்துள்ளது. தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி மறுத்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை சட்டரீதியாக செல்லுபடியற்றது என இலங்கை சட்டவாதிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவிலிருந்து நான்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் விலகிய பிறகு அவர்களுக்கு மாற்றாக வேறு உறுப்பினர்களை சபாநாயகர் நியமிக்கவில்லை, எனவே நான்கு வெற்றிடங்களை வழங்கிய இந்தக் குழுவின் தீர்ப்பு சட்டரீதியாக செல்லுபடியற்றது என்றும் இலங்கை சட்டவாதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121211_mahindacomdenscj.shtml

 

 


அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதாக மகிந்தவை மிரட்டும் வெளிநாட்டவர் [ செவ்வாய்க்கிழமை, 11 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

 

MR-20127.jpgசிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகியதும், தன்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக வெளிநாட்டவர் ஒருவர் மிரட்டி வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எந்த உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், தவறிழைத்தால் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு ஒரு முறைமை உள்ளது, அதன்படியே நாம் செயற்படுகிறோம்.

நான் தவறிழைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எனக்கெதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வர முடியும்.

அவ்வாறு இடம்பெற்றாலும் என்னால் அப்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.

அரசியலமைப்பின்படி அவ்வாறு என்னால் செய்ய முடியாது.

எதற்கும் ஒரு சம்பிரதாயம், சட்டம், முறைமை என உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

தலைமை நீதியரசர் விவகாரத்திலும் அவ்வாறே செய்யப்படுகிறது.

நாம் இப்போது பல்வேறு தடைகள், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகள் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

நான் குற்றவாளி என்றும் எனக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்புகின்றனர்.

நான் ஒரு ஐந்து, பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளோ தான் பதவியில் இருக்க முடியும்.

அதன் பின்னர் என்னை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டவர் ஒருவர், பரப்புரை செய்து வருகிறார்.

இது பிரபாகரனை நான் கொன்றமைக்காகவாம். இதுதான் தற்போதைய நிலை.

ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பில் கொமன்வெல்த்துக்கு அறிவித்து, அங்கிருந்து ஒரு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்று கடித மூலம் கோரியுள்ளார்.

ஏனென்றால், அடுத்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது.

அப்போது அதன் தலைமைத்துவம் இரண்டு வருடங்களுக்கு எனக்குக் கிடைத்து விடும்.

அதனைத் தடுப்பதற்காகவே இந்தக் குரோத மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.

இப்போதிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இத்தகையவர்கள் தமது நாடு, மக்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக அல்லாமல் மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டியது அவசியம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20121211107425

 

மிரட்டலுக்கு மிரண்டு போய்விட்ட ஜனாதிபதி?

 

 

Edited by மல்லையூரான்

தன்னை தக்க வைக்க எதையும் செய்யவேண்டிய ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மகிந்தர்.

 

இதில் இன்று முதன்மையானது நீதித்துறை.ஒரு ஜனநாயக அணுகுமுறை ஊடாகவே எல்லாம் நடக்கின்றது என காட்ட முனைகின்றார். இதில் இவர் வென்றாலும் இல்லை தோற்றாலும் சர்வதேச அளவில் சிக்கல் நிறைய உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.