Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது சட்டவிரோதமானது! போராடத் தயாராகுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு!!

Featured Replies

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது சட்டவிரோதமானது! போராடத் தயாராகுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு!!
 
 
தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என பொது எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அரச படையினரால் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் சிலரைப் புனர்வாழ்வளிப்பதற்காக முகாம்களுக்கு அனுப்புவதனூடாக, சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற்சிக்கின்றது என்றும் பொது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 
இது தொடர்பாக பொது எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஈடுபட்டிருந்தனர். இவர்களது இந்த நடவடிக்கையை அரச படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு முறியடித்தனர்.
அத்துடன், அடுத்த நாள் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிப் போராட்டத்தையும் அரச  படையினர் தாக்குதல்கள் மூலம் அடக்கியதுடன், மாணவர்களையும் கைதுசெய்தனர்.
இவ்வாறு மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் சிலருக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கூறி அவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதனூடாக, சட்டவிரோதமான முறையில் மேற்கொண்ட கைது நடவடிக்கை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.
நாட்டில் தீவிரவாதம் இல்லை எனக் கடந்த மூன்று வருடங்களாகக் கூறிவந்த அரசு,  தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்படி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைவுகூரும் செயற்பாடுகளை தீவிரவாத நடவடிக்கைகள் எனக் கூறி அதனை முடக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது. தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தார்களே தவிர, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதல செய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் மீண்டும் ஒரு அசௌகரிய நிலையைத் தோற்றுவிக்க அரசு மேற்கொள்ளும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு எதிராக நாம் அனைவரும் போராடவேண்டும் என்று பொது எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, புதிய சிஹல உறுமய, ரு{ஹணு மக்கள் கட்சி, மௌபிம மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பொது எதிர்க்கட்சிகள் மக்களை பேராடுமாறு அழைப்பு விடுத்துள்ள போதிலும் இதுதொடர்பில் போராட்டம் எதனையும் அவை முன்னெடுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த பொது எதிங்க்கட்சிக்குள் ஒரு முஸ்லீம் கட்சியும் வராதா?  முஸ்லீம் கட்சிகள் தனிய எரிகிற வீட்டில் நெருப்பு எடுத்து பொயிலை பற்றுவதுதான் செய்கின்றனவா? 
 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.