Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதவைக் குடும்பங்களுக்கு அனைவரும் கைகொடுப்போம்

Featured Replies

இலங்கையில் ஒரு வருடத்திற்கு முன்னூற்று 11 ஆயிரம் குழந்தைகள் உயிருடன் பிறக்கின்றன. அதில் ஒரு வருடத்தில் இருநூற்று 50 ஆயிரம் குழந்தைகள் கருச்சிதைவுக்கு உட்படுகின்றனர் என தாய்சேய் நல வைத்திய அதிகாரி திருமதி எஸ் திருமகள் தெரிவித்தார்.

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் திருமறைக் கலைத்தூது கலைமன்றத்தில் இன்று நடைபெற்றது அதில் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.


 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 

யாழ். மாவட்டத்திலேயே தற்போது உள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அதிகரித்த மதுப்பாவனை. அது மிகவும் கவலையளிக்கின்றது. இதனால் இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


அண்மையில் நாம் யாழில் உள்ள கிராமம் ஒன்றிற்கு போயிருந்தோம். அங்கு 35வயதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. அவர்களுடன் உரையாடும்போது தங்களது கணசவர் மார் தங்களை உடல்ரீதியிலும் உள ரீதியிலும் கஸ்ரப்படுத்துவதாக கூறினர். இதற்கு மதுப்பாவனையே காரணமாக அமைகின்றது. 

 

இவேளை, ஏ 9 வீதி திறக்கப்பட்டதும் வீதியினூடாக நுழைந்த வாகனம் மதுபானங்களை ஏற்றி வந்த வானகம் என்றும் கூறுகின்றனர்.


இருப்பினும் அண்மையில் நான் கே.கே.எஸ் வீதியில் உள்ள கடை ஒன்றில் பொருட்களை வாங்க சென்றிருந்த போது அந்த இடத்தில இருந்து வந்த 2 பெண்கள் என்னை  ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர். அதில் ஒருவரை 15 வருடங்களுக்கு முன்னர் இருந்தே அறிந்துள்ளேன்.

அவர்கள் என் கையைப்பிடித்துக் கொண்டு நாளைக்கு நீங்கள் தானாம் மனித உரிமை நிகழ்வில் கதைக்கப்போகிறீர்களாம் அந்த விடத்தில் நாங்கள் வந்து காணாமல் போன எங்களின் கணவன் பற்றி உங்களிடம் பேசலாமா என்று கேட்டனர். இது மிகவும் வேதனையினை ஏற்படுத்தியது.


இவர்களைப் போல எத்தனையோ பெண்களட  நம்பி தங்களது பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர் வன்னியில் நடைபெற்ற யுத்த காலத்தில் போராட்டத்திற்கு வலோத்காரமாக ஆட்களைச் சேர்த்துவரும் தருணத்தில் தமது பிள்ளைகளை பெற்றோர் திருமணம் முடித்து விட்டனர்.

 

ஆனாலும் அங்கு நடைபெற்ற யுத்தத்தில் கணவன் மாரை இழந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் வெளியே வருகின்றனர் கணவன் மார் இல்லாது குழந்தைகளை வளர்க்க முடியாது.


அத்துடன் இறந்தவர்களுக்கான மரண பதிவுச் சான்றிதழினை பெற்றுக் கொள்வதிலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில உதவித்திட்டங்கள் கிடைப்பதில்லை. இதனால் அவர்களது வாழ்க்கை முறை பாதிப்படைகின்றது.

 

18 வயதுக்குட்பட்ட திருமணங்களை திருமணமாக கொள்ள முடியாது. பின்னர் கணவன் இறந்ததும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அவர்களே. எனவே அவர்களுக்கு வேண்டிய உதவித்திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பதற்க மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர்களது குடும்ப வாழ்க்கையினைக் கொண்டு போக முடியும். யாழ். மாவட்டத்தில் 40 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதனால் அவர்களது பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எமது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம் என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=428151694714343480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.