Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAM_7141_CI.JPG

 

அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரியும், வடக்கில் நடைபெறும் ஜனநாயக விரோதச் செயல்களைக் கைவிடக்கோரியும் அன்றாடம் வடக்கு-கிழக்கில் இடம்பெறும் காணாமல்போகச் செய்தல் மற்றும் கடத்தல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதுடன் கடத்தப்பட்டோரையும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்கக்கோரியும் வடக்கு-கிழக்கில் ஜனநாயகச் செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரியும் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

 
இன்றுகாலை (14.12.2012) 11மணி முதல் பிற்;பகல் 1 மணிவரை வவுனியா இலுப்பையடியில் தொடங்கிய கவனயீர்ப்புப் போராட்டம் பின்னர் வவுனியா காய்கறி மொத்த விற்பனை சந்தை வளாக முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது அமைப்புக்களும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும் பல்கலைக்கழக மற்றும் கல்விசார் சமூகத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும், ஜனநாயக முற்போக்கு சக்தியினரும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பின்வரும் முழக்கங்களை எழுப்பினர்
சிறிலங்கா அரசே!
கைது செய்துள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும்
பல்கலைக்கழக மாணவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
 
சிறிலங்கா அரசே!
மனித உரிமைகளுக்கும் 
மக்களின் மன உணர்வுகளுக்கும் மதிப்பளி!
 
நினைவுநாள் கொண்டாடுவதும்
நினைவுதீபம் ஏற்றுவதும்
அவரவர் பிறப்புரிமை!
 
சிறிலங்கா அரசே!
ஜனநாயகப் பண்புகளை மதித்துநட!
மனிதநேயம் பேண்!
 
சிறிலங்கா அரசே!
காணாமல் போனவர்களுக்கும்
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும்
பதில்சொல்!
 
தனிமனித சுதந்திரத்தில் கை வைக்காதே!
சர்வதேசத்தின் பழிபாவத்திற்கு ஆளாகாதே!
 
அடக்குமுறைகள் வென்றதாக 
உலகெங்கிலும் வரலாறில்லை!
 
வெலிகந்தை என்ன 
தமிழர்களின் கொலைக்களமா?
 
மகர என்ன
தமிழர்களின் பலிபீடமா?
 
விடுதலை செய்!
விடுதலை செய்!
அரசியல் கைதிகளை
விடுதலை செய்!
 
கைவிடு கைவிடு
கைதுகளைக் கைவிடு
 
இன்றைய மாணவர்கள்
நாளைய சான்றோர்கள்
 
விடுதலை செய்
விடுதலை செய்
பல்கலைக்கழக மாணவர்களை
விடுதலை செய்
விடுதலை செய்
 
வெளியேறு வெளியேறு
இராணுவமே வெளியேறு
 
அழிக்காதே அழிக்காதே
வனங்களை அழிக்காதே
 
குலைக்காதே குலைக்காதே
நல்லிணகத்தைக் குலைக்காதே
 
தூண்டாதே தூண்டாதே
மதவெறியைத் தூண்டாதே
 
நிறுத்திவிடு நிறுத்திவிடு
காணி அபகரிப்பை நிறுத்திவிடு
 
கைவிடு கைவிடு
இனவெறியைக் கைவிடு
 
ஒப்படை ஒப்படை
காணாமல் போனோரை ஒப்படை
 
அடக்குமுறையை நிறுத்திவிடு
அரசியல் தீர்வை கண்டிடு
 
சிறைச்சாலைகள் பலிபீடமா
தமிழர்கள் பலிகடாக்களா?
 
வாழவிடு வாழவிடு
சுதந்திரமாக வாழவிடு
 
எமது மண் எமக்கு வேண்டும்
எமது வளங்கள் எமக்கு வேண்டும்
 


T01(60).jpg
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஏற்பாடு செய்த தமிழ்க் கட்சிகள்  ஒன்றிணைந்த மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை உட்பட 8 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியுள்ளதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம்) 
T02(53).jpg
T03(29).jpg
T004.jpg
T05(11).jpg
T06(6).jpg
T07(2).jpg
T08(2).jpg



http://tamil.dailymirror.lk/--main/54765-2012-12-14-08-48-58.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.