Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து பறிக்கிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து பறிக்கிறது சிறிலங்கா
FRIDAY, 14 DECEMBER 2012 16:24 SYDNEY HITS: 1  
இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட, திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பறித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய்க்குதங்களை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மீளப்பறித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
2002ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐதேக அரசாங்கத்தினால், சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
 
இது அரசாங்க நடைமுறைகளின் படி வழங்கப்படவில்லை என்று தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்திய நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ள 850 ஏக்கர் வளாகத்தில், தலா 12,100 மெட்றிக் தொன் கொள்ளளவு கொண்ட 99 எண்ணெய்க் குதங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
கேந்திர முக்கியத்துவம் மிக்க திருகோணமலைத் துறைமுகத்துடன் இணைந்துள்ள இது, மத்திய கிழக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் குத வளாகமாகும்.
 
றோயல் கடற்படைக் கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்காக இவற்றை பிரித்தானிய அரசாங்கம் 1930ம் ஆண்டில் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று : இந்திய வாகனங்களுக்கு வரி உயர்த்தப்பட்டது.

 

இன்று : குத்தகையை பறிக்க நிற்கிறது.


நாளை: ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.