Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தரணிகள் சங்கத்தில் தீர்மானங்கள் மூன்று நிறைவேறின! பதில் தலைவர் எதிர்த்து பதவி துறக்கிறார்!

Featured Replies

 

PostDateIcon.pngசனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 18:53
lg-share-ta.gif

 

http--tamilleader.com-images-stories-SLPகொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானமும் அதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

குற்றப்பிரேரணையின் மூலமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவ்வாறு அவர் பதவிவிலக்கப்பட்டு புதிய ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் அவருக்கு உத்தியோகபூர்வமான வரவேற்பு அளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன்,பிரதம நீதியரசர் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கடந்த 11 ஆம் திகதி அறிவித்துள்ளார். அதன்பிரகாரம் குற்றப்பிரேரணையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல். 

மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்னரும் விசாரணைகள் தொடருமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல். ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அனோமா குணத்திலக்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துக்கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை எதிர்த்தே தான் பதவிவிலகுவதற்கு தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.tamilleader.com/prathanaalias/8087-2012-12-15-13-28-03.html

17122012-md-hr-2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.