Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாநாயகரும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies


சபாநாயகரும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக அறிவித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்களை எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


குற்றவியல் பிரேரணையினை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தினை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2198

  • தொடங்கியவர்

சிறிலங்கா: நாடாளுமன்றுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலையின் உச்சம் 'அழைப்பாணை' [ சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012, 08:08 GMT ] [ நித்தியபாரதி ] SL-court.jpgஇம்மாதம் தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்ற ஆணைக் குழுவானது நீதியற்ற முறையில் நடந்துகொண்டதனை எதிர்த்து சிறிலங்காவின் பிரதம நீதியரசர், நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பாணை summonses விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தீர்ப்பை வழங்குவதற்கு, சிராணி பண்டாரநாயக்கவால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, வாக்களிப்பை மேற்கொள்ளக் கூடாது என்றும் இது பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து விலக்குவதற்கு காலாக அமைந்து விடும் எனவும் இந்த உத்தரவை வழங்கிய மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாடாளுமன்றிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வாக்களிப்பின் மூலம் எடுக்கப்படும் தீர்வை உயர்நீதிமன்றம் நிராகரிப்பதென தீர்மானித்தால் இந்நகர்வானது நாட்டில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்திற்கு உட்பட்ட நாடாளுமன்றுக்கும் நீதித்துறைக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக தொடரப்படும் முறுகல் நிலையின் உச்ச விளைவாகவே பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கருதப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரான சமல் ராஜபக்சவே தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகராவார். தற்போதைய நீதிமன்ற அழைப்பாணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. 

கடந்த வெள்ளியன்று பல நூற்றுக்கணக்கான சட்டவாளர்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விசாரணையானது நீதியான முறையிலும், சுதந்திரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிய சட்டவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் துரிதமான சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

நாடாளுமன்ற ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தீர்ப்பானது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாலும், இதில் பிரதம நீதியரசரால் இழைக்கப்பட்ட குற்றத்தை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்பதாலும் இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என சிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவான சட்டவாளர்கள் கடந்த புதனன்று நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர். 

நாடாளுமன்ற ஆணைக்குழுவின் தீர்ப்பானது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும், இவ் ஆணைக்குழுவானது தனது விசாரணையின் போது நேர்மையான முறையில் நடந்துகொள்ளவில்லை எனவும் சிராணி பண்டாரநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் விவாதம் மற்றும் வாக்களிப்பை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என சட்டவாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் கோரியிருந்தனர். 

இந்த வழக்கின் விசாரணையானது ஜனவரி 03 அன்று மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நாடாளுமன்ற அமர்வு மேற்கொள்ளப்படும் போது சிராணி பண்டாரநாயக்க தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கான வாக்களிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு எதிரான வாக்களிப்பு மிக இலகுவாக மேற்கொள்ளப்பட்டு, இதன் பெறுபேறு பிரதம நீதியரசரை பதவியிலிருந்து விலக்கக் கூடிய அல்லது தொடர்ந்தும் பதவியில் தக்க வைக்கக் கூடிய சிறிலங்கா அதிபரின் இறுதி தீர்வுக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிராணி பண்டாரநாயக்க தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போதியளவு காலஅவகாசத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் இவருக்கு எதிரான சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கான சந்தர்ப்பத்தை தாம் கொண்டிருக்கவில்லை எனவும் இவர் சார்பாக வாதிட்ட சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். பொது விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது தனக்கெதிரான விசாரணை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் பிரதம நீதியரசரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பிரதம நீதியரசர் தனிப்பட்ட முறையில் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டார் எனவும் சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கடந்த ஆண்டு சிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா அதிபர் நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசராக நியமித்தார். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு அதிகாரங்களை அதிகம் வழங்கும் விதமாக வரையப்பட்ட சட்டமானது சட்டரீதியற்றது என பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகத் தொடங்கினார். 

செய்தி வழிமூலம் : THE ASSOCIATED PRESS

http://www.puthinappalakai.com/view.php?20121222107479

  • தொடங்கியவர்
பிரதம நீதியரசர் விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள போவதில்லை! - நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானம்!!
 
சிறிலங்காவின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
 
இவ்விகாரங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என சிறிலங்காவின் சபாநாயகர் சாமல் ராஜபக்ச ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தார்.
 
இந்நிலையில், இது தொடர்பில் சாமல் ராஜபக்சவின் ஆலோசனையை பின்பற்றப் போவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
 
இதனிடையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வெளிநபர்களோ அல்லது நிறுவனங்களோ நாடாளுமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என சபாநாயகர் சாமல் ராஜபக்சவினால் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்காவின் பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
 
சிறிலங்காவின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் சாமல் ராஜபக்ச ஆகியோரை ஜனவரி மாதம் 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமூகம் அளிக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. 
 
சிறிலங்காவின் பிரதம நீதியரசர் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று பரிசீலித்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
 
தனக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு கோரி சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கடந்த 19ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை தெரிந்ததே.
 
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி விசாரணைகளின் இடைநடுவே சிறிலங்காவின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வெளிநடப்புச் செய்திருந்தார்.
 
இவரைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறவில்லை எனக் கூறி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.