Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பிரெஞ்சு மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் கூட்டறிக்கை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பிரெஞ்சு மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் கூட்டறிக்கை:  
[sunday, 2012-12-23 09:59:10]
 
நவம்பர் 27ம் திகதி, யாழ் பல்கலைக்கழகத்தினுள் உள்நுளைந்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மாணவர்களைக் கைது செய்து தடுத்துவைத்திருக்கும் சிறீலங்கா அரச படைகளின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தும், மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பிரான்சிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய மாணவர் அமைப்புக்கள் மற்றும் சொலிடாரித்தே தமிழீழம் என்ற பிரெஞ்சு அமைப்பு மற்றும் தமிழர் நடுவம் ஆகியன இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
 
தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கைதுகள் குறித்தும், தீவிர அக்கறை கொண்டு பெடராசியோன் சிந்திக்கா எத்துதியோன் ( Federation Syndicale Etudiante ) மற்றும் சுத்ட் எத்துதியோன் ( Federation SUD Etudiant ) ஆகிய இரண்டு பிரெஞ்சு மாணவர் அமைப்புக்களும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், விடுதலைக்குமான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
 
தனிமனித சுதந்திரத்தையும், தமிழ் மக்களின் சுதந்திரத்தையும், சிறீலங்கா அரசு தொடர்ந்து நசுக்கிவருவதையும், தமிழ் மக்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து அடிமைத்தனமாக நடத்துகின்றது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
 
பல்கலைக்கழக மாணவர்கள், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் தமது உரிமையை மேற்கொண்டபோது, சிறீலங்கா அரசு இராணுவத்தைக் கொண்டு அதனைத் தடுத்து, மாணவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியிருப்பதையும், கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டும் அறிக்கை, மாணவர்கள் மீது முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அடக்குமுறையே ஆயுதம் தாக்கிய போராட்டமாக பரிணமித்ததையும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
 
2009ம் ஆண்டு, ஒரு இனஅழிப்பு நடத்தபோதும், அதற்குப் பின்னரும் தொடரும் அடக்குமுறைகள் குறித்தும் உலகம் கவனம் எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளதென அறிக்கை தெரிவிக்கின்றது.
 
தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகு அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்கவேண்டியது, மாணவர்களாகிய எமது பொறுப்பு எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அறிக்கையில், தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நிறுத்தப்படவேண்டும் எனவும், சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கெதிராக இனஅழிப்பு நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தும் அறிக்கை, தமிழ் மக்களின் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா இராணுவம் வெளியேறவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
 
வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, பிரெஞ்சு அரசாங்கம், மற்றும் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர் அமைப்புக்கள், பிரெஞ்சு ஊடகங்கள் என்பனவற்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
 
தமிழர் நடுவம்- பிரான்ஸ்


Tamils-Naduvam-231212-600-832-001.jpg

 தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கைதுகள் குறித்தும், தீவிர அக்கறை கொண்டு பெடராசியோன் சிந்திக்கா எத்துதியோன் ( Federation Syndicale Etudiante ) மற்றும் சுத்ட் எத்துதியோன் ( Federation SUD Etudiant ) ஆகிய இரண்டு பிரெஞ்சு மாணவர் அமைப்புக்களும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், விடுதலைக்குமான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
 

 

தாயக மாணவர்கள் மற்றும் தாயக மக்களின் நிலைமையை இந்த அமைப்புக்கள் ஊடாக சர்வதேசமயப்படுத்தும் பிரான்ஸ் வாழ் இளையவர்களுக்கு நன்றிகள். MERCI !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.