Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது ஆண்டாக மழைக்காலத்தை சுமக்கும் வன்னிப் பெருநிலத்தின் கூடாரங்கள் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மூன்றாவது ஆண்டாக மழைக்காலத்தை சுமக்கும் வன்னிப் பெருநிலத்தின் கூடாரங்கள் -
23 டிசம்பர் 2012
lg-share-en.gif
 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பார்த்தீபன்

3rd%20Year%20flood_CI.jpg

 

குளங்களும் வாய்க்கால்களும் நிரம்பிய நிலப்பகுதி வன்னி. அண்மைய நாட்களாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. குளங்களில் நீர் நிரம்பி உடைக்கும் நிலையில் சில குளங்களின் கதவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இன்னமும் காட்சியளிக்கும் கூடாரங்கள் மழையை மூன்றாவது ஆண்டும் தாங்குமா? மழையும் வெள்ளமும் உலகெங்கும் மக்களின் இயல்புநிலையை பாதிக்கின்றன. ஆனால் வன்னிப்பெருநிலத்தில் மழைக்கும் வெள்ளத்திற்கும் மக்கள் பல வகையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.  

 

வன்னியில் எப்பொழுதும் இல்லாத வறட்சி இந்த வருடம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு. தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடி நீருக்காக பல கிலோமீற்றர்களுக்கு மக்கள் அலைந்தார்கள். அதனால் ஈரத்திற்கு வன்னி நிலம் காத்திருந்தது. மழையை எதிர்பார்த்து வானம் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டுகளைப்பேலன்றி இம்முறை மழை மிகப் பிந்தியே பெய்யத் தொடங்கியது. நாடுமுழுவதும் மழையும் வெள்ளமுமாக சீரற்ற காலநிலை காணப்படும் இந்தச் சூழலில் வன்னியின் கூடாரங்கள் மூன்றாவது முறையாக மழைக்காலத்திற்கு முகம்கொடுக்கின்றன. யுத்தம் முடிந்து எல்லாம் திரும்பிவிட்டது மிதிவெடிகளை அகற்றி துரித மீள்குடியேற்றம் செய்து விட்டோம் என்று பெருமை பேசும் இன்றைய நாட்களில் இந்தக் கூடாரங்கள் மழைக்காலத் துயரவாழ்வை சுமக்கின்றன. 

 

கடந்த மேமாதம் முள்ளிவாய்க்கால் பேரழிவு யுத்தத்தின் மூன்றாவது ஆண்டு வெற்றி விழாவை இலங்கை அரசு கொண்டாடியது. இலங்கை அரசு தன்னுடைய சாதனைகளின் ஆண்டு நிறைவுகளை கொண்டாடும் பொழுது நாம் அவல வாழ்வின் தொடர்ச்சிகளை கணக்கெடுக்கிறோம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கை அரசு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தது. கேப்பாப்புலவு முகாம் அமைக்கும்வரை அதாவது மூன்றாண்டுகளாக மீள்குடியேற்ற நடவடிக்கை நடந்தது. யுத்தம் நடக்கும் காலங்களைவிடவும் இடம்பெயரும் காலங்களைவிடவும் மீள்குடியேற்றக்காலங்களே மிக நீண்டு செல்லுகிறது. யுத்தத்தில் சொற்ப கணங்களுக்குள் மக்களின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் மீண்டும் வாழிடங்களை அமைக்க எவ்வளவு காலம் செல்லுகிறது? தடுப்புமுகாங்களிலும் கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் இன்னும் கூடார வாழ்வை வாழ வேண்டுமா? என்பதுதான் வன்னியின் கோலத்தை பார்க்கும் பொழுது ஒற்றைக் கேள்வியாய் எழுகிறது. 

 

3rd%20year%20flood1.jpg

 

கூடாரங்களில் வாழ்வதின் கொடூரம்

 

ஒரு வன்னிக் கூடாரத்திலிருநது இந்த ரிப்போரட்டை நான் எழுதும் பொழுது பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. கூடாரத்தகரங்களின்மீது மழை பெரும்சத்தத்துடன் அறைகின்றது. ஓலைகாளால் வேய்ந்த கூரைச்சுவர்களை கடந்து சாரல் அடிக்கின்றது. வெள்ளம் ஊரை நிறைக்கின்றது. மழைக்குளிர் தகரக்கூடாரத்தில் நிறைந்துள்ளது. எங்கள் கூடாரத்தை எப்பொழுது மழை கிழிக்கும் என்றும் காற்று எங்கள் கூடாரத்தை எப்பொழுது தூக்கிச் செல்லும் என்றும் அஞ்சிக்கொண்டிருக்கிறோம். உலகம் அழிந்து போகும் என்று வாந்திகள் பரவிய நாட்களில் உண்மையிலேயே எங்கள் கூடாரங்கள் அழியும் நிலையில் ஆபத்தில் இருக்கின்றன. உலகம் அழியாது விட்டாலும் எங்கள் வாழ்வு அழிந்து கொண்டிருக்கிறது. 

 

மழையிலும் வெயிலிலும் பனியிலும் இக்கூடாரங்கள் சித்திரவதைக்கூடாரமாகின்றன. இந்தக் கூடாரங்களில் வாழும் பொழுது மழையையும் வெயிலையும் ஏசிக்கொண்டிருக்கிறோம். கூடாரங்களில் வாழும் பொழுது வானம்தான் வீடாகிறது. பெரும்பாலும் கூடாரங்களுக்கு வெளியில்தான் சனங்களின் வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோடைகாலத்தில் உள்ளே இருக்க முடியாத வெம்மையால் கூடாரத்திற்கு வெளியில் வாழுகிறோம். உண்பது, உட்கார்ந்து பேசுவது, உறங்குவது எல்லாம் கூடாரத்திற்கு வெளியில்தான்.  கோடை காலத்தில் வெம்மையை ஏசிவிட்டு மாரி காலத்தில் மழையை ஏசுகிறோம். மாறி மாறி தொடர்ந்து ஏசிக்கொண்டிருக்கிறோம். கடந்த மூன்றாண்டுகளில் மழையையும் வெயிலையும் இந்த சனங்களையும் கூடாரங்கள் தாங்கியுள்ளன. எங்கள் தேசத்தில் மேறகொள்ளப்படும் அநீதி அரசியலையையும்தான் இந்தக்கூடாரங்கள் தாங்கியிருக்கின்றன. 

 

தறப்பாள்களாலும் தகரக்கூடாரங்களாலும் அமைக்கப்பட்ட இந்தக் கூடாரங்களில் வாழும் சனங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில நாட்களுக்காக அமைக்கப்படட் தறப்பாள்கள் கூடாரங்களிலும் ஒரு சில மாதங்களுக்காக அமைக்கப்பட்ட தகரக் கூடாரங்களிலும் ஆண்டுக்கணக்கில் மக்கள் வாழ்கின்றனர். இந்தக்கூடாரங்களில் வாழ்ந்த பலர் நோயாளிகளாக்கப்பட்டுள்ளனர். பலரது தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கறுப்பாகி காய்ந்து போகின்றனர். இதற்குள் வரும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. 

 

உண்மையில் இதற்குள் வாழ்வது என்பது கொடுமையான தண்டனைக்கு உள்ளாவதைப் போன்றது. தடுப்புமுகாம் கூடாரங்கள் சித்திரவதையை நோக்கமாகக் கொண்டது. அதைப்போலத்தான் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் சித்திரவதையை நோக்கமாகக் கொண்டுதான் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு சில வீடுகளுக்கு  இடையில் இன்னும் கூடாரங்கள் தெரிகின்றன. கூடார மக்களது துயரம் இன்னும் தீரவில்லை. ஒரு பெரும் யுகத்தின் துயரம் போல இன்னும் நீள்கிறது. 

 

 3rd%20year%20Flood2.jpg

 

வீட்டுத்திட்டத்தின் அரசியல்

வன்னி மக்களின் அவலங்கள் எல்லாமே யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஏதோ ஒரு வகையில் அரசியல் பொருளாகின்றன. வீட்டு;திட்டம் கொடுக்கிறோம் என்றும் வீட்டுத்திட்டம் கொடுக்கவில்லை என்றும் வெறும் சொற்களால் அணுகப்படுகின்றன. இந்தியன் வீட்டுத்திட்டம் முதல் யு.என் வீட்டுத்திட்டம் வரை நூறு வீட்டுத்திட்ட பங்காளிகளின் பெயர்கள் பட்டியல்களில் உள்ளன. இதுவரையில் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 

 

வருடத்தில் உள்ள சில மாதங்களை சொல்லியே வீட்டுத்திட்ட அரசியலை நகர்த்துகிறார்கள். இப்பொது தைமாதம் வீட்டுத்திட்டம் வரும் என்று சொல்லித்தான் மீண்டும் ஒரு மழைக்காலத்திற்கு மக்களை இறக்கியிருக்கிறார்கள். முன்புபொருமுறை தைமாத்தில் வீட்டுத்திட்டம் வரும் என்றார்க். பின்னர் சித்திரையில் வீட்டுத்திட்டம் வரும் என்றார்கள். பின்னர் ஐப்பசியில் வரும் என்றார்கள். இப்படியே தொடர்ந்து மாதாங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்கள். இதற்கிடையில் அவ்வப்போது வீட்டுத்திட்டம் வேண்டுமானால் நாளை நான்கு மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெறும் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று சொல்லப்படும். அங்கு அரசங்க அரயல்வாதியின் கூட்டம் ஒன்று இடம்பெறலாம் அல்லது இலங்கை அரசுக்கு ஆதரவான ஆர்பாட்டத்தில் ஒன்றில் மக்கள் கலந்து கொள்ள நிர்பந்திக்கப்படலாம். 

 

 

பட்டியல்கள் தயாரிப்பதும் பெயர் பட்டியல்கள் ஒட்டுவதும்கூட மீண்டும் மீண்டும் நடக்கின்றன. வெறும் பட்டியல்களை மாத்திரமே பல கிராமங்களில் பார்த்துக் கொண்டு மழையில் சனங்கள் நனைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக பதிவெடுப்பது, காணியை அளப்பது, கூட்டம்போடுவது என்று ஏராளாமான நடைமுறைகள் மீளமீள நடக்கின்றன. இரக்கமற்ற வகையில் நொந்துபோன மக்களை இன்னும் இன்னும் காயப்படுத்துவதும் நோகடிப்பதும் அவலத்தை அரசியல் செய்வதும் எத்தகைய அநீதி? 

 

 

3rd%20year%20Flood3.jpg

 

வீட்டிற்காக காணியை கேட்கும் வியாபாரம்

 

புதுமுறிப்பு கிராமத்திற்குச் சென்றேன். நடமாடும் காணிக்கந்தோர் நடக்கிறது. எப்பொழுது வீட்டுத்திட்டம் வரும் என்று சன்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முதலில் காணிகள் உங்களுடையதா என்றும் அது உங்களுக்கு தரக்கூடியதா என்றும் பார்க்கிறேம். அது முடிய உங்கள் குடும்பத்திற்கு எத்தனை புள்ளிகள் வருகின்ற என்று பார்த்து அதற்கு ஏற்ப உங்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும் சில வேளை கிடைக்காமலும் போகும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். 

யாரிடம் காணி உறுதிப்பத்திரம் உள்ளது? என்பதை அவதானிக்கும் அதிகாரிகள் எந்தக்காணிநிலத்தை பறிக்கலாம் என்று ஆராய்வதற்காகவே கிராமங்கள் தோறும் அலைகின்றனர். இதற்கு வீட்டுத்திட்ட நடவடிக்கையை ஒரு நல்லதொரு சந்தர்ப்பமாகவும் உபாயமாகவும் கையாள்கின்றனர். வீட்டுத்திட்டம் வேணுமா? காணியைக் கொடுங்கள் வேறு எங்கவாது வீடும் மலசலகூடமும் கட்டித்தருகிறோம் என்று சொல்லுகின்றனர். இதனால் பல கிராமங்களில் மக்கள் தொடர்ந்து அலைக்கப்படுகின்றனர்.

 

அண்மையில் இரத்தினபுரம் கிராமத்தில் முப்பது குடும்பங்களை காணியற்றவர்கள் என்று பதியமுற்பட்டார்கள் அதிகாரிகள். காணிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி இல்லை என்று அதிகாரிகள் தீர்பிடமுனைகின்றனர். காணிப்பத்திரத்தின் முக்கியத்துவம் தெரியாமல் அதை அன்றைய நாட்களில் பெறத்தவறியதனால் இன்று காலம் காலமாக வசித்த காணி இல்லை என்று எப்படி சொல்லுகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பினார்கள். உங்களுக்கு வீடு தேவை என்றால் காணி அற்றவர்கள் என்று பதிவு செய்யுங்கள் என்று ஒரு வார்த்தையில் அதிகாரிகள் சொல்லுகின்றனர். 

 

காலம் காலமாக ஒரு நிலத்தில் வாழ்ந்து வரும் பொழுது கைகளில் ஆவணம் இல்லை என்பதற்காக நிலமற்றவர்கள் என்று தீர்ப்பளிப்பது உண்மையில் மக்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. அதனால் ஏதுவும் வேண்டாம் நாங்கள் எங்கள் நிலத்தில் வாசிக்கிறோம் என்று மக்கள் விரக்கிதியில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். கூடாரங்களில் வாழும் மக்களிடம் சென்று நிலத்தை பறிக்க வீடு முக்கியமான தொரு காயாக நகர்தப்படுகிறது. யுத்தமும் யுத்தத்திற்குப் பிந்தைய அவலமும் இப்படித்தான் அரசியலும் வியாபாரமுமாகின்றது.

 

Housing%201.jpg

 

உலகம் அமைக்கும் வீடுகள்

 

இந்தியா ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்தமைக்கு பரிகாரமாக ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்து தருவாக சொல்லியது. அந்த வேலைத்திட்டத்தை தம்மிடம் கைளித்து அதில் வரும் இலாபத்தை பெற இலங்கை அரசு விரும்பியது. தானே வீடுகளை அமைக்க வேண்டும் என்று சொல்லி இலங்கைக்கு வேலைத்திட்டத்தை கொடுக்க முதலில் மறுத்த இந்தியா பின்னர் இலங்கைக்குப் பணிந்தது. 

இன்று எல்லாக் கிராமங்களிலும் உங்களுக்கு இந்தியன்வீட்டுத்திட்டம் தருகிறோம் என்பதுதான் முடிவாக சொல்லப்படுகிறது. வன்னி மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக பல்வேறு நிறுவனங்கள் தெருக்களில் பெயர்பலகைளை நட்டிருக்கின்றன. வீடே இல்லாத ஊர்களிலெல்லாம்கூட இப்படி நடப்பட்டிருக்கின்றன. யு.என் வீடு தொடங்கி பல நாடுகளின் பெயர்களிலும் பல நாட்டு சமய மற்றும் தொண்டு நிறுவனங்களின் பெயர்களிலும் வீடுகள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சில வீடுகள் அமைக்கப்பட்டு அதன் சுவர்களிலும் அந்தக் கதைகள் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளன. 

Housing%203.jpg

துயரக் கூடாரங்களின் மீது நடக்கும் அரசியல்

அரசியல்வாதிகளால் ஒரு சில செக்கன்களுக்குகூட இந்தக் கிடாரங்களில் வாழ இயலாது என்று மக்கள் கொந்திக்கிறார்கள். கூடாரங்களின் கொடூரம் பற்றி எதுவும் தெரியாமல்தான இப்படி மககள் தண்டிக்கப்படுகிறார்களா? அல்லது இந்த தண்டனையை மக்கள் அனுபவிக்கட்டும் என்பதற்காக விடப்பட்டுள்ளார்களா? தெருவுக்குத் தெரு வடக்கின் வசந்தம், பொருhதார அபிவிருத்தி அமைச்சு, பாரிய அபவிருத்தி, இந்திய வீடமைப்புத்திட்டம் என்று வர்ண அரசியல் பெயர்ப்பலகைகளின் மத்தியில்தான் அதன் பின்னணியாக துயரக்கூடாரங்கள் காட்சியளிக்கின்றன. இதே தெருக்களில் நின்று போட்டி போட்டு அரசியல் செய்யும் சூழலில்தான் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

யுத்தத்தில் எங்கள் லட்சக்கணக்கான வீடுகளை அழித்தது இராணுவம். சனங்களுடன் அவர்களின் தேசமும் அழிக்கப்படடது. ஏதுமற்று திரும்பிய மக்களுககு வழங்கப்பட்ட கூடாரங்கள் நிரந்தர வாழிடங்களாகியுள்ளன. பிரதான தெருக்களிலும் நகரை அண்டியும் செய்யப்படும் வேலைகளும் பிரசாரங்களும் வன்னியின் உள்ளே அமுங்கியுள்ள துயரக்கூடாரங்களின் மெய்யான கதைகளை மறைக்கின்றன. சொந்த நிலத்தில் வாழ்வதில் உறுதியும் உணர்வும் கொண்டிருத்தல் முதல் தமிழர்களாக இருப்பது வரை பல்வேறு குற்றங்களுக்காக எங்கள் மக்கள் துயரக்கூடாரங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இரக்கமற்ற மழை என்று இயற்கையை திட்டுவதைத் தவிர எதையும் செய்ய முடியாத காலத்தில் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - பார்த்தீபன்       

Housing%202.jpg

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86862/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.