Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவு காணாதீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

       

 

 

 

     

 

 

     

 

கனவு காணாதீர்கள்

 

 

1395b6614ad1f64f2281ee4f73fe8606.jpgகைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

 

 
அவர்களை அவரே காப்பாற்றுவார்'' யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், கைதான மாணவர்களது பெற்றோர்கள் மத்தியில் இறுமாப்புடன் பேசிய விடயம் இது.
 
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகம் இராணுவ மயமாகி இருந்தது. 27ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாள் என்பதாலும் அன்றே மாவீரர் தினமும் கொண்டாடப்பட்டது என்பதாலும் பல்கலை வளாகத்தை இராணுவம் முற்றுகையிட்டிருந்தது.
 
பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்திருந்தனர். இராணுவப் புலனாய்வாளர்களின் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மாணவர்கள் போரில் இறந்து போன தமது உறவுகளுக்காக அஞ்சலிக்க வேண்டிய தமது கடமையை நிறுத்திவிடவில்லை.
 
உணர்வுகளை எப்படித்தான் கட்டுப்படுத்துவது? அவர்கள் அமைதியான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றி விட்டனர். ஆனாலும் 27ஆம் திகதி இரவு இராணுவத்தினர் சீருடையுடன் பெண்கள் விடுதிக்குள் புகுந்து விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
இந்த அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து 28ஆம் திகதி காலை பல்கலை மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். அவர்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
 
பல்கலைக்கழகப் பிரதான வாயிலில் இருந்து விஞ்ஞான பீட வாயில் வரை பேரணியாகச் செல்வது என அவர்கள் திட்டமிட்டிருந்தனர். பேரணியாக மாணவர்கள் நகரத் தொடங்கியபோது வளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் திடீரென மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
 
காரணமற்ற கைது
 
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அன்று நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஓரிரு மணித்தியாலயங்களில் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிற்பாடு ஸ்ரீரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜெயந், மருத்துவ பீட மாணவன் சுதர்சன், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சொலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
அன்று நள்ளிரவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களின் பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பவானந்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்.
 
மருத்துவ பீட மாணவன் சுதர்சன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட ஏனைய நால்வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கந்த, கந்தக்கடுவ புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
கைதானவர்களுக்கும் ஸ்ரீரெலோ காரியாலயத்துக்கு பெற்றோல் குண்டு வீசியவர்களுக்கும் முடிச்சுப்போட நினைத்தவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளைக் கொண்டாடியமைக்காகவே கைதானார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
 
இராணுவத் தளபதியின் கண்டுபிடிப்பு
 
புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு மாணவர்களும், தலைவர் இருக்கிறார் என வாதிடுகிறார்களாம். வெளிநாட்டில் இருக்கும் புலி ஆதரவாளர்களே இவர்களுக்கு உரமூட்டுகிறார்களாம்.
 
பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும், அதன்மூலம் நாங்கள் தமிழீழம் பெறுவோம் என்று அடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் அவர்களை இப்போதைக்கு விடுதலை செய்யமுடியாது என்று அடித்துக் கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி.
 
தாயின் புலம்பல்
 
நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பில் கைதான மாணவர்களின் பெற்றோர்களும் உடனிருந்தனர். இராணுவத் தளபதியின் கருத்துக்களைக் கேட்டதும் அந்தத் தாய்மார் எழுந்து "ஐயா, எங்கள் பிள்ளைகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள், அவர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்களை விடுதலை செய்துவிடுங்கள்'' என்று இரந்துள்ளனர்.
 
தாய்மாரின் கண்ணீரை நிராகரித்த இராணுவத் தளபதி உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் பேசுகிறார்கள். நேற்றும் கூட அவர்கள் அதனைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். விரும்பினால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் சந்திக்கச் செல்லும்போது முடிந்தால் "பிரபாகரன் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ பேசாதிருக்கச் சொல்லுங்கள்'' என்றார்.
 
அம்மணிக்கு ஒன்றுமே தெரியாது
 
ஹத்துருசிங்க முன் தாய்மார்கள் கதறி அழுது கொண்டிருந்த போது ஒன்றும் தெரியாதவர் போல் இராணுவத்தினர் கொடுத்த பலகாரத்தை ருசித்துக்கொண்டிருந்தார் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்.
 
தாய் ஒருவர், "எங்கள் பிள்ளைகள் எங்களிடமிருக்கும் போது அவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம், அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் போது அவர்களுக்குப் பொறுப்பு பல்கலை நிர்வாகம் தானே'' என்று கேள்வி எழுப்பியபோது அவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். தாய்மாரின் அழுகைக்கு மத்தியில் அவரின் சிரிப்பு அனைவருக்கும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
ஒன்றும் செய்யாத இராணுவம்
 
27ஆம் திகதி இரவு பெண்கள் விடுதிக்கு இராணுவம் புகுந்தது பிழைதான் என ஏற்றுக் கொள்ளும் இராணுவத் தளபதி, கார்த்திகைத் திருநாளில் வீடுகளின் முன்பும் வியாபார நிலையங்களின் முன்பும் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களால் மிதிக்கவோ அவற்றை தூக்கி வீசவோ இல்லை, அது வெறும் கட்டுக்கதை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
 
ஊடகங்களே குழப்புகின்றனவாம்
 
இராணுவத் தளபதியும் துணைவேந்தரும் ஊடகங்கள் மீது தமது கடுங்கோபங்களை வெளிப்படுத்தினர். ஊடகங்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை.
 
27ஆம் திகதி பல்கலைக்கழ கம் அல்லோல கல்லோலப்பட் டுக் கொண்டிருக்கும்போதும் மறுநாள் மாணவர்கள் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட போதும் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் மாயமாகி இருந்தனர். வந்திருந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் மாணவர்களை காட்டிக் கொடுப்பவராக மாறியிருந்தார். 
 
வசந்தி அம்மையார் கடமை யில் இருக்கவில்லை. அவரது தொலைபேசியும் கடமையைச் செய்யவில்லை. அதிகாரமற்ற சில உணர்வாளர்கள் மட்டும் தங்களால் இயன்ற காரியங்களைச் செய்து கொண்டிருந்தனர்.
 
இம்மாத்திரத்தில் ஊடகங்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட அவலங்களை வெளிப்படுத்தத் தவறவில்லை. அதற்காக அந்த ஊடகங்களை வஞ்சிப்பதில் துணைவேந்தருக்கு என்ன இலாபம் இருக்கிறது?
 
தூண்டும் அரசியல்
 
பல்கலைக்கழக அசம்பாவிதங்களை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இதற்காக அவர்கள் ஆள் அடையாளப்படுத்தும் பணிகளையும் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பயங்கரவாதத்  தடுப்புப் பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது. 
 
இவர்கள் சொல்வதை இவர்களே கேட்பதில்லை
 
ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் கட்சியாம். அவர்கள் இறந்து போன தமது சொந்தங்களுக்கான தினத்தைக் கொண்டாடுவது தப்பேயில்லையாம். ஆனால் விடுதலைப்புலிகள் பிரிவினைவாத, பயங்கரவாத அரசியல் நடத்தினார்களாம். ஆதலால் அந்த அமைப்பில் இருந்து மாண்டுபோனவர்களுக்கு வணக்கம் செலுத்தவே கூடாதாம்.
 
கிளிநொச்சிக்கு ஒருதடவை வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் போராட்டத்தில் இறந்த தமது பிள்ளைகளின் படங்களை வீட்டில் வைத்திருப்பதற்குத் தடையில்லை என அறிவித்தார்.
 
மாறாக இறந்துபோன அந்தப் பிள்ளைகளுக்காகத் தீபம் ஏற்றக்கூடாது என கோத்தபாயவும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியும் அறிவித்திருக்கின்றனர்.
 
அடக்கினால் வெடிக்கும் 
 
அடக்குமுறைகளில் இருந்தே அதற்கு எதிரான போராட்டமும் உருவாகிறது. நான்கு மாணவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதால் மட்டும் விடுதலை உணர்வை நசுக்கிவிடமுடியாது.
 
தமிழ் மக்கள் இன்றும் தமது உரிமைகளைக் கேட்டு வாதிடுகின்றனர். அவர்கள் எதைக் கேட்கிறார்கள், ஏன் கேட்கிறார்கள் என்பது பற்றிச் சிந்திப்பதை விடுத்து அப்படி எதுவுமே கேட்கக் கூடாது என அடித்து இருத்திவிட முடியும் என அரசு நினைத்தால் அது நாட்டின் அமைதிக்குக் கெடுதலாகவே இருக்கும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.