Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவின் தொடரும் சிறிலங்கா ஆதரவு – அவுஸ்திரேலிய தமிழர்கள் அழுத்தம் கொடுப்பார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

australia-flag-300x201.jpg

 

சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார், சிறிலங்காவில் இடம்பெற்று வரும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை அதிகம் அறிந்திருந்தார். எவ்வாறிருப்பினும் இவரது வருகை என்பது குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

 

2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்ததிலிருந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்தகால மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை ஒரு நடைமுறையாகக் காணப்படுகிறது.

 

இந்த நிலையானது இவ்வாண்டு ஆரம்பத்தில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துடன் உச்சம் பெற்றது. சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு மேற்குலக நாடுகள் தமது அதிருப்திகளையும், அழுத்தங்களையும் முன்வைத்த போதும், அவுஸ்திரேலியா இவ்வாறான நடவடிக்கைகளில் பெரிதளவில் ஈடுபடவில்லை.

 

ஈழத்தை ஆதரிக்கின்ற புலம்பெயர் மக்கள் வாழ்கின்ற மேற்குலக நாடுகள் தமக்கான ஆதரவு வாக்குகளை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமாயின் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தன. ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ண் போன்ற நகரங்கள், ஈழத்தை ஆதரிக்கின்ற பலருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியுள்ள போதிலும், சிறிலங்காவை அவுஸ்திரேலியா எதிர்த்து நிற்கவில்லை.

 

அவுஸ்திரேலிய பிரதமர் யூலியா கிலார்ட் இந்த நிலை ஏற்படுவதை தவிர்த்திருந்ததுடன், சிறிலங்காவுடன் நல்லுறவை பேணுவதில் சிரத்தை எடுத்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் கூட்டணி நாடுகளும் பொதுநலவாய அமைப்பும் தீர்மானத்தை இயற்றிய போதும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா, சிறிலங்காவை ஆதரித்துள்ளது.

 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான உச்சி மாநாடு கடந்த ஆண்டில் பேர்த்தில் இடம்பெற்றது. 2013ல் இந்த உச்சி மாநாட்டை சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் மேற்கொள்வதென தீர்மானித்த போது இதனை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலியாவை பல்வேறு தரப்பினர் கோரியிருந்த போதும் கூட இதனை அந்நாட்டு அரசாங்கம் நிறைவேற்றவில்லை. பதிலாக பேர்த் நகருக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சென்ற போது, இவருக்கான உச்ச பாதுகாப்பை வழங்குமாறும் இவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கட்டளையிடப்பட்டது.

 

கடந்த ஏப்ரலில் சிறிலங்காவில் ‘கடத்தப்பட்ட’ அவுஸ்திரேலிய குடிமகனும் முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவருமான குமார் குணரட்ண விடுவிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யாது உடனடியாக அவர் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலிய – சிறிலங்கா உறவின் சிறிது விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

 

இவ்வாறான சில சம்பவங்கள், சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் முன்னேற்றம் ஏற்பட உதவியிருக்கலாம். ஆனால் இது பிரதான காரணமல்ல. அண்மைய ஆண்டுகளில் படகுகளின் மூலம் பல ஆயிரக்கணக்கான சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர். இதன் பின்னர் இவர்கள் அவுஸ்திரேலியாவில் ‘புகலிடக் கோரிக்கைக்காக’ விண்ணப்பிக்கிறார்கள். அண்மைக்காலம் வரை, இந்த மக்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த மக்கள் அவுஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தனர்.

 

சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருப்பதானது அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய அரசியல் விவகாரமாகும். அகதிகள் விடயத்தில் பிரதமர் கிலார்ட் மென்போக்கை கடைப்பிடிப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது இவ்வாறான புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை இவர்கள் வேறு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என கிலார்ட் அறிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக படகுகள் மூலம் சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களை தடுக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விருப்பங்காட்டுகின்றனர். இவ்வாறு நுழையும் அகதிகளில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவிலிருந்து இனப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் அல்ல எனவும், இவர்கள் பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குள் நுழைந்துள்ளதை அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்போது உணர்ந்துள்ளது.

 

சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நழையும் இவ்வாறான படகுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து எவ்வாறான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது தொடர்பாக கடந்த வாரம் சிறிலங்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் சிறிலங்கா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

 

இரு நாடுகளும் இணைந்து கடல் சார் கண்காணிப்புக்களை மேற்கொள்வதுடன், சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்திரேலியா பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான முன்னகர்வுகள் சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் இராஜதந்திர ரீதியான நெருக்கத்தை ஏந்படுத்துவதற்கான வாய்ப்பாக காணப்படுகிறது.

 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான உச்சி மாநாடு சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் நடாத்துவதென திட்டமிடப்பட்டுள்ள இந்த வேளையில், இவ்வாறான வாய்ப்பானது சிறிலங்கா உல்லாசப் பயணிகளுக்கான சிறந்த நாடாக மட்டும் காணப்படாது ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாடு என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது.

 

தற்போதும் தொடர்ந்தும் சிறிலங்காவின் நட்பு நாடாக அவுஸ்திரேலியா விளங்கி வரும் நிலையில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சி மாநாடும் இவ்வாறு சிறிலங்காவுக்குச் சார்பாக அமைந்திருக்கும் என தப்புக் கணக்கு போடமுடியாது. இந்த உச்சி மாநாட்டை தான் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே கனேடிய பிரதமர் ஸ்ரீபன் கார்பர் அறிவித்திருந்தார். இதேபோன்று பொதுநலவாய அமைப்பின் தலைவரான எலிசபெத் மகாராணியார் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சி மாநாடானது சிறிலங்காவில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இது சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பையும் மறுபுறத்தே கெட்டவாய்ப்பையும் வழங்குகின்றது. அதாவது இதன் மூலம் கொழும்பு தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நல்வாய்ப்பை பெற்றுக் கொள்கிறது. ஆனால் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழ ஆதரவாளர்கள் இந்த உச்சி மாநாட்டை குழப்பி சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே இதற்கான கெட்ட வாய்ப்பாக காணப்படுகிறது.

 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற சிலவற்றில் சிறிலங்கா அரசாங்கம் நீதியுடன் நடந்து கொள்ளவேண்டும். சட்டத்தின் படி நடந்துகொள்ள வேண்டும். இதன் உண்மைத்தன்மையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறத் தீர்மானமாகியுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடானது சிறிலங்காவுக்கு இராஜ தந்திர ரீதியான பின்னடைவை ஏற்படுத்தலாம். இது சிறிலங்காவின் கிட்டிய எதிர்காலத்தில் பெரும் சவாலையும், இழிவையும் வழங்குவதில் துணைநிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

http://eelampresse.com/?p=15044

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.