Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தேர்தல் சட்டத் திருத்தம்: வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை சமூகங்களை கடுமையாக பாதிக்கும்

Featured Replies

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, தேர்தல் தொகுதிகளை மறுசீரமைக்கின்ற ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவொன்றை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமித்துள்ளார்.


இதன்படி, நாடுமுழுவதிலும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் மாவட்ட மட்ட குழுக்களும் அமைக்கப்படுகின்றன.

 

தொகுதி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவுக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ள மாவட்ட குழுக்களில் அரச அதிகாரிகள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள்.

 

அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் திணைக்களம், நில அளவை திணைக்களம், சனத்தொகை புள்ளிவிபர திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளே மாவட்ட குழுக்களில் அங்கம் வகிப்பார்கள்.


இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.



பல்-உறுப்பினர் தொகுதிகள்

 

அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார முறையை மாற்றி மீண்டும் தொகுதி வாரி பிரதிநிதித்துவ முறையை பல தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கையில் கொண்டுவருவதற்கான முயற்சி நடக்கிறது.

 

புதிய சட்டத்திருத்தத்தின்படி, நாட்டின் உள்ளூராட்சி சபைகளில் 70 வீதமான உறுப்பினர்கள் தொகுதிவாரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மிகுதி 30 வீதமான உறுப்பினர்கள் பழைய விகிதாசார முறைப்படியே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 

ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் போக, தோல்வியடைகின்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களிடத்தில் இருந்தும் விகிதாசார முறைப்படி ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் புதிய தேர்தல்முறைத் திருத்தம் வந்துள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
 

இதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை புதிய தேர்தல் திருத்தம் கடுமையாக பாதிக்கும் என்று எதிரணி தமிழ் அரசியல் தலைவர்கள் அண்மைக்காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
 

ஆனால் சிறுபான்மை சமூகங்களின் கட்சிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லையென்று இந்தத் தேர்தல் முறைத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக செயற்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 

பல இனங்கள் செறிந்துவாழும் தொகுதிகளில் பல் -உறுப்பினர் கொண்ட வட்டாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121223_localgovernment.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.