Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் அல்லது குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் வாழும் 27குடும்பங்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் 27.12.2012 அன்று கரடியன்குளம் குசேலன்மலை பாலர் பாடசாலை வளாகத்தில் வழங்கப்பட்டது.
DSCF4119_zps92d10c9b.jpg
இக்கிராமத்துக்கான நிவாரண உதவி 3வகையான பொதிகளாக வழங்கப்பட்டிருந்தது. டென்மார்க் அன்னை அறக்கட்டளையின் நிதியுதவியில் வழங்கப்பட்ட பாலர்பொதியில் பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவர் ஆடைகள் குழந்தைகளுக்கான பனடோல் ஆகியவை வழங்கப்பட்டது.
15392_464664826924257_25255127_n_zps755a
மற்றும் Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவினரால் மாணவர்களுக்கான மாணவர்பொதியில் கொப்பி , பென்சில் பேனா , உட்பட கல்விக்குத் தேவையான பொருட்களும் குடும்பங்களுக்கான குடும்பப்பொதியில் அரிசி, சீனி ,தேயிலை , நுளம்புச்சுருள் பெட்டி , சித்தாலேப , லைற்றர் , பனடோல் , மெழுகுதிரி , போர்வை போன்றவையும் வழங்கப்பட்டது.
602705_464666176924122_1921074222_n_zps1
நிகழ்வில் இப் பிரதேசத்திற்கு பொறுப்பான பட்டதாரிப் பயிலுனர் திருமதி ராஜி அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், Brightfuture Nesakkaram அமைப்பின் அமைப்பாளர் திரு ஜனனன் மற்றும் அமைப்பின் தலைவர் கிருஸ்ணராஜ் , உப தலைவர் திரு உ.உதயகாந்த், கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு திவாகரன் , விளையாட்டு மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஜோன்சன், Brightfuture Nesakkaram அமைப்பின் முக்கியஸ்தர்களும், கரடியன் குளம் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
DSCF4130_zps3bf318b2.jpg
இக்கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது.
DSCF4140_zpsa710df86.jpg
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் மட்டமான நிலையில் இருக்கும் கல்விகற்கும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான முன்பள்ளிக்கற்பித்தலுக்கான வசதியும் மாணவர்களுக்கான பாடசாலைக்கல்வியை மேம்படுத்தும் வகையிலான ஆசிரியர்களுக்கான ஒழுங்கினையும் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
DSCF4145_zpsed30ad0c.jpg
இக்கிராமத்தை முன்னேற்றி குழந்தைகளுக்கான கல்வியையும் சுயதொருளாதார முன்னேற்றத்தையும் செய்து தருவதற்கு டென்மார்க் “அன்னை அறக்கட்டளை” நிறுவனத்தினர் நேசக்கரத்துடன் கைகோர்த்துள்ளனர்.
DSCF4149_zps05915f1c.jpg
இன்று உலகம் கணணிக்குள் வட்டமிட குசேலன்மலையில் 6ம் வகுப்பிற்குச் செல்ல வேண்டிய சிறுவன் ஒருவன் கையொப்பம் வைக்கத் தெரியாத நிலமையில் இருப்பதை நமது அனர்த்தக் குழுவினர் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அச்சிறுவனுக்கான கல்வியையும் அதேபோல அக்கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்குமான கல்வியையும் வழங்கும் திட்டத்தையும் தயரரித்து வழங்கியுள்ளனர்.
DSCF4153_zps3bd7362f.jpg
விடுதலைக்காகப் போராடி எங்கள் இனத்தின் வரலாறுகளையும் இந்த ஊர் மௌனமாகத் தாங்கி நிற்கிறது. அடிப்படை வசதிகள் சுகாதாரம் மின்சாரம் எதுவுமற்று வாழ்கிற இந்த மக்களுக்கான நல்வாழ்வைக் கொடுக்க கருணையாளர்களை அழைக்கிறோம். குசேலன்மலை போன்ற மேலும் பல கிராமங்களைத் தேடிய எங்களது குழுவினரின் செயற்பாட்டிற்கு புலம்பெயர்ந்து வாழ்கிற அனைவரும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகிறோம்.

DSCF4170_zpsab19032c.jpg

எங்கள் கனவுகளின் இருப்பும் விதையும் இத்தகைய கிராமங்களிலேயே இன்னும் சாகாமல் வாழ்கிறது. கவனிக்கப்படாத பிரதேசங்களாக கைவிடப்பட்ட தமிழர் பிரதேசங்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த இன்றே உங்கள் உழைப்பில் ஒருதுளியை சேமித்து வழங்குங்கள்.

sign1_zpsdd1338e8.jpg
IMG_20121227_115408_zps73d807e9.jpg

 

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

Shanthy Germany – 0049 6781 70723 /Mobile – 0049 162 8037418
Skype ID – Shanthyramesh

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com


Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

www.nesakkaram.org

 

Edited by shanthy

எங்கள் கனவுகளின் இருப்பும் விதையும் இத்தகைய கிராமங்களிலேயே இன்னும் சாகாமல் வாழ்கிறது. கவனிக்கப்படாத பிரதேசங்களாக கைவிடப்பட்ட தமிழர் பிரதேசங்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த இன்றே உங்கள் உழைப்பில் ஒருதுளியை சேமித்து வழங்குங்கள்.

 

இதுதான் யதார்த்தம்.........  இந்த நிலையில் மாற்றங்கள் இல்லாது காணுகின்ற கனவுகள் யாவுமே விளலுக்கு இறைத்த நீராகும்  . அன்னை அறக்கட்டளை  போன்றோரின் கூச்சல்கள் இல்லாச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மற்றயவர்களுக்கு ஓர் முன்மாதிரியாக இருப்பதற்கு வாழ்த்துகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.