Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வெற்றி கொள்ள முடியவில்லை: கோத்தாபய கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை வெற்றி கொண்ட போதும், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வெற்றி கொள்ளவில்லை என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

 

யுத்தத்தை வெற்றி கொள்வதற்கென காணப்பட்ட சவால்கள் அபிவிருத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் விடுதலைப் புலிகளை தலை தூங்க அரசாங்கம் விடா வோவதில்லை என கோத்தாபய சூளுரைத்துள்ளார்.

 

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்தொழிந்த போதிலும், அவர்களின் சர்வதேச வலையப்பு தொடர்ந்தும் சக்தி பெற்றுள்ளமையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மத்திய கிழக்கின் சில நாடுகளைப் போன்று சிறிலங்காவும் இக்கட்டான நிலைக்கு தள்ளுவதற்கு சிலர் முயற்றி செய்கின்றனர். சிறிலங்கா மக்களின் அபிமானம் பெற்ற அரசு இன்று காணப்படுவதால் இத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றி அளிக்காதென அவர் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றங்கள் மூலம் நாட்டில் குழப்பதை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கோத்தாபய அங்கு தெரிவித்துள்ளார்.

http://eelampresse.com/?p=15417

விடுமுறைக்கு தாயகம் வரும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கவேண்டும் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் சிறிலங்காவிற்கு சென்று வந்தவர்களுக்கு சிலருக்கு சிறிலங்காவில் சிறப்பு கவனிப்பு நடக்குதாம் அவர்களை தவிர்த்து ஏனையோருக்கு புனர்வாழ்வு அளிக்கலாம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களை கோத்தா விசாரிப்பார்

Published on December 29, 2012-11:09 am   ·   No Comments

srilanka-passport-118x150.jpgவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்தப்படும் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இரட்;டை குடியுரிமையை வழங்கும் போது, உரிய விசாரணைகளை நடத்த தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

 

1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து, கனடா பிரான்ஸ் சுவிஸ் போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்று அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இரட்டை குடியுரிமைகளை பெற்று சர்வதேச ரீதியில் சிறீலங்காவுக்கு அபகீர்த்திக்கு ஏற்படுத்த முயற்சித்து வருவது அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதன் காரணமாகவே முன்னைய சட்டங்களில் திருத்தங்களை செய்து, இரட்டை குடியுரிமை வழங்குவதில் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

 

எனினும் கோத்தபாயவுக்கு கோடிக்கணக்கான பணத்தை இலஞ்சமாக கொடுத்தால் இலகுவாக இரட்டை குடியுரிமை பெற முடியும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.thinakkathir.com/?p=46176

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.