Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவானில் தடுமாறிய உலங்குவானூர்தியை பிரித் ஓதி தரையிறக்கிய லொக்குபண்டார

Featured Replies

நடுவானில் தடுமாறிய உலங்குவானூர்தியை பிரித் ஓதி தரையிறக்கிய லொக்குபண்டார [ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 01:33 GMT ] [ தா.அருணாசலம் ]

heli-cartoon.jpgசிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியுள்ளது. 

ஆழிப்பேரலைக்கு இரையானோரை நினைவு கூரும் சிறிலங்கா அரசின் பிரதான நிகழ்வு பதுளையில் கடந்த 26ம் நாள் நடைபெற்றது. 

இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் அவர் அதில் பங்கேற்க முடியாது போனதால், அவருக்குப் பதிலாக சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார ஆகியோர் கொழும்பில் இருந்து சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றில் பதுளைக்குப் புறப்பட்டனர். 

புதுளையில் ஒரு மைதானத்தில் உலங்குவானூர்தியை தரையிறக்குவதற்கு விமானி முயற்சித்தார். 

ஆனால், அடர்ந்து காணப்பட்ட மேகக் கூட்டத்தினால் அவரால் தரையிறக்க வேண்டிய இடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால் அவர் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். 

இந்தநிலையில், உலங்குவானூர்தியில் இருந்த சப்ரகமுவ ஆளுனர் லொக்குபண்டார பிரித் ஓதத் தொடங்கினார். 

நீண்டநேர கடும் பிரயத்தனங்களுக்குப் பின்னர், ஒருவழியாக தரையிறக்க வேண்டிய இடத்தை விமானி கண்டுபிடித்ததால், ஒரு அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

உலங்குவானூர்தி பாதுகாப்பாக தரையிறங்கியதும், பிரித் ஓதி அதைப் பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக லொக்குபண்டாரவுக்கு எல்லோரும் நன்றி கூறியதாவும், விமானிக்கு எவரும் நன்றி கூறவில்லை என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20121230107511

உலங்குவானூர்தி பாதுகாப்பாக தரையிறங்கியதும், பிரித் ஓதி அதைப் பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக லொக்குபண்டாரவுக்கு எல்லோரும் நன்றி கூறியதாவும், விமானிக்கு எவரும் நன்றி கூறவில்லை என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 சகல விமான ஓட்டிகளும் நிச்சயம் பிரித் கற்றுக்கொள்ளவேண்டும்  :D

கோத்தா போன உலங்கு வானூர்த்தி, பசில் போன உலங்கு வானூர்த்தி, மகிந்தா போன விமானம் சகலதும் ஆபத்தில் மாட்டியிருக்கு அதற்காகத்தான் எப்போதுமே தப்பிவிடும் சமலுக்கு அந்த விமானி இப்படி ஒரு பாடம் படிப்பித்தார். அகவே யாரும் அவருக்கு நன்றி கூறவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித் ஓதி..... சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் லொக்கு... எல்லாருக்கும் சிங்க‌க் கொடியை... அரைக் க‌ம்ப‌த்தில், ப‌ற‌க்க‌ விடும் நாளாக‌... அமைந்திருக்கும்.
ச்சாய்.... அருமையான சான்ஸ், தவறிப் போச்சே...
பிரித் ஓதுறவனை, இனி... பிஞ்ச‌ செருப்பலை, அடிக்க வேண்டும் போலை... இருக்கு.
 

மரணபயத்தில் பிரித் உளறிய லொக்கு பண்டார என்ற சந்தர்ப்பவாத சிங்களப் பயங்கரவாதி இனி வாழ்நாள் முழுவதும் உலங்கு வானூர்தியில் ஏற மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் மந்திரத்தை விட, பிரித் ஓதுவதால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று... உள்ளூர் பத்திரிகையில் வந்த‌ செய்தி, உண்மை போலிருக்கு.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.