Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்கு அமெரிக்கா கைகொடுக்குமா? காலை வாருமா?

Featured Replies

obama-india.jpg

 

பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில், மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் தான். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், தமிழர்களின் அவலநிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அரசியல்கட்சிகளால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு அதனை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.காரணம், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக நேரடியாக களமிறங்கவில்லை.

 

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்த் தேசியக கூட்டமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தைத் தோலுரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகவே காணப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெனிவா செல்லும் திட்டத்தை கூட்டமைப்பு கைவிட்ட போது, அது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நகர்வாக இருக்குமோ என்று சந்தேகம் கிளப்பியவர்களும் உண்டு.ஆனால், ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கைகளை விடுத்த பின்னர் தான், அந்த முடிவை எடுத்திருந்தது.

 

அப்போதைய சூழ்நிலையில், ஜெனிவாவுக்குச் செல்லும் அனைவரையும், இலங்கை அரசாங்கம் துரோகிகளாகவே இனங்காட்டியது, அவர்கள் திரும்பவும் இலங்கையில் கால் வைக்கமுடியாது என்றும் மிரட்டியது. அத்தகைய நிலையில், அமைதி வாய்ப்புகளை அது பின்தள்ளி விடும் என்ற கருத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று ஒதுங்கி நின்று கொண்டது. அதற்காக அப்போது. அரசாங்கத்தின் பாராட்டைப் பெறவும் அது தவறவில்லை. ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினையை அங்கு முன்னிலைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது புதியதொரு திருப்பம் எனலாம். இது இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை விடவும், அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடர் மிகமுக்கியமானது, ஆபத்தானது. இதனை எதிர்கொள்வதற்கான வியூகத்தை இலங்கை அரசாங்கம் எப்போதோ வகுக்கத் தொடங்கி விட்டது. அதன் ஒரு கட்டமாகவே, ஆபிரிக்க, இலத்தீன அமெரிக்க நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு கண்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை, இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை இதில் வெளியிடப்படவுள்ளது. இதன் அடிப்படையில் தான், இலங்கை மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தீர்மானிக்கும். ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை. இதனை ஐ.நா அதிகாரிகளும், மேற்கு நாடுகளின் அதிகாரிகளும் தெளிவாகவே கூறிவந்துள்ளனர். இத்தகைய நிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போதும் நிலைமைகளை ஆராயப் போகிறார். இவையெல்லாம், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கான அழுத்தங்களை அதிகரிக்கும். இத்தகைய பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டத்தில் தமிழர்களின அவலநிலையை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். இது ஜெனிவா களத்தை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

அதேவேளை, கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த, அமெரிக்காவின் நிலைப்பாடு இம்முறை மாற்றம் காணுமா என்ற கேள்வியும் உள்ளது. அதற்குக் காரணம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் தான். வரும் ஜனவரி 21ம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடக்கவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. புதிய இராஜாங்கச் செயலராக அவர் ஜோன் கெரியை பரிந்துரைத்துள்ளார். ஜோன் கெரி, இலங்கை அரசுடன் நெருக்கம் ஏற்படுவதை விரும்பும் ஒருவராக கணிக்கப்படும் நிலையில், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான இறுக்கமான போக்குத் தொடருமா என்ற கேள்வி உள்ளது. அதுமட்டுமன்றி, ஐ.நாவுக்கான தூதுவர் பதவியில் உள்ள சுசன் ரைஸ் அந்தப் பதவியில் தொடர்வாரா என்பதும் முக்கியம். அவர் தான் ஜெனிவா தீர்மானத்தைக் கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்தவர். அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தால், ஜெனிவா களம் இலங்கைக்கு சாதகமானதாக அமைய வாய்ப்பில்லை.

 

 

ஜோன் கெரியின் புதிய நிர்வாகத்தில் அவர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரேயானால், ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு பின்னடைவு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுத்த நாடு அமெரிக்கா என்பதால், அடுத்த கட்டம் பற்றிய தீர்மானத்தில் அதன் இறுக்கமான போக்கு அதிகம் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எவ்வாறாயினும், அமெரிக்கா கைகொடுத்தாலும் சரி, கைகொடுக்காது போனாலும் சரி, தமிழர் தரப்பின் இன்றைய அவலநிலையை வெளிப்படுத்தும் ஒரே களமாக இப்போது ஜெனிவாவே உள்ளது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியுள்ளது.முக்கியமானது, இந்த முடிவு உறுதியாகப் பின்பற்றப்படுமா? அது புதிய திருப்பங்களுக்கு வழிவிடுமா? என்பதை பிறக்கப் போகும் புதிய ஆண்டு தான் தெளிவுபடுத்தும்.

 

- ஹரிகரன்

 

http://www.eelamview.com/2012/12/31/usa-betrays-tamils-again/

  • தொடங்கியவர்

வரும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தமிழர் வாழ்வில் இன்னும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையலாம்.

2013 ஆம் ஆண்டின் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளின் மின்னஞ்சல் முகவரிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


இன்றே உங்களால் முடிந்தால் ஒரு சிறு செய்தியை அனுப்பி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள். அது ஒரு சிறிய ஆனால் அவர்களின் கவனத்தை ஈர்க்ககூடிய செய்தியாக இருக்கவேண்டும்.

ஒரு படமாக கூட இருக்கலாம், உதாரணத்திற்கு துப்பாக்கி முனையில் நிற்கும் யாழ் பல்கலை மாணவன்.

தொடர்ந்து எழுதுங்கள்.
 

நன்றிகள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112504

 

 

Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Republic of Congo, Costa Rica, Côte d’Ivoire, the Czech Republic, Ecuador, Estonia, Ethiopia, Gabon, Germany, Guatemala, India, Indonesia, Ireland, Italy, Japan, Kazakhstan, Kenya, Kuwait, Libya, Malaysia, Maldives, Mauritania, Montenegro, Pakistan, Peru, the Philippines, Poland, Qatar, the Republic of Korea, the Republic of Moldova, Romania, Sierra Leone, Spain, Switzerland, Thailand, Uganda, the United Arab Emirates, the United States and Venezuela


ambmission.angola@bluewin.ch, mission.argentina@ties.itu.int, genf-ov@bmeia.gv.at, info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.brazil@delbrasgen.org, mission.burkina@ties.itu.int, misginchile@minrel.gov.cl, missioncongo@bluewin.ch, mission.costa-rica@ties.itu.int, cotedivoire@bluewin.ch, mission.geneva@embassy.mzv.cz, onuginebra@mmrree.gob.ec, estonia.mission@estmission.ch, mission.ethiopia@ties.itu.int, mission.gabon@ties.itu.int, info@genf.diplo.de, onusuiza@minex.gob.gt, mission.india@ties.itu.int, mission.indonesia@ties.itu.int, genevapmun@dfa.ie, rappoi.ginevra@esteri.it, mission@gv.mofa.go.jp, mission@kazakhstan-geneva.ch, mission.kenya@ties.itu.int, info@kuwaitmission.ch, mission.libye@bluewin.ch, malgeneva@kln.gov.my, info@maldivesmission.ch, mission.mauritania@ties.itu.int, missionofmontenegro@bluewin.ch, mission.pakistan@ties.itu.int, misionperu@onuperu.org, geneva.pm@dfa.gov.ph, genewa.onz.sekretariat@msz.gov.pl, mission.qatar@ties.itu.int, mission.korea-rep@ties.itu.int, mission.moldova@ties.itu.int, mission.romania@romaniaunog.org, mission@sierraleonegeneva.ch, mission.spain@ties.itu.int, mission-geneve-oi@eda.admin.ch, mission.thailand@ties.itu.int, mission.uganda@ties.itu.int, geneve@uae-mission.ch, mission.usa@ties.itu.int, mission.venezuela@ties.itu.int

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.