Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம்

Featured Replies

திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


சிறுப்பான்மை கட்சிகளான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

 

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, பிரஜைகள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56484-2013-01-08-14-12-39.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எந்தச்சட்டங்க்களைக் கொண்டுவந்தாலும் மகிந்தவின் அரசு அதை நிறைவேற்றுவது சுலபம்.

நாளை என்று ஒன்று இருக்கின்றது. அன்று மகிந்தவின் எந்தச்சட்டமும் காற்றில் கலைந்து செல்லும்

 

அதுவரை காத்திருப்போம்

 

  • தொடங்கியவர்

இலங்கையில் சர்ச்சைகுரியதாக கருதப்பட்டதும் ,உச்ச நீதிமன்றத்தால் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த திவிநெகும(வாழ்வெழுச்சி) சட்ட மூலம் செவ்வாய்க்கிழமையன்று(8.1.13)நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

நாட்டிலுள்ள நலிவடைந்த மக்களுக்கான உதவிகளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் மூலம் நேரடியாக அமல் செய்ய திவிநெகும சட்டம் வழி செய்கிறது.


ஆனால் திவிநெகும சட்டம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130108_divineguma_billpassed.shtml

  • தொடங்கியவர்

மாகாணசபைகளுக்குள்ள 15 அதிகாரங்களை 'திவிநெகும' சட்டம் பறித்துள்ளது

 

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களில் 15 அதிகாரங்களைவ 'வாழ்வின் எழுச்சி' (திவிநெகும) சட்டம் பறித்துள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

 

மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை உள்வாங்காமல் திவிநெகும சட்டமூலம் இயற்றப்பட வேண்டும் என்று இந்த சட்டமூலம் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதே துறைசார் நிபுணர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும், அரசாங்கம் மாகாணசபைகளுக்கு உரித்தான அதிகாரங்களில் 15இனைப் பறித்தே இந்த சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் சுரெஷ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,


'திவிநெகும சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் 9 மாகாணசபைகளினதும் அனுமதி வேண்டும். இருப்பினும், வட மாகாணசபையைத் தவிர அனைத்து 8 மாகாணசபைகளினதும் அனுமதியுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அத்துடன், மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களில் 15 அதிகாரங்களையும் இந்த திவிநெகும சட்டமூலம் பறித்துள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

 

S01(96).jpg

 



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56533--15-.html

  • தொடங்கியவர்

10012013-md-hr-2%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(342).jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அடக்கம் செய்யவேண்டியதுதான் 

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.