Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது: அமெரிக்கா

Featured Replies

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றப்பிரேரணை நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இந்த குற்றப்பிரேரணையானது இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

இதேவேளை, பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் தூதரகம்; கரிசனைகொண்டுள்ளது. அமைதியான  எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் தூதரகம் கேட்டுக்கொள்கின்றது.

 

வன்முறையற்ற ரீதியில் செயற்படும் எதிர்ப்பாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சர்வதேச சமூகத்திலுள்ள எமது பங்காளர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கமானது சட்டத்தின் ஆட்சியை

உறுதிசெய்து ஜனநாயக ஆட்சிமுறையின்அடிப்படைகளை மதித்துச் செயற்படவேண்டும் என கோருகின்றோம்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56748-2013-01-11-15-53-52.html

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் உங்கடை கருத்துக்களை கேக்க முடியாது.. :D உங்களை ஏமாத்தி புலிக்கு தடை, அது இது எண்டு வாங்கிட்டோம்.. இப்ப போற வழியைப் பார்த்து போங்க.. :D

  • தொடங்கியவர்

சர்வதேச நீதி ஆணைக்குழு கண்டனம் .

 

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு   எதிரான குற்றப்பிரேரணையை சர்வதேச நீதி ஆணைக்குழு கண்டித்துள்ளது.

 

இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணையானது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியுள்ளது. இது நாட்டின் சமநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56752-2013-01-11-16-57-03.html

நாமலுக்கு கிளிநொச்சியில் விக்டோறியா சீகிரட் தொழில்சாலை போட்டுத்தானே கொடுக்கினம். அமெரிக்க ஒபாமா காலத்தில் கூட இப்படி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதை பார்க்க ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

  • தொடங்கியவர்

ICJ condemns impeachment of Sri Lanka’s Chief Justice


The ICJ condemned the decision of Sri Lanka’s parliament today to impeach the country’s Chief Justice, Shirani Bandaranayake (photo).
 

“Parliament’s impeachment motion has defied the rulings of the country’s Supreme Court and Court of Appeal, and thus thrown into chaos the entire system of checks and balances in the country,” said Sam Zarifi, ICJ’s Asia-Pacific director.

 

“Sri Lanka’s parliament and executive have effectively decapitated the country’s judiciary in pursuit of short term political gain. As an immediate matter, this has precipitated a legal and constitutional crisis of unprecedented dimensions; but just as worrying are the consequences of this action, which severely erodes accountability and the rule of law in a country already suffering from decades of impunity.”

 

The impeachment decision now goes to President Mahinda Rajapakse, who precipitated this crisis initially. Under Article 107 of the 1978 Constitution of Sri Lanka, a Chief Justice can only be removed by an order of the President after a motion supporting the removal is passed by a simple majority of Parliamentarians.

 

The impeachment process against Chief Justice Shirani Bandaranayake has been widely criticized for ignoring international standards and practice. On 6 December 2012, the Chief Justice and her team of lawyers walked out of the impeachment hearing in protest over the denial of a fair hearing. On 1 January 2013, the Supreme Court ruled that the impeachment procedure in Parliament was not constitutionally valid, finding that such procedures could only be established ‘by law’ enacted by Parliament.

 

The Bar Association of Sri Lanka has publically vowed that it will not welcome a new Chief Justice and the Lawyers Collective has called on the Supreme Court and the superior judiciary to not recognize the newly appointed Chief Justice.

 

“President Rajapakse should refuse to appoint a new Chief Justice, and instead call on Parliament to enact a new law – through a transparent and democratic process – to govern the impeachment process. Any such law must comport with international standards on judicial independence and guarantees of due process and fair trial,” Zarifi added.

 

 

CONTACT:

Sam Zarifi, ICJ Asia-Pacific Regional Director, Bangkok. t:+66 807819002; email: sam.zarifi@icj.org

Sheila Varadan, ICJ Legal Advisor, South Asia Programme, Bangkok. t: +66 857200723; email: sheila.varadan@icj.org

 

http://www.icj.org/icj-condemns-impeachment-of-sri-lankas-chief-justice/

Edited by akootha

“President Rajapakse should refuse to appoint a new Chief Justice, and instead call on Parliament to enact a new law – through a transparent and democratic process – to govern the impeachment process. Any such law must comport with international standards on judicial independence and guarantees of due process and fair trial,” Zarifi added.

 

இதைத்தான் சொல்வது "நல்ல கதை நீளம் பத்தாது" என்று. :lol:  :lol:  

இலங்கையிலை சட்டம் எப்ப பின் பற்றப்பட்டது இப்ப பின்பற்றுவதுக்கு...   ஊழலிலை இந்தியா அக்கா எண்டால் சொறிலங்கா தங்கச்சி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.